சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்!

சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்!

தாமஸின் கல்லறைகள், மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், உடலெச்சங்கள் எப்படி பல நாடுகளில் உள்ளன என்ற வேடிக்கையான, ஆனால், கிருத்துவர்களின் கட்டுக்கதை, பொய், மாய்மாலங்லளை கீழ்கண்ட இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். உண்மையிலேயே, ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்தான் என்றால், அவனுக்கு ஒரு உடல், ஒரு எலும்புக்கூடு, மண்டையோடு என்றுதான் இருக்கும். ஆனால், தாமஸ் என்று கதை விட்டுக் கொண்டிருக்கும் ஆளுக்கு ஏகப்பட்ட எலும்புக்கூடுகள், மண்டையோடுகள், மம்மிகள் என்றுள்ளன என்று கிருத்துவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் வைத்துக் கொண்டு அடிக்கும் கூத்தை சரித்திரம் என்று வேறு சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இங்கிலாந்து, கிரீஸ், மெசபடோமியா / துருக்கி, அமெரிக்கா என்ற பல நாடுகளில் உள்ள அந்த விவகாரங்களை கீழ்கண்ட இடுகைகளில் விவரித்துள்ளேன்.

அமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதிய கதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள்! https://thomasmyth.wordpress.com/2012/04/15/saint-thomas-in-america-the-final-destination/
எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்! https://thomasmyth.wordpress.com/2012/04/14/thomas-relics-at-edessa-turkey/
ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி! https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/
தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்! https://thomasmyth.wordpress.com/2012/04/13/thomas-skull-at-patmos-island-and-related-legends/
கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்) https://thomasmyth.wordpress.com/2012/04/08/similarities-between-the-legends-of-thomas-canterbury-and-mythical-thomas-of-india/

இனி சைனாவில் தாமஸ் என்பது பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.

சைனாவில் செயின்ட் தாமஸ்: உலகத்தில் தாமஸ் போகாத ஊரே இல்லை என்பது போல, நாளுக்கு நாள் கதைகளை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதற்கேற்றார்போல, கோடிகளை செலவழித்து ஆராய்ச்சி செய்ய, பல இடங்களில், ஆராய்ச்சி மையங்களையும், ஆட்களையும் தயார்செய்து வைத்துள்ளார்கள். அதற்லேற்றார்போல, அந்தந்த நாட்டு ஆட்கள் அத்தாட்சிகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் போலும். இதோ கிருத்துவர்கள் கத்தோலிக்கர்களுக்கு படு குசி, ஆமாம், சைனாவின் நாளிதழே ஒப்புக் கொண்டுவிட்டதாம். சைனாவில் தாமஸ் 65 – 68 வருட வாக்கில் சர்ச்சுகளை கட்டுவித்தாராம். ஆகையால் இனி “அப்போஸ்தல” என்ற பட்டத்தோடு கம்பீரமாக பவனி வரலாம் என்று சொல்லிக் கொள்கிறது[1] (….archaeology proves beyond a doubt the founding of the Church in China by the Apostle St. Thomas between 65 and 68 a.d. Thus China takes her place among the first countries in the world to be evangelised, and her Church can take pride in the title of “apostolic”).

ஹான் காலத்திலேயே (22-220) சிரிய கிருத்துவம் சைனாவிற்கு வந்fது விட்டது: சீனர்களின் வம்சாவளி காலக்கணக்கீட்டை சரித்திர ஆசிரியர்கள் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். அவை எப்படி தீர்மானிக்கப் பட்டன என்று தெரியவில்லை. அத்துடன் ஒப்பிடும், கிருத்துவர்கள், ஹான் காலத்தில் அதாவது 20-220 காலகட்டத்தில் சைனாவில் கிருத்துவம் வந்தது என்கிறார்கள். கிருத்துவம், கிருத்துவமாக முதல் நூற்றாண்டுகளில் அறியப்படாமல் இருந்தது. அது தோன்றிய இடத்திலேயே மூன்று-நான்காம் நூற்றாண்டுகளில் தான் அறியப்பட ஆரம்பித்தது. உள்ள அத்தாட்சிகளும் அவ்வாறேயுள்ளன. அந்நிலையில் இப்புதிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்ரக்கணக்கான கி.மீ தூரம் தாண்டி, கிருத்துவம் சைனாவிற்குள் வந்து விட்டது என்கிறார்கள். சைனாவில் தாமஸ் 65 – 68 வருட வாக்கில் சர்ச்சுகளை கட்டுவித்தார் என்றால், கிருத்துவ இறையியல் வல்லுனர் வாங் வைஃபின் (Christian theology professor Wang Weifan), ஒரு படி மேலே சென்று, அல்லது கீழே வந்து 86ல் தான் கிருத்துவம் சைனாவிற்கு வந்தது என்கிறார்[2] (Studies show that as early as 86 A.D., or the third year under the reign of “Yuanhe” of Eastern Han, Dynasty Christianity entered into China, 550 years earlier than the world accepted time).

  ஹான் காலத்தைய கற்சிற்பங்களில் உள்ள மீன், பறவைகள், விலங்குகள் முதலியவற்றைக் காட்டி, பைபிளில் இறைவன் எப்படி படைப்பை ஆரம்பித்தான் என்றுதான் இது விளக்குகிறது, என்று விளக்கம் கொடுக்கிறார். (The 74-year-old professor, who is also a standing member of the China Christian Council, showed reporter a pile of photos of Han stone carvings and bronze basins taken by him. He also compared the designs on them with that of the Bible, composed of fish, birds, and animals demonstrating how God created the earth)

ஒரு வண்டியும் உள்ளது, அது தேரோ, இக்கால ரிட்சாவோ தெரியவில்லை. ஆண்டவர் அதையும் படைத்தார் என்று ஏன் சொல்லவில்லை? இல்லை படைப்பின்போது தூங்கிவிட்டாரா? இல்லை உருண்டையானது எதுவும் கர்த்தருக்குத் தெரியாது போலும்.

காலக்கிரம நிகழ்ச்சிகளினால் குழம்பி போன ஆராய்ச்சியாளர்கள்: 65 மற்றும் 68 ஆண்டுகளுக்கிடையில் தாமஸ் சைனாவில் கிருத்துவமதத்தை ஸ்தாபித்தார். அந்நிகழ்ச்சி 40 மற்றும் 52 ஆண்டுகளுக்கிடையே கூட நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது 65-68 ஆண்டுகளில் ஏற்பட்டது என்று கொண்டால், கேரளாவிற்கு பிறகு இங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். சால்டியன் / மெசபடோமிய கலாச்சார தாக்கம், இந்திய சிரியன்-கிருத்துவர்களிடையே காணப்படுகின்றது. சால்டிய மரபு தாமஸ் சைனாவிற்குச் சென்றதையும் குறிப்பிடுகின்றது. இதன்படி பார்த்தால், 64ல் மெயிலபுரத்தில் தனது வேலையை முடித்துக் கொண்டு, 65ல் சைனாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆகவே சைனாவில் 64ம் வருடம் மற்றும் ஜப்பானில் 70ம் வருடம் தாமஸ் கிருத்துவத்தை முறையே ஸ்தாபித்திருக்க வேண்டும் என்று, கருதுகோளை வைக்கின்றது[3]. லி வென்-பின் (Li Wen-Pin) என்பவர், தனது சைனா சரித்திரத்தில் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றார். சிரியன் கிருத்துவ மிஷனரிகள் ஹான் காலத்தில் (25-220) சைனாவிற்கு வந்துள்ளன. ஆனால், அவை பட்டுப்பூச்சிப் புழுக்களை எப்படி வளர்க்கவேண்டும் என்று கற்றுக் கொள்ளத்தான் வந்தனவாம்[4]. இருப்பினும் அப்படி கற்றுக் கொண்டே, சீனமக்களிடம் பைபிளைப் பரப்பத்தான் அவை வந்தனவாம். ஹான் வம்சாவளி உடைந்தபிறகு, வேய், வு, மற்றும் சூ என்று சைன அரசு பிரிந்து விட்டது. ஏழாம் நூற்றாண்டுகளில் கிருத்துவம் எப்படி சைனாவிற்குள் வந்தது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்[5].

கிருத்துவ மத்தத்திற்கு ஜப்பான் அரசு-சாரா நிறுவனங்கள் காட்டும் ஆதரவு: ஜப்பானிய அரசு-சாரா கிருத்து நிறுவனங்களின் அமைப்பு[6] (அசோசியேஷன் ஆப் கிரிஸ்டியன் என்.ஜி.ஓஸ் இன் ஜபான்) என்பதன் ஆதரவுடன், கீய்கோ நிறுவனம்[7] ஜப்பான், சைனா முதலிய நாடுகளில் கிருத்துவம் எப்படி பரவியது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றது, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இது அபோகிரபல் பைபிள்களில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டு, தாமஸ் சைனா, மங்கோலிய, ஜப்பான் நாடுகளுக்கு முதல் நூற்றாண்டிலேயே வந்தார். சர்ச்சுகளைக் கட்டினார் என்று புதிய கருதுகோளை வைக்கிறது. அதற்கேற்றாற்போல, பழைய தொல்துறை ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, புதியதாக, மாற்றியமைக்கப் பட்ட முறையில் விளக்கம் அளிக்கிறது. முன்பு, பௌத்த மதத்தைச் சார்ந்தவை என்றுள்ள சிற்பங்களுக்கு, வலிந்து, கிருத்துவ சாயம் பூசப் பார்க்கிறது. சாமுவேல் லீ என்பவர், “ஜப்பானின் 20000 வருட கிருத்துவ வரலாறு” என்ற புத்தகத்தையும் எழுதி 2010ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்[8]. இதற்கு முன்பு, மைக்கேல் ஜோம்பி என்பவரும் இதே வகையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்[9].

சமீபத்தைய பௌத்த சிற்பங்களின் மாறுபாடு மிக்க விளக்கம்: பௌத்தம் சைனாவில், வெகு காலத்திற்கு முன்பே பரவியிருந்ததை சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதற்கேற்றாற்போல, பல பௌத்த விஹாரங்கள், கோவில்கள், அவற்றில் புத்தர், மற்ற பிக்குகளின் விக்கிரங்கள், சிற்பங்கள், சித்திரங்கள் முதலியன ஏராளமானவை காணப்படுகின்றன. அவற்றில் பெர்ம்பாலானவை, இந்தியத்தாக்கத்தில் உள்ளன இன்பதை அவற்றைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், கீழ்கண்ட புகைப்படம், மற்றும் சித்திரங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவ சார்பு விளக்கம் கொடுக்கப் படுகிறது.

பௌத்த சிற்பங்கள் என்று தெளிவாக உள்ள ஒரு பகுதியை இவ்வாறு வெளியிட்டு, குறிப்பிட்ட உருவங்கள் தாமஸைக் குறிக்கின்றன என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

பிறகு இடது பக்கத்தில் உள்ளதை, ஒரு புகைப்படத்தில் பெரிதாகக் காட்டப்படுகிறது.

புகைப்படத்தில் இல்லாததை அல்லது காணமுடியாததை, சிலுவைகள் என்று மூன்று இடங்களில் தெளிவாக வரையப்பட்ட இந்த சித்திரம் மேலே கொடுக்கப்படுகிறது. இங்கு விவரிப்பதற்காக, புகைப்படத்தை மேலே போட்டு, சித்திரத்தை கீழே போடப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் உள்ளது தாமஸ் என்றும், வலது பக்கத்தில் உள்ளது மேரி-குழந்தை ஏசு என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதனால், முதல் நூற்றாண்டிலேயே, தாமஸ் அங்கு வந்து, கிருத்துவத்தைப் பரப்பியுள்ளார் என்று வாதிடப்படுகிறது.

காலக்கணக்கீடு இடிக்கிறது: முன்னமே எடுத்துக் கட்டியபடி, தாமஸ் விவகாரத்தில் காலக்கணக்கீடு உதைக்கிறது. தாமஸ் ஏசுவிடன் இருந்ததாக, பிற்கால சித்திரங்கள் காட்டுகின்றன. விகிபீடியா எந்த ஆதாரமும் இல்லாமல் தாமஸ் 1 இல் பிறந்து 72ல் இறந்ததாகவும், ஏசு 7/2ல் பிறந்து 30-36ல் இறந்ததாகவும் காட்டுகிறது. அதாவது ஏசு 37-38 ஆண்டுகள் வாழ்ந்ததாக ஆகிறது. தாமஸுக்கும் 22-36ல் ஏசு இறந்தபோது, தாமஸுக்கு வயது 50ற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், சைனா-ஜப்பான் வந்தபோது அவருக்கு வயது 80ற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தாமஸ் சித்திரங்கள் எதுவுமே ஒரே மாதிரி இல்லை. சில தாடி-மீரைகளுடன் உள்ளன, சில இல்லாமல் உள்ளன; சில கிழவனைப் போலக் காட்டுகின்றன; சில இளைஞனைப் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

15-04-2012


[3] Founding of the Church in China by the Apostle St. Thomas between 65 and 68 AD according to the archealogical evidences. It is more likely that it took place between 40 and 52 AD.  If this dating AD 65-68 AD is true, this took place soon after the first tour of Kerala ministry. ”Such a discovery rehabilitates the tradition of the Chaldean Church (Iraq) and of the Church of the Syro-Malabar rite in Southern India called the “Christians of St. Thomas”, who have always considered the apostolate of the Apostle and the Christian establishment in China in the first century of our era as facts. In the Chaldean breviary, for example, one can read: ”By St. Thomas, the Kingdom of Heaven took wings and flew all the way to the China. ”” Kerala tradition indeed speaks of  two tours if mission in Kerala with a break in between and after. According to the tradition of the Church in India, the Apostle finished his mission there in 64 AD., and left from Meliapouram (near Madras) for China at the beginning of… 65 AD. The Indian and Chinese sources agree. There is thus a strong possibility that the two figures of Kong Wang represent the Apostle himself with, at his side, his acolyte-interpreter. ”   China and Japan claim that St. Thomas personally brought Christianity to China and Japan in 64 and 70 C.E., respectively. This view is promulgated by the Keikyo Institute.

[4] Samuel Lee, Rediscovering Japan, Reintroducing Christendom: Two Thousand Years of  Christian History in Japan, Hamilton Books, UK, 2010, p.66.

[6] T he Association of Christian NGOs in Japan, http://keikyo.com/acnj/index.html

[7] The Keikyo Institute, Japan; http://keikyo.com/index-e.html

[8]  Samuel Lee, Rediscovering Japan, Reintroducing Christendom: Two Thousand Years of  Christian History in Japan, Hamilton Books, UK, 2010, pp.65-66.

[9] Michael Zombe, Jesus and the Samurai: The Shining Religion and the Samurai, i-Universe, USA, 2009.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

22 பதில்கள் to “சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்!”

 1. T. R. Tamilselvan Says:

  இந்த சீனா-ஜப்பான் ஆட்களும் சந்தேகத்திற்கு உரியவர்கள் தாம்.

  சீனாவைப் பொறுத்த வரைக்கும், இந்தியாவை எப்பொழுதும் மிரட்டி வருகிறது.

  ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள், ஆசியவியல் நிறுவனம் என்று வைத்துக் கொண்டு, புத்தமதம், கிருத்துவ மதம் என்று இரண்டிலும் ஆராய்ச்சி செய்வது, அதற்கேற்றாற் போல கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டுள்ளது, முதலியவை கண்காணிக்கப் படவேண்டும்.

  அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் சாமுவேல் தான் பலச் மோசடிகளில் சிக்கினார். முதலில் முருகா என்று மாநாடுகள் நடத்தி, இப்பொழுது தாமஸைப் புஇடித்துக் கொண்டுள்ளார்.

  இப்பொழுது ஜப்பான் தூதர்கள், அதிகாரிகள் வந்தால் மனைவி-மகள் சகிதம் போய் கால்களில் விழுந்து சலுகைகளைப் பெற்று வருகிறார்.

  ஆகவே இந்த கூட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

  ஒருவேளை, இந்தியாவை வேவு செய்வதற்காக இப்படி கஊட்டம் கூட்டமாக வருகிறார்களோ என்னமோ?

  • vedaprakash Says:

   ராஜராஜன், ராஜேந்திரன் காலங்களிலேயே, சீனர்கள் வேவு பார்த்து வந்தார்கள். அப்பொழுது அரேபியர்கள் / முகமதியர்கள் அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்கள். ஆக இப்பொழுதும், இவர்கள் சேர்ந்து வேலை செய்வதில் ஆச்சரியம் இல்லை. அப்பொழுது தில்லியில் முகமதியர் இருந்தனர், இப்பொழுது சோனியா உள்ளார். இரண்டிற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டுப்பற்று விலைபேசப்படும் போது, எல்லாமே காற்றில் பறக்கின்றன.

 2. Kamalkishore Varma Says:

  This is hghly idiotic onthe part of the fanatic Christians.

  There has not been any evidence to prove the presence of Thomas even in his supposed native place.

  Nothing was known about his early life even up to medieval period.

  How then such mythical person is made to project as a “globe trotter” visiting all the continents.

  First of all, the Christians themselves did not know about the parts of world, as according to them the earth was flat till 17th-18th centuries.

  Therefore, bringing Thomas to China is ridiculous.

  • vedaprakash Says:

   Yes, even the Indian historians who obtained Ph.Ds in the Portuguese studies etc., have not pointed out the stellar navigation, longitude problem etc., in the scientific point of view.

   The trade wind navigation is different from these.

   As C-14, TL and other techniques are available, the relics, connected materials, and other things could be sent to laboratories to settle the issues, instead of creating more myths using speculative archaeology.

   • V. Narayanan Says:

    But why they are not doing?

    Or who are preventing them?

    When the Chinese could get more medals in the Olympics etc., how and why they indulge or allow to indulge in such cheap propagandas?

 3. W. John Robert Says:

  When we look at the figures, it is evident that they are Buddhist and not Christian.

  The influence of Buddhism on Christianity has been enormous and appreciable and pointed out by many scholars.

  When the Christianity was not known during the first centuries, clearly till 3rd-4th centuries, there is no question of its spread to other places.

  Moreover, in the old world, only limited area was known in and around Mediterranean region.

  The geographers knowledge was very poor and nothing was known to them specifically.

  The ancient maps drawn by them (though no copy was available now) clearly prove their poor knowledge.

  Therefore, Christianity could not go beyond its origin of place, that too, during the first centuries of formative period.

  • vedaprakash Says:

   I add this further to my observations made in response to Kamalkishore Varma.

   The Gnostics, the Nestorians, the Armenians, the Chinese Buddhists etc., have been different all together.

   The Christians were not using crosses and crosses had never been their religious symbol.

   Therefore, their claims to the crosses of Nestorians, Armenians etc, are meaningless.

   Stellar navigation, Cartography and other scientific methods do not help Christians and they know very well about.

   Yet, they play tricks, as most of the scholars do not know such facts.

  • V. Narayanan Says:

   Yes, when there was no Christianity in the place of origin, where is the question of its spread to other places?

 4. Ibrahim Sulaiman Says:

  Holy shit, how can this guy could go anywhere out of that area, when he was not known to anybody.

  This is purely imaginative and trace.

  This type of scrap should be thrown out.

  I do not think the Chinese encourage such bullshits.

 5. R. R. Viswanath Says:

  I suggested of cloning Thomas.

  Since, there have been many skeletons, skulls, bones etc., they may have cloned many thomases.

  Out of those thomases, they can find out the real thomas.

  Of course, they cannot doubt the thomas cloned.

 6. S. Ezhilan Says:

  சொந்த ஊரிலே தனது நம்பிக்கையாளர்களை ஒழுங்காக, ஒழுக்கமாக, கண்ணியமாக வைத்துக் கொள்ள இவர்களுக்கு துப்பில்லை.

  இந்த அழகில் மற்ற நாடுகளில் பொய்களை பரப்ப வந்துவிட்டார்கள்.

  இப்படி பொய்களை, பொய்மைகளை பரப்பினால் பாவமும் போகாது, புண்ணியமும் கிடைக்காது.

  • vedaprakash Says:

   இதில் பாவம்-புண்ணியம் பார்த்து வேலை செய்வதில்லை. மஹாத்மா காந்தி சொன்னது போல லாபம்-நஷ்டம் பார்த்து “பேலல்ன்ஸ் ஷீட்” தயாரித்து வேலை செய்கின்றனர்.

 7. W. John Robert Says:

  Definitely, Saint Thomas coming to India is not historical.

  The Indian Church is unnecessarily indulged and involved in such falsified and concocted legends and myths.

  It is not helpful to the furtherance of the Christian belief, as the origin and spread of early Christianity was confined to the Mediterranean region.

  Even the apocryphal bible restricts his death to Mesopotamia and therefore, the Indian Christians should ponder over facts and clear off their mess created again and again, so that persons like Vedaprakash goes on criticizing it here and then.

 8. S. S. Sankaranarayanan Says:

  ஆரம்பகாலக் கிருத்துவத்திற்கே எந்தவித ஆதாரமும் இல்லை.

  முன்னூறு-நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்காலங்களில் வழங்கி வந்த, பிரபலமான கடவுளர்களின் கதைகள் முதலியவற்றின் கலப்பில் உருவானது தான் ஏசுகிருஸ்து கதை. பிறகு ஒன்று-ஒன்றாக சேர்க்க ஆரம்பித்தார்கள்.

  அப்போஸ்தலர்கள் கதைகளும் அவ்வாறுதான்.

  அப்போஸ்தலர்களின் எண்ணீக்கையே வேறுபடுகிறது.

  மேலும் இந்த தாமஸ் என்ற ஆள் இருந்தாரா இல்லையா என்ற சந்தேகமும் சரித்திர ஆசிரியர்களிடம் உள்ளது.

  ஆக்ட்ஸ் ஆப் தாமஸ் முதலிய ஆவணங்கள் கிடைத்தப் பிறகு, தாமஸ் இருந்ததே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

  இந்நிலையில் தான், ஒரேமாதிரியான கதைகளை பல கண்டகங்களில் மாற்றிப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

  அதன் விளைவுதான், இப்படி தாமஸ் எல்லா இடங்களிலும் இருப்பது போன்ற கதைகள் உருவான விதம்.

  இதை பெரியதக எடுத்துக் கொண்டு, சரித்திரம் என்பதெல்லாம் சரியான மோசடி, அதனை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டர்கள்.

 9. தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்! « தாமஸ்கட்டுக்கதை Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/15/thomas-in-china-that-too-in-the-first-century-ce/ […]

 10. S. Avudaiyappan Says:

  உடான்ஸ் உட்ர ஆளுங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா. சீனா என்ன, ஆர்டிக்-அன்டார்டிக் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று வந்தான் என்றால், என்னய்யா செய்ய போறே? ஒன்றும் புடுங்க முடியாது. அவங்க அப்படித்தான் எழுதுவாங்க? என்ன செய்ய முட் இயும்?

 11. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/15/thomas-in-china-that-too-in-the-first-century-ce/ […]

 12. V. Narayanan Says:

  So when the American Universities like Harvard could indulge in such type of unhistorical frauds, their Chines counterparts could excel them

  Though, they talk about history, historical sense, historical consciousness etc., here nothing would work.

  In the name of Jesus or Christ, they forget everything.

  Therefore, there is no wonder that these sophisticated and well-trained propagandists indulge in such unfair, shameful and unbecoming acts.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: