கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – மஃபேயஸ் புனைந்த செயின்ட்தாமஸ் கட்டுக்கதை (4)

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள்மஃபேயஸ் புனைந்த செயின்ட் தாமஸ் கட்டுக்கதை (4)

மஃபேயஸ் என்ற ஜெசுவைட் பாதிரியால் உருவாக்கப் பட்ட செயின்ட்தாமஸ் கட்டுக்கதை: போர்ச்சுகீசியர் எழுதி வைத்துள்ள குறிப்புகளிலிருந்து, மஃபேயஸ் (1536-1603) என்ற ஜெசுவைட் பாதிரியால் உருவாக்கப் பட்டது தான் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை என்று தெரிகிறது. ஜொஹன்னஸ் பெட்ரஸ் மஃபேயஸ் [Joannes Petrus Maffeus (1536–1603)] என்பவன் லத்தீனில் பல புத்தகங்களை எழுதியுள்ளானாம். 1585ல் ஹிஸ்டோரியம் இன் டிகாரம் லிப்ரி VXI (Historium Indicarum Libei XVI) எப்ற புத்தகம்[1] புளோரன்ஸில் பதிப்பிக்கப்பட்டதாம். இதை எழுதி முடிக்க 12 வருடங்கள் ஆனதாம். ஒரு வரியை அமைக்க பலமணி ஏன் நாட்கள் கூட எடுத்துக் கொள்வானாம்! இருப்பினும் அதிசயமாக எழுதி முடித்துவிட்டானாம். இவனை போர்ச்சுகீசிய சரித்திராசிரியர், கத்தோலிக்க சரித்திராசிரியர், சர்ச் சரித்திராசிரியர், என்றும் குறிப்பிடப்படுகிறான்[2]. அதாவது கிருத்துவ நம்பிக்கைகளுக்கேற்ப எழுதும் சரித்திராசிரியர் என்று பொருள்படும். பெரும்பாலும், அவர்கள் நேரில் செல்லாமல், வழிபோக்கர்கள், பிரயாணிகள் மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு, தமது கற்பனையைக் கலந்து, நேரில் சென்று பார்த்தது போல எழுதுவர்[3]. நேரிலே சென்று பார்த்தாலும், தமக்கு சாதகாமாக இல்லாமல் இருந்தாலும் அவற்றை மாற்றி, தமக்கு சாதகமாக எழுதி வைப்பர்.

 Maffeus also tells us that St. Thomas’s remains were found by the Portuguese at Meliapoora, and sent to Goa. Ibid. f. 158. All this is of course treated as a fable
by the Catholic Moreri, Diet. vi. 323, a.
1 Bouhours, Xavier, i. p. 56.
மஃபேயஸ் தாமஸின் உடல் எச்சங்கள் மெலியபூரில் காணப்பட்டன என்றும் அவை கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன என்றும் எழுதி வைத்துள்ளார். ஆனால், இந்த கற்பனைக் கதையை அதிகாரமுள்ள கத்தோலிக்க புத்தகங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

மஃபேயஸின் கதையை மற்றவர்கள் குறிப்பிட்டாலும், சரித்தரத் தன்மையில்லாதலால் கண்டுக்கொள்ளவில்லை. பிரான்சிஸ் சேவியரே மைலாப்பூரிலுள்ளதாகச் சொல்லப் பட்ட கல்லறைக்கு வந்தபோது, ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு உண்மை தெரியும்.

It is pretended that St. Thomas the Apostle preached the Gospel in India; and Maffeus, the Jesuit, tells us that he built a church at Meliapoora, raised a dead boy to life, preached to the Chinese, performed many miracles, built a cross of stone, and prophesied that white men would come one day from the remotest regions, to restore the same faith
which he was then introducing.
ஆன்ட்ரூஸ் ஸ்டீன்மெட்ஸ்[4] போன்ற சர்ச் எழுத்தாளர்கள் பதிவு செய்ததாவது, “செயின்ட்தாமஸ் இந்தியாவில் நற்செய்தியை போதித்தார் என்று நடிக்கப்பட்டது / பொய் சொல்லப் பட்டது; அதுபோல மஃபேயஸ் என்ற ஜெசுவைட் பாதிரி அவர் மெலியப்பூரில் சர்ச் கட்டினார், செத்தவரை உயிர்ப்பித்தார், சீனர்களுக்கு போதித்தார், நிறைய அதிசயங்கள் புரிந்தார், கல்லினால் ஒரு சிலுவை செய்தார், வெள்ளைக்காரர்கள் ஒருநாள் வெகுதூரத்திலிருந்து வந்து அந்த பழைய நம்பிக்கையை மறுபடியும் திரும்பக் கொண்டு வருவார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார், என்றெல்லாம் எழுதினார்கள்”. 

போர்ச்சுகீசியருக்கு தமது காலனிய ஆதிக்கம், பொருட்-கனிமக் கொள்ளை, மதவெறி, மதநம்பிக்கைகள் மூலம் செய்யப்படும் கொலைகள், கொள்ளைகள், குரூரக் குற்றங்கள் முதலியவற்றை மறைக்க அல்லது இறையியல் ரீதியில் நியாயப்படுத்த, இத்தகையக் கட்டுக்கதைகளை பயன்படுத்தினர் என்பது தெள்ளத்தெரிந்த உண்மை. செல்லும் இடங்களில் எல்லாம் இக்கதைகளை உள்ளூர் நம்பிக்கைகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைத்து, திரித்து பரப்பி வந்தார்கள்.

திருஞானசம்பந்தரைக் காப்பியடித் துபுனைந்த கட்டுக் கதை: மயிலாப்பூரில் ஏற்கெனவே, திருஞானசம்பந்தர் வந்தது, பாம்பு கடித்து பூம்பாவை இறந்து போனது, அவளது அஸ்தி-எலும்புகள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தது, திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அவளை உயிப்பித்தது, போன்ற நிகழ்வுகளின் கதைகள் மக்களிடம் பிரபலமாக இருந்தன. எனவே, அப்பாதிருயாருக்கு, அக்கதைகளை அப்படியே எடுத்துக் கொண்டு, சிறிது மாற்றியமைத்து, கிருத்துவ சாயம் பூசுவதற்கு ஒன்றும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அதனால்தான், அக்கதைகளை உருவாக்கினர். இருப்பினும் மற்ற ஐரோப்பியக் கிருத்துவர்கள், அவற்றிற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் ஏற்றுக் கொள்ளவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கபாலீலீசுவரர் கோவில் வளாகத்தை இடித்தது முதலிய அக்கிரமங்களை ஐரோப்பிய கிருத்துவர்கள் தடுக்காதது அவர்களது கோவில்-இடிப்பு, இந்து-எதிர்ப்பு எண்ணங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன. 1588ல் ராமரயர் இப்பொழுதுள்ள சாந்தோம் என்று வழங்கப்படுகின்ற இடத்தில், கத்தோலிக்கத் துறவிகள் இந்து கோவில்களை இடிப்பதாக புகார்கள் கிடைத்ததால், அங்கு வந்து தடுத்தான். ஆனால், ஐரோப்பியர்கள் சாதுர்யமாக கப்பம் கொடுத்து அனுப்பிவிட்டனர்.

கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவப்பிரிவுகளும், தாமஸ் கட்டுக்கதைகளும்: கேரளவில் உள்ள கிருத்துவம் போர்ச்சுகிசியரால் அதிகமாகவே பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவப் பிரிவுகளும், தாமஸ் கட்டுக்கதைகளை ஜாக்கிரதையாகவே பயன்படுத்தி வருகின்றன.

மைக்கேல் கெட்டிஸ், சாரம் என்ற சர்ச்சின் துணைவேந்தர் தொகுத்த நூலின் பெயர், “மலபார் சர்ச்சின் வரலாறு – 1501ல் போர்ச்சுகீசியர் கண்டுபிடித்தது முதல் – ரோமிற்கு ஒவ்வாத கிரியைகளை செய்து வந்தது, அவற்றை நீக்கி முறைப்படுத்தியது, ரோமிற்குக் கீழ் கொண்டு வந்தது, 1599ல் “டயாம்பர் சைநாட்” என்று கொண்டாடியது, செயின்ட் தாமஸ் கிருத்துவத் தலைவர்களின் நம்பிக்கை மற்றும் கொள்கைகள் இங்கிலாந்திற்கு ஒத்துப்போவது, ஆனால் ரோமிற்கு விரோதமாக உள்ளது போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன” என்று 1694ல் பதிப்பிக்கப் பட்ட அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் காணப்படுகிறது.

ஆக, இங்கிலாந்து, புரொடஸ்டென்ட் கிருத்துவத்தைப் பின்பற்றி வந்ததால், ரோமின் / வாடிகனின் கட்டுக்கதைகளை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் இந்துமதத்தைப் பற்றி அவதூறாக எழுதி வந்த நிலையில், இந்துக்களும் கிருத்துவத்தைப் பற்றி படிக்க அரம்பித்தார்கள். அப்பொழுது, தங்களுக்கு எதிர்மறையான எந்த பிரச்சினைகலும் வரக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் விரும்பினர். மேற்கண்ட புத்தகத்தில், தெளிவாகச் சொல்லப்படுவது:

 
கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டிசாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிரவழிபாடு, பாவமன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.
இவையெல்லாம் அடிப்படை நம்பிக்கைகளாக இருப்பதினால், எல்லா கிருத்துவப் பிரிவுகளுக்கும் எதிரானது எனலாம். ஆகவே, கிருத்துவத்திற்கு எதிரானது என்பதைவிட, பொதுவாக இந்து நம்பிக்கைக்களைக் கொண்ட ஒரு இந்து பிரிவைக் காட்டுகிறது எனலாம். அதனை, கிருத்துவம் என்று திருத்தி வாதம் செய்ய முயல்வதும் தெரிகிறது. ஏனெனில் சடங்குகள், கிரியைகள் எனும்போது, அடிப்படையில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கிருத்துவத்தில் “சிலுவை” சின்னம் ஏழாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டாலும். வழிபாடு செய்யப் படும் சிலுவை, கர்ப்பக்கிருகத்தில் உள்ள சிலுவை மரத்தினால் செய்யப்பட்டதாகத்தான் இருந்தது. மாறாக, இந்த “இந்து-கிருத்துவர்கள்” கல்லால் செய்யப்பட்ட சிலுவைகளை உபயோகப் படுத்துகின்றனர்.
 
மற்றொரு இடத்தில் பலிபீடம் முதலியவை மரத்தினால் தான் செய்யப்பட்டிருக்க வேண்டுமே தவிர, கல்லினால் செய்யப்பட்டிருக்கக் கூடாது.

ஆனால், தாமஸின் சிலுவைகள் எல்லாமே கற்களால் உள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது மற்றும் கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் அவை இந்து சிற்பங்களைப் போலுள்ளதே தவிர, கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவை போல காணப்படுவதில்லை. மேலும், கர்ப்பக்கிருகத்தில் இருப்பதற்கு பதிலாக சர்ச்சுகளின் வெளியே, குறிப்பாக வாசல்களில் கொடிக்கம்பத்திற்கு அருகில் காணப்படுகின்றன. இவையெல்லாம் இந்துக் கோவில்களின் அமைப்பையே ஒத்துள்ளன. மேலும் கட்டுமானமுறையில் சர்ச்சுகள் மற்றும் மசூதிகளுக்கே எந்த வித்தியாசமும் இல்லாமல், கோவில்களைப் போன்றுள்ளது, அவையெல்லாம் இந்துகோவில்களை மாற்றி கட்டப்பட்டவை என்று தெரிகின்றன.

வேதபிரகாஷ்

05-08-2012


[1] Maffei’s Historiarum Indicarum is a fundamental relation of the progresses of the Society of Jesus in Asia and the Portuguese possessions in America. Describing at large the Portuguese discoveries, missions and explorations to the Indies, Japan, China and Brazil, with three chapters being dedicated to the region (including Henriquez’ letters, 1570). “Maffei writes extensively about Brazil, describing it very accurately… Birckmann reprinted Maffei´s work several times, the first in 1589, a good edition” Borba de Moraes. The work also contains Maffei´s collection of Jesuit missionary letters, most from Japan, Persia, China and India Francis Xavier, Almeyda, amongst other renowned Jesuits and a whole chapter is dedicated to the life of the founder of the Society of Jesus, Father Ignacio de Loyola. First Cologne edition, finely printed, promptly followed in 1593, more common in the market.

[2] Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit missions to the court of Akbar, George Riutledge & Sons Ltd, London, 1926, LPP, New Delhi, 1999, p.xv, xxx.

[3] Nicolas Lenglet Dufresnoy, New Method of Studying History: Recommending More Easy and Complete instructions, London, 1828.

[4] Andrew Steinmetz, History of the Jesuits: from the foundation of their society to its suppression by Pope Clement XIV.; their missions throughout the world; their educational system and literature; with their revival and present state,  including wood engravings by George Measom, Volume 1, Richard Bentley, London, 1848.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – மஃபேயஸ் புனைந்த செயின்ட்தாமஸ் கட்டுக்கதை (4)”

 1. V. Narayanan Says:

  மேலே பதிவு செய்யப்பட்டுள்ளதை உன்னிப்பாகப் படித்த பிறகு, கீழ் கண்ட விவரங்கள் தாங்கள் தெளிவு படுத்த வேண்டியுள்ளது:

  1. மஃபேயஸ் என்பவன் இந்தியாவிற்கு வந்தானா இல்லையா?

  2. “வெள்ளைக்காரர்கள் ஒருநாள் வெகுதூரத்திலிருந்து வந்து அந்த பழைய நம்பிக்கையை மறுபடியும் திரும்பக் கொண்டு வருவார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார்”, என்பது தென்னமெரிக்காவில் காணப்படும் கட்டுக் கதைகளிலும் காணப்படுகிறது.

  3. ஆகவே, அமெரிக்க முயற்சிகளுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வந்தபோது, அத்தகையக் கட்டுக்கதைகளை, போர்ச்சுகீசியர் இங்கேயும் பரப்ப முடிவு செய்திருக்கலாம்.

  4. கிருஷ்ண வழிபாட்டு குழுமத்தை தவறுதலாகக் “கிருத்துவர்கள்” என்று சொல்லிக் கொண்டு, அவர்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, பிறகு அவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க, உள்ளூர் பழக்க-வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியனவற்றிற்கேற்ப, கேரளாவில் அத்தகைய கதைகளைப் பரப்ப்யிருக்கலாம்.

  5. அதனால் தான், அக்கதைகள் எல்லாமே, போர்ச்சுகீசியர் வந்த பிறகே தேதியிடப்படுகின்றன என்று நோக்கத்தக்கது.

  6. எனவே பிறகு அதற்கேற்றப் படி ஆதாரங்களை உருவாக்கியிருப்பதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

  7. ஐரோப்பியர்கள் மாறி மாறி வியாபாரம் செய்தாலும், கிருத்துவமதம் எனும் போது, ஒன்றாக செயல்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது.

  8. இடைக்காலத்திற்குப் பிறகு, வாடிகன் ஒரு வலுவுள்ள நிறுவனமாகி, ஐரோப்பிய அரசர்கள், ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தி வந்துள்ள நிலையில், அவர்கள் கிருத்துவத்திற்கு சாதகமாக இருந்ததிலும் வியப்பில்லை.

  9. அதிகாரப்பூர்வமான சரித்திரங்கள் அவர்களின் விருப்பங்களுக்கேற்ற முறையில் எழுதப்பட்டபோது, இந்திய சரித்திர உண்மைகள் மறைக்கப்பட்டது என்பது யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  10. சுதந்திரம் கிடைத்தப் பின்னரும், இந்தியர்களை இத்தகைய கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டு நம்புகிற்ர்கள் என்றால் அதவிட பெரிய மடையர்களை, முட்டாள்களை உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

 2. தேவப்ரியாஜி Says:

  இயேசு பற்றி ஏதாவது ஆதாரம் உண்டா? இல்லையே?

  ஏசு பிறப்பின் ரகசியம் என்ன?-இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
  http://pagadhu.blogspot.com/2012/08/blog-post_4.html

  இயேசு யூதர் அல்லதவர்களை நாய் பன்றி என்றார், சீடர்களை சமாரியரிடம் செல்லாதே- யூதரலாதர் பட்டணம் செல்லதே என்ற போது எதற்கு தாமஸ் வரவேண்டும். இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார்.
  http://pagadhu.blogspot.in/2012/08/blog-post_6.html

  எனவே ஏசு தாமஸ் கதைகள் அனைத்துமே கட்டுக் கதைகள்.
  தேவப்ரியா சாலமன்

  • vedaprakash Says:

   1. சரித்திர ரீதியில் ஆராய்ந்து மேனாட்டவரே தீர்மானமாக முடிவிற்கு வந்துள்ளது, ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து என்பன வெவ்வேறான மூன்றுவிதமான சித்தாந்தங்கள், வேறுவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்ற சூழ்நிலைகளில் உண்டானவை.

   2. ஏசு = சேவியர் = காப்பாற்றுபவர் என்ற பொருளில் யூதகலாச்சாரத்திலும், கிருஸ்து = எண்ணை வார்க்கப்பட்டவர், தேர்ந்தெடுக்கப்பட்டவர், தலைவர் என்ற விதத்தில் கிரேக்கத்திலும், “ஏசுகிருஸ்து” பால் என்பவரால் இணைத்தும் எற்படுத்தப்பட்டது.

   3. யூதர்கள் ஒரு தீர்க்கதரிசியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் யாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

   4. பாலினால் உருவாக்கப்பட்ட “ஏசுகிருஸ்து” உடனடியாகப் பிரபலமடையாவிட்டாலும், பிறகு, யூதர்களுக்கு அத்தத்துவம் தெரிந்தபோது, ஏற்றுக் கொள்ளவில்லை, மொத்தமாக நிராகரித்தனர்.

   5. யூத-கிருத்துவ-முகமதிய மதங்களில் அதகைய பரஸ்பர வசைபாடுகள், குற்றச்சாட்டுகள் முதலியவை சகஜமான விஷயங்களே.

   6. யூதர்கள் எந்த தீர்க்கதரிசியையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பிறகு, முகமது தான்தான் திர்க்கதரிசி, தன்னுடன் அந்த தகுதி / அந்தஸ்து முடிந்து விட்டது, தனக்குப் பிறகு யாரும் வரமுடியாது இருக்கமுடியாது என்று பிரகடனப்படுத்திக் கொண்டதும் “தீர்க்கதரிசித்துவம் / நபித்துவம்” அம்மூன்று மதங்களில் என்ன பாடு படுகிறது என்று தெரிகிறது.

   7. “அவதாரம்” என்ற நம்பிக்கையில்லையென்று இம்மதங்கள் சாதித்தாலும், எதிர்பார்க்கப்பட்ட தீர்க்கதரிசி / நபி யார் என்று இன்றளவிலும் வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

   8. கடவுள் ஒருவரே என்றாலும், அதற்கு இணைவக்கக் கூடாது என்றாலும், அதற்கும் ஒரு சரத்துடன் தான் ஏற்றுக் கொள்ளமுடிகிறது, ஒப்புக்கொள்ளமுடிகிறது.

   9. கடவுளுக்குப் பெயர் கொடுக்கும் போதே சண்டை வந்துவிடுகிறது.

   10. கடவுளே தன்னைவிட வேறு கடவுள் இல்லை என்கிறார்.

   11. கடவுள் ஒன்று என்பதனை மட்டும் ஒப்புக்கொண்டால் போதாது, இம்மதங்களில் அதனுடன் சேர்ந்த சரத்தினையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அத்தகையவர் நம்பிக்கையில்லாதவர்களாகி ஜென்டைல்கள், ஹியரிடிக், காபிர்கள் என்று தூஷிக்கப்படுவர்.

   12. இத்தகைய கடுங்கட்டுக்காப்புகளுடன், கொடுமையான சரத்துகளுடன், சிந்தனையோட்டங்களையும் கட்டுப்படுத்தி வளர்ந்திருக்கும் மதங்கள் தாம் அவை.

   13. ஆகவே சரித்திர ரீதியில், நம்பிக்கைகள் (பாவம்-புண்ணியம், இறப்பு-பிறப்பு, மறுபிறப்பு, மனம்-உடல், ஆவி-ஆத்மா, உயிர்-வாழ்க்கை, மூளை-இதயம்), மனங்கள் (சிந்தனை, கருத்துருவாக்கம், வடிவமாக்கம்), சித்தாந்தங்கள் (சொல்லப்பட்டவைப்பற்றி), தத்துவங்கள் (உலகம், நியதி, அழிவு, தோற்றம்) முதலியவற்றில் முன்னது சிறந்தவையா அல்லது பின்னவை சிறந்தவையா என்ற நிலையிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 3. Aravind Ganesh V Says:

  வேத பிரகாஷ் ஐயா, தங்களின் விளக்கங்கள் அருமை. எனக்கு இயேசு, கிறித்து, இயேசு கிறித்து மூவரும் வேறுவேறு என்பதைக் குறித்து மேலும் பல விரிவான தகவல்கள் அளிக்க முடியுமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: