Posts Tagged ‘தேவபிரியாஜி’

தெய்வநாயகத்துடன் கூட்டு சேர்ந்த இந்துத்துவ வாதிகள் – திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்த படலம்!

நவம்பர் 29, 2021

தெய்வநாயகத்துடன் கூட்டு சேர்ந்த இந்துத்துவ வாதிகள்திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்த படலம்!

கிருத்துவர்களுக்கு சில இந்துத்துவவாதிகள் துணை போவதேன்?: கிருத்துவர்கள் தங்களது மதத்திற்காக விசுவாசமாக உழைக்கிறார்கள், பொய் பேசுகிறார்கள், போலி ஆராய்ச்சி செய்கிறார்கள் கள்ள ஆவணங்களை உருவாக்குகிறார்கள், களவாணித்தனமாக அத்தாட்சிகளை தயாரிக்கிறார்கள். ஆனால், அதே வேலைகளை இந்துத்துவ வாதிகள் செய்யலாமா என்றால், அதுவும் நடைபெறுகிறது என்று தோன்றுகிறது. கடந்த 5ம் தேதி (05-11-2021), சென்னை கீழ்ப்பாக்கத்தில் எஸ்ரா சற்குணம் நடத்தி வரும் கிறிஸ்தவ இயல் கல்லூரியில், திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்’ என்ற தலைப்பில் தாமஸ் கட்டுக்கதை புகழ் தெய்வநாயகம் என்பவர் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. அதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பெற்றுக்கொண்டு பேசுகையில், “திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர், அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை வள்ளுவர் எழுதியுள்ளதாக, நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது” என்றார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ‘வள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்துப் புள்ளிவிவரம், சைவமும் வைணவமும் ஆரிய மதம் அல்ல’ என்கிறது. இந்தியாவில் உள்ள 108 வைணவக் கோயில்களில் 106 தமிழகத்தில்தான் உள்ளது. 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் தமிழர்கள். மேலும், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி உள்ளனர். எந்த ஒரு மதத்தையும் உருவாக்கவில்லை. தமிழர்கள், திராவிடர்களின் சமயம்தான் சைவம், வைணவம். நம் மதங்களின் மீதான ஆக்கிரமிப்பில் இருந்து நாம் விடுபட வேண்டும். கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது. அதற்கு திருக்குறள் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக உள்ளது,” என்று பேசினார்.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் பேசியது: திருமாவின் கருத்தை எதிர்க்கும் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் பேசினோம்.“திருவள்ளுவரை மதம் மாற்றும் முயற்சி கடந்த 100 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தெய்வநாயகம் முதல் பலரும் இந்த செயலை செய்து வருகின்றனர். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் திருவள்ளுவரை சமணராக, கிறிஸ்தவராக மதம் மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், ரோமில் இருந்து வந்த தாமஸ் சொல்லிக்கொடுத்துத்தான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்ற கட்டுக் கதையை திருமாவளவன் சொல்லியுள்ளார் இதைக் கேட்கும் போது ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் வரவேண்டும். இதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாதக சீமான் ஆகியோருக்கு கோபம் வரவேண்டும். ஆனால் வரவில்லை. எனவே. தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளவேண்டும். நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகதல் நெஞ்சம், சிந்திக்க கேட்க செலி என்ற பாடலுக்கு அவர்கள் விளக்கம் சொல்லத் தயாரா? சங்ககால பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி அரசவையில்தான் திருக்குறள் இயற்றப்பட்டது. இதன் பொருள் 4 வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருள்தான் 3 பால்களாக திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்மனே தனது உலகிற்கு இறங்கிவந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டு, திருவள்ளுவராக அவதாரம் எடுத்து திருக்குறளை இயற்றினார் என்பது பொருள். எனவே, திருமாவளவன் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது,” என்று சுண் சிவந்தார்[1].  ஒரே தேசம் பிஜேபி சார்ந்த இணைதளம் என்று தெரிகிறது, அதனால், அவரது பேட்டியை மட்டும் போட்டிருக்கிறார்கள்[2].

வேதபிரகாஷ் சொன்னதாக ஒரு இந்துத்துவாதி கிளம்பியுள்ளது ஏன்?: வரலாற்று ஆய்வாளர் வேதபிரகாஷிடம் பேசினோம்[3], “திருவள்ளுவர் குறித்து தொல்.திருமாவளவன் பேசியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அது வரலாற்றுப் பிழை. மேலும் வள்ளுவரை கிறிஸ்தவர் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரும் வேலையை 1975ம் ஆண்டிலேயே பேராசிரிய தெய்வநாயகம் தொடங்கி விட்டார். அப்பொழுது அவர் தனியார் கல்லுரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார். வள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பது தான் அவரின் ஆய்வாகவும் இருந்தது.” இங்கு உண்மையில் நான் “குமுதம் ரிப்போர்ட்டருடன்” எதுவும் பேசவில்லை.  அங்கு வெளியிடப் பட்டுள்ள புகைப் படம் ஏ. வி. கோபாலகிருஷ்ணன் என்ற நபருடையது. இவர் கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புகளுக்கு ஏஜென்ட் போல வேலை செய்து வருகிறார். அதாவது, தகவல்களை, விவரங்களை சேகரித்து இங்கிருந்து அங்கு, அங்கிருந்து அங்கு கொடுப்பது என்று செய்து வருகிறார். இப்பொழுது “யு-டியூப்”பிலும் இணைதளம் மற்றும் நண்பர்களிடமிருந்து திருடிய அறிவுபூர்வமான, ஆராய்ச்சி விவரங்களை தனது போலக் கட்டிக் கொண்டு கதை அளந்து வருகிறார்.

“குமுதம் ரிப்போர்ட்ரில்” ஏ. வி. கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து கூறியது: “மேலும் கடந்த 1989ம் ஆண்டு இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை நூல் எழுதும் போது உலக் தமிழாராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அந்ட நூலைப் படித்த தமிழ் அறிஞர்களும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் தெய்வநாயகம் எந்த நிறுவனம் மூலமாக, தான் பட்டம் பெற்றேன் என்று கூறினாரோ, அந்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ‘அது ஆய்வுக் கட்டுரை அல்ல’ என மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டது. திருக்குறளில் கிறிஸ்தவ கருத்துகள் எதுவுமே இல்லை என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். 1974ல் திருப்பதி வேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் தலைமையில் நடந்த திருக்குறள் கருத்தரங்கில் லயோலா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும் இயேசு சபை பாதிரியுமான எஸ்.ஜே. ராஜமாணிக்கம், ‘திருக்குறளில்’ கிறிஸ்தவம் சிறிதும் இல்லை” என மிக ஆணித்தரமாக பதிலிட்டார்”. வள்ளுவரை சர்ச்சையில் சிக்க வைக்கலாமா? என்று -கட்டுரை குமுதம் ரிப்போட்டர்.

18-11-2021 அன்று முகநூலில் நான் வெளியிட்டது: இந்த மாதம், வேறு வேலைகள் இருந்ததால், ஒரு நண்பர் சொல்ல, இதனை கவனிக்க நேர்ந்தது. என்வே கீழ்கண்ட பதிவை முகநூலில் செய்தேன்.

  இந்த புகைப்படத்தில் இருப்பவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.  

“வேதபிரகாஷ்” என்ற பெயரில், நான் சொன்னது போல, “குமுதம் ரிப்போர்ட்டரில்”, 16-11-2021 இதழில் வெளி வந்துள்ளது.  

இவர் கடந்த ஆண்டுகளில் என்னுடைய பிளாக்குகளில் உள்ளதை அப்படியே காப்பி அடித்து (Plagiarism) தனது போல போட்டுக் கொண்டுள்ளார்.

  மூன்று முறை எச்சரித்தும் அதே வேலையை செய்து வருகிறார்.

  இப்பொழுது, என்னுடைய பெயர் மற்றும் என்னுடைய “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” புத்தகத்தை தனது போலக் காட்டிக் கொள்கிறார்.  

இத்தகைய திருட்டு-களவாணித் தனம் தொடர்ந்தால், Indian Copyright Act, Intellectual Property Act and other provisions of the relevant acts and Rules  படி தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்றுதகுந்த எச்சரிக்கை விடப்படுகிறது.  

முன்னர் கூட வேறு சிலர் இவ்வாறு உபயோகப் படுத்தியுள்ளனர்.  

ஆகவே, அந்த நபர் உடனடியாக, அப்பத்திரிக்கைக்கு அறிவித்து உண்மையினை அறிவிக்கவேண்டும், வெளியிட வேண்டும்.  

வேதபிரகாஷ்
18-11-2021  

ஆனால், அந்த நபரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

தெய்வநாயகம் புராணம் – எதிர்மறை பிரச்சாரம் செய்யும் இந்துத்துவவாதிகள்: இதற்குள் சமூக ஊடகங்களில் இந்துத்துவவாதிகள், யூ-டியூப், பேஸ்புக் என்று கிளம்பி விட்டனர். ஒரு வேளை இதனால் யாதாவது பணம் கிடைக்கலாம், ஆனால், கொள்கை பறக்கிறது, இந்துக்களின் நலன் பாதிக்கப் படுகிறது. ஒரே தெய்வநாயகம் புராணம் தான். வெவ்வேறு பெயர்களில் கிளம்பி விட்டார்கள். முன்பு சாமி தியாகராஜன் என்பவரும் அவரது கோஷ்டியும் வி.ஜி.சந்தோஷித்திற்கு குடை பிடித்தனர், எல்லீஸர் விருது எல்லாம் கொடுத்தனர். இப்பொழுது மாரிதாஸ், கௌதமன், தேவப்ரியா, மிஷன் காளி என்று பலர் கிளம்பியுள்ளனர். தொடர்ந்து தெய்வநாயகத்திற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றனர். இது அரவிந்த நீலகண்டன் பாணி எனலாம். இதை தெய்வநாயகமே ஒப்புக் கொண்டது, முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன். அரசியலையும் இந்துத்துவத்தையும் கலக்க முடியாது, எல்லா இந்துக்களையும் அரசியல்-இந்துத்துவத்தில் கொண்டு வரமுடியாது, வற்புருத்தக் கூடாது, இந்துமதம் இந்துக்களுக்கு என்றுள்ள போது, அரசியலுக்காக, மற்ற “இஸங்களுடன்” சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது ரங்கராஜனை இந்த அரசியல்-இந்துத்துவவாதிகள் எதிர்ப்பதை கவனிக்கலாம். அவ்வாறு செய்வதால் தான் சேர்ந்து வரும் இந்துக்கள் கூட பிரிய வைக்கிறார்கள். அவ்வாறு அரசியல்-இந்துத்துவவாதிகள் செய்கிறார்கள். இங்கும், கிருத்துவர்களுக்கு துணைபோகும் அரசியல்-இந்துத்துவவாதிகளுடன் மற்ற இந்துக்கள் விலகித்தான் செல்வார்கள் அல்லது விலக்கி வைப்பார்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-11-2021


[1] Oredesam, திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றாரா? திருமா பற்றவைத்த சர்ச்சை தீ ..பதிலடி கொடுத்த அஸ்வத்தாமன், BY OREDESAM  November 15, 2021

[2] https://oredesam.in/thiruma-vs-aswothaman-bjp/

[3] குமுதம் ரிப்போர்ட்டர், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றாரா? திருமா பற்றவைத்த சர்ச்சை தீ, 16-11-2021, பக்கங்கள்.10-11.