Why the “Thomas myth” is taken suddenly now in 2024 from a different angle and interpretation by the Engish media?

ஏப்ரல் 7, 2024

Why the “Thomas myth” is taken suddenly now in 2024 from a different angle and interpretation by the Engish media?

2024 When ‘Evangelist Dr. John Ganesh’ defrauded the church and met the Pope in Vatican City: The Hindu has been in general promoting the spread of the “myth of Thomas,” then and there, and I have pointed out in my blogs. Now, suddenly, this stuff appearing in “The Hindu” is surprising, as though, the details were already pointed out by K.P. Sunil[1] and myself[2], now one S. Vijakumar has carried the story. He has not brought out anything new, except the photograph of the investigation police inspector[3]. Ishwar Sharan has also dealt with this and brought out a comprehensive book[4]. And it goes like this. A composed behaviour, coupled with persuasion skills and in-depth knowledge of Christianity, was good enough for Ganesh Iyer to introduce himself as “Evangelist Dr. John Ganesh”[5]. It was in the early 1970s that he first met Rev. Fr. Michael of Tamil Ilakkiya Kazhagam, posing as a religious researcher studying the roots of Christianity in India. In no time was John Ganesh able to convince a gullible Fr. Michael with his eloquence and voluminous documents that he was fully engaged in researching the origin and growth of Christianity in India and some support from the church would help in expediting his work. He was referred to Fr. Mariadas of Srivilliputtur, who had no idea that the “visiting Professor” was Ganesh Iyer, a native of Srirangam, involved in a couple of cheating cases.

Deep knowledge of Christian theology: A report of the Tamil Nadu police, published in a journal, says, “Fr. Mariadas was no less impressed with John Ganesh’s deep knowledge of Christian theology. He showed him the photographs of some century-old palm-leaf writings and copper-plate inscriptions, which, he claimed, proved the origin and growth of Christianity in India.” So, he has picked up from “a journal” that is not mentioned. At one point, John Ganesh said he was not able to continue his research and planned to visit Kashmir “where the religion had deep roots”. Carried away by his claims, Fr. Mariadas arranged some funds and referred him to Archbishop Rev. R. Arulappa, the head of the Catholic Church in Madras. Interestingly, Archbishop Arulappa was well-known for his literary activities. He had translated the New Testament into Tamil and also rendered in Tamil the life of Christ (Ulagin Uyir). Besides, he had learnt Sanskrit and translated several Christian tenets into that language. “Since he was interested in research on Christianity, he easily fell for the apparent sincerity of purpose of John Ganesh,” says the police report. The Bishop agreed to fund the ‘research’ depending on its progress and that was how the accused found his “golden goose”.

Fake research started in 1975-76: Thus commenced fake research in 1975-76. As proof of his work, John Ganesh submitted photocopies of palm-leaf writings and copper-plate inscriptions within a few months. When the Archbishop wanted to see the originals, he claimed they were kept in safe custody at museums and establishments owned by the Departments of Archaeology across the country. Saying it would not be possible to lay hands on the originals, he promised to get the documents attested by the respective museum managers. Weeks later, he produced certificates with fake seals and signatures.

Becoming Acharya Paul: Sensing that he had gained the trust of the Archbishop, John Ganesh found the time appropriate to commence his trip to Kashmir where he proposed to involve himself in research work. After receiving funds, the accused engineered a plan to make the church authorities believe that he was indeed in Kashmir working with their counterparts. The Archbishop received letters from some Christian and Hindu religious heads in Kashmir informing him that they had met John Ganesh who had now given himself the name Acharya Paul. The letters spoke in superlative terms about his noble research. After two years of “research”, Ganesh Iyer alias John Ganesh alias Acharya Paul was a rich man. He built two bungalows at Srirangam, bought expensive cars, and had a good bank balance, the report said.

Another twist – meeting Pope in 1977: Then came another twist in the story. The Archbishop trusted John Ganesh so much that he took him to Vatican City in 1977. There, they had an audience with Pope Paul VI. Ganesh lyer used his foreign visits to give lengthy lectures at many religious congregations and churches on comparative religions, the origin of Christianity in India, and his path-breaking research. The endorsement of the accompanying Archbishop opened up the floodgates of funds for him for further research. “However, the absence of the Archbishop from Madras gave an opportunity to some well-informed church members, led by John Thomas, editor of a daily Swadesamitran, to conduct an inquiry into the activities of the suspect,” wrote G. Senrayaperumal, the then inspector of the Crime Branch-CID, who investigated the case.

Araulappa gave a complaint against Acarya Paul: A preliminary investigation revealed a cash deposit of 14 lakh in the church funds spent in the name of research. The church committee passed a resolution directing the Archbishop to register a case with the police. Accordingly, a complaint was lodged with the CB-CID and a team, led by Mr Senrayaperumal, searched the house of Ganesh lyer at Srirangam. Investigators recovered the originals of all the photographs produced by him as proof of his writings. The originals were nothing but mere writings on strips of brown paper cut to resemble medieval palm fronds, pasted on sheets of white paper. The photographs that he had taken at a studio in Tiruchi led to the seizure of the negatives. The police also seized seals, rubber stamps, and letter heads of several institutions that he had reportedly visited.

29-04-1980 – Archarya Paul arrested: Ganesh Iyer was arrested on April 29, 1980, on the charges of cheating, forgery, and impersonation. He was also booked under the Passports Act since he had obtained a travel document in the name of Acharya Paul for his visit to Vatican City. He was sentenced to 10 months in prison for offences under the Indian Penal Code and five months under the Passports Act. In his report, ‘Religious research by Acharya Ganesh Paul’ (1975), Mr. Senrayaperumal says the CB-CID had a tricky case to handle. He had to investigate it cautiously without affecting communal sensitivities. “This is a tale of fraud, with comical touches, in which a pious church leader was taken for a ride by a crook. Unfortunately, the gullibility of the Archbishop caused a loss of nearly 14 lakh of rupees to the Madras-Mylapore Archdiocese. A fairly big sum in the mid-1970s, when gold was sold at around $400 per sovereign.”

2016 – two pastors filed petition again the Archbishop for squandering the church funds: Ten years back, when the question of language issue was discussed, the issue was pointed out in the “India Today.”[6] John Thomas and Anthony Royappa, obtained leave from the Madras High Court to file a suit against the most Rev. Dr R. Arulappa, Archbishop of Madras-Mylapore diocese, for “squandering” church funds. Dr Arulappa had “misused” over Rs 14 lakh by paying Ganesha Iyer alias Acharya Paul to conduct research about the origin of Christianity in India[7]. The research was meant to prove that Tiruvalluvar, the Tamil saint-poet, was a Christian and that the Kapaleeswarar temple in Mylapore and the Arunachaleswarar temple in Tiruvannmalai were ancient Christian places of worship. Thomas and Royappa said the Archbishop was the sole trustee of vast church properties and funds and since he was “frittering away” trust funds, they were constrained to file the suit. The High Court ruled that there was an imperative need for suitable legislation for the proper management of church properties.

2015 – Madras Bishop Arulappa bribed Ganesh Iyer and converted him as John Iyer and deputed him for manipulations and attempted to highjack ancient Tamil poet Thiruvalluvar: In 2015, when the ICHR member C. I. Isaac discussed about conversion[8], he noted, “Madras Bishop Arulappa bribed Ganesh Iyer and converted him as John Iyer and deputed him for manipulations and attempted to highjack ancient Tamil poet Thiruvalluvar”. Here, Isaac blamed the Bishop only[9] and therefore, how the issue was interpreted after 1980s can be noted. When the whole affair involving the bishop and several pastors involving in the production of fake literature is well-known among the Tamil scholars, it is ridiculous now to turn tables only against the Acharya Paul absolving others. In fact, the main “researcher” and friend of most of the Christian researchers one M. Deivanayagam is still there and he must have been asked to his version about this affair.

2015 – video absolving the Archbishop: P. Chandrasekaran, former forensic expert informed that the Archbishop was duped by Ganesh Iyer intentionally and the bishop had nothing to do in that fraud[10]. Thus, the video has been very clear in whitewashing the crime after many years, particularly, absolve the church in that role. As otherwise, this retired forensic expert, police officer etc., could have come out with the facts, at 1980 itself[11]. It is not known, in the same way, the learned retired forensic expert would probe the documents of M. Deivanayagam and his company. “Deadmen can tell no tales” = People who are dead cannot tell secrets, so Arulappa, Acharya Paul and others who are no more cannot tell any tales, but, M. Deivanayagam and Company can tell. There have been few “Hindutwa guys” who claim that they too know all these stories and published books also. But, now, they too keep quiet.

© Vedaprakash

07-04-2024.


[1] K. P. Sunil, Hoax! – Special Report, Illustrated Weekly of India, April 26, 1987, pp.32-35.

What wrong have I done?” Ganesh Iyer speaks out fr the first time in an interview with K. P. Sunil, Illustrated Weekly of India, April 26, 1987, pp.34-35.

[2] Vedaprakash, Indiyavil Saint Thomas Kattukkathai (The myth of Saint Thonas in India), Institute for the Study of Western Religions, Madras, 1989.

[3] The Hindu, When ‘Evangelist Dr. John Ganesh’ defrauded the church and met the Pope in Vatican City, March 22, 2024 01:22 am | Updated 12:22 pm IST, S  Vijay Kumar S. VIJAY KUMAR.

[4]  Ishwar Sharan, The myth of Saint Tomas and the Mylapore Shiva Temple, Voice of India, New Delhi, 2019. The earlier editions have been – first – 1991; Second – 1995; third – 2010.

[5] https://www.thehindu.com/news/national/tamil-nadu/when-evangelist-dr-john-ganesh-defrauded-the-church-and-met-the-pope-in-vatican-city/article67977960.ece

[6] India Today, Christmas services in many Catholic Churches in Karnataka held under police protection, – Southern Bureau, Published By: At Migration, Published On: Jan 21, 2014, UPDATED: Sep 19, 2014 17:56 IST.

[7] https://www.indiatoday.in/magazine/indiascope/story/19810131-christmas-services-in-many-catholic-churches-in-karnataka-held-under-police-protection-805895-2014-01-21

[8] Business Standard, Lone Christian ICHR member calls for ban on conversions, G Sreedathan, New Delhi, First Published: Jul 11 2015 | 4:56 PM IST; Last Updated : Jul 11 2015 | 5:16 PM IST.

[9] https://www.business-standard.com/article/current-affairs/lone-christian-ichr-member-calls-for-ban-on-conversions-115071100494_1.html

[10] News7 Tamil, Document Forger John Iyer sent to jail by Archbishop …, YouTube, 25 Oct 2015.

[11]https://www.google.com/search?q=archbishop+arulappa+ganesh+iyer&oq=&aqs=chrome.4.69i59i450l8.1569570947j0j15&sourceid=chrome&ie=UTF-8 – fpstate=ive&ip=1&vld=cid:5ffdedfb,vid:5TR6MRE_kvw,st:0

“தாமஸ் கட்டுக் கதையை”  தொடர்ந்து “தி ஹிந்து” குழுமம் திட்டமிட்டுப் பரப்பி வருவது!

திசெம்பர் 2, 2023

தாமஸ் கட்டுக்கதையை”  தொடர்ந்துதி ஹிந்துகுழுமம் திட்டமிட்டுப் பரப்பி வருவது!

தாமஸ் கட்டுக்கதையைஎஸ்.முத்தையா எவ்வாறு விளம்பரப் படுத்தினார்: சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாமஸின் கட்டுக்கதையை ஊடகங்கள் மூலம் பரப்புவதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். முன்னாள் பேராயர் அருளப்பாவும் அவரது ஆட்களும் போலி ஆவணங்கள், நீதிமன்ற வழக்குகள், சிறைச்சாலை, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் போன்றவற்றில் ஈடுபட்டு, விவகாரங்கள் வெளியே வந்தாலும், அவர்கள் சளைக்காமல், தொடர்ந்து இத்தகைய இறையியல் மோசடிகளில், பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இப்போது, “தி இந்து” கட்டுக்கதையைப் பரப்புவதற்கு உதவியும், உறுதுணையாகவும் இருந்து வருகிறது. முன்னதாக, எஸ்.முத்தையா (1930-2019) இதுபோன்ற கட்டுக்கதைகளுக்கு இடமளித்து, முடிந்தவரை உதவியாக இருந்தார்.. உண்மையில், ஈஸ்வர் சரண் தனது “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் புனித தாமஸின் கட்டுக்கதை” என்ற புத்தகத்தில் பதிவு செய்தபோது, அவர் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் யுக்தியில் அதற்கு பதிலளித்தார். நானும் ஈஸ்வர ஷரனும் “தி இந்து” நாளிதழின் ஆசிரியருக்கு கடிதம் இக்கட்டுகதை பற்றி எடுத்துக் காட்டி, எழுதுவது வழக்கம் ஆனால், அது எதையும் வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை. இருப்பினும், முத்தையா அவற்றைப் படித்தார் என்பது தெளிவாகிறது, ஏனெனில் “தி ஹிந்துவில்” ஒவ்வொரு வாரம் திங்கட் கிழமை, அவர் தனது “மெட்ராஸ் மிசெலேனி” [“Madras Miacelleny” columns] பத்திகளில் பெயரைக் குறிப்பிட்டு பதிலளித்தார். எப்படியிருந்தாலும், அவர் காலமாகியப் பிறகு, இது தொடர்பான அவரது சேவைகளும் தானாகவே முடிவடைந்தது.

என். ராம், மரியம் சாண்டி மற்றும் பலர்: என். ராம் மரியம் சண்டியை மணந்த பிறகும், “தாமஸ் கட்டுகதைக்கு” இடமளிப்பதற்கு “தி இந்து” கருணையுடன் இடமளித்தப்பதால், இப்போது இந்த போக்கு தொடர்கிறது என்று தெரிகிறது. மரியம் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த நம்பிக்கையாளர். முந்தைய சந்தர்ப்பங்களில் அவர்கள் எவ்வாறு செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டார்கள் என்பது பற்றி எனது வலைப்பதிவுகளில் சுட்டிக் காட்டியுள்ளேன்[1]. சமீபத்தில், நிவேதிதா லூயிஸ் இக்கட்டுக்கதைப் பற்றிய சொற்பொழிவுகளை செய்ய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தனது பிரச்சார வேலையைச் செய்துக் கொண்டிருக்கிறார்[2]. அவரது “ஏற்பாடு செய்யப்பட்ட” நடைப்பயணத்திலும், அவர் அதை 2020 இல் செய்து காட்டினார்[3]. சமீபத்தில், ரோஜா முத்தையா நூலகத்தில் அவரது பேச்சு திட்டமிடப்பட்டது, ஆனால், திடீரென்று அது ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது[4].

அப்படியானால், இத்தகைய “தாமஸ் கட்டுக்கதை ஊக்குவிப்பாலர்கள்” எப்படி நாளுக்கு நாள் இத்தகைய கட்டுக்கதைகளில் செழிக்க வைத்து வளர்க்கின்றனர் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், கீதா பத்மநாபன், சுபாஷினி ட்ரெம்மல், “தி ஹிந்து” ஜர்னலிஸ்ட் கல்லூரி – மாணவர்கள், கோவில்-“வரலாற்று ஆய்வாளர்கள்” மற்றும் பிறரும் இத்தகைய கதைகளை எவ்வாறு பிரச்சாரத்திற்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[5]. எனவே, இது போன்ற கட்டுக்கதைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பல நிலைகளில் இருந்து செயல்படும் செல்வாக்குமிக்க சக்தியுடன் திட்டமிடப்பட்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் நடந்து வருகின்றன என்பது தெளிவாகிறது[6]. இங்கே, “இந்துத்துவா” என்று அழைக்கப்படுபவர்கள், கும்பல்கள் மற்றும் வலதுசாரிகள் எந்த வகையிலும் அவர்களை எதிர்கொள்ள முடிவதில்லை. இவர்களைப் பொறுத்ட வரையில், ஒருவேளை, தொன்மத்தை ஊக்குவிக்கும் வல்லுநர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் தங்கள் நற்சான்றிதழ்களைப் பாதுகாக்க வேண்டும், அதே நேரத்தில் பலனையும் அனுபவிக்க வேண்டும் என்ற ரீதியில், அவர்கள் ஒரே நாளில் இரண்டு செய்திகளை வெளியிடும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

சித்ரா மாதவன் சொல்லும் கதை…………………

25-11-2023 “பரங்கி மலை / தாமஸ் மலையில்பாரம்பரிய நடைபயணம்: 25-11-2023 சனிக்கிழமையன்று செயின்ட் தாமஸ் மவுண்டில் ஒரு பாரம்பரிய நடைப்பயணத்தில் அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குழு பங்கேற்றது, பெரிய முக்கோணவியல் துறைக்கான களப்பணியின் [the Great Trigonometrical Survey] பல்வேறு அம்சங்களை ஆராய்கிறது மற்றும் அப்பகுதியில் உள்ள பழைய குடியிருப்புகளின் பாரம்பரியம் ஆய்வு என்று சொல்லப் பட்டது. பாரம்பரிய வாரத்தின் ஒரு பகுதியாக தி இந்து மேட் ஆஃப் சென்னை [Made of Chennai] நடத்திய நடைப்பயணத்தைத் தொடங்கி, செயின்ட் தாமஸ் மலை அடிவாரத்தில், நம் ஊர், நம் கடையைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் திருபுரசுந்தரி செவ்வேள், உள்ளூர் மற்றும் பங்கு தொடர்பான பல்வேறு பாரம்பரிய அம்சங்களை உள்ளடக்கியது என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். பரங்கிமலை என அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையின் பாரம்பரிய மதிப்பின் வளர்ச்சியில் பல்வேறு நபர்கள் மற்றும் சமூகங்களால். “எங்கள் நகரத்தை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று அவர்கள் தங்களது திட்டத்தை வெளிப்படுத்தினர்[7]. ஒன்று, பல்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களின் பல்வேறு பங்களிப்புகள் மற்றும் ஆதரவைப் புரிந்துகொள்வது மற்றும் ஒப்புக்கொள்வது – போர்த்துகீசிய இணைப்பு, ஆர்மேனிய பங்களிப்பு, ஆங்கிலோ-இந்திய மரபு மற்றும் பல்வேறு ஓவியங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் இருந்து வந்த விவரங்கள். செயின்ட் தாமஸ் மலையில் ஏறும் போது, தேவாலயத்தில் இருந்து பாடல்களைக் கேட்க நாம் அடையும் போது, மசூதியிலிருந்து கோவில் மணிகள் மற்றும் பிரார்த்தனைகளைக் கேட்க முடியும்,” என்றெல்லாம் அந்த வரலாற்றாசிரியர் கூறினார்[8].

ஊடகக் கல்லூரி மாணவியர், சரித்திராசிரியர் என்று எல்லோரும் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது……………

ஏப்ரல் 10, 1802 இல் பெரிய முக்கோணவியல் ஆய்வு [The Great Trigonometrical Survey] இங்கே தொடங்கியது: “பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையின் வாய்வழி பாரம்பரியத்தைச் சுட்டிக்காட்டி, குழு பாரம்பரிய பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் சர்வேயின் / நில-அளவை நினைவாக விவாதிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறிக் கொண்டது. செயின்ட். தாமஸ் மவுண்ட் என்பது தேவாலய / சர்ச் வளாகம் மற்றும் “நீட்சியாக, இது மலையைச் சுற்றியுள்ள பகுதியின் பெயரும் கூட” என்றெல்லாம் வர்ணித்தது. … ஏப்ரல் 10, 1802 இல் வில்லியம் லாம்ப்டன் தனது பெரிய முக்கோணவியல் ஆய்வுக்கான களப்பணியைத் தொடங்கினார். அவர் லெப்டினன்ட் கர்னல் ஆவார், அவர் இந்தியாவின் தீபகற்பத்தின் அகலம் முழுவதும் பெரிய அளவிலான முக்கோணவியல் ஆய்வுக்கு தலைமை தாங்கினார். இரண்டு தசாப்தங்களாக பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பளவை வரைபடமாக்க மேற்கொண்டார்,” என்று அவர் கூறினார். ஆனால், கட்டுக் கதையினைப் பரப்புவது தான் அவர்களின் திட்டம் என்பது நன்றாகவே புலப் பட்டது.

ஜிடிஎஸ் எவ்வாறு நடத்தப்பட்டது: “இந்தியாவின் எவ்வளவு நிலப்பரப்பை அவர்கள் உண்மையில் கட்டுப்படுத்த மற்றும் வரி வசூலிக்க ஆங்கிலேயர் அறிவியல் ரீதியாகவும் துல்லியமாகவும் அளவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் சரித்திராசிரியர்களுக்கு ஏனில்லை என்பதைக் கவனிக்கலாம். கணக்கெடுப்புகளில் ஒன்று கிரேட் டிரிகோனோமெட்ரிக்கல் சர்வே ஆஃப் இந்தியா, நிலத்தை அளக்க முக்கோண முறை சரியானது என்று தெரிந்து  கொண்டனர், ஏனெனில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நூற்றுக் கணக்கான கோபுரங்கள் குறிப்பிட்ட உயரங்களில், தூரங்களில் அமைந்துள்ளதை அவர்கள் கண்டு கொண்டார்கள்.. ..அது அவர்களுக்கு உதவியாக இருந்தது. “பூந்தமல்லி ஹை ரோட்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் ஆங்கிலோஇந்தியன் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஏற்கனவே ஸ்கூல் ஆஃப் சர்வே அமைக்கப்பட்டிருந்ததால், இது மெட்ராஸில் தொடங்கப்பட்டது. ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் ஸ்கூல் ஆஃப் சர்வே, பின்னர் கிண்டி பொறியியல் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது,” என்று அவர் கூறினார். குழு மலையிலிருந்து கீழே இறங்கியபோது, வரலாற்று ஆய்வாளர் பல்லாவரம் கிரானைட் [Charnockite] என்றும் அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் சார்னோகைட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

போர்த்துகீசியர்கள் 1523 இல் சர்ச்சைக் கட்டினார்கள்: “செயின்ட் தாமஸ் மவுண்டில்” உள்ள “செயின்ட் தாமஸ் மவுண்ட் நேஷனல் ஆலயம்”, “பரங்கிமலை” என்று அழைக்கப்படுகிறது, அதன் 500வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது[9]. 1523 ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால், அங்கிருக்கும் கோவிலை இடித்துவிட்டு, கட்டப்பட்டது, இது சென்னையில் உள்ள பழமையான சர்ச்சுகளில் ஒன்றாகும்[10]. “இந்த மலை அப்போஸ்தலன் செயின்ட் தாமஸுடன் தொடர்புடையது, ஏனெனில் அவர் அதில் தியாகம் செய்ததாக நம்பப்படுகிறது”, என்று மறக்காமல் சேர்த்து அளப்பதைக் கவனிக்கலாம். “இந்த சர்ச் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் வங்காள விரிகுடாவில் போர்த்துகீசிய மற்றும் ஆர்மேனிய கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இருக்கும் வகையான கட்டிடங்கள் இல்லாமல், இந்தக் கப்பல்கள் மலையின் தடையற்ற காட்சியைக் கொண்டிருந்தன என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. மாலுமிகள் சர்ச்சைப் பார்த்ததும், அவர்கள் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தார்கள், பின்னர் வணக்கம் செலுத்தி புறப்பட்டனர் என்று ஸர்ச்சின்அதிகாரப்பூர்வ வலைத்தளமான stthomasmountnationalshine.org இல் ஒரு குறிப்பு கூறுகிறது“, என்று செய்தி முடிகிறது.

போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்ட இந்து கோவில் குறிப்பிடப்படவில்லை: சர்ச்சின் சன்னதியும் சுற்றியுள்ள இடமும் பல ஆண்டுகளாக கணிசமான மாற்றங்களைக் கண்டுள்ளன. The Hindu Archives படி, சர்ச் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், விமானம் தரையிறங்கும் போது அதன் செங்குத்தான கூம்பானது சில சிரமங்களை ஏற்படுத்தியது. சர்ச்சின் 68 அடி உயரமான செங்குத்தானது, அதன் மீது பறக்கும் விமானங்களுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 14 அடிகள் குறைக்கப்பட்டது, மேலும் இது சர்ச்சின் நேர்த்தியை மாற்றாமல் செய்யப்பட்டது என்று ஆகஸ்ட் 1970 இன் தி இந்து பக்கங்களில் ஒரு அறிக்கை கூறுகிறது, என்றெல்லாம் இந்த “வரலாற்றாசிரியர்” கூறுகிறார். இருப்பினும், ஒரு கோவிலை இடித்து தேவாலயம் எப்படி கட்டப்பட்டது என்று குறிப்பிடவில்லை. முரண்பாடாக, முன்னாள் பேராயர் அருளப்பா தனது புத்தகத்தில், போர்த்துகீசியர்கள் அதே இடத்தில் தேவாலயத்தைக் கட்ட முயற்சித்தபோது, அங்கு நிலத்தடியில் மீட்கப்பட்ட “சக்கரம்/எந்திரம்” கல் கண்டெடுத்ததைச் சுட்டிக்காட்டி, கோயில் இருந்ததாகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். இதெல்லாம் கூட அந்த சரித்திராசிரியருக்குத் தெரியவில்லை போலும்…

போப்பின் வருகை போன்றவை: குறிப்பிடத்தக்க வருகைகள்- ஜனவரி 2010 இல் இந்த இடம் தேசிய ஆலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மக்களை ஈர்த்தது. போப் இரண்டாம் ஜான் பால் பிப்ரவரி 5, 1986 அன்று அந்த இடத்திற்கு வந்தார். போப்பாண்டவர் தமிழில் (வணக்கம் என்று கூறி) வாழ்த்தினார், பின்னர் போப்பாண்டவரின் வருகையை நினைவுகூரும் வகையில் ஒரு சிலை கட்டப்பட்டது. இத்தாலிய முன்னாள் பிரதமர் ரோமானோ ப்ரோடி [Romano Prodi] மற்றும் அவரது மனைவி ஃபிளாவியா ஃபிரான்சோனியோ [Flavia Franzonio] பிப்ரவரி 11, 2007 அன்று விஜயம் செய்தனர். 2024 மே/ஜூன் மாதத்தில் ழிழா கொண்டாட திட்டமிட்டுள்ளனர். “கிறிஸ்தவ சமூகத்திற்கு புனிதரின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக செயின்ட் தாமஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கல்வாரி சிறப்பாக உருவாக்கப்பட்டது,” என்று பாதிரி மைக்கேல் கூறுகிறார். டிசம்பர் 8 ஆம் தேதி, தேவாலயத்தின் புரவலர் துறவியின் “எதிர்பார்த்து வருகின்ற பெண்மணி” [Our Lady of Expectation] பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். எனவே, “தி இந்து” போன்றவற்றில் இதைப் பற்றிய அதிக விவரிப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இதைப் பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்[11]. இது 26-11-2023 அன்று ஆங்கிலத்தில் பதிவு செய்த கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்[12].

© வேதபிரகாஷ்

02-12-2023


[1] Vedaprakash, Christian music, Christian Tamil music,  Christian keerthanais and Kutchery: All with “Thomas myth”,  the way, Nivedita Louis spreads it!, July 06, 2020.

[2] https://vedaprakash.wordpress.com/2020/07/06/christian-music-christian-tamil-music-christian-keerthanais-and-kutchery-all-with-thomas-myth-the-way-nivedita-louis-spreads-it/

[3] Vedaprakash, Why the list of “Thomas myth-makers” has been increasing day by day in Tamilagam and India? [1], November 11, 2020.

[4]  https://vedaprakash.wordpress.com/2020/07/11/why-the-list-of-thomas-myth-makers-has-been-increasing-day-by-day-in-tamilagam-and-india-1/

[5] Vedaprakash, Why the list of “Thomas myth-makers” has been increasing day by day in Tamilagam and India? [2], November 11, 2020.

[6] https://vedaprakash.wordpress.com/2020/07/11/why-the-list-of-thomas-myth-makers-has-been-increasing-day-by-day-in-tamilagam-and-india-2/

[7]  The Hindu, Heritage walk exploring St. Thomas Mount held in Chennai, THE HINDU BUREAU, November 26, 2023 12:29 am | Updated 12:45 pm IST – CHENNAI.

[8] https://www.thehindu.com/news/cities/chennai/heritage-walk-exploring-st-thomas-mount-held-in-chennai/article67574173.ece

[9] The Hindu, St. Thomas Mount National Shrine: 500 years on a hillock, Liffy Thomas, November 26, 2023 02:23 pm | Updated 03:03 pm IST.

[10] https://www.thehindu.com/news/cities/chennai/st-thomas-mount-national-shrine-500-years-on-a-hillock/article67576002.ece

[11] Vedaprakash, The “Hindu way” of promoting “thomas myth” – how the so-called historians have been hysterical than historical in spreading such myth!, November 26, 2023.

[12] https://vedaprakash.wordpress.com/2023/11/26/the-hindu-way-of-promoting-thomas-myth-how-the-so-called-historians-have-been-hysterical-than-historical-in-spreading-such-myth/

1523-ம் ஆண்டு கட்டப் பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி ரூ.2 கோடி நிதியுதவி! (தாமஸ் கட்டுக் கதை தொடர்கிறதா?)

நவம்பர் 24, 2022

1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி ரூ.2 கோடி நிதியுதவி! (தாமஸ் கட்டுக் கதை தொடர்கிறதா?)

புனித தோமையார் மலை தேசியத் திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழா: புனித தோமையார் மலை தேசியத் திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழா, என்று நான்கு நாட்களுக்கு முன்னர் 20-11-2022 [?] அன்று, ஒரு வெளிநாட்டு பாதிரியுடன் விழா நடத்தப் பட்டுள்ளது. 500 ஆண்டு கொண்டாட்டத்திற்கான கல்வெட்டு அவரால் திறந்து வைக்கப் பட்டது. அவருக்கு நினைவு பரிசும் கொடுக்கப் பட்டது….பேசும்பொழுது, “……..தாமஸ் இங்கு வந்து மரித்தார்………இது இந்தியாவின் கல்வாரி என்று அழைக்கப் படுகிறது…….சிலைகள் எல்லாம் இருக்கின்றன……..,” என்றும் சொல்லப் பட்டது.எல்லோரும் சேர்ந்து ஜபித்தனர்….பாட்டு பாடினர்…………தமிழ்நாட்டு பாரம்பரிய நடனங்கள் ஆடப் பட்டன. …………இவ்விவரங்கள் சில வீடியோக்கள் மூலம் அறியப் படுகின்றன[1].

1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழா: சென்னையை அடுத்த பரங்கிமலையில் பழமையான புனித தோமையார் தேவாலயம் உள்ளது. 1523-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பழமை மாறாமல் செயல்பட்டு வருகிறது[2]. இந்த தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி அங்கு செய்யப்பட உள்ள பணிகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 23-11-2022 அன்று ஆய்வு செய்தார்[3]. அங்குள்ள பழமையான நினைவு சின்னங்கள், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டயங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் பழமையான தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு தேவாலயத்தின் வரலாற்று புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு செய்யப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அவருடன் தேவாலய அதிபர் மைக்கேல், பங்கு தந்தை அலெக்சாண்டர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் லலிதா ஆகியோர் இருந்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- “முதல்அமைச்சர் மு..ஸ்டாலின், சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு பணிக்காக நிதியை ஒதுக்கி தந்து உள்ளார்[4]. இதில் முதற்கட்டமாக 1523-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 500 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது[5]. இந்த நிதியில் தேவாலயத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை பார்வையிட வந்தேன். இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பங்கு தந்தையாரிடம் கேட்டுக்கொண்டேன். நாகூர் தர்காவுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது,”  இவ்வாறு அவர் கூறினார். டுவிட்டரில் அமைச்சைன் பதிவு, இவ்வாறு உள்ளது[6], “நூறாண்டுகள் பழமையான 3 தேவாலயங்கள் மற்றும் 3 தர்காக்கள் பழுது பார்த்து மராமத்து செய்வதற்காக தலா 2 கோடி வீதம் 12 கோடி ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  @mkstalin அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மூன்று தேவாலயங்களில் ஒன்றான, (1/2) ……சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தில் நடைபெற்று வருகின்ற சீரமைப்பு பணியினை நேரில் சென்று பார்வையிட்டு விரைவில் பணிகளை முடிக்க கேட்டுக் கொண்டேன். தேசிய திருத்தலத்தின் அதிபர் தந்தை அவர்களும், செங்கல்பட்டு பேராயத்தின் பங்குத்தந்தையர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தனர். (2/2)”

பொது மக்களின் பயன்பாடு என்றால் என்னவென்று தெரியவில்லை: ஊடகக்காரர்கள் பட்டாளமாகத் திரண்டு வந்திருந்தது, அவர்களது வீடியோக்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், கேள்விகள் ஒன்றும் சரியாகக் கேட்கப் படவில்லை. கேட்ட ஒரு சில கேள்விகளுக்கும் அரசு-முறையில் ஜாக்கிரதையாகத்தான் அமைச்சர் பதில் கொடுத்தார். வீடியோக்களில் மேலும் சில விவரங்கள் காணப்படுகின்றன[7], “தலா ஆறு கோடி ரூ. வழங்கினார்அவர்கள் கேட்பதை சரிபார்த்து….அரசு சார்ந்து குழு ஆராய்ந்து, அந்த நிதி ஒதுக்கீடு செய்து தருகிறோம்…மக்களின் பயன்பாட்டிற்கு உதவ….செய்யப் பட்டுள்ளது….” பொது மக்களின் பயன்பாடு என்றால் என்னவென்று தெரியவில்லை. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும், சர்ச்சில் எல்லா இடங்களுக்கும்சென்று வர முடியுமா? பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து, இப்பணம் கொடுக்கப் படுவதால், அதனை நியாயப் படுத்த அவ்வாறு கூறப் பட்டது என்றால், பொது மக்கள் எவ்வாறு அந்த சர்ச்சைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழா: பொதுவாக கிருத்துவர்கள் இந்த சர்ச்சை தாமஸ் வந்து கட்டியதாக கூறிக் கொண்டு கலாட்டா செய்து வருவர். அவ்வாறே கூட்டங்கள் போட்டு கலாட்டா செய்து வந்துள்ளனர்யிதைப் பற்றியெல்லாம் விவரமாக எழுதி-பதிவு செய்துள்ளேன்…. இப்பொழுது  “1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழா,” எனும்பொழுது, சுற்றி நிற்கும் பாதிரி பட்டாளம் அமைதியாக உள்ளதை கவனிக்க வேண்டும். அதாவது, அந்த “தாமஸ் கட்டுக் கதை” எடுபாடாது என்று அமைதியாக இருந்தனரா அல்லது அமைச்சர் அவ்வாறு ஏதாவது சொல்லி விடப் போகிறாரா என்று கண்டுகொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அமைச்சர் அமர்க்களமாக புகைப் படங்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அங்கிருக்கும் பெருமாள் கோவிலை இடித்து சர்ச் கட்டப் பட்டது என்று முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பிறகு, அந்த விவரங்கள் எல்லாம் வெளிவந்து விடுமோ என்று அடக்கி வாசித்திருக்கலாம்.

செக்யூலரிசத் தனமாக,” திராவிடத்துவ மாடலில் நடக்கும் நிகழ்வுகள்: “மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் லலிதா” என்றால் அவர் கிருத்துவரா இல்லையா என்று தெரியவில்ல. இந்து அறநிலையத் துறையில் கிருத்துவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது போல, இவரும் “செக்யூலரிசத் தனமாக,” இருக்கிறாரா அல்லது விசுவாசத்துடன் பணியில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.  இதே மாதிரி ஐனர், பௌத்தர் சீக்கியர் எல்லோருக்கும் கோடிகள் கொடுக்கப் படுமா? அவர்களது வழிபாட்டு ஸ்தலங்கள் பராபரிப்பு செய்யப் படுமா? இல்லை, 500-ஆண்டுகள் ஆகவில்லை என்பார்கள் போலும். இந்துத்துவவாதிகளைப் பொறுத்த வரையிலும், ஏதோ தமக்கு எல்லாம் தெரிந்தது போல காட்டிக் கொண்டு, மற்றவர்களின் ஆராய்ச்சிகளை, எழுத்துகளைத் திருடிக் கொண்டு, ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாலும், இதை கவனிக்கவில்லை போலும்….இந்த வீரர்கள் இப்பொழுதைய பிஜேபி-ஆதரவுடன் செயல் பட்டு வந்தாலும், கூட்டணி தர்மத்தினால் அமைதியாக இருந்து விடுவர் போலும்…..,

திராவிடத்துவபெரியாரிஸநாத்திக அரசு பொது மக்களின் பணத்தை சர்ச்மசூதி புதுப்பித்தல் காரியங்கலுக்கு உபயோகப் படுத்துவது: பிப்ரவரி 2022ல், கோயில்களை போல தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் தர்காக்களை புனரமைக்கவும், பழுது பார்க்கவும் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்[8]. அதன்படி சென்னை உள்ள பழமையான வெஸ்லி தேவாலயம், நெல்லை உள்ள புகழ்பெற்ற கால்டுவெல் தேவாலயம், சென்னையில் உள்ள பழமையான நவாப் வாலாஜா பள்ளிவாசல், பழமையான ஏர்வாடி தர்கா மற்றும் நாகூர் தர்கா ஆகிய சிறுபாண்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்[9]. முன்பு, 2020ல், அதிமுகவும் இதே போல பட்ஜெட்டில் அறிவித்தது[10]. கோடிகள் இந்த பராமரிப்பு வேலைகளுக்கு ஒதுக்கப் பட்டது[11]. இது நிச்சயமாக பொது மக்களின் வரிப்பணம் தான். ஆக, செக்யூலரிஸத் தனத்துடம் நடக்கும், இந்த சேவைகள் தொடரத்தான் செய்யும். பிஜேபியே ஆட்சிக்கு வந்தாலும் தொடரும்.

© வேதபிரகாஷ்

24-11-2022.


[1] புனித தோமையார் மலை தேசியத் திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழா,

[2] தினத்தந்தி, பரங்கிமலை புனித தோமையார் தேவாலய பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல், நவம்பர் 24, 10:06 am.

[3] https://www.dailythanthi.com/News/State/2-crores-for-the-maintenance-of-parangimalai-st-thomaiyar-church-minister-senji-mastan-informs-843694

[4] தினமலர், தோமையார்மலை சர்ச் சீரமைப்புக்கு ரூ.2 கோடி,  Added : நவ 23, 2022 23:00…https://www.dinamalar.com/news_detail.asp?id=3177812

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3177812

[6]  செஞ்சி மஸ்தான் டுவிட்டர் –https://twitter.com/GingeeMasthan/status/1595513734101098496?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

[7]  செய்துள்ளது.பராமரிப்பு பணி முடிந்தவுடன் …, YouTube·NS TAMIL NEWS·24-Nov-2022

https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88++%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&bih=657&biw=1366&hl=en&sxsrf=ALiCzsa-m-WxYfCrtih8On3QRsJ2I_4Ffw%3A1669293032028&ei=6GN_Y5aZAfqt4-EP2JC5gAM&ved=0ahUKEwiWrcyR6cb7AhX61jgGHVhIDjAQ4dUDCA8&uact=5&oq=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88++%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&gs_lcp=Cgxnd3Mtd2l6LXNlcnAQAzIFCAAQogQyBQgAEKIEMgUIABCiBDIFCAAQogQyBQgAEKIEOggIABCiBBCwAzoHCCMQsAIQJ0oECEEYAUoECEYYAFDFEljNImC3KWgDcAB4AoAB8ASIAd0LkgEHMS42LjUtMZgBAKABAcgBA8ABAQ&sclient=gws-wiz-serp – fpstate=ive&vld=cid:1feb2e0e,vid:VK3vJcPYDC0

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மசூதிகள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி: பட்ஜெட்டில் அறிவித்த பிடிஆர், By Noorul Ahamed Jahaber Ali Updated: Friday, March 18, 2022, 15:59 [IST].

[9]  https://tamil.oneindia.com/news/chennai/rs-12-crore-to-renovate-mosques-churches-ptr-452157.html

[10] Times of India, Tamil Nadu budget: More funds to repair mosques and churches, TNN / Feb 15, 2020, 08:42 IST

[11] https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-budget-more-funds-to-repair-mosques-and-churches/articleshow/74144601.cms

திருடிய இடத்தில் கட்டப் பட்ட சர்ச்சில் நடந்த திருட்டு – சாந்தோம் சர்ச்சில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய ஆசாமி கைது!

செப்ரெம்பர் 27, 2022

திருடிய இடத்தில் கட்டப் பட்ட சர்ச்சில் நடந்த திருட்டு – சாந்தோம் சர்ச்சில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய ஆசாமி கைது!

சாந்தோம் சர்ச்சில் நாற்காலி திருட்டு: மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய குற்றவாளியை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் கைது திங்கள்கிழமை 26-09-2022 அன்று செய்தனர்[1], என்று செய்தி வந்துள்ளது. சென்னை சாந்தோமில் பழமையான சாந்தோம் தேவாலயம் உள்ளது. இது, சுற்றுலா தலம் என்பதால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல், தேவாலயத்தில் உள்ள அனைத்து பொருட்களும் நூற்றாண்டுகளை கடந்தது[2]. திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்காக, பழமை வாய்ந்த பாரம்பரியமான மர நாற்காலி இருந்தது. இதற்கிடையே சாந்தோம் தேவாலயத்தில் மிகவும் பழமையான செம்மரத்தால் செய்யப்பட்ட சேர் திடீரென கடந்த 19ம் தேதி 19-09-2022  மாயமானது. திருடப்பட்ட சேர் அரியவகை சேர் என்பதால் பல லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தோம் தேவாலயத்தின் பங்கு தந்தை அருள்ராஜ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆக, போலீஸார் வேகமாக வேலை செய்து ஒரே வாரத்தில் திருடஐப் பிடித்து விட்டனர்!

ரோஸ்லினுக்கும் குபேரனுக்கும் எந்த சம்பந்தம் என்று தெரியவில்லை: அதேபோல், ராயப்பேட்டை சிவசாமி சாலையில் உள்ள ரோஸ்லின் (62) என்பவர் வீட்டில் இருந்து 60 ஆண்டுகள் பழமையான குபேரன் சிலை ஒன்றும் மாயமானது. ரோஸ்லினுக்கும் குபேரனுக்கும் எந்த சம்பந்தம் என்று தெரியவில்லை. சாந்தோம் சர்ச்சில் இந்து சிற்பங்கள், கல்வெட்டுகள் எல்லாம் இருந்தது போல, இதுவும் இருந்த்து போலும். ஆனால், இது 60 வருட காலம் தான். கிருத்துவர்கள் 16ம் நூற்றாண்டில், இங்கிருந்த கபாலஸ்வரர் கோவிலை இடித்து விட்டுத் தான், இந்த சர்ச்சைக் கட்டிக் கொண்டனர். பிறகு, படிப்படியாக, இருக்கும் ஆதாரங்களை அழித்து, சர்ச்சை பெரிதாகக் கட்டிக் கொண்டனர். ஆக, இதுவே ஒரு திருட்டுதான். இந்துகோவிலை இடித்து, இடத்தைத் திருடிக் கொண்டது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து ரோஸ்லின் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருடிய முத்து என்பவன் கைது செய்யப் பட்டது: இந்த இரண்டு புகார்களின்படி, மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், ராயப்பேட்டை கபாலி நகரை சேர்ந்த முத்து (40) என்பவர் சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து விலை மதிப்பற்ற சேரை திருடி சென்றது தெரியவந்தது. மேலும், ரோஸ்லின் வீட்டில் இருந்த குபேரன் சிலையையும் நோட்டமிட்டு திருடியது உறுதியானது. திருடிய சேர் மற்றும் குபேரன் சிலையை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது[3]. முத்து, இதேபோல பல இடங்களில் பழமையான பொருள்களைத் திருடி விற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது[4]. இதைதொடர்ந்து போலீசார் முத்துவை கைது செய்தனர். பிறகு அவரிடம் இருந்து விலை மதிப்பற்ற பழமையான சேர் மற்றும் குபேரன் சிலை மீட்கப்பட்டது[5]. மேலும், இதுபோல் வேறு எங்கேயாவது பழமையான பொருட்களை திருடி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாந்தோம் தேவாலயத்தில் பழமையான சேர் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடப்பது வியப்பாக உள்ளது. 2009ல் நடந்த விவகாரம்.

2009ல் சர்ச் உண்டியல்கள் உடைக்கப் பட்டது: 25-06-2009 அன்று காவலாளி ரவிச்சந்திரன் ஆலயத்துக்குள் / சர்ச்சிற்குள் சென்றபோது மாதா சிலை அருகே இருந்த மர உண்டியல் உள்பட 4 உண்டியல்கள் மாயமாகி இருந்தன. இது குறித்து பேராலய நிர்வாகிகள் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். துணை கமிஷனர் மெளரியா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். தேவாலயத்தின் பின் பகுதியில் உள்ள படிக்கட்டு வழியே முதல் மாடிக்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்கு 4 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தன[7]. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது[8]. உண்டியல்களை உடைக்க உதவிய இரும்பும் குழாயும் அருகே கிடந்தது. முன்வாசலில் 2 காவலாளிகள், பின் வாசலில் 2 காவலாளிகள் என 24 மணி நேர பாதுகாப்பு கொண்ட இந்த தேவாலயத்தில் நள்ளிரவு 1 மணிக்கே முன் வாசல் மூடப்படுவது வழக்கம். காவலாளிகளுக்குத் தெரியாமல் சுற்றுச் சுவர் வழியாக ஏறிக் குதித்து இந்தக் கொள்ளையை மர்மக் கும்பல் அரங்கேற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்த மாடியை யாரும் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேராலயம் முழுவதும் 52 சிறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் கொள்ளையர்கள் அதில் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. பிறகு விவகாரத்தை அறிந்து, அவ்விசயம் மௌனமானது.

2017ல் நடந்த விவகாரம்: 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், பிஷப் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ அருகில் மது அருந்தியது போல சில தடயங்கள் இருந்தது. அதிர்ச்சியான பிஷப், மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ் அவர்களிடம் புகார் செய்தார். துணை ஆணையர் தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படை சாந்தோம் சர்ச்சில் ஆய்வு செய்தது. பீரோவில் இருந்த பணம் ரூ10 இலட்சம் [இந்த தொகையில் மாறுதல் இருக்கலாம்..நமக்கு கிடைத்த தகவல்] காணவில்லை. புதியதாக பிஷப் பொறுப்பேற்கும் போது, அவருக்கு மோதிரம் அணிவிப்பார்கள். அந்த மோதிரமும் காணவில்லை. மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை, ரகசிய விசாரணையில் நால்வர் சிக்கினார்கள். அதில் பிஷப்பில் செயலாளர் சேகர் மீது சந்தேகம் வர, சேகர் தனிப்பட்ட முறையில் போலீஸ் பாணியில் விசாரிக்கப்பட்டார். சேகர் உண்மையை ஒத்துக்கொண்டார். பல விவகாரங்களில் ரூ3 இலட்சம் செலவு செய்தது போக, மீதி பணம் ரூ7 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஆனால் பிஷப்புகளுக்கு அணிவிக்கப்படும், பழமை வாய்ந்த அந்த மோதிரம் இன்னும் கைப்பற்றப்படவில்லை. அந்த மோதிரம் என்னாச்சு என்ற விவரம் இது வரை தெரியவில்லை. மோதிரம் தொடர்பாக பல முறை பிஷப் கேட்டும், காவல்துறையிடமிருந்து பதில் இல்லை என்று தெரிகிறது. பிஷப், சேகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று துணை ஆணையரை கேட்டுக்கொண்டதாகவும், அதனால் சேகர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சேகர், திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி சேகருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த அதிகாரியின் மகன் திருமணம் ஜனவரி மாதம் 21ம் தேதி சாந்தோம் தேவலாயத்தில் நடந்தது. அந்த திருமணத்துக்கு மிகவும் உதவியர் சேகர் என்பதால் அந்த அதிகாரி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் சேகரை சின்னமலையில் உள்ள தேவலாயத்துக்கு மாற்றியுள்ளார்..

© வேதபிரகாஷ்

27-09-2022


[1] தினகரன், சாந்தோம் தேவாலயத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய ஆசாமி கைது, 2022-09-27@ 02:03:10

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=802536

[3] தினமணி, சாந்தோம் பேராலயத்தில் பழமையான நாற்காலி திருட்டு: தேடப்பட்டவா் கைது, By DIN  |   Published On : 27th September 2022 12:32 AM  |   Last Updated : 27th September 2022 12:32 AM.

[4] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/sep/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3922907.html

[5] விவேகபாரதி, சாந்தோம் தேவாலயத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய ஆசாமி கைது, vivekabharathi by vivekabharathi  செப்டம்பர் 27, 2022.

[6] https://vivekabharathi.com/143745/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, சாந்தோம் புனித தோமையார் ஆலயத்தில் கொள்ளை , By Staff Published: Friday, June 26, 2009, 12:32 [IST]

[8] https://tamil.oneindia.com/news/2009/06/26/tn-burglary-in-chennai-santhome-church.html

தெய்வநாயகத்துடன் கூட்டு சேர்ந்த இந்துத்துவ வாதிகள் – திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்த படலம்!

நவம்பர் 29, 2021

தெய்வநாயகத்துடன் கூட்டு சேர்ந்த இந்துத்துவ வாதிகள்திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்த படலம்!

கிருத்துவர்களுக்கு சில இந்துத்துவவாதிகள் துணை போவதேன்?: கிருத்துவர்கள் தங்களது மதத்திற்காக விசுவாசமாக உழைக்கிறார்கள், பொய் பேசுகிறார்கள், போலி ஆராய்ச்சி செய்கிறார்கள் கள்ள ஆவணங்களை உருவாக்குகிறார்கள், களவாணித்தனமாக அத்தாட்சிகளை தயாரிக்கிறார்கள். ஆனால், அதே வேலைகளை இந்துத்துவ வாதிகள் செய்யலாமா என்றால், அதுவும் நடைபெறுகிறது என்று தோன்றுகிறது. கடந்த 5ம் தேதி (05-11-2021), சென்னை கீழ்ப்பாக்கத்தில் எஸ்ரா சற்குணம் நடத்தி வரும் கிறிஸ்தவ இயல் கல்லூரியில், திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்’ என்ற தலைப்பில் தாமஸ் கட்டுக்கதை புகழ் தெய்வநாயகம் என்பவர் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. அதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பெற்றுக்கொண்டு பேசுகையில், “திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர், அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை வள்ளுவர் எழுதியுள்ளதாக, நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது” என்றார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ‘வள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்துப் புள்ளிவிவரம், சைவமும் வைணவமும் ஆரிய மதம் அல்ல’ என்கிறது. இந்தியாவில் உள்ள 108 வைணவக் கோயில்களில் 106 தமிழகத்தில்தான் உள்ளது. 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் தமிழர்கள். மேலும், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி உள்ளனர். எந்த ஒரு மதத்தையும் உருவாக்கவில்லை. தமிழர்கள், திராவிடர்களின் சமயம்தான் சைவம், வைணவம். நம் மதங்களின் மீதான ஆக்கிரமிப்பில் இருந்து நாம் விடுபட வேண்டும். கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது. அதற்கு திருக்குறள் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக உள்ளது,” என்று பேசினார்.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் பேசியது: திருமாவின் கருத்தை எதிர்க்கும் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் பேசினோம்.“திருவள்ளுவரை மதம் மாற்றும் முயற்சி கடந்த 100 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தெய்வநாயகம் முதல் பலரும் இந்த செயலை செய்து வருகின்றனர். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் திருவள்ளுவரை சமணராக, கிறிஸ்தவராக மதம் மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், ரோமில் இருந்து வந்த தாமஸ் சொல்லிக்கொடுத்துத்தான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்ற கட்டுக் கதையை திருமாவளவன் சொல்லியுள்ளார் இதைக் கேட்கும் போது ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் வரவேண்டும். இதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாதக சீமான் ஆகியோருக்கு கோபம் வரவேண்டும். ஆனால் வரவில்லை. எனவே. தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளவேண்டும். நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகதல் நெஞ்சம், சிந்திக்க கேட்க செலி என்ற பாடலுக்கு அவர்கள் விளக்கம் சொல்லத் தயாரா? சங்ககால பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி அரசவையில்தான் திருக்குறள் இயற்றப்பட்டது. இதன் பொருள் 4 வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருள்தான் 3 பால்களாக திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்மனே தனது உலகிற்கு இறங்கிவந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டு, திருவள்ளுவராக அவதாரம் எடுத்து திருக்குறளை இயற்றினார் என்பது பொருள். எனவே, திருமாவளவன் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது,” என்று சுண் சிவந்தார்[1].  ஒரே தேசம் பிஜேபி சார்ந்த இணைதளம் என்று தெரிகிறது, அதனால், அவரது பேட்டியை மட்டும் போட்டிருக்கிறார்கள்[2].

வேதபிரகாஷ் சொன்னதாக ஒரு இந்துத்துவாதி கிளம்பியுள்ளது ஏன்?: வரலாற்று ஆய்வாளர் வேதபிரகாஷிடம் பேசினோம்[3], “திருவள்ளுவர் குறித்து தொல்.திருமாவளவன் பேசியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அது வரலாற்றுப் பிழை. மேலும் வள்ளுவரை கிறிஸ்தவர் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரும் வேலையை 1975ம் ஆண்டிலேயே பேராசிரிய தெய்வநாயகம் தொடங்கி விட்டார். அப்பொழுது அவர் தனியார் கல்லுரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார். வள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பது தான் அவரின் ஆய்வாகவும் இருந்தது.” இங்கு உண்மையில் நான் “குமுதம் ரிப்போர்ட்டருடன்” எதுவும் பேசவில்லை.  அங்கு வெளியிடப் பட்டுள்ள புகைப் படம் ஏ. வி. கோபாலகிருஷ்ணன் என்ற நபருடையது. இவர் கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புகளுக்கு ஏஜென்ட் போல வேலை செய்து வருகிறார். அதாவது, தகவல்களை, விவரங்களை சேகரித்து இங்கிருந்து அங்கு, அங்கிருந்து அங்கு கொடுப்பது என்று செய்து வருகிறார். இப்பொழுது “யு-டியூப்”பிலும் இணைதளம் மற்றும் நண்பர்களிடமிருந்து திருடிய அறிவுபூர்வமான, ஆராய்ச்சி விவரங்களை தனது போலக் கட்டிக் கொண்டு கதை அளந்து வருகிறார்.

“குமுதம் ரிப்போர்ட்ரில்” ஏ. வி. கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து கூறியது: “மேலும் கடந்த 1989ம் ஆண்டு இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை நூல் எழுதும் போது உலக் தமிழாராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அந்ட நூலைப் படித்த தமிழ் அறிஞர்களும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் தெய்வநாயகம் எந்த நிறுவனம் மூலமாக, தான் பட்டம் பெற்றேன் என்று கூறினாரோ, அந்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ‘அது ஆய்வுக் கட்டுரை அல்ல’ என மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டது. திருக்குறளில் கிறிஸ்தவ கருத்துகள் எதுவுமே இல்லை என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். 1974ல் திருப்பதி வேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் தலைமையில் நடந்த திருக்குறள் கருத்தரங்கில் லயோலா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும் இயேசு சபை பாதிரியுமான எஸ்.ஜே. ராஜமாணிக்கம், ‘திருக்குறளில்’ கிறிஸ்தவம் சிறிதும் இல்லை” என மிக ஆணித்தரமாக பதிலிட்டார்”. வள்ளுவரை சர்ச்சையில் சிக்க வைக்கலாமா? என்று -கட்டுரை குமுதம் ரிப்போட்டர்.

18-11-2021 அன்று முகநூலில் நான் வெளியிட்டது: இந்த மாதம், வேறு வேலைகள் இருந்ததால், ஒரு நண்பர் சொல்ல, இதனை கவனிக்க நேர்ந்தது. என்வே கீழ்கண்ட பதிவை முகநூலில் செய்தேன்.

  இந்த புகைப்படத்தில் இருப்பவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.  

“வேதபிரகாஷ்” என்ற பெயரில், நான் சொன்னது போல, “குமுதம் ரிப்போர்ட்டரில்”, 16-11-2021 இதழில் வெளி வந்துள்ளது.  

இவர் கடந்த ஆண்டுகளில் என்னுடைய பிளாக்குகளில் உள்ளதை அப்படியே காப்பி அடித்து (Plagiarism) தனது போல போட்டுக் கொண்டுள்ளார்.

  மூன்று முறை எச்சரித்தும் அதே வேலையை செய்து வருகிறார்.

  இப்பொழுது, என்னுடைய பெயர் மற்றும் என்னுடைய “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” புத்தகத்தை தனது போலக் காட்டிக் கொள்கிறார்.  

இத்தகைய திருட்டு-களவாணித் தனம் தொடர்ந்தால், Indian Copyright Act, Intellectual Property Act and other provisions of the relevant acts and Rules  படி தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்றுதகுந்த எச்சரிக்கை விடப்படுகிறது.  

முன்னர் கூட வேறு சிலர் இவ்வாறு உபயோகப் படுத்தியுள்ளனர்.  

ஆகவே, அந்த நபர் உடனடியாக, அப்பத்திரிக்கைக்கு அறிவித்து உண்மையினை அறிவிக்கவேண்டும், வெளியிட வேண்டும்.  

வேதபிரகாஷ்
18-11-2021  

ஆனால், அந்த நபரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

தெய்வநாயகம் புராணம் – எதிர்மறை பிரச்சாரம் செய்யும் இந்துத்துவவாதிகள்: இதற்குள் சமூக ஊடகங்களில் இந்துத்துவவாதிகள், யூ-டியூப், பேஸ்புக் என்று கிளம்பி விட்டனர். ஒரு வேளை இதனால் யாதாவது பணம் கிடைக்கலாம், ஆனால், கொள்கை பறக்கிறது, இந்துக்களின் நலன் பாதிக்கப் படுகிறது. ஒரே தெய்வநாயகம் புராணம் தான். வெவ்வேறு பெயர்களில் கிளம்பி விட்டார்கள். முன்பு சாமி தியாகராஜன் என்பவரும் அவரது கோஷ்டியும் வி.ஜி.சந்தோஷித்திற்கு குடை பிடித்தனர், எல்லீஸர் விருது எல்லாம் கொடுத்தனர். இப்பொழுது மாரிதாஸ், கௌதமன், தேவப்ரியா, மிஷன் காளி என்று பலர் கிளம்பியுள்ளனர். தொடர்ந்து தெய்வநாயகத்திற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றனர். இது அரவிந்த நீலகண்டன் பாணி எனலாம். இதை தெய்வநாயகமே ஒப்புக் கொண்டது, முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன். அரசியலையும் இந்துத்துவத்தையும் கலக்க முடியாது, எல்லா இந்துக்களையும் அரசியல்-இந்துத்துவத்தில் கொண்டு வரமுடியாது, வற்புருத்தக் கூடாது, இந்துமதம் இந்துக்களுக்கு என்றுள்ள போது, அரசியலுக்காக, மற்ற “இஸங்களுடன்” சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது ரங்கராஜனை இந்த அரசியல்-இந்துத்துவவாதிகள் எதிர்ப்பதை கவனிக்கலாம். அவ்வாறு செய்வதால் தான் சேர்ந்து வரும் இந்துக்கள் கூட பிரிய வைக்கிறார்கள். அவ்வாறு அரசியல்-இந்துத்துவவாதிகள் செய்கிறார்கள். இங்கும், கிருத்துவர்களுக்கு துணைபோகும் அரசியல்-இந்துத்துவவாதிகளுடன் மற்ற இந்துக்கள் விலகித்தான் செல்வார்கள் அல்லது விலக்கி வைப்பார்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-11-2021


[1] Oredesam, திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றாரா? திருமா பற்றவைத்த சர்ச்சை தீ ..பதிலடி கொடுத்த அஸ்வத்தாமன், BY OREDESAM  November 15, 2021

[2] https://oredesam.in/thiruma-vs-aswothaman-bjp/

[3] குமுதம் ரிப்போர்ட்டர், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றாரா? திருமா பற்றவைத்த சர்ச்சை தீ, 16-11-2021, பக்கங்கள்.10-11.

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (6)

நவம்பர் 8, 2021

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (6)

பிஷப் அருளப்பா தெய்வநாயகம் மற்றும் கணேஷ் ஐயரை மோசடிகளில் ஈடுபடுத்தியது: எம். தெய்வநாயகம் ஒரு அடிப்படைவாத கிருத்துவர். ஆரம்பத்தில் அருளப்பாவிலிருந்து, சமீபத்தில் சின்னாப்பா வரை, இவரை ஊக்குவித்து குறிப்பிட்டக் கட்டுக் கதைகளை ஆராய்ச்சி போர்வையில் திரித்து எழுதி வைப்பது, வருவது சிலருக்குத் தெரிந்த விசயம். ஶ்ரீரங்கம் கணேஷ் ஐயரை வைத்து ஒருபக்கம் போலி ஆராய்ச்சி, இன்னொரு பக்கம் இந்த தெய்வநாயகம் என்று தான் அருளப்பா மோசடிகளை ஆரம்பித்தார். 1987ல் கணேஷ் ஐயர் விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, மோசடிகள் வெளி வந்து நாறிய நிலையில், அருளப்பா சமாதானம் செய்து கொண்டு (out of court), வழக்கை 1989ல் முடித்து கொண்டார். ஆனால், தெய்வநாயகம் தொடர்ந்து ஆதரிக்கப் பட்டார். இவரது போலி ஆராய்ச்சிற்காக, அருளப்பா தனியாக ஒரு நாற்காலியை உருவாக்கி மோசடியை ஆரம்பித்தனர். 1996ல் அருளப்பா காலமாகியவுடன், சின்னப்பா உதவ ஆரம்பித்தார்.

அருளப்பாவிற்குப் பிறகு சின்னப்பா:  2008ல் “பாஸ்டோரல் சென்டர்” மைலாப்பூரில், உலக கிருத்துவ தமிழ் மாநாடும் நடத்தப் பட்டது. தெய்வநாயகம் தான் ஹீரோ. ஆனால், ஒன்றும் எடுபடவில்லை. மெர்வின் மெலோஸ்கி என்ற அமெரிக்க பிரச்சாரகரை வைத்து விளம்பரம் தேட முயன்றார், முடியவில்லை. பொதுவாக, தமிழ் பேராரிசிரியர்களும் இவரது எழுத்துக்களைக் கண்டுகொள்வதில்லை. கிருத்துவக் கிருக்கன், அப்படித்தான் எழுதுவான் என்று கிண்டலாகத்தான் பேசி வந்துள்ளனர். ஏற்கெனவே, இவரது ஆராய்ச்சி நூலை, அருணை வடிவேல் முதலியார், கிழி-கிழியென்று கிழித்து விட்டார். சில தனிப்பட்டதாராய்ச்சியாளர்களும், இவரது பொய்மாலகளை எடுத்துக் காட்டினர். 1989ல் நானும் ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். பிறகு ஈஸ்வர் ஷரணின் புத்தகம் பல பதிப்புகள் வந்து விட்டன. தெய்வநாயகமும் அடங்கி போய்விட்டார். மகள் தேவகலாவும் இறந்து விட்டார். கடந்த ஆண்டில் உடம்பு சரியில்லை என்றிருந்தார். இந்நிலையில் தான், இப்பொழுது, இன்னொரு புத்தகத்தை வெளிட்டு கிளம்பியுள்ளார்.

2021ல் இன்னொரு புத்தகம்: “மற்ற உரைகள் அனைத்தும் தவறானவை என நிலைநாட்டும் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்,” என்ற தலைப்பிலிருந்தே, தெய்வநாயகத்தின் போலித் தனத்தை, அரைவேக்காட்டுத் தனத்தை அறிந்து கொள்ளலாம்.  தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளும் போக்கில், கிருக்குத் தனமாக தம்பட்டம் அடிக்கும் போக்கில் தலைப்பு உள்ளது. வயதான காலத்தில் பைத்தியம் முத்தும் என்பது போல, கிருத்துவ வெறி, அடிப்படைவாதம், தீவிரவாதாம் இவ்வாறு வெளிப்பட்டு விட்டது போலும். இது, கடைசி கட்டம் தான். தானே தன்னை வெளிப்படுத்துக் கொண்டது போலாகி விட்டது. இதற்கு எஸ்றா சற்குணமும், திருமாவளவனும் தேவையில்லை. அவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டது, இந்துவீரோதத் தனத்தையும் வெள்ப்படுத்தி விட்டது. இத்தகைய வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் போன்ற குணங்களுடன் செயல்படும் இவர்களிடம் உண்மைதன்மை எனு எதையும் பார்க்க முடியாது. அதுதான் அரங்கேறியுள்ளது.

 கீழ்ப்பாக்கத்தில் 05-11-2021 அன்று வெளியிடப் பட்டது: திருக்குறள் பற்றிய புரட்சி நூல் – எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள ECI இறையியல் கல்லூரியில் 05-11-2021 அன்று நடைபெற்றது[1]. இந்த விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நூலை வெளியிட்டார்[2]. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “வள்ளுவரை ஓவ்வொரு சமயத்தவரும்  உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்து புள்ளி விவரம் கூறுகிறது. மதமும் கடவுளும் வேண்டாம் என வாழும் மனிதர்களின் தொகை பெருகிவருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது[3]. சைவமும் வைணமும் ஆரிய மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில் தான் உள்ளது[4]. பெரும்பாலான சைவ கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள் தமிழர்கள், ஆதிசங்கரர், இராமானுஜர் , மத்வர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். மதங்களை உருவாக்கவில்லை[5]. தமிழர்கள் எனும் திராவிடர்கள் சமயம் தான் சைவ, வைணவ சமயங்கள். நம் மதங்களின் மீதான ஆரிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்[6]


திருமாவளவனின் வியக்யானம், விளக்கம்: கிருத்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது[7]. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. அதற்கு திருக்குறளும் ஆயுதமாக இருக்கிறது. கிருஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையிலேந்தாமல் , திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும்” என்று பேசினார்[8]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வான்முறையை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது பாஜக அரசு. இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. உ ப சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மௌலவிகள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. எந்த மாநில அரசும் செய்வதற்கு முன்னதாக ஏற்கனவே முந்தி கொண்டு டீசல் விலையை தமிழக அரசு குறைத்தது. அதே போல் பெட்ரோல் குறைப்பார்கள் என நம்புகிறோம். திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர்[9]. அவர் ஒரு கிருஸ்தவராக இருந்து தான், திருக்குறள் நூலை எழுதி உள்ளார் என நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து அது ஆய்வுக்கு உரியது,” என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது[10]..

ராஜிவ் மல்ஹோத்ராஅரவிந்த நீலகண்டன் இவர்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுப்பதேன்?: இந்த போலி ஆராய்ச்சி மோசடிகளைப் பற்றி பொதுவாக யாரும் கண்டுகொண்டதில்லை, கவலைப் பட்டதும் இல்லை. ஆனால், ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான் இவர்களுக்கு முதன் முதலில் பெரிய விளம்பரம் கொடுத்தனர். தெய்வநாயதமே, “ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் இவர்களை தூக்கிவிட்டார்,” என்று அவரது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார். அதாவது, யாருக்குமே தெரியாத இவர்களைத் தெரியவைத்ததற்கு நன்றியும் செல்லுத்தியுள்ளார்.

தெய்வநாயகத்தைத் தெரியாமல், எழுதியது எப்படி?: இங்கு இன்னொரு உண்மையினையும் சொல்லியாகி வேண்டும். ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் இவர்களுக்கு தெய்வநாயகம் யார் என்றே தெரியாது. அந்த மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. ஏன் முந்தைய மாநாடுகள், கூட்டங்கள் முதலியவற்றிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் தெய்வநாயகம் மற்றும் அவரது மகள் தேவகலா பற்றி எல்லாம் தெரிந்தது போல எழுதியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பிறகு விவரங்கள் எப்படி தெரிந்தது? மாக்ஸ் முல்லர் இந்தியாவைப் பார்க்காமலேயே, வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது போன்றுதான் உள்ளது! இப்படி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என்று பலமொழிகளில் மொழிபெயர்த்து, விளம்பரம் தேடித் தரும் உபயத்தை, ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்த நீலக்கண்டன், பதிப்பகத்தார் செய்து வருகின்றனர்!  ஏன் அப்படி செய்கிறர்கள் என்று யோசிக்க வேண்டும்? உதாரணத்திற்கு, உண்மையில் எதிர்க்கின்றனர் என்றால், 32 வருடங்களுக்கு முன்னர் வந்த (1989), இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கலாம்! எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கலாம்! ஆனால், இப்புத்தகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்!

இந்துத்துவவாதிகளுக்கும் தெய்வநாயகத்திற்கும் தொடர்பு உண்டா, ஏன் அவர்கள் விளம்பரம் கொடுக்க வேண்டும்?: இப்பொழுதும் இணைதளங்களில், புதியதாக திடீரென்று “தாமஸ் கட்டுக் கதை ஆராய்ச்சியாளர்கள்” என்று இந்துத்துவப் போர்வையில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி ஆதரவுடன் முளைத்துளார்கள். அவர்களின் பெயர்களைக் குறிப்பிடத் தேவையில்லை, ஏனெனில், அவர்களே தம்மை அவ்வாறு பிரகடப் படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தான், தெய்வநாயகத்திற்கு உதவி வருகிறார்கள். அதேபோலத்தான் 2021லும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பது போல, அதிகமாக விளம்பரம் கொடுத்து கவனத்தை ஈர்ப்பது இந்துத்துவ கோஷ்டிகள் தான்[11]. பால கௌதமன், மாரிதாஸ் வீடியோ போட்டு விளம்பரம் கொடுப்பதும் ஆச்சரியமாகத் தான் உள்ளது. பார்ப்போம் வேடிக்கையை!

© வேதபிரகாஷ்

08-11-2021


[1] ஏபிபி.லைவ்.காம், கிறிஸ்துவராக ஞானஸ்நானம் எடுத்தாரா திருவள்ளுவர்திருமாவளவன் பேசியது என்ன..?, ராஜேஷ். எஸ் | Updated : 05 Nov 2021 04:23 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/professor-deivanayagam-book-released-by-vck-party-leader-thol-thirumavalavan-24314

[3] திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதினார்: திருமாவளவன்,Mahendran| Last Modified வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:18 IST)

[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/thirumavalavan-says-about-thirukkural-121110500076_1.html

[5] இ.டிவி.பாரத், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவரா? – தொல்.திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?, Published on: 05-11-2021, 21.00 hours.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/thirumavalavan-answer-thiruvalluvar-baptized/tamil-nadu20211105211249395

[7] ஐஒஇசி.தமிழ்நாடு, திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை எழுதியுள்ளார் : தொல். திருமாவளவன், Published on: 05-11-2021, 21.00 hours.

[8] https://ibctamilnadu.com/article/thiruvalluvar-has-been-writing-tirukural-1636147706

[9] Asianet Tamil, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கணும்.. அதிமுக, பாஜக வழியில் கேட்கும் திருமாவளவன்.!, Chennai, First Published Nov 5, 2021, 9:22 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-wants-to-reduce-petrol-and-diesel-prices-in-tamilnadu–r23w36

[11] அவர்களை விட இவர்கள் தான் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள். தெய்வநாயத்திற்கு போன் செய்து நன்றி தெரிவிக்கிறேன் என்கிறார்கள்.

ஆசிய ஊடக கல்லூரி,  ஈடனை விட்டு வெளியே, நேஷனல் ஜியோகரிபிகல், செக்யூலரிஸ ஜார்னலிஸம் – தாமஸ் கட்டுக் கதை நோக்கிச் செல்வதேன்? [2]

ஜூலை 8, 2020

ஆசிய ஊடக கல்லூரிஈடனை விட்டு வெளியே, நேஷனல் ஜியோகரிபிகல், செக்யூலரிஸ ஜார்னலிஸம்தாமஸ் கட்டுக் கதை நோக்கிச் செல்வதேன்? [2]

Kancha Ilaiah lectured at ACJ. seculsrism

வலதுசாரிகளின் கையாலாத் தன்மை: வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்லது உண்மையான செக்யூலரிஸவாதிகள் இத்தகைய ஊடகக் கல்லூரிகளை ஏன் நடத்துவது இல்லை என்று தெரியவில்லை. பல பல்கலைக்கழகங்களில், இன்றைய டிவிசெனல்கள் நடத்தும் நிறுவனங்கள், அத்தகைய பள்ளிகளை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். நன்றாக பயிற்சி பெற்றவர்கள், நன்றாக இருக்கிறார்கள். ஆனால், வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்  சிலரே. ஏனெனில், பிஜேபி ஆட்சியில் இருந்தால் தான் ஆதரவு, அதிலும் பாரபட்சம் என்றெல்லாம் இருக்கும் போது, அவ்வாறு மாறுவதும், தற்காலிகமாக உள்ளது. ஆட்சி மாறினால், இவர்களும் மாறி விடுகிறார்கள், மற்றவர்கள் கிடைத்த வரையில் லாபம் என்று ஓடிவிடுகின்றனர். உண்மையில், இருக்கின்ற தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், வணிக குழுமங்கள் எல்லாமே, வலதுசாரி சித்தாந்தத்தை ஒதுக்கி விட்டு, பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதால், தங்களது லாபங்களைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. உண்மையில், வலதுசாரிகளை ஆதரிக்க விரும்புவதில்லை என்பதை விட, இடதுசாரிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனலாம். இதனால் தான், இத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஊடகத்துறையில் வலுபெறாமல் இருக்கின்றனர்.

Kancha Ilaiah at ACJ

தொழிற்முறை நிபுணத்துவம், வல்லுனத்துவம் இல்லாத வலதுசாரிகளின் பிரச்சாரமும், வலுவான இடதுசாரி அமைப்புகளும்: பொதுவாக பிஜேபிகாரர்கள், தமக்கென்று ஒரு டிவி செனல் இல்லை, நாளிதழ் இல்லை என்றெல்லாம் பல ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர். முயற்சிகள் நடந்தன, ஆனால், உருப்படியாக ஒன்றும் வரவில்லை. இந்துத்துவ வாதிகள் இப்பொழுது கூட டஜனுக்கு மேல், பால கௌதமன், ஶ்ரீடிவி, மாரிதாஸ், பூமாகுமாரி என்று பிஜேபி-இந்துத்துவ ஆதரவாளர்கள் வீடியோ போட்டு வருகிறார்கள், ஆனால், மேலே குறிப்பிட்டது போல, பயிற்சியுடன், தொழிற்முறை வல்லுனத்துவம், வேலைசாதுர்ய திறமையுடம் செய்வதாக இல்லை. டிவி செனல்களும் நடத்துகிறார்கள். ஏதோ, தமஷாக, பொழுது போக்காக செய்வது போல இருக்கிறது. உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, ஆதாரங்கள் கொண்ட விவரங்கள், முதலியவை இல்லாமல், உணர்ச்சிப் பூர்வமாக, நிறைய பேசி, குறைவான தகவல்களைத்தான் கொடுக்கின்றனர். அவர்களுக்கு என்று 100, 200 பேர் பார்க்கலாம், பொழுது போகாமல் மற்றவர்களும் பார்க்கலாம். ஆனால், அவற்றை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.  பொதுவாக, எதிர்கட்சியினரை நேரிடையாகத் தாக்குவது, விமர்சிப்பது என்று இறங்கியுள்ளனர். தொலைநோக்கு திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.

Sindhuri Nandakumar, Paul Salopek, thomas myth

ஆசிய ஊடக கல்லூரி, நேஷனல் ஜியோகரிபிகல், தாமஸ் கட்டுக்கதை தொடர்புகள்: 2018ல் “நேஷனல் ஜியோகரிபிகல்” என்ற பிரபலமான பத்திரிக்கை சார்பில், ஒரு குழு வந்தபோது, அதை வைத்து பயிற்சி பட்டறை நடத்தினார்கள். பால் சலோபெக் என்பவரின் தலைமையில், “ஈடனை விட்டு வெளியே” என்ற திட்டம் மூலம், அப்பொழுது, சாந்தோமிற்குச் சென்று, “தாமஸ் கட்டுக்கதை” பற்றியும், சிந்தூரி நந்தகுமார் என்ற இந்து ஜார்னலிஸ்டை வைத்து எழுத வைத்து, “தி இந்துவில்” வெளியிடப்பட்டது[1]. செக்யூலரிஸமாக வேலை செய்கிறேன் என்றாலும், இவ்வாறு, அவ்வப்போது, தாமஸ் கட்டுக் கதை நுழைக்கும் போக்கு இவ்வாறுதான் உள்ளது. இத்தனை மெத்தப் படித்தவர்களுக்கு, இதெல்லாம் கட்டுக் கதை என்பதெல்லாம் தெரியாமல் இருக்கிறது என்றால், அது பொய் என்று எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். மீனவர்களின் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, மாநிலம் விட்டு வேலைக்கு வந்த இளைஞர்கள், தெரு பெருக்குபவர்கள், மெரினாவில் ஜோதிடம் சொல்லும் பெண்கள் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து, கூட, இந்த தாமஸ் கட்டுக்கதையும் எடுத்துக் கொண்டது தான் அவர்களது திட்டத்தை வெளிப்படுத்துகிறது. நிவேதிதா லூயிஸ் என்ற பெண்மணியும், இதே போல, கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

National Geographic workshop at ACJ 2018

சதானந்த மேனன் என்ற ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் தொல்லைக் கொடுத்த விவகாரம்:  சதானந்த மேனன் என்ற ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் தொல்லைக் கொடுக்கிறார் என்ற புகார் எழுந்தது[2]. இங்குள்ள மாணவ-மாணவியர் எல்லாம் அதிநவீனத்துவர்கள் ஆதலால், அவர்களது நடை, உடை, பாவனை எல்லாமே, ஏதோ, சினிமா போலத்தான் இருக்கும். அவர்கள் கைகோர்த்துக் கொண்டு போவது, தொட்டு-தொட்டு பேசுவது, நெருக்கமாக போட்டோ எடுத்துக் கொள்வது எல்லாம் சகஜமாக இருக்கிறது. அவற்றையும் மீறி, அந்த ஆசிரியர் பாலியல் விவகாரத்தை செய்தார் போலும். புகார் எழுந்தது[3]. முதலில் நடவடிக்கை எடுக்காததால், மாணவர் போராட்டம் ஆரம்பித்தது, சமூக ஊடகங்கள் மூலமும் தொடர்ந்தது[4]. 2018-மாணவ-மாணவியர் கையெத்திட்டு புகார் கொடுத்தனர். வெளிப்படையாக ஊடகங்களிலும் செய்தியாக வந்தது[5]. நாங்கள் எல்லாம் நிரம்பவே தாராளமனப் பான்மையுடன், வெளிப்படையுடன் இருக்கிறோம்[6], அதனால் தான், எங்களை இலக்காகத் தாக்குகிறார்கள், என்று கல்லூரி முதல்வர் சொன்னார்[7]. ஆனால், பாதிக்கப் பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை[8]. அதனால், அவர் போதிக்கும் குழ்விலிருந்து நீக்கப் பட்டார்[9].  இவ்வாறாக அந்த பாலியல் விவகாரம் முடிவுக்குக் ஒண்டு வரப்பட்டது.

Sindhuri Nandakumar at the church for her story of thomas myth

குற்றங்களை எதிர்க்கும் முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்: இதற்கும் தாமஸ் கட்டுக் கதைக்கும் என்ன தொடர்பு என்பதில்லை. இதில் உள்ள “தி இந்து,” என்.ராம், ஈடனை விட்டு வெளியே, ஆசிய ஊடக கல்லூரி என்று இவையெல்லாம் வருகின்றன. இந்துவில் தாமஸ் கட்டுக் கதை பற்றி எழுதும் இளம் ஜார்னலிஸ்டுகள், தனக்கு என்று வரும் போது, ஒரு நிலையில், அவர்கள், இது சரியில்லை, எல்லைகளை மீறி ஏதோ காரியங்கள் நடக்கின்றன, அவற்றை ஒப்புக் கொள்ள முடியாது, எதிர்க்க வேண்டும், என்று இவர்களுக்கேத் தோன்றுகிறதோ, அதுபோல, அடிக்கடி, தாமஸ் கட்டுக் கதையை நுழைக்கும் போது, சாதாரண மக்களுக்கு அதன் தாக்கம், விளைவு தெரியாது, ஆனால், பாதிப்பு உள்ளது, அதில் விசமத்தனமான பிரச்சாரம், திட்டம் உள்ளது என்பது, அதையே கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்.

Catholic bishops, pastors involved in 2 crores land scam 2011

பி.ஜே.லாரன்ஸ் ராஜின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன, வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோர்ட்டில் ஆவணங்கள் உள்ளன. செய்திகளும் வந்துள்ளன. இருப்பினும், அருளப்பா போன்று நான் தாமஸ் கட்டுக் கதையை உண்டாக்கப் போகிறேன், சென்னைக்குக் கூட்டி வரப் போகிறேன் என்று தலைப்பு போட்டு, செய்தியாக, சிந்தூரி எழுத, தி இந்து விசுவாசத்துடன் வெளியிட்டது!

De Monte land scam FIR filed - six photos

ஆனால், அவரிடத்தில் பேட்டி எடுத்து, தாமஸ் கட்டுக் கதை செய்தி வெளியிடப் படுகிறது. இது சதானந்தனிடம் பேட்டி எடுப்பதற்கு சமமாகும். அப்படியென்றால், சிந்தூரி நந்தகுமார் போன்ற செக்யூலரிஸ ஜார்னலிஸ்டுகள், எப்படி பேட்டி எடுக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஏதோ புனிதர்கள் போன்று காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. ஆக, இதெல்லாம் தெரிந்தே செய்யும் காரியங்கள் ஆகும்.

© வேதபிரகாஷ்

08-07-2020

Sindhuri Nandakumar tweets, retweets her story of thomas myth

[1] This essay is from a National Geographic Society and Out of Eden Walk journalism workshop.

http://www.chennaifirst.in/2018/10/27/an-apostle-returns-bringing-st-thomas-back-to-chennai/

[2] The News Minute, ‘Asian College of Journalism must probe Sadanand Menon’: Statement on sexual abuse allegations, TUESDAY, MAY 08, 2018 – 12:58, TNM Staff

[3] https://www.thenewsminute.com/article/asian-college-journalism-must-probe-sadanand-menon-statement-sexual-abuse-allegations-80883

[4] The News Minute, ACJ students decry institution’s ‘deep-seated apathy’ against sexual harassment; doubt ‘integrity’ of internal plaint body, May 10, 2018 16:42:30 IST

[5] https://www.firstpost.com/india/acj-students-decry-institutions-deep-seated-apathy-against-sexual-harassment-doubts-integrity-of-internal-plaint-body-4464353.html

[6] News.18, Targeted Because We’re Liberal, Says Premier Journalism College Head on Sexual Harassment Row, LAST UPDATED: MAY 9, 2018, 1:06 PM IST; EDITED BY: SANCHARI CHATTERJEE.

[7] https://www.news18.com/news/india/targeted-because-were-liberal-says-premier-journalism-college-after-sexual-harassment-charges-by-ex-student-1742007.html

[8] The Quint, ACJ Prof Sadanand Menon Faces Sexual Harassment Allegations Again, MYTHREYEE RAMESH, Updated: 05 Oct 2018, 06:07 PM IST.

[9] https://www.thequint.com/news/india/asian-college-of-journalism-sadanand-menon-sexual-harassment-allegations

The Hindu how spreads thomas myth, Abhirami Rao, July 2019

ஆசிய ஊடக கல்லூரி,  ஈடனை விட்டு வெளியே, நேஷனல் ஜியோகரிபிகல், செக்யூலரிஸ ஜார்னலிஸம் – தாமஸ் கட்டுக் கதை நோக்கிச் செல்வதேன்? [1]

ஜூலை 8, 2020

ஆசிய ஊடக கல்லூரிஈடனை விட்டு வெளியே, நேஷனல் ஜியோகரிபிகல், செக்யூலரிஸ ஜார்னலிஸம்தாமஸ் கட்டுக் கதை நோக்கிச் செல்வதேன்? [1]

Media Development Foundation - ACJ

ஆசிய ஊடக கல்லூரிஇந்தியன் எக்ஸ்பிரஸ் ஆரம்பித்தது, தி ஹிந்து கைகளுக்கு மாறியது: ஒரு நண்பர் எடுத்துக் காட்டியபடி, “ஆசிய ஊடக கல்லூரி” (Asian College of Journalism) என்று, “தி இந்து” குழுமம் (The Hindu Group) நடத்தி வருகிறது[1]. முதலில் பெங்களூரில், இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 1994லிருந்து நடத்தி வந்தது, ஆனால், 2000ல் சஷிகுமார் என்பவர் அதனை ஒரு டிரஸ்ட் மூலம் வாங்கிக் கொண்டார்[2]. அதன் அலுவலகம், “தி இந்து” வளாகத்தில் உள்ளது. கல்லூரி, தரமணியில் 80,000 சதுர அடிகளுக்கு மாபெரும், நான்கு அடுக்கு கட்டிடம், தங்கும் வீடுகள் என்று மாற்றப் பட்டது. இதில் படிப்பவர்கள் எல்லோருமே, பெரிய தனவான்கள், சமூக மேலட்டுக்கு நவீனத்துவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் போன்றோர்களின் வாரிசுகள் தான். பல லட்சங்களைக் கொட்டிப் படிக்கிறார்கள்[3]. இவர்களுக்கு ஊடகத்துறைகளில் உள்ள எல்லா வித்தைகளும் கற்றுக் கொள்ளப் படுகிறது. அதி நவீன பயிற்சி-பரிசோதனை கூடங்களுடன் உள்ள இந்த கல்லூரியில் எல்லாமே போதிக்கப் படுகிறது. பத்துமாத டிப்ளோமா படிப்பில் டிவி, அச்சு, புதுமை மற்றும் ரேடியோ என்று (Television, Print, New Media and Radio) அனைத்து ஊடகங்களிலும் பயிற்சி அளிக்கப் படுகிறது. படிப்பு முடித்தவுடன், வேலைவாய்ப்பிற்கும் உதவி செய்ய படுகிறது[4].

The guest lecturers of ACJ

இந்தியாவின் எதிர்மறை நிகழ்வுகளை வர்ணிக்கும் ஜார்னலிஸம்: சத்யஜித் ரே என்பவர் எப்படி பிரபலம் ஆனால் என்றால், அவர் எப்பொழுதும், இந்தியா எப்படி ஏழ்மையில் மூழ்கியுள்ளது, பஞ்ச-பராரிகள் அடித்துக் கொண்டு சாகின்றனர் என்றெல்லாம் சினிமாவில் வர்ணித்துக் காட்டி புகழ் பெற்றார் என்பர். அதுபோல, இந்த கல்லூரியும், அதே போன்றதை பின்பற்றுகிறது. கோபாலகிருஷ்ண காந்தி, கே. சந்துரு-ஓய்வு பெற்ற நீதிபதி[5], என். ராம், என். ரவி, காஞ்சா இலையா செப்பர்ட்[6], சித்ரா மாதாவன், ஏ.ஆர். வெங்கடாசலபதி, பமீல பிலிப்போஸ், சுதா நாராயணன், ஸ்வப்னா சுந்தர், போன்றோர் மற்றும் இந்து குழுமம் பத்திரிக்கையாளர்கள் வந்து வகுப்புகள் எடுக்கிறார்கள். தவிர, வெளிநாட்டவர்களும் வந்து போதிக்கிறார்கள். இன்றைக்கு வரையில், பொருளாதார, சமூக, மத, ஜாதிய, அரசியல் என்று எல்லா பிரச்சினைகளையும் அலசுகிறார்கள். ஆனால், அரசுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் உள்ள ஏழ்மை, படிப்பின்மை, பட்டினி, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவது, குழந்தைகள் இறப்பது, குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது, போன்ற எதிர்மறை விசயங்களை அலசி முக்கியத்துவமாக்கி, செய்திகள் ஆக்குகிறார்கள். பெண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், திருநங்கைகள் உரிமைகள், ஓரின சேர்க்கை, போன்ற பிரச்சினைகளை வைத்து செய்திகள் ஆக்குவது, இவற்றைத் தான் அவர்கள் செய்து வருகிறார்கள்.

Chira Madhavan in front of Kapali temple

சித்ரா மாதாவனின் சரித்திர மறைப்பு வேலைகள்: சித்ரா மாதாவன் மைலாப்பூரில் உள்ள கோவில்களைப்பற்றியெல்லாம் அளப்பார், எழுதுவார். கபாலீஸ்வரர் கோவில் பற்றிக் கூட வர்ணிப்பார், ஆங்கில நாளிதழ்களில் அரைப்பக்கங்களுக்கு எழுதுவார்[7]. ஆனால், அக்கோவில் முன்னர் கடற்க்கரையில் இருந்தது, அதனை போர்ச்சுகீசியர் இடித்து விட்டனர். அதனால் தான் இக்கோவில், பிறகு கட்டப் பட்டது போன்ற விசயங்களை சொல்ல மாட்டார்[8].  “போர்ச்சுகீசியர் வந்து குடியேறிய போது, சாந்தோம் சர்ச் இப்பொழுது நிற்கின்ற இடத்தில் ஏதோயொரு இடத்தில் இக்கோவில் இருந்ததாக ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது,” [There has been a belief that the temple was earlier located along the coastline, somewhere near the place where Santhome Church stands now, when the Portuguese settled] என்கிறார், அந்த அம்மணி.

Sidhuri, Chitra Madhwan, ACJ back ground

ஒருபக்கம் கட்டுக்கதையினை, சரித்திரம் போல செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆனால், இந்த அம்மணி  சரித்திரத்தை கட்டுக் கதை ஆக்குவது போல, “…..இக்கோவில் இருந்ததாக ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது”, என்று எழுதுகிறார். உண்மையினை சொன்னால், எழுத இவருக்கு வாய்ப்பு போய்விடும். பிறகு, இவர், இந்த இடதுசாரி கல்லூரியில் வகுப்பு எடுத்தால், சரித்திரத்தை ஒழுங்காக, நியாயமாக, எல்லா தகவல்களையும் மறைக்காமல் சொல்வாரா? சொன்னால், அடுத்த தடவை அங்கு பாடம் எடுக்க அனுமதிக்கப் படுவாரா? சமரசம் செய்து கொண்டு, பணம், புகழ் வருகின்றன என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டு தான், வேலை செய்து வருகிறார்.

Chitra Madhwan suppress facts of Santhome

சித்ரா மாதவனின் இரட்டை வேடம் மேலிருக்கும், தி இந்து கட்டுரையில் வெளிப்படுகிறது.

Reviving thomas myth by the priests -1

சிந்தூரி நந்தகுமாரின் தாமஸ் கட்டுக்கதை: சிந்தூரி நந்தகுமார் என்ற “தி இந்துவின்” ஜார்னலிஸ்டும் அப்படியே இருக்கிறார். ஆனால், வேறு விதம், அதாவது, தாமஸ் கட்டுக்கதையினை எடுத்து செய்தியாக்குவது. பி.ஜே. லாரன்ஸ் ராஜை பேட்டிக் கண்டு, “ஒரு அப்போஸ்தலர் திரும்பி வருகிறார்: சென்னைக்கு செயின்ட் தாமஸ் கூட்டி வரப் படுகிறார்,” என்ற தலைப்பில் “தாமஸ் கட்டுக் கதையை” அள்ளி வீட்டிருக்கிறார். லாரன்ஸ் எப்படி தாமஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சுகளை எல்லாம், இடித்து, மாற்றி கட்டி வருகிறார் என்று விள்ளக்கியுள்ளார்[9].

Sinduri Nandhakumar, Chitra Madhvan

இந்து ஜார்னலிஸக் கல்லூரியில் படித்து பட்டம் பிறகு, இந்துவிலேயே ஜார்னலிஸ்டாக பணி செய்யும் நிலையில், விசுவாசமாக அவரது தாமஸ் கட்டிக் கதை பரப்பு வேலையை செய்து வருகிறார்[10]. ஒவ்வொரு வருடமும், தன்னுடைய செய்தி, “தி இந்துவில்” வந்ததை டுவீட், ரி-டுவீட் செய்து வருகிறார்[11]. முன்னர் 2016ம் ஆண்டு, கீதா பத்மநாபன் என்ற பெண்மணி, அக்கட்டுக்கதைப் பற்றி எழுதியுள்ளார். எஸ். முத்தைய்யா [S. Muthaiah (1930-2019)] முன்னர் ஆஸ்தான எழுத்தாளராக இருந்து, தொடர்ந்து, தாமஸ் கட்டுக் கதையை, தன்னுடைய எழுத்துகளில் நுழைத்து வந்தார். 2019ல் அவர் காலமாகி விட்டதால், இனி மேல், அவரது பாணியில் இவர்கள் எல்லோரும் வேலை செய்வார்கள் என்று தெரிகிறது.

Sindhuri Nandakumar at the church for her story of thomas myth

சிந்தூரி நந்தகுமார், சர்ச்சிலேயே உட்கார்ந்து கொண்டு விளக்கம் கொடுக்கிறார்!

Reviving thomas myth by the priests -2

இடதுசாரி, கம்யூனிஸம், நாத்திகம், கத்தோலிக்க மனைவி இப்படி என்.ராம் இருந்தால், நடுநிலை இருக்குமா?: ஒரு ஜார்னலிஸம் கல்லூரி என்று வைத்துக் கொண்டு, இவ்வாறு ஒட்டு மொத்தமாக, கட்டுமான பலம், அரசியல் ஆதரவு, அகில உலக கிருத்துவ ஆதரவு என்றெல்லாம் பின்னணியில் வேலை செய்யும் போது, இலக்கில் உள்ள இந்தியர்களின் (இந்துக்களின்) கதிதான் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிகிறது. இங்கு தான் என். ராமின் மீதும் சந்தேகம் எழுகிறது. அதாவது, அவரது மதம், குடும்பம் முதலியவை தனிப்பட்ட விசயங்களாக இருக்கலாம். ஆனால், அத்தகையவை, இந்துக்களின் நலன் பாதிக்கும் நிலையில் அலச வேண்டியுள்ளது. என். ராம் என்பவர், பிராமணர், ஐய்யங்கார் என்றெல்லாம் இருந்தாலும், “தி இந்து,” இந்துக்களுக்கு எதிராக வேலை செய்கிறது என்ற கருத்து உருவாகியுள்ளது. இவர் மரியம் சாண்டி என்ற, கேரளாவில் மிகவும் பல மிக்க ஊடக சாம்ராஜ்ஜியத்தின் கத்தோலிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திமுகவிற்கு பெண் கொடுத்திருப்பதால், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் போக்கும் சேர்ந்து விட்டது. இதனால், செக்யூலரிஸம் வேலை செய்யாது என்பது தெரிந்த விசயமாகி விட்டது.

© வேதபிரகாஷ்

08-07-2020

Ran and Mariam Ram-controlling press

 

[1] ASIAN COLLEGE OF JOURNALISM at Second Main Road, Taramani, Chennai-600 113. 91-44-22542842-44/47/40 asian_media@asianmedia.org.in

[2] In pursuit of its goal, in 2000 the Foundation took over, by agreement with the parent B. D. Goenka Foundation, the Asian College of Journalism, which had been functioning successfully for six years in Bangalore. The College was moved to Chennai and its course content was restructured and broadened. The first class graduated in June 2001.

https://www.asianmedia.org/acj/about-us/media-development-foundation/

[3] Tuition fee for the ACJ-Bloomberg postgraduate diploma programme inclusive of GST @18% is INR 7,08,000/-

Residential accommodation on the Campus for the period (July 2020 to April 2021) will cost INR 85,000/-.

Accommodation at the Annexe for the period (July 2020 to April 2021) will cost INR 1,20,000/-.

The cost of food for the year will be INR 76,000/-

[4] The first two batches of the ACJ-Bloomberg financial journalism programme have seen nearly 100 percent placements. Our students have been placed in top-ranked media organisations, including Bloomberg, Reuters, ET Now, Network 18, Mint, Hindustan Times, The Hindu, The Ken, The Hindu BusinessLine, and Mergermarket.

[5]  ஓய்வு பெற்ற பிறகு, இவரது கோணம் மாறியிருக்கிறது. வழக்கறிஞராக இருந்த போது, ராமஜென்ம பூமி விசயத்தில், இந்துக்களுக்கு எதிராக, குறும்புத்தகத்தை வெளியிட்டார்.

[6] இந்துமதத்தைப் பற்றி மோசமாக விமர்சித்துக் கொண்டிப்பவர், ஆனால்,, தி இந்துவில், அவரது கட்டுரைகள் வெளிவரும்.

[7] The Hindu, Religious facets of Thirumayilai, Thiruvallikeni, Lalithasai, MAY 01, 2012 17:55 IST, UPDATED: JULY 06, 2016 04:27 IST

[8]There has been a belief that the temple was earlier located along the coastline, somewhere near the place where Santhome Church stands now, when the Portuguese settled.

 https://www.thehindu.com/features/downtown/religious-facets-of-thirumayilai-thiruvallikeni/article3422248.ece

[9] The Hindu continues to pimp for St. Thomas till today. An article by the school teacher Geeta Padmanabhan called “St. Thomas and the City” appeared on 4 October 2016 in the newspaper. Padmanabhan even quoted Marco Polo in Il Milione, though his clear reference to a tomb on the Gulf of Mannar facing Ceylon contradicts the claim for a tomb on the Mylapore seashore. Another article by Sindhuri Nandhakumar called “An apostle returns: Bringing St. Thomas back to Chennai” on 27 December 2018, identified the parish priest Fr. Lawrence Raj as the agent behind the clean-up, rebuilding, and promotion abroad of the Chennai churches associated with the St. Thomas legend.

[10] The Hindu, An apostle returns: Bringing St. Thomas back to Chennai, Sindhuri Nandhakumar, OCTOBER 27, 2018 16:25 IST; UPDATED: OCTOBER 28, 2018 11:59 IST.

[11] https://www.thehindu.com/society/an-apostle-returns-bringing-st-thomas-back-to-chennai/article25332958.ece

Kapaleswar-temple-says-christians-demolished

Kapaleswar-temple-says-christians-demolished

‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன?

மே 29, 2020

திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணிதொடர்புகள் எதைக் காட்டுகின்றன?

Hindutwa vadis helping Christians - Dinamalar,Varamalar

மே.24 2020 அந்துமணியும், திருவள்ளுவர் வம்பும்: தினமலர் இணைப்பான, வாரமலர் தேதி மே 24, 2020ல், அதுமணியின் “பா.கே.ப”வில், தெய்வநாயகத்தின் புத்தகம் என்று ஒரு குறிப்பு, உள்ளதாக, நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். விவரம் கீழ்வருமாறு[1]:

மு.தெய்வநாயகம் என்கிற கிறிஸ்தவர், ‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே…’ என்றொரு, ஆராய்ச்சி நுால் எழுதியிருக்கிறார். திருவள்ளுவர் இந்துவுமல்ல, சமணரும் அல்ல என்பதற்கு, திருக்குறளிலிருந்தே பல அகச் சான்றுகளை காட்டி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். திருவள்ளுவர், இந்து மதத்திற்கு முரணானவர் என்பதை நிரூபிக்க, அவர் தரும் ஆதாரங்களில் சில இதோ:

* பலியிடல் கூடாதுதிருக்குறள்; பலியிடல் மிக அவசியம். நரபலியும் உண்டுஇந்து மதம்

* மதுவை யாவரும் நீக்க வேண்டும்திருக்குறள்; கிராம தேவதைகளுக்கு சாராயம் படைப்பதுண்டுஇந்து மதம்

* மறு பிறவி இல்லைதிருக்குறள்; மறு பிறவி உண்டுஇந்து மதம்

* தகாத மோகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதிருக்குறள்; கடவுளுக்கே தகாத மோகம் உண்டுஇந்து மதம்!

மேலும் இந்நுாலில், 31 முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நுாலுக்கு, தி.மு.., முன்னாள் தலைவர், மு.கருணாநிதி அணிந்துரை எழுதியுள்ளார். அதில், ‘புலவர் தெய்வநாயகம் தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும், வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புறத் தக்கன…’ என்று பாராட்டியுள்ளார்,” என்றுள்ளது[2].

K T Raghavan, Devapriya helpig Christians-1

கே.டி.ராகவன், கருணாநிதி, மு.தெய்வநாயகம்: பொதுவாக, இந்த இணைப்புகள் எல்லாம் படிப்பதில்லை, அதனால், கவனிக்கவில்லை. சரி, இணைதளத்தில் தேடிப் பார்க்கலாமே என்று பார்த்தால், கே.டி.ராகவன், பிஜேபி டிவி விவாதங்களுக்குச் செல்கின்றன. சென்ற நவம்பர் மாதம் 2019, “திருவள்ளுவருக்கு காவியுடை” சர்ச்சையில், வாதித்த போது, இவர் திரும்ப-திரும்ப, இதனை சொல்லிக் காட்டியுள்ளார். அதாவது, “புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும் நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன. திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை தூண்ட வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார்,” என்பது. நியூஸ்.18[3], புதிய தலைமுறை[4], போன்ற செனல்களில் இதை கவனிக்கலாம். உண்மையில், ராகவன் குறிப்பிடும் கருணாநிதியின் கடிதம், தெய்வநாயகத்தின் புத்தகத்தில் உள்ளது. ராகவன் அப்புத்தகத்தைப் பார்த்தாரா, படித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் காண்பிக்கும் படங்கள், குமுதம் முதலிய இணைதளங்களில் வந்துள்ள படங்கள் அவருடைய நண்பர் “தேவபிரியாஜி”யின் பிளாக்குகளில் உள்ளவை. ஆக, இவருக்கு, “தேவபிரியாஜி” என்ற இந்துத்துவ ஆராய்ச்சியாளர் தான், அவருக்கு “இன்-புட்ஸ்” அனுப்பியதாக தெரிகிறது. இணைதளத்தில், மற்றவர்களுடைய கட்டுரைகள், வியாசங்கள், எழுத்துகள், கருத்துகள் முதலியவற்றை காப்பியடிப்பது, “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்வது, இவ்வாறு யு-டியூப், டிவி-தொலைகாட்சியில் பங்கு கொள்பவர்களுக்கு உதவுவது, போன்ற விவகாரங்களில், இணைதளங்கில் அத்தகைய திருட்டு நடைபெறுகிறது. அதனால், தெரிந்து கொண்ட ஆராய்ச்சியாளர்களும் முழு விவரங்களைக் கொடுப்பதில்லை. அதனால், விசயங்கள், தகவல்கள், முதலியவை கைமாறி செல்லும் போது, பாடிய பாட்டையே பாட வேண்டிய நிலை வருகிறது. அதனால், சரியில்லாத விசயம், அரைகுறை தகவல், முழுமையில்லாத கருத்து முதலியவை பரப்பும் போது, உபயோகிப்பாளர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

Hindutwa vadis helping Christians-Raghavan quotes Karunanidhi

கருணாநிதியே சொன்னார் என்று எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை: திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்தப் புத்தகத்தைப் படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு, அவர் இந்து என்றால் மட்டும் கசக்கிறதா என தமிழக பாஜகவின் மாநில செயலாளர் கே டி ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்[5]. இங்கு தெய்வநாயகம், அந்த ஆராய்ச்சித் தரமற்ற புத்தகம், முதலியவற்றை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதி ஒன்றும் பிஜேபி அல்லது காவி சித்தாந்தி இல்லை, பிறகு கருணாநிதியே சொன்னார் என்று எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவின் சமூகவலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து உத்திராட்ச மாலை போட்டு நெற்றியில் திருநீரு பூசியபடி, புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது[6]. இதற்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கொந்தளிப்படைய செய்துள்ளது. திருக்குறள் வடித்த திருவள்ளுவரை பாஜக மதரீதியாக உருமாற்றி சொந்தம் கொண்டாட நினைக்கிறது. திருவள்ளுவரை வாக்கு அரசியலுக்கு பயன்படுத்த திட்டம் போடுகிறது என கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் தேசிய செயலாளர் கே. டி. ராகவன் திமுகவிற்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதன்விவரம்பின்வருமாறு[7]:-

K T Raghavan, Devapriya helpig Christians-2

திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர் ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.?: “கடந்த 1969 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி புலவர் மு. தெய்வநாயகம் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று எழுதிய நூலுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்காலம், இனம், நாடு என்னும் எல்லைகளைக் கடந்து எல்லா நாட்டினருக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற அறிவுக் கருவூலமாக திகழ்வது திருக்குறள். அறிவும், அழகும், துடிப்பும் , துள்ளலும் , நிறைந்த பிள்ளையை ஊரார் அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையாக எண்ணி மகிழ்வது போல தமிழகத்தில் உள்ள பல்வேறு சமயத்தினரும் திருவள்ளுவர் பெருந்தகையை தம் சமயத்தினராக எண்ணுவது அவர்மேல் அவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும் நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன. திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை தூண்ட வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள பாஜக மாநில செயலாளர் கே டி ராகவன் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர் ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.?,” என கேள்வி எழுப்பி உள்ளார்[8].

Hindutwa vadis helping Christians-Maridas video

தர்க்கம்: வாதவிவாத முறை எப்படி இருக்க வேண்டும்?: தர்க்கத்தில் / வாத-விவாதத்தில் அடிப்படை தெளிவு, விசய ஞானம், சரித்திர அறிவு, முதலியவை தேவை. மேடை பேச்சில் என்னவேண்டுமானாலும் பேசலாம் போன்றதில்லை. அந்நிலை இப்பொழுது, டிவி விவாதங்களிலும் வந்து விட்டன. பொது மக்களிம் பிரச்சினை, மத சம்பந்தமான விசயங்கள் முதலியவற்றை அரசியலாக்கக் கூடாது. செக்யூலரிஸ ரீதியில் விவாதங்கள் இல்லாததால், திரும்ப-திரும்ப இந்து மதம் தாக்கப் படுகிறது. அம்பேத்கர் இந்துமதவாதி என்றெல்லாம் வாதிப்பது அர்த்தமற்றது. அவரது 20ற்கும் மேற்பட்ட தொகுப்புகளை படித்தவர்களுக்கு உண்மை தெரியும். அதுபோல, வலிய பொறுந்தாத-சேராத விசயங்களை இழுத்து, அதனை மாற்றி ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று சித்தாந்த ரீதியில் முயல்வது வியர்த்தமானது / உபயோகமில்லாதது.

Maridas twitter and my response

  1. தர்க்கத்தில் / வாத-விவாதத்தில் அடிப்படை தெளிவு, விசய ஞானம், சரித்திர அறிவு, முதலியவை தேவை.
  2. வாத-விவாத பொருள், விசயம், தலைப்பு- முதலியவற்றை நன்றாக புரிந்து கொள்வது.
  3. உண்மை கருத்துகளை சொல்லும் முறை,
  4. கொள்கை மாறாத ஸ்திரமான வாதம், சித்தாந்தத்தில் உறுதி வேண்டும்.
  5. எதிர்-சித்தாந்தியின் மனத்தைப் புரிந்து கொண்டு அடிப்படையை நோக்கி எதிர்த்துப் பேசுவது.
  6. எதிர்-சித்தாந்தி சொல்லும் முக்கியமான அம்சங்களை குறித்துக் கொள்ளுதல், பிறகு சந்தர்ப்பம் வரும் போது அலசுதல், எதிர்த்து பேசுதல்.
  7. தெரியாத விசயங்கள் பற்றி பேசாமல் இருப்பது, மற்றவர் சொன்னதை கேட்டு வாதிப்பது கூடாது.
  8. விதண்டாவாதம் செய்யாமலிருப்பது.
  9. தவறு என்றால் ஒப்புக் கொள்ளும் நேர்மை
  10. கடைசியாக, கேட்பவர்களை ஈர்க்கும் பேச்சுத் திறன்.

Hindutwa vadis helping Christians-Maridas pubilicity about books

அரசியல் செய்பவர்கள் ஆராய்ச்சி போர்வையில் உண்மைகளை மறைக்க வேண்டாம்: ராகவனைத் தொடர்ந்து, மாரிதாஸின் வீடியோவும், அதிகமான பிரச்சாரம் செய்தது[9]. ஆனால், இங்கு கவலை அளிக்கும் விசயம் என்னவென்றால், மறைமுகமாக அந்த மு.தெய்வநாயகத்திற்கு, அந்த சரித்திர ஆதாரமற்ற நூல்களுக்கு அளிக்கும் எதிர்மறையாக அளிக்கப் படும் விளம்பரம், பிரச்சாரம் முதலியவை தான். ஏனெனில், யார் அந்த மு.தெய்வநாயகம், அப்புத்தகங்கள் என்ன, அவைப் பற்றி, இந்துத்துவ வாதிகள் ஏன் அடிக்கடி குறிப்பிடுகின்றனர் என்ற கேள்விகள் எழலாம். தெரிந்து கொள்ள அப்புத்தகங்களை நாடி செல்லலாம். குழப்பமடையலாம். மாரிதாஸ் தேவையில்லாமல், அதிகமாக பேசுவது, இந்த ஆராய்ச்சி எல்லாம் 15 ஆண்டுகளாக 2006 முதல் 2011 காலகட்டத்தில் நடக்கிறது, என்றெல்லாம் பேசுவதிலிருந்து, இவருக்கு விவரங்கள் தெரியவில்லை மற்றும் தவறான தகவல்களை கொடுக்கிறார் என்றும் தெரிகிறது[10]. அப்பொழுது டுவிட்டரில் நான் இதனை எடுத்துக் காட்டி பதிவு செய்தேன். வேதபிரகாஷ், ஈஸ்வர் சரண், சோமசுந்தரனார், அருணை வடிவேலு முதலியார் முதலியோர்களின் ஆராய்சிகளை மறைப்பதும் தெரிகிறது. இவர்கள் எல்லோரும் 1983-87 காலகட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. அரசியல் என்றால், அரசியல் செய்யட்டும். ஆனால், ஆராய்ச்சி என்ற போர்வையில், மற்றவர்களது உழைப்பை மறைப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டாம். மேலும், வியாபார ரீதியில் செய்யும் போது, இத்தகைய வேலைகள் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

29-05-2020

 

Hindutwa vadis helping Christians-Maridas pubilicity about Deivanayagam, Devakala

[1] தினமலர், வாரமலர், அந்துமணியின்பா.கே. , தேதி மே 24, 2020ல், தெய்வநாயகத்தின் புத்தகம் என்று ஒரு குறிப்பு, பக்கம்.9.

[2] https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=52859&ncat=2

[3] https://www.youtube.com/watch?v=FiFKEraPPzo

[4] https://twitter.com/PTTVOnlineNews/status/1191394915948756992

[5] குமுதம், திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தை வரவேற்ற கருணாநிதி.. பாஜக பகீர் தகவல்.., | TAMILNADU| Updated: Nov 04, 2019.

[6] https://www.kumudam.com/news/tamilnadu/10156

[7] ஏசியா.நெட்.நியூஸ், திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றால் திமுகவுக்கு இனிக்கிறதுஹிந்து என்றால் மட்டும் கசக்கிறாதா.?? கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்டு பகீர் கிளப்பும் பாஜக ராகவன்..!!, By Ezhilarasan Babu, Chennai, First Published 4, Nov 2019, 5:26 PM.

[8] https://tamil.asianetnews.com/politics/if-thiruvalluvar-called-cristina-that-to-be-happy-to-dmk-but-same-called-as-hindu-only-angry-to-dmk-why-bjp-asked-q0g16c

[9] Maridhas Answers, திருவள்ளுவர் கிறிஸ்தவர் | வெக்கமே இல்லாத திமுக அரசியல் | Nov 4, 2019.

[10] https://www.youtube.com/watch?v=J0LMjGyVQSo

Thomas myth manufacturers சந்திப்பு

Thomas myth manufacturers சந்திப்பு

இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது!

பிப்ரவரி 29, 2020

இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதைஅர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது!

Arjun Sampath, Police protection, News cutting, 28-02-2020

2009ல் இல்லாத ஆர்வம் அர்ஜுன் சம்பத்திற்கு 2020ல் எப்படி வந்தது?: சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்[1]. இதையடுத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது[2]. இப்படி இந்த செய்தியை பல இணைதளங்களில் செய்தியாக, காப்பி அடித்துப் போட்டுள்ளன. அவற்றில் எதுவுமே நேரில் சென்று, விவரங்களை அறிந்து போடவில்லை என்று தெரிகிறது. அர்ஜுன் சம்பத்திற்குக் கூட, ஏன், எப்படி, எதற்காக திடீரென்று, இதில் ஆர்வம், விருப்பம், கவலை வந்தது என்று தெரியவில்லை.  2009ல் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற கருத்தரங்கம் நடைபெற்ற போது, இது பற்றிய பிரச்சினைகளை [இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை] விவாதிக்க சம்பந்தப் பட்ட பல ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் முதலியோர் வழவழைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் பாலாறாவாயன்[3], சுப்பாராவ்[4], வேதபிரகாஷ்[5], ஈஸ்வர் ஷரண்[6], என பலர் விவாதங்களில் பங்கு கொண்டனர். அந்த கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத்தும் கலந்து கொண்டு, “தமிழர் சமயம் இந்து சமயமே,” என்ற ஆய்வு கட்டுரை வாசித்தார்.  அது தொகுப்பில் பிரசுரம் ஆகியது[7]. ஆனால், அந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

Police protection, News cutting, 28-02-2020

அர்ஜுன் சம்பத் சர்ச்சிற்கு செல்லக் கூடாதா?: நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த 2 மாதமாக போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து 15 நாளாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மிகவும் பழமை வாய்ந்த சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் தேவாலயத்திற்கு நேற்று காலை [28-02-2020] சென்றுள்ளார். இது என்ன பெரிய செய்தியா? கன்னியாஸ்திரிக்கள் கோவில்களுக்குச் சென்று திரியும் காட்சிகளை, புகைப் படம் எடுத்து போட்டுள்ளனர். இன்றும், துலுக்கர், கிருத்துவர் பலர் இந்து கோவில்களுக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

Seeman-Kapeleswarar-temple

Seeman-Kapeleswarar-temple

அருங்காட்சியத்தைப் பார்க்க வேண்டும்அங்கிருப்பவற்றை காணவேண்டும்: பின்னர் தேவாலய ஊழியர்களிடம், “இங்குள்ள அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும். அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் கோயிலில் இருந்த பொருட்கள் என சொல்கிறார்கள். எனவே நான் அதை பார்க்க வேண்டும். உங்கள் பாதிரியாரை கூப்பிடுங்கள். நான் பேச வேண்டும்,” என்று கூறியுள்ளார். மேலும், ‘‘தேவாலயம் கட்டுவதற்கு முன்பு இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்தது. அந்த இடத்தில் தான் தற்போது தேவாலயம் உள்ளது’’ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அருங்காட்சியகம் மூடப்பட்டு இருந்ததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது அங்கு இருக்கும் ஊழியர்களிடம் சாந்தோம் அருங்காட்சியகத்தை திறந்து காட்ட வேண்டும் என்றும், அங்குள்ள பொருட்களை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சாந்தோம் தேவாலய ஊழியர்கள் தகுந்த அனுமதியின்றி திறந்து காட்ட முடியாது என்று கூறியுள்ளார்கள், என்று மற்ற பத்திரிக்கைகள் கூறுகின்றன[8].  இதிலும் எந்த பிரச்சினையும் இல்லையே. உண்மையில் அங்கிருந்த சிவன் கோவிலை இடித்து விட்டுதான், சர்ச்சைக் கட்டியுள்ளனர் என்பது தெரிந்த விசயம் தான். கபாலீஸ்வர்ர் கோவில் வாசலில் வைக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளே தமிழிலும், ஆங்கிலத்திலும் அந்த உண்மையை சொல்கிறது. பிறகு, அதில் என்ன ரசசியம் உள்ளது?

Kapaleswar-temple-says-christians-demolished

Kapaleswar-temple-says-christians-demolished

நான் திரும்பி வருவேன் என்று ரஜினி ஸ்டைலில் சொன்ன அர்ஜுன் சம்பத்: இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சென்ற அர்ஜுன் சம்பத், நான் திரும்பி வருவேன் என்று கூறி சென்றுள்ளார்[9]. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திடீரென சந்தோம் தேவாலயத்திற்குள் வந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தேவாலயத்திற்கு வழிபாடு செய்ய வந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது[10]. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தேவாலய ஊழியர்கள் வாய் மொழியாக புகாரளித்துள்ளனர்[11]. அதன்பேரில் 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாந்தோம் சர்ச்சுக்குப் போய் இது போல பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இதுவரை அர்ஜூன் சம்பத் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை[12]. சாந்தோம் சர்ச்சும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை[13]. ஆனால் அவரது வருகையும், பாதிரியாரைக் கூப்பிடுங்க என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நான் திரும்பி வருவேன்,” என்று ரஜினி ஸ்டைலில் சொன்னதால் பயந்து விட்டார்களா?

Inscription found inside the Santhome church

கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது: சாந்தோம் பிஷப்புகள், பாதிரிகள் மற்ற சரித்திர மோசடிகள் நிச்சயமாக இதைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள். இந்துத்துவ வாதிகளும் அமைதியாகத் தான் இருக்கிறார்கள். தெய்வநாயகம், கபாலீஸ்வரர் நுழைவு போராட்டம் என்று நடத்தியதை ஊடகக்காரர்கள் அறிய மாட்டார்கள் போலும். சீமான், நெடுமாறன் போன்றோர் ஆதரவு கொடுத்தார்கள். இப்பொழுது, அதே போல அர்ஜுன் சம்பத்திற்கு யார் ஆதரவு கொடுப்பார்கள்? அருங்காட்சியகம் என்றால் அது எல்லோருக்கும் திறந்த முறையில் தானே இருக்க வேண்டும். மேலும், அங்கு கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் இருந்தால், அவை, எப்படி கிருத்துவர்களுக்கு சொந்தமாகும்? அப்படியென்றால், அவர்களது சரித்திர மோசடிகளும் வெளியாகின்றன எனலாம். ஒன்று பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும், இல்லை, அரசுக்குக் கொடுத்து விட வேண்டும். பிறகு அவர்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் கூட வைப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

© வேதபிரகாஷ்

29-02-2020

Kapaleswarar teple inscription strewn around DM.2011-1

[1] தினகரன், இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்ததுசாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு, 2020-02-29@ 03:56:28.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567764

[3] மறுப்பு நூல் எழுதிய திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன், இலயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் [ஓய்வு].

[4]  ஆர்ச் பிஷப் அருளப்பா வெர்சஸ் கணேஷ் ஐயர் வழக்கில், கணேஷ் ஐயர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வாக்கறிஞர்.

[5] முதன் முதலாக, இந்த பிரச்சினை பற்றி ஆய்ந்து, “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற புத்தகத்தை 1989ல் வெளியிட்டவர்.

[6]  ஆங்கிலத்தில், இப்பிரச்சினை பற்றி எழுடியவர். 2020ல் ஐந்தாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.

[7]  வேதபிரகாஷ், மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, திராவிடச் சான்றோர் பேரவை, சென்னை, ப.112-124

[8] நக்கீரன், சாந்தோம் சர்ச்சுக்குள் நுழைந்த அர்ஜுன் சம்பத்சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!, Published on 29/02/2020 (10:35) | Edited on 29/02/2020 (10:41).

[9] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/hindu-leader-arjun-sampath-entered-church-shocking-incident

[10] தமிழ்.வெப்துனியா, சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் அர்ஜுன் சம்பத் திடீரென சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., Prasanth Karthick| Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (08:37 IST).

[11] https://tamil.webdunia.com/regional-tamil-news/arjun-sampath-illegally-enter-to-santhom-church-120022900003_1.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, இங்க கோயில்தான் இருந்தது.. பாதரை கூப்டுங்கசாந்தோம் சர்ச்சுக்குள்விசாரணைநடத்திய அர்ஜுன்சம்பத், By Hemavandhana | Updated: Saturday, February 29, 2020, 13:16 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/arjun-sampath-entered-santhome-church/articlecontent-pf438901-378379.html