கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)

கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)


குதிரையேறும் ராவுத்தன் – கந்தர்புரி தாமஸ் (மேலேயுள்ள சித்திரம்)                                                                                                                         போர்ச்சுகீசியர் தாமஸ் கட்டுக்கதையை பரப்பியவிதம்: போர்ச்சுகீசியர்களுக்கு தாம் போகுமிடமெல்லாம் செயின்ட் தாமஸைல் கண்டுபிடிப்பது, சில எலும்புகளை போடுவது, இடத்தைப் பிடிப்பது, பிறகு ஆக்கிரமித்த இடத்தில் சர்ச்சைக் கட்டுவது என்பது பழக்கமாக இருந்து வந்தது. கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் பலவிதங்களில் ஒத்துப் போகிறது. இரண்டு கட்டுக்கதைகளையும் ஒரேமாதிரி புனையப்பட்டு வடிவமைப்புக் கொடுத்துள்ளது போன்று அவர்கள் அழித்த ஆதாரங்கள் காட்டுகின்றன. அங்கும் முதலில் இருந்த சர்ச்சை இடித்துவிட்டு, புதிய சர்ச்சைக் கட்டியுள்ளார்கள். உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார்கள்.

கந்தர்புரியின் செயின்ட் தாமஸ் பக்கெட் (1118-1170): தாமஸ் எ பக்கெட் (St. Thomas à Becket) என்ற அந்த தாமஸ் ஆங்கிலதேசபிமானியாகக் கருதப்படுகிறார்[1]. அப்போஸ்தலர் தாமஸ் நினைவுநாளில் பிறந்ததால், இவருக்கு அதேபெயர் சூட்டப்பட்டதாம். கிட்டத்தட்ட அவரைப் பற்றிய கதைகள் எல்லாமே “ராபின் ஹுட்” கதைகள் போன்றேயுள்ளன. ஹென்றி VIII (Henry VIII) ராஜாவிற்குச் செல்லவேண்டியை வரிப்பணத்தை இவரே வசுல் செய்துகொண்டாராம். இதனால், ராஜாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாது, இவர் குதிரையில் அங்குமிங்குமாகத் தெரிந்து வந்தபோது, தமக்கெதிராக படையைத் திரட்டுகிறார் என்ற சந்தேகமும் வளர்ந்தது. அவரிடத்தில் தங்கம், வைரம் என்று ஏராளமான செல்வம் இருந்ததாம். ராஜா, “எப்படி நீ இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய்?”, என்று கேட்டதற்கு, கடவுள் கொடுத்தார் என்றாராம். அதுமட்டுமல்லாது, ஏழைகளுக்கு செல்வத்தைக் கொடுத்து வந்தாராம். கந்தர்புரி சர்ச்சின் ஆர்ச்பிஷப்பாக இருந்து (1118-1170), ஹென்றிக்கு இணையாக ஆதிக்கத்தைச் செல்லுத்தினாராம். இதனால், ராஜா இவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

அரசதுரோகி தாமஸ் உயிர்த்தியாகி தாமஸ் ஆனது: நான்கு தனக்கு வரவேண்டிய கணக்கைத் தீர்த்து வாருங்கள் என்று நால்வரை அனுப்பினாராம். அவர்களும் தாமஸின் கதையை முடித்துவிட்டு வந்தார்களாம். அதாவது ராஜாவின் கையாட்களால் டிசம்பர் 29 1170 அன்று கொலையுண்டு உயிர்த்தியாகியானார்[2]. செத்தப்பிறகும், அந்த தாமஸின் புகழ் அதிகமாகவே இருந்ததினால், சரித்திரத்திலிருந்தே அப்பெயரை நீக்க என்ற மன்னன் முயன்றான். 1538ல் ஹென்றியின் கட்டளைப்படி[3], அந்த சர்ச் இடிக்கப்பட்டு, தாமஸின் “ரெலிக்ஸ்” அதாவது எலும்புகள் கூட விட்டு வைக்காமல் எரிக்கப்பட்டன[4]. இதெல்லாமே, “அபோகிரபல் பைபிள்” அல்லது மறைத்துவைக்கப் பட்டுள்ள பைபிள்களில் தாமஸின் கதைகளைப் போன்றே இருப்பதைக் காணலாம்.

தாமஸ் கொல்லப்பட்ட ரணகளறி குரூரக்கட்டுக்கதை: கிருத்துவம் ரத்தத்தில், கொலையில், கொடுமையில், குரூரத்தில் தோய்ந்து வளர்ந்தது. இதனால், அவர்கள் மனதில் வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பன மறைதேயிருந்து, வேலைசெய்து வந்துள்ளது. “தியாகவியல்” என்று வைத்துக் கொண்டு, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியோரை உத்தமர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று கதைப் புனைவது அவர்கள் வழக்கம். ஏசு மக்களுக்காக உயிர்துறந்தார், தினமும் அவர் ரத்தம்-சதை குடித்துத்தின்று தான் நம்பிக்கையுடன் கிருத்துவர்கள் வாழ்கின்றனர்[5] என்பதனை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் இத்தகைய ரணகளறி குரூரக் கட்டுக்கதைகள் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆகவே, தாமஸ் பக்கெட் கொலையுண்டதை குரூரமாகச் சித்தரித்துள்ளனர். தாமஸ் முழங்கால் போட்டு தியானம் செய்ய்ம் வேளையில், அந்த நான்கு கொலையாளிகள் கத்திகளுடன் வருகின்றனர். முதலில் ஒருவன் பின்பக்கமாக தலையை வெட்டுகிறான். ரத்தம் பீரிட்டெழுகிறது; அடுத்தவன் வெட்டுகிறான் – தலை கீழே விழுகிறது, இன்னொருவன் வெட்டுகிறான், தலைசிதறி மூளை வெளியேறுகிறது; பிறகு மற்றவனும் வெட்ட உடல் துண்டு-துண்டாகிறது. கிடைத்த அந்த சிதைந்த உடலை சீடர்கள் மறைத்து வைக்கின்றனர். ஏனெனில், அரசன் அதனையும் விடமாட்டான் என்ற அச்சம், இல்லை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்ற பயம், ஏனெனில், கிருத்துவர்களுக்கு பிணம் அதுவும் கிருத்துவ சந்நியாசி போன்றவர்களின் பிணம் என்றால் கூறுபோட்டு சாப்பிடுவார்கள்[6]. அதனால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை (இதனால் தான், கபாலி கதை கேட்டதும், கிருத்துவர்கள் அத்தகைய கதையை தாமஸுக்குக் கட்டிவிட்டனர்)

தாமஸ் பக்கெட்டைப் பற்றி வளர்ந்த கட்டுக்கதைகள்: உள்ளூர் கதைகளின்படி, அவர் போப்பினால் மரியாதை செய்யப்பட்டவுடன் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தாமஸைப் போல, இந்த தாமஸும் ஏசுநாதருக்கு இணையாக வைக்கப் படுகிறார். உள்ளூர் தண்ணீர் பிடிக்கவில்லை என்று ஆயர்க்கொம்பினால் பூமியைக் குத்தினாராம். உடனே நீர் குபீரென்று கொப்பளித்தெழுந்து ஊற்றுபோல சொரிந்ததாம். இன்னொருமுறை இரவில் குயில் இனிமையாகப் பாடிக்க்கொண்டிருந்ததாம். அதைப் பிடிக்காமல், இனிமேல் தனதருகில் யாரும் பாடக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டாராம். கென்ட் என்ற இடத்தில் ஸ்டுரூட் என்ற கிராமத்தில் இருந்த மக்கள் அரசனுக்கு தமது  ஆதரவைத் தெரியப்படுத்த, தாமஸ் குதிரையின் மீது சென்றபோது, குதிரையின் வாலை வெட்டிவிட்டார்களாம். இதனால் கோபம் அடைந்த தாமஸ், இனிமேல் அந்த கிராமர்த்தவர் வாலோடுப் பிறக்கக்கடவர் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.

மறக்காத மக்களும், கட்டுக்கதையாளர்களும்: இங்கிலாந்தில் கந்தர்புரிக் கதைகள் என்று இப்படி கட்டுக்கடைகள் அதிகமாகவே வளர்ந்தன. ஆனால், மக்கள் தாமஸை மறக்கவில்லை. பிறகு உடல் டிரினிடி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து அதன் மூலமாக பார்க்க வழிசெய்யப்பட்டது[7]. பிறகு தாமஸின் புகழ் பரவ ஆரம்பித்தது. சமாதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நோய்-நொடி தீர்க்கும் என்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. பிரெஞ்சு நாட்டு மன்னன் லூயிஸ் VII (Louis VII) அங்கு வந்து தனது மகன் நோய் நீங்க வேண்டி வந்தானாம். 1172ல் தாமஸ் ரத்தம் தோய்ந்த ஒரு கல் போப்பிடம் அனுப்பிவைக்கப்பட்டதாம். அது இப்பொழுது மாரியா மகோரி (the church of Sta. Maria Maggiore) என்ற சர்ச்சில் உள்ளது. அந்த ரத்தம், எலும்புகள், மண்டையோடுகள் பற்றியும் அதிகமாகவே கதைகள் வளர்ந்தன[8]. எனவேத்தான், இப்பொழுதும் ஹாரிபாட்டர் போன்ற கட்டுக்கதைகள் மேனாடுகளில் பிரபலமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

வின்சென்ட் ஸ்மித் மற்றவர்கள் தாமஸ் கட்டுக்கதைக்கு சண்டையிட்ட ரகசியம்: வின்சென்ட் ஸ்மித் என்பவன் தான், இப்பொழுதுள்ள இந்திய சரித்திரத்தை எழுதி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தவன். இது இன்றளவும் இந்தியர்கள் கண்மூடித்தனமாக படித்து வருகிறார்கள். ஆனால், அந்த  வின்சென்ட் ஸ்மித், இந்த தாமஸ் கட்டுக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வளர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டானான்[9].

இரண்டு கதைகளும் உண்மையாக இருக்கமுடியாது; அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது. அத்தாட்சியை ஆழ்ந்து ஆய்ந்தபிறகு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது, தென்னிந்திய கதை அச்சாவை ஆதரிப்பதாக இருக்கலாம். ஆனால், செயின்ட் தாமஸ் உயிர்த்தியாகியே இல்லை, ஏனெனில், முந்தைய ஹெராக்லியோன் என்ற ஞாஸ்திக் எழுத்தாளர் தாமஸ் தனது வாழ்க்கையின் இறுதிநாட்களை அமைதியில் கழித்தார் என்று உறுதியாக கூறியுள்ளார். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once. My personal experience, formed after much examination of the evidence, is that the story of the martyrdom in Southern India is the better supported of the two versions of the saint’s death. But, it is no means that St. Thomas was martyred at all, since an earlier writer, Heracleon. the gnostic, asserts that he ended his days in peace”.

அதாவது, இறந்த ஒரு மனிதனுக்கு ஒன்றிற்கு மேலான எலும்புக்கூடு, சமாதி முதலியன இருக்கமுடியாது. அதுமட்டுமில்லாது, உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். மற்ற ஆங்கில அதிகாரிகள், கிருத்துவ பாதிரிகள் சொன்னதை அவன் எற்க்கவில்லை. இருப்பினும், சில கிருத்துவர்கள் சொத்து, பணம் முதலியவற்றிற்காக, இக்கட்டுக்கதையை விடாப்பிடியாக வளர்த்து சரித்திரம் ஆக்க வேண்டும் என்று கோடிகளையும் கொட்டத் தயாராகி விட்டார்கள்.

வேதபிரகாஷ்

08-04-2012


[2] Archbishop of Canterbury (1118-1170), who was martyred on December 29 by the king’s henchmen.

[3] In 1220, Becket’s remains were relocated from this first tomb to a shrine in the recently completed Trinity Chapel where it stood until it was destroyed in 1538, during the “dissolution of monastaries, on orders from King Henry VIII. The king also destroyed Becket’s bones and ordered that all mention of his name be obliterated.

[5] உயிர்ப்பலி – யூகேரிஸ்ட் என்ற சடங்கு தினமும் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு கிருத்துவனும் அவ்வேறே நம்புகிறான். நம்பவேண்டும், இல்லையென்றால் அவன் கிருத்துவன் ஆகமாட்டான்.

[6] ரத்தத்திற்கு ரத்தம், சதைக்கு சதை என்பது அவர்களது திட்டவடமான நம்பிக்கை. அதனால்தான், டிராகுலா போன்ற படங்களில் ரத்தம் குடிக்கும் காட்சிகள் உள்ளன; ஜூம்பி / ஜோம்பிகள் – உயித்தெழுந்த பிணங்கள் மனிதர்களைக் கடித்துக் குதறித் தின்று உயிர்பெறுகின்றன. அதாவது இரண்டாவது ஜென்மத்தைப் பெறுகின்றன. இப்படியும் ஹாலிஹுட் படங்களில் காண்பிக்கப் படுகின்றன, இவையெல்லாம் இந்தியர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால், கிருத்துவர்களுக்கு புரிந்துதான் உள்ளது. அதனால்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. அவற்றை கிருத்துவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.

[8] Beneath the shrine in the MS. drawing is the chest containing the relics—the same chest in which they were deposited in 1220—and an inscription to the following effect :— “This chest of iron contained the bones of Thomas Becketskull and all, with the wounde of his deathand the pece cut out of his skull laid in the same wounde.

[9]

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)”

  1. சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்! « தாமஸ்கட்டுக்கதை Says:

    […] https://thomasmyth.wordpress.com/2012/04/08/similarities-between-the-legends-of-thomas-canterbury-and… […]

  2. T. R. Tamilselvan Says:

    இது கத்தோலிக்கர்களுக்கும், புரொட்டஸ்ண்ட்டுகளுக்கும் இடையேயுள்ளப் பிரச்சினையை காட்டுகிறது.

    புரொட்டஸ்ண்ட்டுகள் இந்த கட்டுக்கதையை, ஆரம்பத்திலிருந்தே மறுத்துள்ளார்கள்.

    ஆங்கிலேயர்கள், இந்தியாவை விட்டுச் செல்லும் போது கத்தோலிக்கர்களைக் கிள்ளிவிட்டு, புரொட்டஸ்ண்ட்டுகளையும் ஆடவிட்டுள்ளனர் என்று தெரிகிறது.

    கந்தர்புரியைப் பொரறுத்த வரைக்கும், அது ஆங்கிலேய கலாச்சாரத்தின் சின்னமாக உள்ளது. அதனால் அதனை விட்டுக் கொடுப்பதாக இல்லை.

    அதனால்தான், தாமஸ் என்று வந்தாலே, அவர்கள் குழப்பப் பார்க்கிறார்கள்.

    இந்தியர்கள் இதை சாதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    உண்மையான கிருத்துவர்களும், இத்தகைய கட்டுக்கதைகளின் பின்னணியை அறிந்து கொள்ளவேண்டும்.

  3. Kamalkishore Varma Says:

    It is quite possible that the Catholic-protestant fights could have taken ovwer the myth and the Protestants too want to have such parallel myths.

    As for as this Thomas Bucket is concerned, it is evident that it could be medierval myth floated to suit their religious beliefs.

    The way in which such cruelty is described excell “EVIL DEAD” etc.

  4. Ibrahim Sulaiman Says:

    The Canterbury tales are medieval creation of the British.

    They try to show off that they too had such stories.

    But most of them were copied from others, as the British were barbarians till 18th-19th centuries.

    They did not know how to shit, but accumulate then in their houses stinking and throw in the roads during early mornings.

    So, it is amazing that they believe such tales to be superimposed on the religious cult leaders.

  5. R. R. Viswanath Says:

    I think the Christians might have tried to use such similarities to invent new legends, so that they could get some converts.

    Poor fellows, they can keep their stock together, instead of searching for new ones.

  6. S. Ezhilan Says:

    கந்தர்புரியில், கந்தன், முருகன் எல்லோரும் இருந்தார்களா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

    அது ஒருவேளை தெய்வநாயகம் போன்ற புரட்டு ஆராய்ச்சியாளரெகளுக்கு உதவக் கூடும்.

    அதைவிட்டு விட்டு, இந்த கிறிஸ்தவர்கள் தாமஸை வைத்துக் கொண்டு புரளி செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

    இதை அறிந்தால், நம்மவர்களும் கிளம்பி விடுவார்கள், அடுத்த புத்தகத்தை எழுத!

  7. S. S. Sankaranarayanan Says:

    கத்தோலிக்கர்களுக்கு எதிராக, ஆங்கிலிகன் சர்ச் இத்தகைய கட்டுக்கதைகளை, அவர்களுக்கு சாதகமாக உருவாக்கியிருக்கலாம்.

    இந்த கந்தர்புரி / காண்டர்பரி டேல்ஸ் மிகவும் பிரபலமானவை. சார்லஸ் டிக்கனும்முப் பிறகு, ஆங்கிலேயர்களிடையே பிரபலமாக இருந்தன.

    இறையியல் ரீதியில், இவை அவர்களுக்கு மிகவும் உதவின எனலாம்.

  8. S. Avudaiyappan Says:

    கந்தர் என்றால், முருகன் அங்கிருந்தாரா? அப்பொழுது கடம்பன் எங்கிருந்து வந்தான்? கார்த்திகேயன் பற்றி என்ன சொல்வது? குகனை குகையில் தேடலாமா? சுப்ரமணியை சோப்புக்]ப் போட்டு பார்க்கலாமா? நைனா, அதுங்கதான், அப்படி கீதுன்னா, நீயும் இப்படியா? மாத்தி யோசி நைனா!

  9. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

    […] https://thomasmyth.wordpress.com/2012/04/08/similarities-between-the-legends-of-thomas-canterbury-and… […]

Kamalkishore Varma -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி