Posts Tagged ‘ஹான்’

சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்!

ஏப்ரல் 15, 2012

சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்!

தாமஸின் கல்லறைகள், மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், உடலெச்சங்கள் எப்படி பல நாடுகளில் உள்ளன என்ற வேடிக்கையான, ஆனால், கிருத்துவர்களின் கட்டுக்கதை, பொய், மாய்மாலங்லளை கீழ்கண்ட இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். உண்மையிலேயே, ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்தான் என்றால், அவனுக்கு ஒரு உடல், ஒரு எலும்புக்கூடு, மண்டையோடு என்றுதான் இருக்கும். ஆனால், தாமஸ் என்று கதை விட்டுக் கொண்டிருக்கும் ஆளுக்கு ஏகப்பட்ட எலும்புக்கூடுகள், மண்டையோடுகள், மம்மிகள் என்றுள்ளன என்று கிருத்துவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் வைத்துக் கொண்டு அடிக்கும் கூத்தை சரித்திரம் என்று வேறு சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இங்கிலாந்து, கிரீஸ், மெசபடோமியா / துருக்கி, அமெரிக்கா என்ற பல நாடுகளில் உள்ள அந்த விவகாரங்களை கீழ்கண்ட இடுகைகளில் விவரித்துள்ளேன்.

அமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதிய கதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள்! https://thomasmyth.wordpress.com/2012/04/15/saint-thomas-in-america-the-final-destination/
எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்! https://thomasmyth.wordpress.com/2012/04/14/thomas-relics-at-edessa-turkey/
ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி! https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/
தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்! https://thomasmyth.wordpress.com/2012/04/13/thomas-skull-at-patmos-island-and-related-legends/
கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்) https://thomasmyth.wordpress.com/2012/04/08/similarities-between-the-legends-of-thomas-canterbury-and-mythical-thomas-of-india/

இனி சைனாவில் தாமஸ் என்பது பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.

சைனாவில் செயின்ட் தாமஸ்: உலகத்தில் தாமஸ் போகாத ஊரே இல்லை என்பது போல, நாளுக்கு நாள் கதைகளை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதற்கேற்றார்போல, கோடிகளை செலவழித்து ஆராய்ச்சி செய்ய, பல இடங்களில், ஆராய்ச்சி மையங்களையும், ஆட்களையும் தயார்செய்து வைத்துள்ளார்கள். அதற்லேற்றார்போல, அந்தந்த நாட்டு ஆட்கள் அத்தாட்சிகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் போலும். இதோ கிருத்துவர்கள் கத்தோலிக்கர்களுக்கு படு குசி, ஆமாம், சைனாவின் நாளிதழே ஒப்புக் கொண்டுவிட்டதாம். சைனாவில் தாமஸ் 65 – 68 வருட வாக்கில் சர்ச்சுகளை கட்டுவித்தாராம். ஆகையால் இனி “அப்போஸ்தல” என்ற பட்டத்தோடு கம்பீரமாக பவனி வரலாம் என்று சொல்லிக் கொள்கிறது[1] (….archaeology proves beyond a doubt the founding of the Church in China by the Apostle St. Thomas between 65 and 68 a.d. Thus China takes her place among the first countries in the world to be evangelised, and her Church can take pride in the title of “apostolic”).

ஹான் காலத்திலேயே (22-220) சிரிய கிருத்துவம் சைனாவிற்கு வந்fது விட்டது: சீனர்களின் வம்சாவளி காலக்கணக்கீட்டை சரித்திர ஆசிரியர்கள் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். அவை எப்படி தீர்மானிக்கப் பட்டன என்று தெரியவில்லை. அத்துடன் ஒப்பிடும், கிருத்துவர்கள், ஹான் காலத்தில் அதாவது 20-220 காலகட்டத்தில் சைனாவில் கிருத்துவம் வந்தது என்கிறார்கள். கிருத்துவம், கிருத்துவமாக முதல் நூற்றாண்டுகளில் அறியப்படாமல் இருந்தது. அது தோன்றிய இடத்திலேயே மூன்று-நான்காம் நூற்றாண்டுகளில் தான் அறியப்பட ஆரம்பித்தது. உள்ள அத்தாட்சிகளும் அவ்வாறேயுள்ளன. அந்நிலையில் இப்புதிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்ரக்கணக்கான கி.மீ தூரம் தாண்டி, கிருத்துவம் சைனாவிற்குள் வந்து விட்டது என்கிறார்கள். சைனாவில் தாமஸ் 65 – 68 வருட வாக்கில் சர்ச்சுகளை கட்டுவித்தார் என்றால், கிருத்துவ இறையியல் வல்லுனர் வாங் வைஃபின் (Christian theology professor Wang Weifan), ஒரு படி மேலே சென்று, அல்லது கீழே வந்து 86ல் தான் கிருத்துவம் சைனாவிற்கு வந்தது என்கிறார்[2] (Studies show that as early as 86 A.D., or the third year under the reign of “Yuanhe” of Eastern Han, Dynasty Christianity entered into China, 550 years earlier than the world accepted time).

  ஹான் காலத்தைய கற்சிற்பங்களில் உள்ள மீன், பறவைகள், விலங்குகள் முதலியவற்றைக் காட்டி, பைபிளில் இறைவன் எப்படி படைப்பை ஆரம்பித்தான் என்றுதான் இது விளக்குகிறது, என்று விளக்கம் கொடுக்கிறார். (The 74-year-old professor, who is also a standing member of the China Christian Council, showed reporter a pile of photos of Han stone carvings and bronze basins taken by him. He also compared the designs on them with that of the Bible, composed of fish, birds, and animals demonstrating how God created the earth)

ஒரு வண்டியும் உள்ளது, அது தேரோ, இக்கால ரிட்சாவோ தெரியவில்லை. ஆண்டவர் அதையும் படைத்தார் என்று ஏன் சொல்லவில்லை? இல்லை படைப்பின்போது தூங்கிவிட்டாரா? இல்லை உருண்டையானது எதுவும் கர்த்தருக்குத் தெரியாது போலும்.

காலக்கிரம நிகழ்ச்சிகளினால் குழம்பி போன ஆராய்ச்சியாளர்கள்: 65 மற்றும் 68 ஆண்டுகளுக்கிடையில் தாமஸ் சைனாவில் கிருத்துவமதத்தை ஸ்தாபித்தார். அந்நிகழ்ச்சி 40 மற்றும் 52 ஆண்டுகளுக்கிடையே கூட நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது 65-68 ஆண்டுகளில் ஏற்பட்டது என்று கொண்டால், கேரளாவிற்கு பிறகு இங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். சால்டியன் / மெசபடோமிய கலாச்சார தாக்கம், இந்திய சிரியன்-கிருத்துவர்களிடையே காணப்படுகின்றது. சால்டிய மரபு தாமஸ் சைனாவிற்குச் சென்றதையும் குறிப்பிடுகின்றது. இதன்படி பார்த்தால், 64ல் மெயிலபுரத்தில் தனது வேலையை முடித்துக் கொண்டு, 65ல் சைனாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆகவே சைனாவில் 64ம் வருடம் மற்றும் ஜப்பானில் 70ம் வருடம் தாமஸ் கிருத்துவத்தை முறையே ஸ்தாபித்திருக்க வேண்டும் என்று, கருதுகோளை வைக்கின்றது[3]. லி வென்-பின் (Li Wen-Pin) என்பவர், தனது சைனா சரித்திரத்தில் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றார். சிரியன் கிருத்துவ மிஷனரிகள் ஹான் காலத்தில் (25-220) சைனாவிற்கு வந்துள்ளன. ஆனால், அவை பட்டுப்பூச்சிப் புழுக்களை எப்படி வளர்க்கவேண்டும் என்று கற்றுக் கொள்ளத்தான் வந்தனவாம்[4]. இருப்பினும் அப்படி கற்றுக் கொண்டே, சீனமக்களிடம் பைபிளைப் பரப்பத்தான் அவை வந்தனவாம். ஹான் வம்சாவளி உடைந்தபிறகு, வேய், வு, மற்றும் சூ என்று சைன அரசு பிரிந்து விட்டது. ஏழாம் நூற்றாண்டுகளில் கிருத்துவம் எப்படி சைனாவிற்குள் வந்தது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்[5].

கிருத்துவ மத்தத்திற்கு ஜப்பான் அரசு-சாரா நிறுவனங்கள் காட்டும் ஆதரவு: ஜப்பானிய அரசு-சாரா கிருத்து நிறுவனங்களின் அமைப்பு[6] (அசோசியேஷன் ஆப் கிரிஸ்டியன் என்.ஜி.ஓஸ் இன் ஜபான்) என்பதன் ஆதரவுடன், கீய்கோ நிறுவனம்[7] ஜப்பான், சைனா முதலிய நாடுகளில் கிருத்துவம் எப்படி பரவியது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றது, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இது அபோகிரபல் பைபிள்களில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டு, தாமஸ் சைனா, மங்கோலிய, ஜப்பான் நாடுகளுக்கு முதல் நூற்றாண்டிலேயே வந்தார். சர்ச்சுகளைக் கட்டினார் என்று புதிய கருதுகோளை வைக்கிறது. அதற்கேற்றாற்போல, பழைய தொல்துறை ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, புதியதாக, மாற்றியமைக்கப் பட்ட முறையில் விளக்கம் அளிக்கிறது. முன்பு, பௌத்த மதத்தைச் சார்ந்தவை என்றுள்ள சிற்பங்களுக்கு, வலிந்து, கிருத்துவ சாயம் பூசப் பார்க்கிறது. சாமுவேல் லீ என்பவர், “ஜப்பானின் 20000 வருட கிருத்துவ வரலாறு” என்ற புத்தகத்தையும் எழுதி 2010ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்[8]. இதற்கு முன்பு, மைக்கேல் ஜோம்பி என்பவரும் இதே வகையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்[9].

சமீபத்தைய பௌத்த சிற்பங்களின் மாறுபாடு மிக்க விளக்கம்: பௌத்தம் சைனாவில், வெகு காலத்திற்கு முன்பே பரவியிருந்ததை சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதற்கேற்றாற்போல, பல பௌத்த விஹாரங்கள், கோவில்கள், அவற்றில் புத்தர், மற்ற பிக்குகளின் விக்கிரங்கள், சிற்பங்கள், சித்திரங்கள் முதலியன ஏராளமானவை காணப்படுகின்றன. அவற்றில் பெர்ம்பாலானவை, இந்தியத்தாக்கத்தில் உள்ளன இன்பதை அவற்றைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், கீழ்கண்ட புகைப்படம், மற்றும் சித்திரங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவ சார்பு விளக்கம் கொடுக்கப் படுகிறது.

பௌத்த சிற்பங்கள் என்று தெளிவாக உள்ள ஒரு பகுதியை இவ்வாறு வெளியிட்டு, குறிப்பிட்ட உருவங்கள் தாமஸைக் குறிக்கின்றன என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

பிறகு இடது பக்கத்தில் உள்ளதை, ஒரு புகைப்படத்தில் பெரிதாகக் காட்டப்படுகிறது.

புகைப்படத்தில் இல்லாததை அல்லது காணமுடியாததை, சிலுவைகள் என்று மூன்று இடங்களில் தெளிவாக வரையப்பட்ட இந்த சித்திரம் மேலே கொடுக்கப்படுகிறது. இங்கு விவரிப்பதற்காக, புகைப்படத்தை மேலே போட்டு, சித்திரத்தை கீழே போடப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் உள்ளது தாமஸ் என்றும், வலது பக்கத்தில் உள்ளது மேரி-குழந்தை ஏசு என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதனால், முதல் நூற்றாண்டிலேயே, தாமஸ் அங்கு வந்து, கிருத்துவத்தைப் பரப்பியுள்ளார் என்று வாதிடப்படுகிறது.

காலக்கணக்கீடு இடிக்கிறது: முன்னமே எடுத்துக் கட்டியபடி, தாமஸ் விவகாரத்தில் காலக்கணக்கீடு உதைக்கிறது. தாமஸ் ஏசுவிடன் இருந்ததாக, பிற்கால சித்திரங்கள் காட்டுகின்றன. விகிபீடியா எந்த ஆதாரமும் இல்லாமல் தாமஸ் 1 இல் பிறந்து 72ல் இறந்ததாகவும், ஏசு 7/2ல் பிறந்து 30-36ல் இறந்ததாகவும் காட்டுகிறது. அதாவது ஏசு 37-38 ஆண்டுகள் வாழ்ந்ததாக ஆகிறது. தாமஸுக்கும் 22-36ல் ஏசு இறந்தபோது, தாமஸுக்கு வயது 50ற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், சைனா-ஜப்பான் வந்தபோது அவருக்கு வயது 80ற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தாமஸ் சித்திரங்கள் எதுவுமே ஒரே மாதிரி இல்லை. சில தாடி-மீரைகளுடன் உள்ளன, சில இல்லாமல் உள்ளன; சில கிழவனைப் போலக் காட்டுகின்றன; சில இளைஞனைப் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

15-04-2012


[3] Founding of the Church in China by the Apostle St. Thomas between 65 and 68 AD according to the archealogical evidences. It is more likely that it took place between 40 and 52 AD.  If this dating AD 65-68 AD is true, this took place soon after the first tour of Kerala ministry. ”Such a discovery rehabilitates the tradition of the Chaldean Church (Iraq) and of the Church of the Syro-Malabar rite in Southern India called the “Christians of St. Thomas”, who have always considered the apostolate of the Apostle and the Christian establishment in China in the first century of our era as facts. In the Chaldean breviary, for example, one can read: ”By St. Thomas, the Kingdom of Heaven took wings and flew all the way to the China. ”” Kerala tradition indeed speaks of  two tours if mission in Kerala with a break in between and after. According to the tradition of the Church in India, the Apostle finished his mission there in 64 AD., and left from Meliapouram (near Madras) for China at the beginning of… 65 AD. The Indian and Chinese sources agree. There is thus a strong possibility that the two figures of Kong Wang represent the Apostle himself with, at his side, his acolyte-interpreter. ”   China and Japan claim that St. Thomas personally brought Christianity to China and Japan in 64 and 70 C.E., respectively. This view is promulgated by the Keikyo Institute.

[4] Samuel Lee, Rediscovering Japan, Reintroducing Christendom: Two Thousand Years of  Christian History in Japan, Hamilton Books, UK, 2010, p.66.

[6] T he Association of Christian NGOs in Japan, http://keikyo.com/acnj/index.html

[7] The Keikyo Institute, Japan; http://keikyo.com/index-e.html

[8]  Samuel Lee, Rediscovering Japan, Reintroducing Christendom: Two Thousand Years of  Christian History in Japan, Hamilton Books, UK, 2010, pp.65-66.

[9] Michael Zombe, Jesus and the Samurai: The Shining Religion and the Samurai, i-Universe, USA, 2009.