கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)
கிருத்துவத்தைக் கண்டிக்க உள்ளூர் மலையாள எழுத்தாளர்கள் இல்லாமல் இல்லை: கிருத்துவர்கள் ஏதோ தங்களைத்தான் எல்லோரும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு எழுதி கொண்டிருப்பர் என்பது போல தமது புத்தகங்களை எழுதி வைப்பர். ஆனால், உண்மையில் கிருத்துவமே 13-14 நூற்றாண்டுகளில் தான் பிரபலமடைய ஆரம்பித்தது. இந்தியா முஹமதிய மதத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா மாலிக்காபூரால் 14ம் நுற்றாண்டில் பெருமளவில் பாதிக்கப் பட்டது. கிருத்துவர்களின் அடாவடித்தனம், 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகின. குறிப்பாக, இந்துமதத்தைப் பாதிக்கும் முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது, இந்துக்கள் எதிர்க்கத்தான் செய்தனர். அது கேரளத்தில் திரு. சட்டம்பி சுவாமிகள் (1853-1934) போன்றோர் மூலம் வெளிப்பட்டுள்ளது. கிருத்துவர்களின் அநாகரிகமான செயல்களைக் கண்டித்து அவர் சண்முகதாசன் என்ற பெயரில் “கிருத்துவமத சேதனம்” என்ற புத்தகத்தை மளையாளத்தில் எழுதினார்[1].
கேரளத்தில் கிருத்துவ மறுப்பு ஏன்?: கிருத்துவ மிஷினரிகள் ஒன்றும் தெரியாத அப்பாவி இந்துக்களை மதமாற்றுவதைக் கண்டு பொறுக்காமல், அம்மதத்தில் உள்ள அபத்தங்களை வெளிப்படுத்த இப்புத்தகத்தை எழுதினார். இந்துக்கள் தமது மதம், வேதங்கள் முதலியவற்றை கடுமையாக, ஆபாசமாக விமர்சனித்தாலும், தூஷித்தாலும் அமைதியாக இருந்து வந்தனர். ஆனால், மிஷினர்கள் எல்லைகளைக் கடந்தபோது, கண்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அதுமட்டுமல்லாது நன்கு படித்த கிருத்துவர்களே, அஞ்ஞான கூதரம் (அஞ்ஞானத்தை அறுக்கும் கோடாலி), திரிமூர்த்தி லட்சணம் (மும்மூர்த்திகளின் தகுதிகள்), குருட்டுவழி, சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, புள்ளெலிக் குஞ்சு போன்ற நூல்களை எழுது தூஷிக்க ஆரம்பித்தனர். இதனால் எந்தவிதத்திலும் இந்துமதத்துடன் ஒவ்வாத கிருவத்தை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதனால் ஏசு ஒரு கடவுள் இல்லை என்பது மட்டுமல்லாமல், எப்படி பைபிளே கிருத்துவர்களால் போலியாக உருவாக்கினர் என்றும் எடுத்துக் காட்டினார். இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாதி நூல்கள் காணாமல் போயுள்ளன. சிவப்பிரகாசர் நூல்களை எரித்தது மாதிரி, பாதிரிகள் இவரது நூல்களையும் எரித்திருக்கலாம்.
ஓ கிருத்துவப் பாதிரிகளே! இப்படி விளித்து, பைபிளை வசனம் வசனமாக அலசி, அதிலுள்ள பொய்களை, முன்னுக்கு முரணானவற்றை எடுத்துக் காட்டுகிறார். ஆதாம்-ஏவாள் பழம் சாப்பிட்டதற்காக தண்டித்த ஜேஹோவாவை பற்பல கேள்விகளைக் கேட்டுக் கிழி-கிழியென்று கிழிக்கிறார். பதி-பிரகரணம், பசு-பிரகரணம், பாச-பிரகரணம், கதி- பிரகரணம், என்று அக்குவேறு-ஆணிவேறாக பைபிளை விமர்சித்துள்ளர். சரித்திர ரீதியாக ஏசுவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய விமர்சனம் முதலியவை ஆறுமுக நாவலரைப் போலேயுள்ளது[2]. அவர் பல ஆங்கிலப் புத்த்கங்களப் படித்துள்ளார் என்பது, அவரது எழுத்துகளினின்று நன்றாகவே தெரிகின்றது. இந்துக்களுக்கு அவர் கிருத்துவத்தை எப்படி தர்க்கரீதியாக மறுப்பது என்பதில் ஒரு வழிகாட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
ஏசுவே இல்லை என்றால், தாமஸ் எங்கிருந்து வந்தான் – அதாவது உயித்தெழுதலே பொய் என்றால், தாமஸ் எப்படி உண்மையாகும்? சண்முகதாசன் என்ற சட்டம்பி சுவாமிகள் கேட்டதுபோல, ஏசு என்ற ஆள் வாழ்ந்ததேயில்லை[3] என்றால், தாமஸ் எப்படி வந்தான் என்ற கேள்வி எழுகிறது. உயித்தெழுதலைப் பற்றி எழுதும்போது, இவ்வாறான உதாரணத்தைத் தருகிறார் –
- ஒரு ஆள் ஒரு வெள்ளைக் காக்காயை அட்டகுலங்காரா (திருவனந்தபுரத்தில்) என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள மேசை மீது காலை 6 முதல் மாலை 6 வரை உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம்.
- இன்னொருவன் அதே காக்காயை அதே நேரத்தில் குருப் என்கின்ற ஆளின் வீட்டில் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம். அந்த இடத்தின் பெயர் வெம்பாயம்.
- மூன்றாம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை சங்குமுகம் என்ற இடத்தில் பார்த்தானாம்.
- நான்காம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை கொட்டாரக்காராவில் உள்ள பிரதான கோவிலில் பார்த்தானாம்.
இப்படி இந்த நான்கு பேர்களும் வெள்ளைக் காக்காவைப் பார்த்தேன் என்பதனால், நீ வெள்ளைக் காக்காய் இருப்பதை ஒப்புக் கொள்வாயா, அதுபோலத்தான் உயித்தெழுதல் கதை என்று முடிக்கிறார்[4]. அதாவது அந்த சந்தேகப்பட்ட தாமஸை மறைமுகமாகத் தாக்குகிறார். தாமஸ் ஏசு உண்மையாகவே உயித்தெழுந்தாரா இல்லையா என்று சந்தேகப்பட்டானாம். அதனால்தான், அவனுக்கு சந்தேகிக்கும் / சந்தேகமுள்ள தாமஸ் என்று அழைக்கப் படுகிறான். தனது விரலை ஏசுவின் விலாப்பக்கத்தில் உள்ளே விட்டுப் பார்த்து சோதித்தானாம். எப்படி அப்படி விரலை விட்டான், ஏசுவுக்கு காயம் ஏற்படவில்லயா, ரத்தம் வரவில்லையா, இல்லை; பிறகு காயம் ஆற மருந்து போட்டார்களா என்றேல்லாம் யாரும் பகுத்தறிவுடன் கேள்விகள் கேட்கவில்லை. அதுமட்டுமல்லாது, கிருத்துவம் உலகம் முழுவதும் செய்துள்ள குரூரக் கொலைகளை, சமூகச்சாகடிப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்[5].
வேதபிரகாஷ்
10-06-2012
[1] H. H. Chattambi Swamikal (Shanmukhadasan), A Hindu Critic of Christianity Kristumata-Chedanam,2000. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள இம்முழுப் புத்தகத்தை தகவிறக்கம் செய்து கொள்ளலாம். கிமச என்று சுருக்கமாக இனி அடிக்குறிப்புகளில் குஇப்பிடப்படும்.
http://archive.org/details/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation
[2] ஆறுமுக நாவலர் (1822-1879) பைபிளை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். கிருத்துவர்கள் இந்துக்களை அவதூறு செய்வது அறிந்து, அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதி, கிருத்துவத்தை மறுத்து வெளியிட்டார்.
|
[2] கிமச, ப.36-37.
[4] கிமச, ப.66.
[5] கிமச, ப.135-148.