கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)

கிருத்துவத்தைக் கண்டிக்க உள்ளூர் மலையாள எழுத்தாளர்கள் இல்லாமல் இல்லை: கிருத்துவர்கள் ஏதோ தங்களைத்தான் எல்லோரும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு எழுதி கொண்டிருப்பர் என்பது போல தமது புத்தகங்களை எழுதி வைப்பர். ஆனால், உண்மையில் கிருத்துவமே 13-14 நூற்றாண்டுகளில் தான் பிரபலமடைய ஆரம்பித்தது. இந்தியா முஹமதிய மதத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா மாலிக்காபூரால் 14ம் நுற்றாண்டில் பெருமளவில் பாதிக்கப் பட்டது. கிருத்துவர்களின் அடாவடித்தனம், 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகின. குறிப்பாக, இந்துமதத்தைப் பாதிக்கும் முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது, இந்துக்கள் எதிர்க்கத்தான் செய்தனர். அது கேரளத்தில் திரு. சட்டம்பி சுவாமிகள் (1853-1934) போன்றோர் மூலம் வெளிப்பட்டுள்ளது. கிருத்துவர்களின் அநாகரிகமான செயல்களைக் கண்டித்து அவர் சண்முகதாசன் என்ற பெயரில் “கிருத்துவமத சேதனம்” என்ற புத்தகத்தை மளையாளத்தில் எழுதினார்[1].

கேரளத்தில் கிருத்துவ மறுப்பு ஏன்?: கிருத்துவ மிஷினரிகள் ஒன்றும் தெரியாத அப்பாவி இந்துக்களை மதமாற்றுவதைக் கண்டு பொறுக்காமல், அம்மதத்தில் உள்ள அபத்தங்களை வெளிப்படுத்த இப்புத்தகத்தை எழுதினார். இந்துக்கள் தமது மதம், வேதங்கள் முதலியவற்றை கடுமையாக, ஆபாசமாக விமர்சனித்தாலும், தூஷித்தாலும் அமைதியாக இருந்து வந்தனர். ஆனால், மிஷினர்கள் எல்லைகளைக் கடந்தபோது, கண்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அதுமட்டுமல்லாது நன்கு படித்த கிருத்துவர்களே, அஞ்ஞான கூதரம் (அஞ்ஞானத்தை அறுக்கும் கோடாலி), திரிமூர்த்தி லட்சணம் (மும்மூர்த்திகளின் தகுதிகள்), குருட்டுவழி, சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, புள்ளெலிக் குஞ்சு போன்ற நூல்களை எழுது தூஷிக்க ஆரம்பித்தனர். இதனால் எந்தவிதத்திலும் இந்துமதத்துடன் ஒவ்வாத கிருவத்தை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதனால் ஏசு ஒரு கடவுள் இல்லை என்பது மட்டுமல்லாமல், எப்படி பைபிளே கிருத்துவர்களால் போலியாக உருவாக்கினர் என்றும் எடுத்துக் காட்டினார். இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாதி நூல்கள் காணாமல் போயுள்ளன. சிவப்பிரகாசர் நூல்களை எரித்தது மாதிரி, பாதிரிகள் இவரது நூல்களையும் எரித்திருக்கலாம்.

ஓ கிருத்துவப் பாதிரிகளே! இப்படி விளித்து, பைபிளை வசனம் வசனமாக அலசி, அதிலுள்ள பொய்களை, முன்னுக்கு முரணானவற்றை எடுத்துக் காட்டுகிறார். ஆதாம்-ஏவாள் பழம் சாப்பிட்டதற்காக தண்டித்த ஜேஹோவாவை பற்பல கேள்விகளைக் கேட்டுக் கிழி-கிழியென்று கிழிக்கிறார். பதி-பிரகரணம், பசு-பிரகரணம், பாச-பிரகரணம், கதி- பிரகரணம், என்று அக்குவேறு-ஆணிவேறாக பைபிளை விமர்சித்துள்ளர். சரித்திர ரீதியாக ஏசுவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய விமர்சனம் முதலியவை ஆறுமுக நாவலரைப் போலேயுள்ளது[2]. அவர் பல ஆங்கிலப் புத்த்கங்களப் படித்துள்ளார் என்பது, அவரது எழுத்துகளினின்று நன்றாகவே தெரிகின்றது. இந்துக்களுக்கு அவர் கிருத்துவத்தை எப்படி தர்க்கரீதியாக மறுப்பது என்பதில் ஒரு வழிகாட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

ஏசுவே இல்லை என்றால், தாமஸ் எங்கிருந்து வந்தான் – அதாவது உயித்தெழுதலே பொய் என்றால், தாமஸ் எப்படி உண்மையாகும்? சண்முகதாசன் என்ற சட்டம்பி சுவாமிகள் கேட்டதுபோல, ஏசு என்ற ஆள் வாழ்ந்ததேயில்லை[3] என்றால், தாமஸ் எப்படி வந்தான் என்ற கேள்வி எழுகிறது. உயித்தெழுதலைப் பற்றி எழுதும்போது, இவ்வாறான உதாரணத்தைத் தருகிறார் –

 1. ஒரு ஆள் ஒரு வெள்ளைக் காக்காயை அட்டகுலங்காரா (திருவனந்தபுரத்தில்) என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள மேசை மீது காலை 6 முதல் மாலை 6 வரை உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம்.
 2. இன்னொருவன் அதே காக்காயை அதே நேரத்தில் குருப் என்கின்ற ஆளின் வீட்டில் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம். அந்த இடத்தின் பெயர் வெம்பாயம்.
 3. மூன்றாம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை சங்குமுகம் என்ற இடத்தில் பார்த்தானாம்.
 4. நான்காம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை கொட்டாரக்காராவில் உள்ள பிரதான கோவிலில் பார்த்தானாம்.

இப்படி இந்த நான்கு பேர்களும் வெள்ளைக் காக்காவைப் பார்த்தேன் என்பதனால், நீ வெள்ளைக் காக்காய் இருப்பதை ஒப்புக் கொள்வாயா, அதுபோலத்தான் உயித்தெழுதல் கதை என்று முடிக்கிறார்[4]. அதாவது அந்த சந்தேகப்பட்ட தாமஸை மறைமுகமாகத் தாக்குகிறார். தாமஸ் ஏசு உண்மையாகவே உயித்தெழுந்தாரா இல்லையா என்று சந்தேகப்பட்டானாம். அதனால்தான், அவனுக்கு சந்தேகிக்கும் / சந்தேகமுள்ள தாமஸ் என்று அழைக்கப் படுகிறான். தனது விரலை ஏசுவின் விலாப்பக்கத்தில் உள்ளே விட்டுப் பார்த்து சோதித்தானாம். எப்படி அப்படி விரலை விட்டான், ஏசுவுக்கு காயம் ஏற்படவில்லயா, ரத்தம் வரவில்லையா, இல்லை; பிறகு காயம் ஆற மருந்து போட்டார்களா  என்றேல்லாம் யாரும் பகுத்தறிவுடன் கேள்விகள் கேட்கவில்லை. அதுமட்டுமல்லாது, கிருத்துவம் உலகம் முழுவதும் செய்துள்ள குரூரக் கொலைகளை, சமூகச்சாகடிப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்[5].

வேதபிரகாஷ்

10-06-2012


[1] H. H. Chattambi Swamikal (Shanmukhadasan), A Hindu Critic of Christianity Kristumata-Chedanam,2000. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள இம்முழுப் புத்தகத்தை தகவிறக்கம் செய்து கொள்ளலாம். கிமச என்று சுருக்கமாக இனி அடிக்குறிப்புகளில் குஇப்பிடப்படும்.

http://archive.org/details/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation

http://ia600204.us.archive.org/2/items/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation.pdf

[2] ஆறுமுக நாவலர் (1822-1879) பைபிளை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். கிருத்துவர்கள் இந்துக்களை அவதூறு செய்வது அறிந்து, அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதி, கிருத்துவத்தை மறுத்து வெளியிட்டார்.

 1. 1.       Saiva Dhushana Parigaram
 2. 2.       Sivanama Villakkam
 3. 3.       Viggiraga Vanakkam
 4. 4.       Hindu Jaya Perigai – in Four Parts.
 5. 5.       Christtuvar Vidaigalin Maruppu.
 6. 6.       Viviliya Kurcitam.
 7. 7.       Viviliya Kurcita Kandanadhikkaram
 8. 8.       Vajjiradangam.
 9. 9.       Christu madha Triyegattuva Abhasam.
 10. 10.    Esuvai Nanbinal Ratchippu Adaiyalama?
  1. 11.  Esu Christu Manithane.
  2. 12.  Milecha madha Kandanam.
  3. 13.  Christuvar Gnanodhaya Abasa Vilakkam.
  4. 14.  Christu madhattin Kuruttu Nambikkai.
  5. 15.  Bible eral Ezhudhap pattadhu?
  6. 16.  Padhirigalukk Or Sarbutti.
  7. 17.  Egovavin Asangiya Mozhi.
  8. 18.  Christu Madha Uyapagamum, Kolaigalum, Anidhigalum.
  9. 19.  Esu Madha Sangarpa Niragaranam.

[2] கிமச, ப.36-37.

[4] கிமச, ப.66.

[5] கிமச, ப.135-148.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)”

 1. T. K. Ramasubramaniam Says:

  When Adam and Eve were naked, how was that the much learned Jehovah, who was claiming himself god could dress himself and appear before them?

  If god is supposed to be beyond all senses, like-dislikes etc., shuld he not have appeared naked?

  Or he could have dressed his son and daughter.

  With such contradctions, real;ly, the Christians choose to criticize Hindus, that too, born as hindus.

 2. W. X. Jose Verghese Says:

  நிச்சயமாக இந்துக்களின் எதிர்ப்பு திரு சட்டம்பி சுவாமிகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

  கிறிஸ்தவர்கள், இந்துக்களை பகைமை பாராட்டாமல். அவர்களது மதத்தை விமர்சிக்காமல், தங்களது மதத்தைப் பின்பற்றிச் செல்வது நல்லது.

  சரித்த்ர ரீதியில், கிருத்துவத்தை அலச ஆரம்பிததால், கிருத்துவர்களுக்கு நஷ்டமே தவிர லாபமில்லை.

  • V. Narayanan Says:

   “சரித்திர ரீதியில், கிருத்துவத்தை அலச ஆரம்பிததால், கிருத்துவர்களுக்கு நஷ்டமே தவிர லாபமில்லை” என்று இங்கு சொல்லியிருக்கும் போது, வேறு இடத்தில் “எங்களது நம்பிக்கையிது, யாரும் எங்களை கேக முடியாது” என்பது போல கூறிருப்பது விந்தையாக உள்ளதே?

 3. W. X. Jose Verghese Says:

  The Mar Thoma Pontifical Shrine, a monument to St. Thomas is situated at Marthoma Nagar, Azhikode, Kodungallur, in Kerala. Built in the model of St. Peter’s Basilica, Rome, this shrine is a historic pilgrim centre of the Indian Christians, situated on the beautiful banks of the river Periyar. Its historical importance was rightly acknowledged when on the occasion of the 19th centenary celebration of the coming of St. Thomas to India, Holy See, the official seat of the Vatican, thought to offer a befitting gift to St. Thomas Christians in Kerala.

  Late Eugene Cardinal Tisserant, the then Prefect of Oriental Congregation solemnly brought the bone of the right arm of the apostle from Ortona in Italy and enthroned it in the present Shrine on December 6th, 1953. From the great day onwards, the Shrine has been attracting pilgrims from all over the world irrespective of caste and creed who come to venerate that hand which belonged to the great Saint, a disciple of Lord Jesus Christ.
  The Marthoma Pontifical Shrine carrying the holy relic of St. Thomas was entrusted by the Holy See to the C.M.I. fathers of Devamatha Province, Thrissur. The relic is enclosed in a glass case and exposed daily from 9 am – 6pm for veneration of the faithful with befitting briefing. Source: Marthoma Pontifical Shrine http://tourism.webindia123.com/tourism/pilgrimcenters/churches/marthomapontificalshrine/index.htm

 4. S. Avudaiyappan Says:

  அப்பொழுது ஆறுமுக நாவலர் இருந்தார், கேரளாவில் இவர் இருந்திருக்கலாம், ஆனால், இப்பொழுது யாரும் இல்லையே? அதனால் தான், கிருத்துவர்கள் வழக்கம் போல குண்டு விட்டுக் கொண்டிருக்கிறர்கள். முஸ்லீம்களோ குண்டு வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே அபாயகரமான குண்டுகள் தாம்.

  • V. Narayanan Says:

   ஆமாம், இப்பொழுது கூட, புனேவில் குண்டுகள் வெடித்தபோது, சிலர் இந்துக்கள் தாம் அவற்றை வெடிக்கச் செய்தனர் என்பது போல செய்திகளை வெளியுட்டார்கள்.

 5. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/06/10/saint-thonas-legends-in-kerala-chattambi-seamigal-kristta… […]

 6. W. X. Jose Verghese Says:

  திரு சட்டம்பி சுவாமிகள் புதியதாக எதையாவது சொன்னாரா என்று தெரியவில்லை.

  ஆங்கிலத்திலேயே, ஏசுகிருஸ்து இருந்தாரா இல்லையா என்ற விவதத்தில் பற்பல பெரிய வித்வான்கள் கடந்த 200 ஆண்டுகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

  எர்னஸ்ட் ரீனான், ஜே.எம். ராமர்ட்சன், கோனிபியர், என்று ஏகப்பட்டவர்களின் புத்தகங்களைப் படித்தால், அத்த்கைய விவரங்கள் எளிதாகக் கிடைக்கும்.

  தாமஸ் பெயின், வால்டேர் போன்றோரும் மற்ற நாத்திகவாதிகளின் புத்தகங்களும் நிறைய கருத்துகளைக் கொடுக்கிமன்றன.

  எனவே அவற்றைத் தொகுத்து மலையாளத்தில் கொடுத்திருக்க்கலாம்.

  • V. Narayanan Says:

   அப்புத்தகங்கள் எல்லாமே, இந்தியாவில் உடனடியாக கிடைத்தனவா என்று முதலில் சொல்ல வேண்டும்.

   ஆறுமுக நாவல்ர் போல, பைபிளை தரவாகப் படித்துதான் அவர் விமர்சித்துள்ளர் என்று தெரிகிறது.

W. X. Jose Verghese க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: