மேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

மேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

கிருத்துவ-முஸ்லீம் மதங்களில் தாய் வழிபாடு முரண்பாடு: இந்தியாவில் சக்தி வழிபாடு இருந்தது, இருப்பதில் ஒன்றும் புதியதில்லை. தாயே கடவுளாக மதிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆனால், மற்ற மதத்தினருக்கு அத்தகைய எண்ணமே தெய்வகுற்றமாகிறது. ஆமாம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கடவுள் எப்பொழுதுமே ஆணாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிக்கொள்வார்கள். அம்மதங்களில் உள்ள தாய்வழிபாடு, பெண்தெய்வ வழிப்பாடு முதலியவற்றை மறைப்பார்கள், மறுப்பார்கள்[1]. மேரியின் வழிபாடு கத்தோலிக்கக் கிருத்துத்தில் முதன்மையானது. ஆனால், மேரி கடவுள் கிடையாது. மேரியின் வழியாக ஏசு மனித உருவில் வந்து பிறந்தால், மேரியை ஏன் கடவுளாக மதிக்கக் கூடாது என்று கிருத்துவர்கள் விளக்குவது கிடையாது.

 

குளூனி புத்தகத்தின் அட்டையில் இத்தகைய ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள். மேரி ஒரு இந்திய/ இந்துப் பெண்ணைப் போல சேலை-ஜாக்கெட் அணிந்துள்ளாள். போதாகுறைக்கு நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக வெண்ணிறமான பொட்டு வைத்தது போல காணப்படுகிறது. பொதுவாக திருமணமான பெண்ணின் நெற்றியில் குங்குமத்தைத் தான் வைப்பார்கள். அம்மனாக பாவிக்கின்ற சிலைகளுக்குக்கூட குங்கும தான் வைக்கப்படும். அப்படியிருக்க குங்குமம் அல்லாத அந்த வெண்ணீறப் பொட்டு என்னவாக இருக்கும் எனும்போது, விபூதி என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், விதவைகள் தான் விபூதி வைத்துக் கொள்வது வழக்கம். பெண் தெயம் சிலைகளுக்குக் கூட விபூதி வைக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே, மேரிக்கு விபூதி வைக்கப் பட்டிருந்தால், அவள் பெண் தெய்வம் இல்லை, ஆண் உறவில்லாதவள், இருப்பினும் ஆண் இணையற்றவள். அதாவது பெயருக்கு கணவன் ஜோசப் இருந்தாலும், ஆவியினால் புணரப்பட்டு, கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பெற்றெடுத்ததால், அவ்வாறாக சித்தரிக்கப் பட்டுள்ளாள் போலும்!

ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது: ஏசுவைக் கிருத்துவர்களாக மதிக்க வேண்டும் என்றால், மேரியை கடவுளாக மதிக்க முடியாது. இருப்பினும் மேரியின் கணவர் ஜோசப் மதிக்கப்படுவது கிடையாது. கடவுள் என்று வரும்போது, ஜேஹோவைத் தான் கடவுள் என்பார்கள், இல்லை ஏசுவைக்கூட கடவுளின் மைந்தன், கடவுள் என்பார்கள் ஆனால், மேரி கடவுள் கிடையாது. அதாவது, ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது. மேரியைப் போல, ஜோசப்பும் கடவுள் கிடையாது. சிவனுடன், தேவி, அபிராமி, சக்தி, பார்வதி என்றும் சமமாக வழிபட்டு வருவது இந்திய-இந்து பண்பாடு. ஆனால், மேரியுடன் ஜோசபை வைத்து கிருத்துவர்கள் வழிபாடு செய்வதில்லை. ஏன் என்று அவர்கள் விளக்குவதும் கிடையாது. கேட்டால் ஹார்வாட் பல்கலைக்கழக பேராசியர்களுக்கே பொத்துக் கொண்டு கோபம் தான் வருகிறது[2]. இந்நிலையில் தான், இவர்கள் மேரியும் கண்ணகியும் சகோதரிகள் என்று கதைவிடுகிறார்கள். முன்பு தாமஸும், பகவதி அம்மனும் காதலர்கள் என்று கிருத்துவர்கள் சொன்ன கட்டுக்கதையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்[3]. அக்கட்டுக்கதைவை வைத்துக் கொண்டு, பெரிய-பெரிய மேனாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி என்ன[4], பட்டங்கள் என்ன, எல்லாமே தாராளமாக நடந்து கொண்டேயிருக்கின்றன, பறந்து கொண்டே இருக்கின்றன!

 

கிருத்துவர்களின் சகிப்புத்தன்மையற்ற நிலை: கிருத்துவர்கள் தாம் மேனாட்டு பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுகிறோம், நாகரிகமாக இருக்கிறோம், ஆங்கிலம் பேசுகிறோம் என்று பல விஷயங்களில் மற்ற இந்தியர்களை விட உயர்ந்திருந்தாலும், மத விஷயத்தில் சகிப்புத்தன்மையற்றவர்களாகவே இருந்து வருகிறாற்கள். 19-20 நூற்றாண்டுகளில் கூட கேரளாவில், மத ஊர்வலங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவர்கள் கலாட்டா செய்ய முனைந்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரியவருகின்றது. இந்துக்கள் தேவதைகளைன் வணங்குவது, பலிகொடுப்பது, பூஜைசெய்வது, ஊர்வலம் போவது என்பதெல்லாம், காலங்காலமாக கிராமங்களில் ஊர்களில் நடந்து வருகின்றன. ஆனால், கிருத்துவர்கள், அதற்கேற்றார்போல, புதிய கிருத்துவ சாமியார்களைக் கண்டு பிடித்து, கிராமதேவதைகள் அல்லது பிரியமான குலதெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுவது, இந்துக்கள் பண்டிகைகள் வரும் நேரத்தில், இவர்களும் புதிய விழாவை அறிமுகப்படுத்திக் கொண்டாடுவது, போட்டியாக ஊர்வலம் போவது என்றெல்லாம் ஆரம்பித்தனர்[5]. சர்ச்சுகளுக்குள் நடப்பவை வெளியே நடக்க ஆரம்பித்தன. இதனால், கிருத்துவர்கள் மீது, இந்துக்களுக்கு கோபம் ஏற்பட்டது, பிறகு தொடர்ந்து இடைஞ்சல்கள் செய்து வரும்போது வெறுப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, இந்துக்களைப் போலவே, தமது விக்கிரங்களை, சிலைகளை கோவில் வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்துக்களுக்கு எதிராக கூப்பாடு போட ஆரம்பித்தனர். இதனால், பதிலுக்கு இந்துக்களும் கத்த ஆரம்பித்தனர். இத்தகைய கூப்பாடுகள் அசிங்கமான வார்த்தைகளிலும் முடிந்தன[6]. பொதுவாக கிருத்துவர்கள், விக்கிர ஆராதனையை (idolatory) எதிர்ப்பவர்கள், உருவ வழிபாட்டைச் செய்யும் இந்துக்களைக் குறவாக பேசி வருபவர்கள். பிறகு கிருத்துவர்கள் எப்படி, அதே “செய்யக்கூடாதவைகளை செய்து”, இந்துக்களுக்கு போட்டியாக வந்தனர் என்று தெரியவில்லை. மேலும் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மிக்கியமான விஷயங்களை மறந்து, மறைத்து மேல்-மேல் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதிவருவது, பட்டங்கள் பெறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.

 

   

வாடிகனின், போப்பின், இந்திய கிருத்துவர்களின் இரட்டை வேடங்கள்: கிருத்துவர்கள் உண்மையில் கிருத்துவர்களாக இருக்க வேண்டும், இல்லை இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துக்கள் போல நடித்துக் கொண்டு, தாங்கள் கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. அதற்கு “உள்-கலாச்சாரமயமாக்கல்” (inculturation) போன்ற திட்டங்களை வஞ்சமாகக் கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை[7]. ஏனெனில், ஒருபக்கம் அதனை ஆதரித்து பரப்பும் வேலையில், மறுபக்கம், போப் யோகா செய்யக் கூடாது, பரத நாட்டியம் ஆடக்கூடாது, “ஓம்” என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்றெல்லாம், முஸ்லீம்களைப் போல பத்வா போட்டு / புல்களை (issuing bulls) / ஆணைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. கிருத்துவர்களே அவற்றை எதிர்த்தும் வருகிறார்கள்[8]. 70,000 பேய்களையோட்டிய வாட்டிகனின் பேயோட்டி, யோகா சாத்தானின் வேலை, அது கிருத்துவத்திற்கு ஒவ்வாதது[9] என்று குறியிருக்கிறார்[10], ஆனால், ஏசுவை பெரிய யோகி மாதிரி சித்தரிப்பதை என்னவென்பது? இதெல்லாம் நிச்சயமாக கிருத்துவர்களின் இரட்டை வேடங்களே.

Fr Gabriel Amorth 25-11-2011 - Yoga devil practice

மேரி-கண்ணகி சகோதரிகள்: கேரளா பழைய சேரநாடாகிறது, அதனால் இங்கு கண்ணகி வழிபாடு உள்ளது. அதற்கு முன்னரே சக்தி வழிபாடும் இருந்திருக்கிறது. பெண்மையை தெய்வீகமாக மதித்த கேரள பூமி, அந்நியயர்களின் வரவிற்குப் பிறகு மாற ஆரம்பித்தது. உள்ளூர் பழக்க-வழக்கங்கள் மாற ஆரம்பித்தன; திரித்துக் கூறப்பட்டன; எழுதப்பட்டன; அவ்வாறான கலப்பில், குழப்பத்தில் அம்மதங்கள் கதைகளை உருவாக்கின. மனர்காட் என்ற ஊரில் மேரியும், கண்ணகியும் நட்புறவுடன் இருந்தார்களாம். ஆனால், ஒருமுறை கிருத்துவர்கள் ஊர்வலம் போனபோது, ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்ளவில்லையாம். குறிப்பாக மேரி தன்னை மதிக்காதலால் தேவிக்கு / கண்ணகிக்கு கோபம் உண்டாகியதாம்.

இதனால் அவ்வூரில் நோய் உண்டாகியது, சின்னம்மை பரவியது. உடனே கோவிலில் வெளிச்சப்பாட்டுப் பாடி, காவடி எடுத்து காரணம் கண்டறிந்த போது, மேரி அவ்வாறு தேவியை மதிக்காதது தான் என்றறிந்தனர்.  இருதரப்பு மக்களும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், சகோதரிகள் ஒன்று சேர்ந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம். அதனால், சகோதரிகள் ஒப்புக்கொண்டு இணைந்தனராம், மறுபடியும் பழக ஆரம்பித்தனராம். These two females are generally on good terms. One day, however, when there was a procession for one of the figures, the two did not look at each other. One of them, I think it was the devl, became offended because she was not acknowledged by the other. Following this, there was an epidemic of chicken pox. The temple oracle (veliccappdtu) castms divining shells (kavati) and found out the reason, which was that the devl was offended by the other. Because the people were affected by the quarrel, the two sisters needed to come to a reconciliation and thus today they are rnends again.

இதிலிருந்து, சுலபமாக நாம் பெறப்படும் விஷயங்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டு விவாதிக்கலாம்.

  1. மேரி கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.
  1. அல்லது கிருத்துவகள் கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.
  1. அல்லது கிருத்துவகள் கண்ணகி / தேவியின் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டனர் / தாக்கினர்.
  1. இதனால் கலவரம் ஏற்பட்டது.
  1. கலவரத்தைக் கட்டுப்படுத்த கிருத்துவர்கள் இந்துகக்ளுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்

பூரம் திருவிழா நடந்தபோது கலவரம் ஏற்பட்டுள்ளதை அந்த ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்[11].

எர்ணாகுளத்தில் புறப்பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க சாமியார் சொல்லும் கதை: இக்கதை காளிக்கும் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியாருக்கும் நடந்த சகோதர-சகோதரி பிரச்சினையைக் கூறுகிறது. இது கண்ணூர் என்ற இடத்தில் நடந்ததாக அந்தோணி என்ற பாதிரி கூறியதாக கோரின் டெம்ப்ஸி குறிப்பிடுகின்றார். வருடாந்திர செபாஸ்டியன் சர்ச் விழாவில், கிருத்துவர்கள் தமது ஊர்வலத்தை காளிகோவிலின் வழியாக எடுத்துச் செல்வார்களாம். அப்பொழுது காளிக்கோவிலின் பிரதான கதவுகள் திறக்கப்பட்டு, காளி செபாஸ்டியனை செய்வாராம். ஆனால் சமீபத்தில் 1993-1994 வருடகாலத்தில் அக்கிராமத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் (the R.S.S.,a afundamentalist” Hindu political party[12]) என்ற இயக்கத்தைச் சேந்தவர்கள், அவ்வாறு கதவுகளைத் திறக்கவேண்டாம் என்றார்களாம். ஆனால், காளி மிகவும் கோபம் கொண்டாளாம். அதனால், தெவக்குற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து அடுத்த ஆண்டில், கதவுகளைத் திறந்து விட்டனராம்.

இது இப்பொழுது உருவாக்கப்பட்டக் கதையாக இருந்தாலும், சபாஸ்டியன் சர்ச் கட்டப்பட்டுள்ள இடம், முன்பு காளி கோவிலுக்குச் சொந்தமாக இருந்திருக்க வேண்டும். அதனால் மதம் மாறிய கிருத்துவர்கள், அதாவது முந்தைய இந்துக்கள் அவ்வாறு காளிக்கு மரியாதை செய்து வந்திருக்கலாம். சென்னையில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலை இடித்தவர்கள், கேரளாவில் இத்தகைய வேடம் போடுகிறார்கள் போலும்.

வேதபிரகாஷ்

27-05-2012


[1]  The moon god “al-Ilah” (Allah) had three daughters named al-Lat, al-Uzza and Manat. The first two were even named after their father. Each daughter had a separate shrine near Mecca, where Allah’s shrine was located. Prior to the rise of Islam, these three goddesses were associated with Allah as his daughters and all were worshiped at Mecca and other places in the vicinity. (Jack Finegan, The Archaeology of World Religions, 1952, p482-485, 492).

[2] பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் குளூனி, “தெய்வீகத்தாய், ஆசிர்வதிக்கப் பட்ட அம்மா – இந்து தேவதைகளும், கன்னி மேரியும்” என்ற நூலில் அவரால் ஸ்ரீ, தேவி மற்றும் அபிராமி மேரியுடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ-விஷ்ணு, தேவி-சிவன், அபிராமி-சிவன் என்றுள்ளபோது, மேரிக்கு யார் கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் என்று கேட்டபோது, அவருக்கு முகம் சிவந்து, விருட்டென்று எழுந்து, அடிக்க வரும் போல அருகில் வந்தார். சாட்சிற்கு வெங்கட்ராகவன் என்ற நண்பரும் உடன் இருந்தார்.

Incidentally, this has been the basis of comparative work carried on by Francis Clooney, later published in his book, Divine Mother, Blessed Mother: Hindu Goddesses and Virgin Mary, Oxford University Press, 2005. But, he cleverly avoided this point, see.p.229 etc.

[4] Susan Bayly, Saints, Gooddesses and Kings: Muslims and Christians in South Indian Society 1700-1900, Cambridge, Cambridge University Press, 1989, pp..278-280.

Alex C.J. Neroth Van Vogelpol, Influences of Hinduism on the Syrian Christianity of St. Thomas of Kerala, India, 2003, p.17.

[5] During the late nineteenth and early twentieth centuries, animosity between Hindus and Christians reached their height, articulated most visibly during festivals honoring patron saints and deities. According to BAYLY,confrontations erupted most commonly over the logistics of festival processions or the performance of religious music outside rival temples or churches (1989,313). During the early twentieth century, a Syrian Christian described annual religious festival processions as providing opportunities for Hindu and Syrian celebrants to march past one another’s shrines “howling,screaming and crying out obscene words” (Bayly 1989,294). One of the worst clashes occurred in 1891 when the Malabar Puram festival and Easter coincided, precipitating fierce rioting throughout the region. According to BAYLY, where once these occasions were opportunities for “the sharing of rites and regalia… they now provided a focus for the expression of exclusive communal identities” (1989,313).

[6] During the early twentieth century, a Syrian Christian described annual religious festival processions as providing opportunities for Hindu and Syrian celebrants to march past one another’s shrines “howling,screaming and crying out obscene words” (Bayly 1989,294). One of the worst clashes occurred in 1891 when the Malabar Puram festival and Easter coincided, precipitating fierce rioting throughout the region. According to BAYLY, where once these occasions were opportunities for “the sharing of rites and regalia… they now provided a focus for the expression of exclusive communal identities” (1989,313).

[7] Sita Ram Goel, Catholic ashrams – Sanyasins or Swindlers, Voice of India, New Delhi, 1988.

[8] Swami Kulandaisami, (Victor J. F. Kulandai), The Paganization of the Church in India, “Galilee”, No.6, Nimmo Road, San Thome, Madras, 1988.

[10] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican.

The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. Father Amorthsaid: ‘Practising yoga brings evil as does reading Harry Potter. They may both seem innocuous but they both deal with magic and that leads to evil.’ He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

http://www.dailymail.co.uk/news/article-2066289/Yoga-work-devil-says-Vaticans-chief-exorcist-doesnt-like-Harry-Potter-either.html

[11] In stark contrast to Bayly’s portrayal of communal mayhem unleashed at the Puram festival nearly one hundred years ago are the traditions currently in vogue at Thrissur’s Puram festival.

One of the worst clashes occurred in 1891 when the Malabar Puram festival and Easter coincided, precipitating fierce rioting throughout the region. According to Susan Bayly, where once these occasions were opportunities for “the sharing of rites and regalia… they now provided a focus for the expression of exclusive communal identities”.

Susan Bayly, Saints, goddesses and kings: Muslims and Christians in South Indian society, 1700—1900. Cambridge: Cambridge University Press, 1989, p.313.

[12] பிறகு அடிக்குறிப்பு 12ல், இவ்வாறு அடைமொழியில்லாமல் குறிப்பிடுகின்றார், “the R.S.S., the Muslim League, and the Congress Party occasionally become forces for interreligious division”. ஆகையால், மேனாட்டவர்களுக்கும், மதரீதியில், அரசியல் ரீதியில் விளக்கங்கள் கொடுக்கும்போது, பாரபட்சம், வித்தியாசம் பாராட்டுதல் முதலியவை உKள்ளன என்று தெரிகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “மேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!”

  1. S. S. Sankaranarayanan Says:

    கிருத்துவர்களுக்கு ஏன் தான் புத்தி இப்படியெல்லாம் போகிறது என்று தெரியவில்லை.

    அதிலும் இந்த்ய கிருத்துவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவு அல்லது மனசாட்சி இருக்க வேண்டும்.

    ஒருபக்கம் இந்துக்களை பாவிகள், சாத்தானின் குழந்தைகள், சாத்தானை வழிபடுபவர்கள், விக்கிர ஆராதனைக்காரர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அவர்களும் அதையே செய்து வருவது, உண்மையில் டசாத்தானின் மதம் கிருத்துவம் தான் என்றாகிர்றது.

    அதனால் தான் அவர்கள், ஆவி, பேய், பிசாசு, பிசாசை ஓட்டுதல் முதலியவற்றில் நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள்.

    ஆகவேச, ஒப்பிட்டுப் பார்க்க முடியாததை ஒப்பிட்டுப் பார்ப்பதில் அர்த்தமேயில்லை.

    காலத்தினாலும், கலாச்சாரத்தில்னாலும் முற்பட்ட இந்துமதச் கடவுளர்களை, சாதாரண சாமியார்களுடன் (அதிலும் அவர்களே இருந்தார்களாகைல்லையா என்றிருக்கும் போது)ஒப்பிட்டு கதைகளைப் பரப்பி விடுவது மிகவும் ஏற்புடையதற்றச் செயலாகும்.

    போப் போன்ற மதத் தலைவர்கள், இவற்றை ஆதரிப்பதால், அவர்களுடய பங்கும் இதில் வெட்ட வெளிச்சமாகிறது.

    ஒவ்வொரு மதமும் அதன் தனித்தன்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டுனம்.

    கிருத்துவம் பல மதங்களினின்று இரவல்கள் வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்ததால், அதில் ஆரம்பத்தன்மைம் உண்மைத்தன்மைம, முதன்தன்மை போன்றவை இல்லாமலிருக்கிறது. இதனையெல்லாம் மறைத்து ஆக்ஸ்போப்ர்ட், ஹார்வார்ட், கேம்பிரிட்ஜ் என்று பெரிய பல்கலைக்கழகங்களிஒல் ஆராய்ச்சி செய்தால், புத்தகங்கள் வெளியிட்டால், இத்தகைய பொய்கள், மோசடிகள் உண்மையாகி விடாது.

    அந்நிலையில், சம்பந்தமேயில்லாதவற்றுடன் இப்படி தொடர்பு படுத்தி கதைகள் அளப்பது, உள்ளதையும் இழைந்து விடும் நிலைக்கு கிருத்துவம் தள்ளப்படும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  2. aravind Says:

    கொடுமை!

  3. S. Avudaiyappan Says:

    கண்ணகி மேரிக்கு சகோதரி என்றால், கோவலன் மைத்துனன் ஆகிறான். பிறகு எப்படி ஜொசப் சும்மா இருந்தான்? அவன் சகலையை இப்படி அம்போ என்று விட்டு விடலாமா? அது சரி, அந்த பிள்ளை ஏசுக்குட்டி எங்கே போனது? மாமனுக்கு துணையாக இருந்தால் என்ன கேடு? ஒருவேளை மேரி அப்படி பிள்ளை பெற்றுக் கொண்டதால் தான், கண்ண்ககியை கற்புக்கரசி என்கிறார்களா? அப்படியென்றால், மேரியின் கதி?

    • V. Narayanan Says:

      பாவம் ஜோசப், மேரியையே பார்த்துக் கொள்ள முடியவில்லை.

      கண்ணகி ஒருவேளை தப்பித்தாள் போலும்!

      சரித்திர ரீதியில், அது (ஏசுக்குட்டி) இருந்தால் தானே, இங்கு வர?

  4. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

    […] https://thomasmyth.wordpress.com/2012/05/27/mary-kannagi-sisters-the-thmoas-myth-spinners/ […]

  5. V. Narayanan Says:

    That their mischief could go to this extent is unbelievable.

    How the educated researchers like Francis Xavier Clooney, G. Corinne Dempsey, M. J. Gentes, Susan Bayly,and others could write such nonsense without considering the facts.

    Can they go on manufacture new stories and myths out of myths in every 50 or 100 years, so that the coming and future Christian researchers claim that “the tradition” has been so strong in Kerala!

    It is utter nonsense and this type of writers whether they are ordinary writers, columnists, researchers, professors or whoever may be, should be educated properly about the facts.

    Or the Indians should ignore such nonsense.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: