Posts Tagged ‘கற்பழிப்பு’

தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

மே 26, 2012

தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்

 

தாமஸ் கட்டுக்கதைகள்: நாட்டுக்கு நாடு கத்தோலிக்கக் கிருத்துவ சாமியார்கள் எப்படி தாமஸ் பற்றிய ரோமாஞ்சன கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சில பதிவுகளில் எடுத்துக் காட்டியிருந்தேன்[1]. அங்குள்ள விவரங்களில் குறிப்பிட்ட திட்ட அமைப்பு, வன்முறை, குறிக்கோள் அமூலாக்கம் முதலியவை காணப்பட்டது. உள்ளூர் விவரங்களை அறிந்து கொள்வது, அதில் கிருத்துவத்திற்கு தோதுவாக இருப்பவற்றை முதலில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு படுத்தி எழுதுவது, பிறகு மற்றவர்கள் அதைப் பற்றி நஎழுதுவது-பிரபலப்படுத்துவது, என்று தொடர்ந்து ஒரு 50-100 ஆண்டுகளில் அதனை ஏதோ சரித்திரம் போலாக்கிவிடுகின்றனர். அப்படி அவற்றின் சம்பந்தமாக விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது, கேரளாவிலேயே அவர்கள் ஏகபட்ட கட்டுக்கதைளை கடந்த 300 வருடங்களில் உருவாக்கியிருப்பதைக் கண்டேன். அதற்காக அவர்கள் பற்பல போலி அத்தாட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

 

கிருத்துவ அடிப்படைவாதத்தின் விளைவு: முன்பு நஸ்ரனி.நெட் (http://nasrani.net) என்ற தளத்தில் கிருத்துவர்களுடன் உரையாடல் ஏற்பட்ட போது, எப்படி தமிழகத்தில் ஆர்ச் பிஷப் அருளப்பா, கணேஷ் ஐயர் / ஆச்சார்ய பால் / தெய்வநாயகம் முதலியோர் தாமஸையும் திருவள்ளுவரையும் இணைக்க போலி ஆரய்ய்ச்சி, ஆவணங்கள், முதலியவற்றை உருவாக்கி மாட்டிக் கொண்டார்கள் என்பதனைக் குறிப்பிட்டு அது போலவே, கேரளாவில் தாமிரப் பட்டயங்களை தயாரித்தார்கள்[2] என்று எடுத்துக் காட்டினேன். ஆனால், அந்த தளத்தில் உரையாடியவர்களுக்கு, அது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களில் சிலர் சிறிது கூட நாகரிகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்துத் திட்ட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து உண்மையை ஜீரணிக்க அவர்களால் முடியவில்லை என்பது தெரிந்தது. எனவே, இறுதியாக ஒரு பதிவைப் பதித்து விட்டு[3] நிறுத்திக் கொண்டேன். பிறகு, என்னுடைய பதிவுகளைத் தடுத்ததோடு, நீக்கியுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்[4]. அதாவது கிருத்துவர்கள், மெத்தப்படித்தவர்கள், மேனாட்டு நாகரிகமுள்ளவர்கள், அதிநவீன ஆடையுடுத்தி வருபவர்கள் முதலியோர்கள்தாம் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

   

இந்தியாவை அடக்கியாளும் ஆதிக்க சக்திகள்; ஆனால் கேரளாவில் உள்ள கட்டுக்கதைகள் அதிகார வர்க்கத்தின் அரசியல் பலம், ஆட்பலம், பணபலம் முதலியவற்றுடன் இயங்கி வருவதால், அம்மாநிலத்தில் அத்தகைய போலி ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுகிறவர்கள் யாரும் இல்லை, அல்லது அப்படியிருந்தாலும், அவர்கள் ஒருசிலராக இருந்து மற்ற சித்தாந்த ஆராய்ச்சியாளர்களால் அடக்கப்பட்டுவிடுகிறார்கள் என்று தெரிகிறது. கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகமாம், அதற்கு கிருத்துவகள்தான் காரணமாம் – இப்படியும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்படி மோசமான போலி ஆராய்ச்சிகளை செய்து கொண்டு, கட்டுக்கதைகளை பரப்பி வரும் அளவிற்கு அவர்களது படிப்பு, படிப்பறிவு உதவுகிறதா அல்லது வேறேதாவது உந்துகின்றதா என்று அவர்களது மனசாட்சி நிச்சயம் அறியும். அத்தகைய அசுர பலத்துடன் வேலை செய்வதால், ஊடகங்களில் ஒருதரப்புள்ள விஷயங்களே வெளிவருவதும் தெரிகிறது. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்றாலும், விடாப்பிடியாக, அனை விரித்து, பெருக்கி, வளர்த்து, மாற்றி புது கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கினறார்கள். அந்நிலையில் தான் தாமஸ்-பகவதி, மேரி-கண்ணனகி, ஜார்ஜ்-பத்ரகாளி, செபாஸ்டியன்-துடபுழா அம்மன் என்று பல “விட்டலாச்சாரி” மாயாஜாலக் கதைகளை பரப்பி விட்டிருக்கிறார்கள். அத்தகைய கதைகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.

 

தாமஸ்-பகவதி சகோதர-சகோதரி கட்டுக்கதை: கேரளாவில் கிராங்கனூர் என்ற ஊரை மையமாக வைத்துக் கொண்டு, இக்கதை புனையப்பட்டுள்ளது. கிராங்கனூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ளது. அங்குதான், இந்த சந்தேகிக்கும் தாமஸ் வந்து இறங்கியதாக கதையுள்ளது. அதற்காகவே இக்கதை அவ்வாறு புனையப்பட்டிடருக்கலாம். 1920ல் தான் இக்கதை பதிவு செய்யப்பட்டதாக சூஸன் பேய்லி[5] என்ற பெண் எழுத்தாளர் எடுத்துக் காட்டுகிறார், இருப்பினும் இக்கதை “முன்னமே” உலாவந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நம்ம ஆட்கள், கிருத்துவ போலி ஆராய்ச்சியாளர்கள் இக்கதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கிறார்கள். “முன்னமே” என்றால் அத்தகைய அர்த்த்தம் என்று அவர்களது கட்டுக்கதை அகராதியில் உள்ளது போலும். தாமஸ், ஒரு நாள் பகவதி அம்மனுடன் இந்துமதம் பெரிதா, கிருத்துவம் பெரிதா என்று வாதாட ஒப்புக்கொண்டாராம். பாவம் கிருத்துவமதம் அப்பொழுது இருந்ததா, இல்லையா என்று கிருத்துவமதம் தோன்றியதாகச் சொல்லப் படும் பகுதிகளிலேயே அறியப்படாத நிலையில், அப்படி ஒரு வாதம் நடைபேற்றது ஆச்சரியம் தான்.

 

பகவதி அம்மனை துரத்திய அடாவடித் தனம் பிடித்த தாமஸ்: தாமஸ் பகவதி அம்மனுடன் விவாதத்தில் இறங்கினாராம். போகப்போக விவாதம் முற்றி சூடேரியதாம். வாக்குவாதம் உச்சக்கட்டத்தில் போன போது, பகவதி அம்மன் அங்கிருந்து செல்ல முற்பட்டாராம். இல்லை ஒரு பெண்ணிடம் அதிலும் அம்மனாக இருந்த நிலையிலும் சிறிதும் மட்டு-மரியாதை இல்லாமல் ஏதேனும் கேட்டு விட்டாரோ என்னமோ? அதாவது தாமஸுடன் தொல்லைத் தாங்கமுடியாமல் போயிற்று போலும். கிராங்கனூர் ஆற்றின் குறுக்கே குதித்து, கடந்து கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தாராம். உடனே இந்த தாமஸ் பின்னாடியே ஓடி போய் அம்மனை துரத்தி கோவிலுக்குள் நுழைந்தாராம். பெரிய அடாவடித் தனம் பிடித்த ஆளாக சித்தருத்திருப்பது வேடிக்கைதான். பகவதி அம்மன், கோவிலின் கதவை சாத்தும் தருணத்தில் சினிமா ஸ்டைலில் தாமஸ் ஓடி வந்து தனது காலை உள்ளே விட்டு தடுத்தாராம். இடது காலா, வலது காலா என்று தெரியவில்லை.

 

மரக்கதவு கல்லாகிய விட்டலாச்சார்யா மாய்ஜாலம்: இதே கோலத்தில் தாமஸ் வெளியே நிற்க, பகவதி அம்மன் உள்ளே இருந்தாராம். அந்த கதவு கல்லாக மாறும் வரை காலை வைத்திருந்தாராம். மரக்கதவும் கல்லாகி விட்டாதாம்!

  • அதன்பிறகு கல்லாகிய மரக்கதவின் சிறு இடைவெளியிலிருந்து தாமஸ் எப்படி காலை வெளியே எடுத்தார் என்று கதையில் கூறப்படவில்லை.
  • பாவம், கால் மரத்துப் போய் விழுந்து விட்டாரா
  • அல்லது அந்த கல் மறுபடியும் மரமாக மாறியதா?
  • இல்லை காலை மட்டும் வெட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டு சென்றுவிட்டாரா என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை, தெரியவில்லை.

இதற்கு சூஸன் பேய்லி[6] என்ற ஆராய்ச்சியாளர், தாமஸ் கிருத்துவர் என்பதனால் கருவறைக்குள் செல்லக்கூடாது, ஆனால் கோவில் வளாகத்தில் இருக்கலாம், மேலும் இக்கதை இருவரும் சமமானவர்கள் என்று எடுத்துக் காட்டுகிறது, தெய்வீகமானவர்கள் என்று கருதப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கிறார். அதையும் தாண்டி அந்த அம்மையார் என்ன  சொல்கிறார் என்றால், ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கிறார்[7]. அப்படியென்றால் அத்தகைய மோசமான தாமஸை எப்படி கடவுள் போல வைத்துக் கும்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. சமூகவியல், மனோதத்துவ ரீதியில் இக்கதையை நோக்கினால், நிச்சயமாக தானஸ் இல்லை ஒரு கிருத்துவப் பாதிரி அவ்வாறான கண்மூடித்தனமான வேலையை செய்திருக்க வேண்டும். அதாவது உள்ளூர் பெண்ணைக் கற்பழிக்கத்துரத்திக் கொண்டு போக, அவள் தப்பித்துக் மொள்ள கோவில் கருவறையில் ஓடி தாழ்ப்பாள் இட்டுக் கொண்டிருக்கலாம். அப்பொழுது அந்த பாதிரி அங்கு வந்தபோது, ஊர்மக்கள் பார்த்து காலையுடைத்தொருக்ககூடும். கிருத்துவகள், அதனை மாற்றி இப்படி தாமஸ் மேலேயேற்றி புதிய கதையை உருவாக்கியிருக்கக்கூடும்.

 

தாமஸ் பகவதி அம்மனை பெண்டாளத் துரத்தினாரா? ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் எனும் போது, கிருத்துவர்களின் ஈனத்தனமாக மனப்பாங்கை காட்டுகிறது. அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல், “Bayly even goes as far as to suggest that the story might contain sexual overtones, reminiscent of the way in which Krishna flirts with Gopis”, என்று சொல்லும் போது, கிருத்துவர்களின் இந்து-துவேஷமும் வெளிப்படுகிறது. கிருஷ்ணரை கேவலப்படுத்துவது என்பது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது[8]. ஆக, கிருஷ்ணர் கோபிகளை துரத்திப் பிடித்து காமக்களியாட்டம் நடத்தியது போல, தாமஸ் சென்றிருக்கலாம் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். கிருஷ்ணர் தாமஸைப் போல வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா அல்லது தாமஸ் கிருஷ்ணரரைப்போல  வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா என்று தெரிடயவில்லை. எப்படியாக இருந்தாலும், அயோக்கிய தாமஸ், கட்டுக்கதையில் கூட பெண்டாளும் எண்ணத்துடன் இருக்கிறான் என்றால், கிருத்துவர்கள் அந்த நிலைக்கும் தயார் என்கிறார்கள் போலும்!

பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகளாம்: மேனாட்டவருக்கு இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரிய கூறுகளைப்[ பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் தெரிந்தும், , கேலி பேசும் துச்சமாக மதிக்கும் தூஷிக்கும், அவதூறு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே எழுதும் போக்கு காணப்படுகிறது. மேலே எடுத்துக் காட்டியபடி, மற்றொரு விவரமும் காணப்படுகிறது.  அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல்[9] எழுதியதில், “Bhagavati and St. Thomas are also seen as flirtatious companions” என்று காணப்படுகிறது. அதாவது “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” காமக்களியாட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள். பிறகு அழகர் / விஷ்ணுவின் சகோதரியான மீனாட்சி சுந்தரேஷ்வருடைய காதலியாக இருப்பதுடன் ஒப்பிடுகிறார்கள்[10]. இப்படியெல்லாம் கதைகள் கட்டிவிட்டு, பிறகு பகவதி மேரியின் சகோதரி என்கிறார்கள்.

 

தாமஸ் யார், மனைவி,மக்கள் யார்? இவர்களின் கட்டுக்கதையின் படி, பகவதி மேரியின் சகோதரி என்றால் ஜோசப் மைத்துனராகிறார், ஏசு மகன் போலாகிறார், இந்த அடாவடி அக்கிரம தாமஸும் ஏசு மகன் போலாகிறார். ஏனெனில் ஏசு-தாமஸ் இரட்டையர்களாம். தாமஸுக்கு 29வது வயதில் திருமணமாகி நான்கு குழந்தைகளும் பெற்றெடுத்தாராம்[11]. தாமஸ் எப்பொழுதும் எதற்கும் ஒப்புக்கொண்டாலும், சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும், சந்தேகப்படும் பேர்வழியாக இருந்ததால், ஆரம்பகால வாழ்க்கை சந்தோஷமாக இல்லையாம். அதனால், அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்ந்தபோது, மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டதாம். முதலில் “தாமஸ்” என்பது பெயர் கிடையாது, ஒரு இரைட்டையான என்று பொருள்படும் அடைச்சொல் / உரிச்சொல், பிறகு அதனை பெயர்ச்சொல் போன்று உபயோகப்படுத்தினர்.

 

மகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது: ஆக மேரிக்கு மகன் போல தாமஸ் இருக்கும்போது, பிறகு எப்படி, “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. மகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது, ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் அத்தகைய நிகழ்வுகள் உள்ளன. ஓடிபஸ் குழப்பம்[12] என்ற சிந்தனையில், மகன் தாயின் போது மோகம் கொள்கிறான் என்று கிரேக்கப் புராணங்களில் உள்ளன. அவை பைபிளிலும் காணப்படுகிறது. பொய் கதைகளை உருவாக்குவதால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிதற்றுகிறார்கள், பித்தலாட்டத்துடன் எழுதுகிறார்கள். பகவதி அம்மனின் விழாக்களை ஒரு பக்கம் கிருத்துவத்துடன் ஒப்பிட்டு, சேர்த்து எழுதும் போது[13], மறு பக்கத்தில் இகழ்ந்து தூஷிக்கிறர்கள்[14]. மீனம் பரணி விழாவில் பக்தர்கள் கோழியை அறுத்து, பாலியல் ரீதியிலான பாடல்களை பாடுகிறார்கள் என்று எழுதுகிறர்கள். பிறகு கோழியே பாலியில் சின்னம் என்றும் எழுதுகிறார்கள்.இப்படி முரண்பாடுகளுடன் எழுதுவதிலிருந்து, அவர்களின் மனங்களில் எப்படியாவது கிருத்துவத்தின் தொன்மையை, இந்துமதத்துடன் தொடர்பு படுத்தி, நிலைநாட்ட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால், சரித்திர ரீதியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருப்பதினாலும், கிருத்துவத்தின் தாக்கம், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகே நன்றாக பதிந்திருப்பதினாலும், அதற்கு முன்பாக கிருத்துவம் இருந்தது  என்று வாதிடும் போது, கள்ள ஆவணங்களையும், திரிபு வாதங்களையும் தான் முன் வைக்க முடிகிறதே தவிர, வேறு எந்த அத்தாட்சிகளையும் வைக்க முடிவதில்லை. அதாவது அவ்வாறான ஆதாரங்கள் இல்லாததால் முடியவில்லை. இருப்பினும், அத்தகைய நிலையை சிலர் ஒப்புக் கொண்ட போதிலும், மற்றவர்கள் விடாப்பிடியாக அத்தகைய போலிகளை, மாயைகளை செட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேன்மேலும் தவறுகளை செய்து கொண்டு, குழப்பி வருகிறார்கள்.

 

வேதபிரகாஷ்

26-05-2012


[2] Claudius Buchanan, Two Discourses preached before the University of Cambridge, on the commencement of Subday July 1, 1810 and a sermon before the Society of Missions to Africa and the East; at their tenth anniversary. June 12, 1810.

To which added Christian Researches in Asia, T. Cadell and W. Davies, in the Strand; and J. Deighton, Cambridge, London, 1811, pp.121-122.

[5] Susan Bayly, Saints, Gooddesses and Kings: Muslims and Christians in South Indian Society 1700-1900, Cambridge, Cambridge University Press, 1989, pp..278-280.

[6] Ibid, p.279.

[7] Bayly even goes as far as to suggest that the story might contain sexual overtones, reminiscent of the way in which Krishna flirts with Gopis.

Alex C.J. Neroth Van Vogelpol, Influences of Hinduism on the Syrian Christianity of St. Thomas of Kerala, India, 2003, p.17

[8] John  P. Jones, India’s Problem: Krishna or Christ, Fleming H. Revell Company, London and Edinburgh, 1903.

[9] Alex C.J. Neroth Van Vogelpol, Influences of Hinduism on the Syrian Christianity of St. Thomas of Kerala, India, 2003, p.14. http://alexnvv.axspace.com/documents/SMPaperNvV.pdf

[10] G. Corinne Dempsey, Kerala Christian Sainthood: Collisions of Culture and Worldview in south India, Oxford University Press, 2001, pp.60-61.

[11]
When Thomas joined the apostles, he was twenty-nine years old, was married, and had four children. The early home life of Thomas had been unfortunate; his parents were not altogether happy in their married life, and this was reflected in Thomas’s adult experience. He grew up having a very disagreeable and quarrelsome disposition. Even his wife was glad to see him join theapostles; she was relieved by the thought that her pessimistic husband would be away from home most of the time. Thomas also had a streak of suspicion which made it very difficult to get along peaceably with him.

http://www.truthbook.com/index.cfm?linkID=142

[12] In psychoanalytic theory, the term Oedipus complex denotes the emotions and ideas that the mind keeps in the unconscious, via dynamic repression, that concentrate upon a boy’s desire to sexually possess his mother, and kill his father.  ]Sigmund Freud, who coined the term “Oedipus complex” believed that the Oedipus complex is a desire for the mother in both sexes (he believed that girls have a homosexual attraction towards their mother)

[14] M. J. Gentes, Scandalizing the Goddess at Kodungallur, Asian Folklore Studies
Vol. 51, No. 2 (1992), pp. 295-322; Published by: Nanzan University
Article Stable URL: http://www.jstor.org/stable/1178336