கபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்!

கபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்!:

கபாலிக சதுக்கம் – கப்லிகா செஸாக் (Kaplica Czaszek): குடோவாஜ்ட்ரோஜ், கீழ்-சிலேசியன் வோய்டாசிப்  (Kudowa-ZdrójLower Silesian VoivodeshipPoland) என்ற இடத்தில் ஒரு சர்ச் உள்ளது. ஜெர்மானா (Czermana in Poland) 1776ல் கட்டப்பட்டாதாகச் சொல்லப் படும் இது “கப்லிகா செஸாக்” (Kaplica Czaszek) என அழைக்கப்படுகிறது[1]. அவர்கள் மொழியில் “மண்டையோடுகள் இருக்குமிடம்” என்று பொருளாம்[2]. கபாலிக சதுக்கம் என்று ஒரு சர்ச் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு ஆயிரக்கணக்கில் மண்டையோடுகள்-எலும்புகள் உள்ளன. இந்த சர்ச்சை வாடிகனே அங்கீகரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்தாலே, ஏதோ பேய்வீடு அல்லது பிசாசு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. வாக்லா தோமாஜெக் (Wacław Tomaszek) என்ற உள்ளூர் பாதிரி 1776ல் இதனைக் கட்டினாராம். 1618-1648 ஆண்டுகளில் நடந்த “முப்பது வருட போர் மற்றும் மூன்று வருட செலேஷியன் போரில்” இறந்தவர்களின் மொத்தமான கல்லறையாகும். ஜே. ஸ்கிமிட் மற்றும் ஜே. லாங்கர் (J. Schmidt and J. Langer) சேர்ந்து இறந்தவர்களின் மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை இங்கு கொண்டு சேர்த்தனராம். பிறகு, அவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டு, இந்த சர்ச் / நினைவிடம் கட்டப்பட்டது[3].

இது அப்போஸ்தலரின் பார்த்தலோமியோவின் சர்ச் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஊருக்கு ஒரு அப்போஸ்தலரை கூட்டிக் கொண்டு வரவேண்டும், இல்லை வரவழைக்க வேண்டும். இல்லை வந்தது போல புளுகவேண்டும், கட்டுக்கதைகளை எழுதிவைக்க வேண்டும்.

மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து இப்படி கட்டவேண்டும் என்ற ரசனை வந்ததே பொறுத்தமா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா என்று தெரியவில்லை. இவற்றை சுத்தப்படுத்தி, கம்பிகளால் கட்டி, வடிவமைத்து வேலை செய்த் மனிதர்கள் எப்படி வேலை செய்திருப்பர்? அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா? மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும்! சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும்? இவர்களை பழிவாங்கியிருக்குமா, பழிவாங்க அலைந்து கொண்டிருக்குமா?

இதைப் பார்ப்பவர்களுக்கு இது நினைவிடம், கல்லறை, சர்ச் என்றெல்லாம் மனதிற்கு வருமா அல்லது வேறுவிதமாக நினைப்பார்களா என்பது புகைப்படங்களை வைத்தேத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

மண்டையோடுகள்-எலும்புகளின் சமாதி: இதைத்தவிர பூமிக்கடியில் உள்ள அறைகளில் 21,000 மண்டையோடுகள்-எலும்புகள் வைக்கப் பட்டு, கதவுகளால் மூடிவைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் புரொடஸ்டன்ட் கிருத்துவர்களின் மண்டையோடுகள்-எலும்புகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டதால், அவர்களின் உடல்கள் அழுக விட்டிருப்பர். பிறகு, தோல், தசை, பிண்டம் முதலியவை நீங்கியப்பிறகு, இந்த மண்டையோடுகள்-எலும்புகள் எடுத்துவரப்பட்டன. தொத்துவியாதியும் பரவியது என்கின்றனர். ஆகவே, கடையில், சேர்த்த மிச்சம் தான் மண்டையோடுகள்-எலும்புகள்.

கத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்துப் போராடியதால், வாடிகன், ரோம் இவர்களைக் கொன்று குவித்ததாம். அதனால் அவர்கள் “உயிர்த் தியாகிகள்” என்று மதிக்கப் படுகிறார்கள்.

சிலுவையில் குரூரமாக ஆணிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஏசுவின் உருவமே இப்படி அலங்கரிக்கபட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைக் கொன்றுக் குவித்த கிருத்துவர்களுக்கு, இது சரியான சர்ச்சுதான் அல்லது நினைவிடம் தான்.

ஒரு தேவதை இப்படி மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளாள். இவளை என்னவென்று சொல்வது? ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா? பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார்? “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும்!”

கிருத்துவர்கள், தங்களது பழக்க-வழக்கங்கள் பலவற்றை மறைத்து, அவர்கள் ஏதோ அப்பழுக்கல்லாத 100% புனிதர்கள் போல சித்தரித்துக் கொண்டு, மற்றவர்களை “பாவிகள்”, “நம்பிக்கையில்லாதவர்கள்”, “விக்கிர ஆராதனையளர்கள்”, “பேய்-பிசாசுகளை வணங்குபவர்கள்” என்றேல்லாம் சித்தரித்து கேலிபேசி, அவதூறு செய்துள்ளனர். ஆனால், அவர்களது குணங்களோ, மிகவும் கேவலமாக, மற்ற நம்பிக்கையுள்ளவர்களைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், வளர்க்கப் பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.

© வேதபிரகாஷ்

21-04-2012


[3] Skull Chapel in Czermna is a chapel situated in Kudowa-ZdrójLower Silesian VoivodeshipPoland. This unusual chapel was built in 1776 by the local parish priest Wacław Tomaszek. It is the mass grave of people who died during the Thirty Years’ War (1618–1648), three Silesian Wars (1740–1763), as well as of people who died because of cholera epidemics and hunger. Together with J. Schmidt and J. Langer, Tomaszek collected the casualties’ bones and put them in the chapel. Walls of this small, baroque church are filled with three thousand skulls, and there are also bones of another 21 thousand people hidden in the basement of it. Every bone in this place is authentic. Skulls of people who created the chapel are put in the centre of it and placed on the altar. It is the only such monument in Poland, and one of three in Europe.[citation needed] It is situated in one of the oldest villages in Kłodzko County, near Kudowa Zdrój, in the Lower Silesia, Poland.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “கபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்!”

  1. Ibrahim Sulaiman Says:

    I do not know how many creepy churches they have like this!

    How they have this type of liking when thousands of people were killed. murdered?

    The building may look beautiful, but what it has inside is horrific.

  2. S. Ezhilan Says:

    கிருத்துவர்கள் என்னமோ தாங்கள் சாந்த சொரூபிகள், அமைதியின் பிரதிபிம்பம், சமாதானத்தின் மொத்த குத்தகையாளர்கள் என்பது போல எல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டுத் பேசுகிறார்கள், எழுதுகிறாட்ர்கள், பிரசங்கம் செய்கிறார்கள், திரிகிறார்கள்.

    ஆனால், இவர்களது சரித்திரம் / ஜாதகம் வேறுவிதமாக இருக்கிறது. கொலை, உயிரோடு எரித்தல் என்றுதான் உள்ளது. விஞ்ஞானத்தை மொத்தமாக எதிர்த்த அஞ்ஞானக் கூட்டம்.

    இவர்கள் செய்துள்ள பாவங்களைக் கழுவ எத்தனை ஏசுக்கள் மரித்தாலும் ஒன்றும் ஆகிவிடாது. ஏசு இருந்தாரா இல்லையா என்பது அடுத்தப் பிரச்சினை.

    இவர்கள் எல்லோருமே நிச்சயமாக பேய்-பிசாசுகளை வழிபடும் கூட்டங்கள்தாம். சாத்தான் வழிபடும் கருப்பு ஆடுகள் தாம்.

    இந்த அழகில் இவர்கள் மற்றவர்களை, இந்தியாவில் இந்துக்களை அவ்வாறு சொல்லி தூஷணம் செய்கிறார்கள்.

    ஆறுமுக நாவலர் இப்பொழுதிருந்தால், இவர்களது முகமூடியைக் கிழித்தெரிந்திருப்பார்.

  3. aravind Says:

    அருமை அருமை. போலி மதத்தின் போலி வேஷத்தை அற்புதமாக கிழித்துள்ளீர்கள்

  4. S. S. Sankaranarayanan Says:

    இவையெல்லாம் அந்த மனிதமாமிசம் தின்னும் ஆதிகாலக் கூட்டத்தின் பதிவுகளே.

    நவீன காலத்தில், உண்மையினை மறைத்தாலும், அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முடியவில்லை போலும்.

    இப்படி எலும்புக்கூடுகளை வைத்துக் கொண்டு கோவில் கட்டலாம், வீடு கட்டலாம்…….எல்லாம் அவர்களது நிலையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

  5. S. Avudaiyappan Says:

    அதென்ன நைனா கப்லிகா செஸ்ஸெக், யாதாவது செக்ஸ் விவகாரமாக இருக்குமா? ஏடாகூடமாக செய்து மாட்டிக் கொண்டு செத்து போயிருக்கும் போல, மொத்தமாக சமாதி கட்டி விட்டார்கள், பிறகு பொறுக்கியிருப்பார்கள். வாக்லா தோமாஜெக் என்கிறிர்களே, ஒரு வேளை அவன் தாமஸின் மச்சானாக இருப்பானோ என்னமோ? கபாலிக சதுக்கம் – ஐயோ, ஐயய்யோ இதென்ன கூத்து?

  6. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

    […] https://thomasmyth.wordpress.com/2012/04/21/kaplica-czaszek-chapel-f-skulls-bones-venerated/ […]

  7. V. Narayanan Says:

    Indians have to research into the possibility of Kaplikas and such other cults existing in those areas.

    As the Jehovah himself was a tribal god and their followers were cannibals, such possibility could be there.

பின்னூட்டமொன்றை இடுக