1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி ரூ.2 கோடி நிதியுதவி! (தாமஸ் கட்டுக் கதை தொடர்கிறதா?)

புனித தோமையார் மலை தேசியத் திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழா: புனித தோமையார் மலை தேசியத் திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழா, என்று நான்கு நாட்களுக்கு முன்னர் 20-11-2022 [?] அன்று, ஒரு வெளிநாட்டு பாதிரியுடன் விழா நடத்தப் பட்டுள்ளது. 500 ஆண்டு கொண்டாட்டத்திற்கான கல்வெட்டு அவரால் திறந்து வைக்கப் பட்டது. அவருக்கு நினைவு பரிசும் கொடுக்கப் பட்டது….பேசும்பொழுது, “……..தாமஸ் இங்கு வந்து மரித்தார்………இது இந்தியாவின் கல்வாரி என்று அழைக்கப் படுகிறது…….சிலைகள் எல்லாம் இருக்கின்றன……..,” என்றும் சொல்லப் பட்டது.எல்லோரும் சேர்ந்து ஜபித்தனர்….பாட்டு பாடினர்…………தமிழ்நாட்டு பாரம்பரிய நடனங்கள் ஆடப் பட்டன. …………இவ்விவரங்கள் சில வீடியோக்கள் மூலம் அறியப் படுகின்றன[1].

1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழா: சென்னையை அடுத்த பரங்கிமலையில் பழமையான புனித தோமையார் தேவாலயம் உள்ளது. 1523-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பழமை மாறாமல் செயல்பட்டு வருகிறது[2]. இந்த தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி அங்கு செய்யப்பட உள்ள பணிகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 23-11-2022 அன்று ஆய்வு செய்தார்[3]. அங்குள்ள பழமையான நினைவு சின்னங்கள், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டயங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் பழமையான தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு தேவாலயத்தின் வரலாற்று புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு செய்யப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அவருடன் தேவாலய அதிபர் மைக்கேல், பங்கு தந்தை அலெக்சாண்டர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் லலிதா ஆகியோர் இருந்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- “முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு பணிக்காக நிதியை ஒதுக்கி தந்து உள்ளார்[4]. இதில் முதற்கட்டமாக 1523-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 500 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது[5]. இந்த நிதியில் தேவாலயத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை பார்வையிட வந்தேன். இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பங்கு தந்தையாரிடம் கேட்டுக்கொண்டேன். நாகூர் தர்காவுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது,” இவ்வாறு அவர் கூறினார். டுவிட்டரில் அமைச்சைன் பதிவு, இவ்வாறு உள்ளது[6], “நூறாண்டுகள் பழமையான 3 தேவாலயங்கள் மற்றும் 3 தர்காக்கள் பழுது பார்த்து மராமத்து செய்வதற்காக தலா 2 கோடி வீதம் 12 கோடி ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மூன்று தேவாலயங்களில் ஒன்றான, (1/2) ……சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தில் நடைபெற்று வருகின்ற சீரமைப்பு பணியினை நேரில் சென்று பார்வையிட்டு விரைவில் பணிகளை முடிக்க கேட்டுக் கொண்டேன். தேசிய திருத்தலத்தின் அதிபர் தந்தை அவர்களும், செங்கல்பட்டு பேராயத்தின் பங்குத்தந்தையர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தனர். (2/2)”

பொது மக்களின் பயன்பாடு என்றால் என்னவென்று தெரியவில்லை: ஊடகக்காரர்கள் பட்டாளமாகத் திரண்டு வந்திருந்தது, அவர்களது வீடியோக்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், கேள்விகள் ஒன்றும் சரியாகக் கேட்கப் படவில்லை. கேட்ட ஒரு சில கேள்விகளுக்கும் அரசு-முறையில் ஜாக்கிரதையாகத்தான் அமைச்சர் பதில் கொடுத்தார். வீடியோக்களில் மேலும் சில விவரங்கள் காணப்படுகின்றன[7], “தலா ஆறு கோடி ரூ. வழங்கினார். அவர்கள் கேட்பதை சரிபார்த்து….அரசு சார்ந்து குழு ஆராய்ந்து, அந்த நிதி ஒதுக்கீடு செய்து தருகிறோம்…மக்களின் பயன்பாட்டிற்கு உதவ….செய்யப் பட்டுள்ளது….” பொது மக்களின் பயன்பாடு என்றால் என்னவென்று தெரியவில்லை. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும், சர்ச்சில் எல்லா இடங்களுக்கும்சென்று வர முடியுமா? பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து, இப்பணம் கொடுக்கப் படுவதால், அதனை நியாயப் படுத்த அவ்வாறு கூறப் பட்டது என்றால், பொது மக்கள் எவ்வாறு அந்த சர்ச்சைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழா: பொதுவாக கிருத்துவர்கள் இந்த சர்ச்சை தாமஸ் வந்து கட்டியதாக கூறிக் கொண்டு கலாட்டா செய்து வருவர். அவ்வாறே கூட்டங்கள் போட்டு கலாட்டா செய்து வந்துள்ளனர்யிதைப் பற்றியெல்லாம் விவரமாக எழுதி-பதிவு செய்துள்ளேன்…. இப்பொழுது “1523-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழா,” எனும்பொழுது, சுற்றி நிற்கும் பாதிரி பட்டாளம் அமைதியாக உள்ளதை கவனிக்க வேண்டும். அதாவது, அந்த “தாமஸ் கட்டுக் கதை” எடுபாடாது என்று அமைதியாக இருந்தனரா அல்லது அமைச்சர் அவ்வாறு ஏதாவது சொல்லி விடப் போகிறாரா என்று கண்டுகொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அமைச்சர் அமர்க்களமாக புகைப் படங்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அங்கிருக்கும் பெருமாள் கோவிலை இடித்து சர்ச் கட்டப் பட்டது என்று முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பிறகு, அந்த விவரங்கள் எல்லாம் வெளிவந்து விடுமோ என்று அடக்கி வாசித்திருக்கலாம்.

“செக்யூலரிசத் தனமாக,” திராவிடத்துவ மாடலில் நடக்கும் நிகழ்வுகள்: “மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் லலிதா” என்றால் அவர் கிருத்துவரா இல்லையா என்று தெரியவில்ல. இந்து அறநிலையத் துறையில் கிருத்துவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது போல, இவரும் “செக்யூலரிசத் தனமாக,” இருக்கிறாரா அல்லது விசுவாசத்துடன் பணியில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இதே மாதிரி ஐனர், பௌத்தர் சீக்கியர் எல்லோருக்கும் கோடிகள் கொடுக்கப் படுமா? அவர்களது வழிபாட்டு ஸ்தலங்கள் பராபரிப்பு செய்யப் படுமா? இல்லை, 500-ஆண்டுகள் ஆகவில்லை என்பார்கள் போலும். இந்துத்துவவாதிகளைப் பொறுத்த வரையிலும், ஏதோ தமக்கு எல்லாம் தெரிந்தது போல காட்டிக் கொண்டு, மற்றவர்களின் ஆராய்ச்சிகளை, எழுத்துகளைத் திருடிக் கொண்டு, ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாலும், இதை கவனிக்கவில்லை போலும்….இந்த வீரர்கள் இப்பொழுதைய பிஜேபி-ஆதரவுடன் செயல் பட்டு வந்தாலும், கூட்டணி தர்மத்தினால் அமைதியாக இருந்து விடுவர் போலும்…..,

திராவிடத்துவ–பெரியாரிஸ–நாத்திக அரசு பொது மக்களின் பணத்தை சர்ச்–மசூதி புதுப்பித்தல் காரியங்கலுக்கு உபயோகப் படுத்துவது: பிப்ரவரி 2022ல், கோயில்களை போல தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் தர்காக்களை புனரமைக்கவும், பழுது பார்க்கவும் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்[8]. அதன்படி சென்னை உள்ள பழமையான வெஸ்லி தேவாலயம், நெல்லை உள்ள புகழ்பெற்ற கால்டுவெல் தேவாலயம், சென்னையில் உள்ள பழமையான நவாப் வாலாஜா பள்ளிவாசல், பழமையான ஏர்வாடி தர்கா மற்றும் நாகூர் தர்கா ஆகிய சிறுபாண்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்[9]. முன்பு, 2020ல், அதிமுகவும் இதே போல பட்ஜெட்டில் அறிவித்தது[10]. கோடிகள் இந்த பராமரிப்பு வேலைகளுக்கு ஒதுக்கப் பட்டது[11]. இது நிச்சயமாக பொது மக்களின் வரிப்பணம் தான். ஆக, செக்யூலரிஸத் தனத்துடம் நடக்கும், இந்த சேவைகள் தொடரத்தான் செய்யும். பிஜேபியே ஆட்சிக்கு வந்தாலும் தொடரும்.
© வேதபிரகாஷ்
24-11-2022.

[1] புனித தோமையார் மலை தேசியத் திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழா,
[2] தினத்தந்தி, பரங்கிமலை புனித தோமையார் தேவாலய பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடி – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல், நவம்பர் 24, 10:06 am.
[3] https://www.dailythanthi.com/News/State/2-crores-for-the-maintenance-of-parangimalai-st-thomaiyar-church-minister-senji-mastan-informs-843694
[4] தினமலர், தோமையார்மலை சர்ச் சீரமைப்புக்கு ரூ.2 கோடி, Added : நவ 23, 2022 23:00…https://www.dinamalar.com/news_detail.asp?id=3177812
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3177812
[6] செஞ்சி மஸ்தான் டுவிட்டர் –https://twitter.com/GingeeMasthan/status/1595513734101098496?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet
[7] செய்துள்ளது.பராமரிப்பு பணி முடிந்தவுடன் …, YouTube·NS TAMIL NEWS·24-Nov-2022
[8] தமிழ்.ஒன்.இந்தியா, மசூதிகள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி: பட்ஜெட்டில் அறிவித்த பிடிஆர், By Noorul Ahamed Jahaber Ali Updated: Friday, March 18, 2022, 15:59 [IST].
[9] https://tamil.oneindia.com/news/chennai/rs-12-crore-to-renovate-mosques-churches-ptr-452157.html
[10] Times of India, Tamil Nadu budget: More funds to repair mosques and churches, TNN / Feb 15, 2020, 08:42 IST
[11] https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-budget-more-funds-to-repair-mosques-and-churches/articleshow/74144601.cms

குறிச்சொற்கள்: உயிர் தியாகம், கட்டுக்கதை தாமஸ், கல்வாரி, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், செஞ்சி மஸ்தான், செயின்ட் தாமஸ், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தாமஸ் கதை, தாமஸ்மலை, தேவாலயம், நிதி, நிதியுதவி, பரங்கிமலை, பராமரிப்பு, புனரமைப்பு, போலித் தாமஸ்
2:44 பிப இல் நவம்பர் 24, 2022 |
தினத்தந்தி, பரங்கிமலை புனித தோமையார் தேவாலய பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடி – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல், நவம்பர் 24, 10:06 am.
https://www.dailythanthi.com/News/State/2-crores-for-the-maintenance-of-parangimalai-st-thomaiyar-church-minister-senji-mastan-informs-843694
பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் தேவாலய பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
சென்னை சென்னையை அடுத்த பரங்கிமலையில் பழமையான புனித தோமையார் தேவாலயம் உள்ளது.
1523-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பழமை மாறாமல் செயல்பட்டு வருகிறது.
இந்த தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி அங்கு செய்யப்பட உள்ள பணிகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.
அங்குள்ள பழமையான நினைவு சின்னங்கள், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டயங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
பின்னர் பழமையான தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார்.
அவருக்கு தேவாலயத்தின் வரலாற்று புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு செய்யப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அவருடன் தேவாலய அதிபர் மைக்கேல், பங்கு தந்தை அலெக்சாண்டர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் லலிதா ஆகியோர் இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு பணிக்காக நிதியை ஒதுக்கி தந்து உள்ளார். இதில் முதற்கட்டமாக 1523-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 500 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியில் தேவாலயத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை பார்வையிட வந்தேன். இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பங்கு தந்தையாரிடம் கேட்டுக்கொண்டேன். நாகூர் தர்காவுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.