எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்!

எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்!

கிரேக்க-எடிஸ்ஸாவும், துருக்கி-எடிஸ்ஸாவும்: கிரீஸில் ஒரு எடிஸ்ஸா மற்றும் துருக்கி / மெசபடோமியாயில் ஒரு எடிஸ்ஸா என்று இரண்டு இடங்கள் உள்ளன. துருக்கி எடிஸ்ஸாவை தாமஸுடன் தொடர்பு படுத்துவதில் எந்த ஆதாரமும் இல்லை. கிருத்துவ எழுத்தாளர்கள், எசூபியஸ் என்பவரின் கதையை வைத்துக் கொண்டு ஆர்மீனிய அரசன் அப்கர் உகாமா (5), அட்டை என்பவரால் கிருத்துவராக்கப்பட்டார் என்கின்றனர். ஆனால், கிருத்துவரானது அப்கார் (9) என்று மற்றவர்கள் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும் வேடிக்கையென்னவென்றால், கிருத்துவக்கதையின் படி அட்டை, தாமஸின் 72 சீடர்களில் ஒருவராம். ஆனால் உண்மையில் அட்டை அவ்வாறு 72 சீடர்களில் ஒருவரும் இல்லை, தாமஸால் அனுப்பப்படவும் இல்லையாம். மேலும் வேடிக்கையென்னவென்றால், 201ல் இந்த எடிஸ்ஸா நகரமே, பெரிய வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி விட்டதாம்.  ஆனால், 232ல் மைலாப்பூரிலிருந்து, தாமஸின் எலும்புகள் இங்கு எடுத்துவரப்பட்டன என்று கதையளக்கிறார்கள். அதற்குள் ஏற்பட்ட ரோமானிய படையெடுப்பில் நிறையப்பேர்கள் கொல்லப்படுகிறார்களாம். இந்த நிலையில், கிரேக்கத்தில் உள்ள எடிஸ்ஸாவிற்கும் தாமஸுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். இருப்பினும், பாட்மாஸில் தாமஸின் மண்டையோடு இருக்கிறது!

எங்கெங்கு காணினும் தாமஸாடா!  கிருத்துவர்களின் தயாரிக்கப் பட்ட கள்ள ஆவணங்களின் மூலம் தெரியவருவது என்னவென்றால், தாமஸ் உலகத்தில் பல இடங்களில் இருந்துள்ளதாகவும், அங்கெல்லாம் ஒவ்வொரு கல்லறை உள்ளதாகவும் கதைகள் புனையப்பட்டுள்ளன. சோகோட்ரா (Socotra), எடிஸ்ஸா (Edessa), சைனா (China), இலங்கை (Ceylon), மலாக்கா (Malacca), ஜப்பான் (Japan), பிரேசில் (Brazil) என்று உலகமுழுவதும் கல்லறைகள், கட்டுக்கதைகள் காணப்படுகின்றன. ஆனால், இவையெல்லாமே, இடைக்காலத்தில் குறிப்பாக 16-19 நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டவை ஆகும். 1552ல் தாமஸ் கல்லறை பிரேசில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜான் கிரிஸோஸ்தோம் (St. John Chrysostom) என்ற பாதிரியும் தாமஸ் உலகம் முழுவதும் சுற்றிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதாவது சிரிய மொழியில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்க்கும் சாக்கில், ஒவ்வொரு பிரதியிலும் ஒவ்வோரு இடத்தை / நாட்டை சேர்த்து வந்தனராம். அதாவது எந்த இரண்டு சிரியப் பிரதியிலும், இந்த பட்டியல் ஒன்றாக இல்லை. ஆகவே, மூலப்பிரதி இல்லை எனும் போது, பிரதி, பிரதியின் பிரதி என்று எடுத்துவரும்போது, அவற்றில் இத்தகைய இடைச்செருகல்கள் செய்வது இவர்களுக்கு ஒன்றும் புதியதான விஷயமில்லை.

16ம் நூற்றாண்டு சிரிய பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் / நாடுகள்: உள்ள குறிப்பிட்ட இரண்டு பிரதிகளில், 1662ம் ஆண்டு பிரதி, பட்டியல் இவ்வாறுள்ளது:

 1. Judea
 2. Armenia
 3. Brazil (1552ற்குப் பிறகு சேர்க்கப்பட்டது)
 4. Mesopotamia
 5. Sultania
 6. Kandahar
 7. Calabor
 8. Kafiristan
 9. Lesser Guzarat
 10. Tibet
 11. Bengal
 12. South India (1288ற்கு முன்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது மார்கோ போலோவிற்கு முன்பாக)

18 நூற்றாண்டு சிரிய பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் / நாடுகள்: மற்றொரு பிரதியில் உள்ளவை, இவ்வாறுள்ளன:

 1. Meliyapur
 2. Socotra
 3. Melinde
 4. Cafaria
 5. Paces
 6. Zarique

அதுமட்டுமல்லாது, இப்பெயர்களையே மாற்றி-மாற்றி எழுதி, ஒரு புதிய இடத்தின், நாட்டின் பெயராக திரித்தெழுதியும் உள்ளனர். Paces – Pares = Fars? என்றும் (இங்கு பாரிஸை ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை); Zarique = Serica = China என்றும் இழுத்துள்ளனர் (இங்கு ஜூரிக்கை சேர்க்கலாம்). இனி எடிஸ்ஸாவில் தாமஸ் கட்டுக்கதை வளர்ந்த விவரங்களை இங்கு பார்ப்போம்.

தாமஸ் எத்தனை தாமஸடி? தோமே எடிஸ்ஸேனே டிராக்டேடஸ் என்ற நூலை சைமன் ஜோசப் கார் என்பவர் சீரிய மொழியிலிருந்து இத்தாலிக்கு மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இதை ரோம் நகரில் வாடிகனின் பிரத்யேகமான அச்சுக்கூடத்தில் 1898ம் ஆண்டு பதிக்கப்பட்டது. தோமா ஊர்ஹாயா (Toma urhaya) அல்லது எடிஸ்ஸாவின் தாமஸ் (536-552) [Thomas of Edessa] வாழ்க்கைப் பற்றி மார்-அபா-I (Mar-Abha-I) என்ற புத்தகத்திலிருந்து அறியப்படுகின்றது. இவர் ஜொரேஸ்டிரிய மத்ததிலிருந்து, கத்தோலிக்கக் கிருத்துவத்திற்கு மாறியவர். மதம் மாறியப் பிறகு, நிசிபிஸ் (Nisibis) என்ற இடத்தில் இருக்கும் மடாலயத்திற்குச் சென்று படித்தார். பிறாகு எடிஸ்ஸாவிற்குச் சென்றார். அங்கு தாமஸின் கீழ் கிரேக்க மொழி கற்றுக் கொண்டார். அமர் பின் மாத்தா (‘Amr b. Matta) அல்லது மாரே பின் சுலைமான் (Mare b. Sulayman) என்பவர்தாம் மார்-அபா-I (Mar-Abha-I) என்ற புத்தகத்தை எழுதியவர். பர்ரேபேரஸ் என்பவர் தாமஸை ஒரு ஜெகோபைட் என்று குறிப்பிடுகின்றார். சைமன் ஜோசப் கார், இவர் ஒரு ஜெகோபைட் என்றால், இவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த தாமஸ் என்பவரும் ஜெகோபைட்டாக இருந்திருக்கவேண்டும், ஆகவே, இவர் ஜெகோபைட்டா இல்லையா என்பது சந்தேகத்திற்குரியது என்கிறார்[1]. “அவதாரம்” என்ற தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்டிருப்பவராக இருப்பதினால் அவர் நெஸ்டோரிய மதத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிறார்.

அபோகிரபல் பைபிள்படி உடல் புதைக்கபட்ட இடம் எடிஸ்ஸா: ஏற்றுக்கொள்ளப்படாத பைபிள்களின் மீது ஆதாரமாக உள்ள கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டுதான், தாமஸ் அரசனின் ஆணைப்படி, கொல்லப்பட்டவுடன், அவரது உடல், ரகசியமாக எடிஸ்ஸாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு இடத்தில் புதைக்கப்படுகிறது. கத்தோலிக்க என்சைகிளோபிடியா, 232ல் இந்தியாவிலிருந்து தாமஸின் ரெலிக்ஸ் இங்கு கொண்டுவரப்பட்டன என்று எந்த ஆதாரமுன் இலாமல் குறிப்பிடுகின்றது. அவற்றின் ஆதாரமாகத்தான், சிரியமொழியில் நடபடிகள் எழுதப்பட்டன,” என்று ஒரு புதிய செய்தியைக் கொடுக்கிறது[2]. ஆனால், தாமஸ் சிரிய மொழியில் “அட்டை” (Addai) என்று அழைக்கப்பட்டாராம். அதாவது, ஏசு-தாமஸ் இரட்டைப் பிறவிகள் அல்லது தாமஸ்-தெட்டேயுஸ் இரட்டைப் பிறவிகள் [Thaddeus (in Syriac, Addai)] என்று கதைகள் சொல்கின்றன. தாமஸின் தொடர்ச்சி அட்டை, அக்கை மற்றும் மாரி என்றுள்ளதாகக் கூறுகிறது[3]. மார்கெரெட் என்பவரின்படி, தாமஸின் எலும்புகள் நான்காவது நூற்றாண்டில் இங்கு வந்தன என்கிறார் (The reputed bones of Thomas the Apostle were preserved at Edessa, at least from the middle of the fourth century onwards, and some story of their adventures had doubtless grown up round the shrine[4]) ஆக எடிஸ்ஸாவில் எத்தனை கல்லறைகள் இருந்தன, அவற்றில் தாமஸ் கல்லறை அல்லது எலும்புக்கூடு எது என்ற குழப்பம் இருந்தது போலும். இந்த குழப்பத்தைப் போக்க, இந்தியாவிலிருந்து வந்தன என்ற புதிய கதைக் கட்டிவிட்டிருக்கிறர்கள் என்று தெரிகிறது. இதனால் தான், ஒவ்வொரு இடத்தில் உள்ள கதை, மற்ற இடத்தின் கதையுடன் ஒத்துப் போவதில்லை.

கிருத்துவத்துடன் ஒத்துப் போவாத துருக்கி / மெசபடோமியா: துருக்கியில் / மெசமடோமியாவில் கிருத்துவமதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. முன்பு பாரசீகப் பேரரசின் கீழிருந்து, அந்த கலாச்சாரம், பாரம்பரியம் கொண்டதாகத்தான் அப்பகுதி உள்ளது. நெஸ்டோரிய மதம் என்று சொந்தம் கொண்டாடுவது, ஜெகோபைட் என்றால் அழிப்பது போன்ற முரண்பாடுகளும், தாமஸ் கதையை வெளிக்காட்டுகிறது. நெஸ்டோரியர்கள், கிருத்துவர்கள் இல்லை – அதாவது heretics, unblieievers, pagans எனும்போது, அவர்களை மற்ற இடங்களில், கிருத்துவர்கள் என்பது வேடிக்கையே. முன்பு எடிஸ்ஸாவை எதிர்த்து வந்த வாடிகன், அதன் தொன்மை தெரியவரும் போது[5], பச்சோந்தி போல மாறி ஆதரிப்பதும், இறையியல் முரண்பாட்டைக் காட்டுகிறது. 3000 வருட எடிஸ்ஸா சரித்திரம்-காலநிலை என்பதில் தாமஸ் பற்றி மூச்சுக்கூட விடவில்லை என்பதும் வியப்பே[6]. ஆகவே, சிரிய மொழியிலுள்ள கதைகளை மாற்றியமைத்து, தாமஸின் நடபடிகளை எழுதியுள்ளார்கள் என்று தெரிகிறது. அதை பலமுறைத் திரித்து, இந்தியாவை இணைத்து 13-14ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைத்திருக்கிறார்கள்.

ஆர்மீனிய இணைப்புகள், மற்றும் முரண்பாடுகள்: இதனால் தான், ஆர்மீனியர்களையும் இந்தியக் கட்டுக்கதையாக துணையாக சேர்ந்துக் கொள்கிறார்கள்[7]. ஆர்மீனியா துருக்கிற்குக் கிழக்குப் பக்கத்தில், மெசபடோமியாவிற்கு வடக்கில், இப்பொழுதுள்ள அசர்பெய்ஜானின் மேற்கில் உள்ளது. இடைக்காலம் வரையிலும் கிருத்துவத்தின் தாக்கம் இல்லை. இருப்பினும், “ஆர்மீனிய சிலுவை” என்றதை வைத்துக் கொண்டு, அத்தகைய சிலுவைகள் எங்கெல்லாம் உள்ளனவையோ, அவற்றையெல்லாம் கிருத்துவத்துடன் முடிச்சுப் போட ஆரம்பித்துள்ளனர்[8]. உண்மையில், ஆர்மீனிய சிலுவை, சிலுவையேயில்லை, ஏனெனில், நான்கு பக்கங்களிலும் ஒரே மாதிரி இருக்கும். பூக்கள், விலங்குகள் என அலங்காரத்துடன் இருக்கும் இந்த அமைப்பு, ஜியோமிதியின் படி உள்ளது. மேலும், கிருத்துவத்தில் சிலுவை தண்டனை, கொலை, சாவு போன்றவையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஆனால், இவையோ அப்படியில்லாமல், கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டுடன் இணைந்து, பலவழிகளில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் கிருத்துவத்திலேயே, ஆரம்ப காலங்களில் சிலுவை உபயோகப் படுத்தப் படவில்லை[9]. ஏனெனில், அது துக்கக்கரமான சின்னமாகக் கருதப் பட்டது[10]. அதேப்போல, கிருத்துவர்கள் நெஸ்டோரிய சிலுவைகள் என்று, அவற்றையும், கிருத்துவத்துடன் இணைத்துக் குழப்புகிறார்கள். இவையும் ஸ்வதிகக் குறியுடன் சம்பந்தப் பட்டது. முதலில் இந்துமதத்துடன் சம்பந்தப்பட்டு, பிறகு ஜைனர்கள்-பௌத்தர்கள்[11] அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஜைன-பௌத்த சிலுவைகள், கிருத்துவ சிலுவைகள் அல்ல: பௌத்தம் மற்ற நாடுகளுக்குப் பரவியபோது, பௌத்த மடாலயங்கள், விக்கிரங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், கட்டுமானங்களில், இச்சின்னம் அதிகமாகவே உபயோகப் படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். சீனாவில் மற்றவர்கள் அதிகம் உபயோகப்படுத்தியதை கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்[12]. மங்கோலிய படையெடுப்பிற்குப் பிறகு பல இடங்களில் இத்தகைய சிலுவைகளைக் காணலாம்[13]. ஆனால், பௌத்தத்தின் தாக்கம், முகமதிய மதத்தின் தாக்குதலினால், மத்தியதரைக்கடல் நாடுகளில் மட்டுமல்லாது, தென்கிழக்காசிய நாடுகளிலும் குறைய ஆரம்பித்தது. பௌத்த சின்னங்கள் பெருமளவில் முகமதியர்களால் அழிக்கப் பட்டன.  கிருத்துவர்களும், அதே முறையைப் பின்பற்றினாலும், இத்தகைய சின்னங்களை, தமது போல மாற்றியமைத்துக் கொண்டார்கள். ஒவ்வாத சிற்பங்களை மழித்து வெட்டிவிடுவது, புதியதாக எழுத்துக்களை சேர்த்துக் கொள்வது போன்றவற்றை செய்து, இந்த சிலுவைகளை உருவாக்கி, அவற்றை, தாமஸுடன் இணைத்து, தாமஸ்தான், அச்சிலுவைகளை எடுத்து வந்து போட்டார் என்று கதையளக்க ஆரம்பித்தார்கள். உண்மையில் எல்லா சிலுவைகளையும் கணக்கெடுத்து, அவற்றின் எடையைப் பார்த்தால், பெரிய கன்டெய்னர்களில் தான் எடுத்து வந்திருக்க வேண்டும்.

.

© வேதபிரகாஷ்

14-04-2012


[1] Simon Joseph Carr, Thomae Edesssseni Tractatus de Nativitate Domini Nostri Christi, Romae, Typis R. Acadamiae Lynceorum, MDCCCXCVIII, Introduction, p.7.

[2] In 232 the relics of the Apostle St. Thomas were brought from India, on which occasion his Syriac Acts were written. http://www.newadvent.org/cathen/05282a.htm

[4] F. Crawford Burkitt, Early Eastern Christianity – St. Margaret’s Lectures 1904 on the Syriac speaking Church, E. P. Dutton & Company, New York, 1904, p.167.

[5] L.W.Barnard, The Origins and emergence of the Church in Edessa during the first two centuries, Vigillae Christianae, No.22, 1968, pp.161-175, North-Holland Publishing Co., Amsterdam.

[8] There occurs no cross in early Christian art before the middle of the 5th century, where it (probably) appears on a coin in a painting. The first clear crucifix appears in the late 7th century. Early Christians usually depicted their religion with a fish symbol (ichthus), dove, or bread of the Eucharist, but never Christ on a cross (or on a stick).

[9] The church did not adopt the cross until about the 6th century (New Catholic Encyclopedia, vol. 4, p. 475).

[10] The word ‘cross’ was later substituted for the word ‘stake’ in the rewriting of the Christian text (Crosses In Tradition, W.W.Seymour N.Y. 1898).

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

13 பதில்கள் to “எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்!”

 1. சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்! « தாமஸ்கட்டுக்கதை Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/14/thomas-relics-at-edessa-turkey/ […]

 2. T. R. Tamilselvan Says:

  நிச்சயமாக வர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது.

  ஏதோ ஹாலிவுட் பயங்கரப் படம் கசட்டுவது போல இருக்கிறது.

  இப்படி, மண்டையோடுகள், எலும்புகள் என்று அலைவது, அவற்றை வணங்குவது முதலியவற்றைப் பார்த்தால், பேயை-பிசாசை வணங்குபவர்கள் இவர்கள் தாம் என்று தெரிகிறது.

  மேலும், செத்த உடலிலலேயே, திரும்ப உய்ரிரோட வருவோ எம்ன்ற கொள்கையும், இவர்களது ஆபத்தான சித்தாந்தத்தை காட்டுகிறது.

  அதுதான் சைகோ, ஜோம்பி போன்ற பயங்கரப் படங்களில் காட்டுகிறார்கள்.

  உடலைக் காக்க உடலைத் தின்க வேண்டும் ரத்தத்தைக் காக்க ரத்ததைக் குடிக்கவேண்டும் போன்ற அருய்வறுப்பான, அபாயகரமான, பயங்கரமான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

  தினமும் அதனை மத்தில் பதிய வைத்துய்க் கொள்ளத்தான், ஏசுவின் மாமிசத்தைப் புசிக்கிறேன், ஏசுவின் ரத்தத்தைக் குடிக்கிறேன் என்று வேறு சொல்லிக் கொண்டு பிரார்த்தனை, வழிபாடு செய்து வருகிறார்கள்.

  முதலி, இவர்களடு மனங்களை மாற்ற வேண்டும்.

 3. Kamalkishore Varma Says:

  In Edessa, there was no Christian presence till mideaval period.

  The bringing of relics of Thomas there in third century is totally false, as there was / is no evidence to that effect.

  Even in 20th century, the church was razed down and it has been restored.

  Therefore, no originality of the skeleton remains could be vouchsafed.

  The fake Thomas cannot have many relics to be left at many places on the earth.

 4. W. John Robert Says:

  Nestorians have nothing to do with Christianity.

  Their worship, religion and symbols have been entirely different from that of Christianity.

  The medieval and modern Christian writers have tried to confuse to suit their petty hypotheses and theories.

  That is why they lost their originality and live with duplicities, frauds and concoctions.

  The Christianity as a whole, as Christians know today was formulated only during the medieval period and attained full status of religion in 15th-16th centuries.

  The same medieval period was also notorious for the manufacture of relics.

  Those relics have always been dated to the medieval period.

  And many had no relation to the person with whom they have been associated.

 5. Ibrahim Sulaiman Says:

  This is totally bullshit, as there was no Christianity in those areas.

  Even after medieval period, thy were not there.

  Their biblical stories are concocted and they have nothing there in those places.

 6. R. R. Viswanath Says:

  I suggested of cloning Thomas.

  Since, there have been many skeletons, skulls, bones etc., they may have cloned many thomases.

  Out of those thomases, they can find out the real thomas.

  Of course, they cannot doubt the thomas cloned.

 7. W. John Robert Says:

  The origin and spread of early Christianity was confined to the Mediterranean region.

  Even the apocryphal bible restricts his death to Mesopotamia and therefore, the Indian Christians should ponder over facts and clear off their mess created again and again, so that persons like Vedaprakash goes on criticizing it here and then.

  Therefore, the Syrian version of Thomas could be accepted and the Christian should work accordingly, instead of locating him at different parts of the world.

  The Nestorian cross and creed had nothing to do with the Christianity.

 8. S. S. Sankaranarayanan Says:

  பாட்மாஸில் மண்டையோடு என்றால், மண்டையோடுடன், இன்னொரு எலும்புக்கூடு எடிசாவில் இருப்பது பொய்யாகிறது.

  பற்பல எலும்புக்கூடுகள் இருந்தால், அனைத்துமே பொய்யாகிறது.

  பிறகு, எப்படி கிருத்துவர்கள் கொஞ்சம் கூட எதுவும் இல்லாமல், இத்தகைய அறிவிலித்தனமானக் கட்டுக்கதைகளைப் பிடித்துக் கொண்டு அலைகின்றனர்.

  விஞ்ஞானக் காலத்தில், நாகரிகமிக்கக் கிருத்துவர்கள், இவ்வாறு இடைக்காலத்தையும் விட மோசமான “ரோமான்ஸு”களில் சிக்கித் திளைப்பது விந்தையே!

  மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு வழிபார்டு செய்யும் இவர்கள் ஒருவேளை காபாலிகர்களாக, மனிதனைக் கொன்று புசிக்கும் குரூரக் கூட்டமாக இருக்கலாம்.

  ஒருவேளை அதனால்தான், அவர்களது, “யூகேரிஸ்ட்” என்ற பலி வழிபாடு அவ்வாறேஎ உள்ளது போலும்!

  கர்த்தர் அவர்களுக்கு சமாதனத்தையும், அமைதியையும் அளிப்பாராக!

 9. தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்! « தாமஸ்கட்டுக்கதை Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/14/thomas-relics-at-edessa-turkey/ […]

 10. T. K. Ramasubramaniam Says:

  Thomas Rediscovered
  http://www.gnosis.org/thomasbook/ch18.html

  Even before they came to India, the Portuguese were well aware of the local tradition that the apostle Thomas had evangelized India. The king instructed his expeditions not only to capture the spice trade but to find relics of the saint. Bones were indeed dug up at the site long reputed to be Thomas’s tomb, and they traveled far thereafter. The story is complicated, and will not be told here in detail. Handled with remarkable casualness as they passed through a series of hands, the supposed relics, or parts thereof, are now said to be found in India at Madras, Goa, and Cranganore (the legendary site of Thomas’s landing in the middle of the first century), and in Ortona, Italy.

  Inside the San Thoma Cathedral in the Mylapore quarter of Madras, the tomb excavated in the sixteenth century now lies beneath the crossing. The little Portuguese-built church on St. Thomas’s Mount has a few remains. We are told that the stone behind the altar is the very one on which the apostle expired, and that it is stained with his blood.

  That stone is of particular interest because it is one of the few archeological clues to the arrival of Christianity in India. The cross is carved in relief on a rectangular sandstone base, rounded at the top, which also bears an inscription. It is much like four crosses found in Kerala. Scholars now agree the inscriptions are in middle Pahlavi, the language of Sassanian Persia. One of these, in the church at Kottayam, has an upper panel, atop the inscription, showing a small cross flanked by peacocks, their bills touching the cross.

  The Portuguese found a Brahmin who obliged with a translation of the Mount cross inscription — a translation that he knew would be pleasing to the foreigners. It was distinguished (in the words of Stephen Neill) “by the fact that it made no contact at any point whatever with the language or the meaning of the original which it professed to expound.” It was a recapitulation of the Thomas legend as found in traditional song-epics. There were several later attempts to translate the inscription. In l925 the reader in Assyriology in Cambridge University gave one that rings truer: “My Lord Christ, have mercy upon Afras, son of Chaharbukht the Syrian, who caused this to be cut.” The Mount cross dates from about the eighth century.

  The discovery of bones said to be those of Thomas, the building of a church over the site, the elaboration of accounts placing his hermitage and place of martyrdom on nearby hills and building of another church there, gave the Portuguese a major, solidly Roman Catholic, place of pilgrimage in India, reducing the influence of Kerala and its followers of Thomas.

  Behind the surprising location of his relics in Ortona, Italy, lies another set of Thomas stories, and we return briefly to the Acts of Judas Thomas . After the martyrdom of the apostle, it will be recalled, King Mazdai wanted to open his tomb to get a bone, which he hoped would cure his son of demonic possession. But he found the tomb empty, “for one of the brethren had stolen [the bones] away, and carried them to the regions of the West.” So reads the Greek version of the AJT . One text is more specific about the destination: the apostle’s remains were taken “unto Mesopotamia.” In any event, it seems that Edessans of the fourth century believed that somehow the apostle’s remains had been translated to their home town. Ephraim refers to the supposed event several times. In one of his hymns, the devil is speaking:

  Into what land shall I fly?
  I stirred up Death to slay the Apostles, that by their death I might escape their blows.
  But harder still am I now stricken:
  The Apostle I slew in India has overtaken me in Edessa; . . .
  The merchant brought the bones. . . .

  Another of Ephraim’s hymns has this verse:

  Thomas, whence your lineage,
  That so illustrious you should become?
  A merchant your bones conveys;
  A Pontiff assigns you a feast;
  A King a shrine erects.

  “A merchant your bones conveys”: Ephraim here seems to be endorsing the legend that Habban, who had originally brought Thomas to India, had taken the apostle’s relics to Edessa. A Nestorian bishop of Basrah, at the mouth of the Tigris-Euphrates, wrote the Book of the Bee in the thirteenth century — gathering, he said, “the blossoms of the two Testaments and the flowers of the holy Books” and a good deal of other Nestorian lore–in which he subscribed to the Habban story, but also acknowledged a contrary version of the relics’ fate:

  Thomas was from Jerusalem of the tribe of Judah. He taught the Parthians, Medes and Indians; and because he baptized the daughter of the King of the Indians, he stabbed him with a spear and he died. Habban the merchant brought his body and laid it in Edessa, the blessed city of Christ our Lord. Others say he was buried in Mahluph [Mylapore], a city in the land of the Indians.

  In any event, relics revered as those of Thomas were kept in a martyry outside Edessa, and transferred to a church inside the walls late in the fourth century, after Ephraim’s death. The Edessene Chronicle says that in 394 “the casket of the Apostle Thomas was removed to the great church erected in his honor.”

  Other stories about the apostle’s relics are told, of dubious historic lineage. One says that when Muslims captured Edessa in 1142, surviving Christians took the relics to the isle of Chios in the Aegean Sea, where they remained for more than a century. In 1258 the prince of Taranto raided Chios and sent the relics to Ortona, Italy, where they were installed in the cathedral. And there most of the relics (which some explorers of such matters think are more probably those of a Greek monk named Thomas) remain, except for a thigh bone that Cardinal Tisserant arranged to have sent to Cranganore in 1952, the nineteenth centenary year of Thomas’s supposed arrival on the Malabar coast.

 11. W. X. Jose Verghese Says:

  உண்மையிலேயே, கிறிஸ்தவர்களே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில், இவ்விஷயங்கள் பல கிறிஸ்தவர்களூக்கேத் தெரியாது.

  நம்பிக்கையின் மீது ஆதாரமாக இல்லை, அத்தாட்சியீன் ஆதாரமாக, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள், நம்பிக்கையான சரித்திர ஆசிரியர்கள் முதலியோர்கல் வேலை செய்யும் போது, இவற்றை – இத்தகைய ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு பேசவோ, எழுதவோ முடியாது.

  இங்கு செயின்ட் தாமஸின் மண்டை ஓடு இருக்கிறது என்றால், மற்ற இடங்களில் உள்ள மண்டை ஓடு பொய் என்றாகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியாவிற்கு வெளியே இப்படி ஆதாரங்களுடன் கிறிஸ்தவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில், இந்திய கிறிஸ்தவர்களுக்கு பொய்களைக் கூறிக் கொண்டு, பொய்யான எலும்புகளைக் காட்டிக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டாம். அது கர்த்தருக்கோ அடுக்காது, மன்னிக்கவும் மாற்றார்.

  ஆகவே பிஷப்புகள், பாதிரிகள் செய்வது அப்பட்டமான மோசடிகள் என்றாகிறது. படித்தவர்கள் இதனை சுலபமாக தெரிந்து கொள்வார்கள்.

  இவவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு கூட, செயின்ட் தாமஸ் சென்னைக்கு வந்தார், கொச்சிக்கு வந்தார் என்று கதை விட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம்பிக்கையோடு, இருப்ப்பதை கும்பிட்டுக் கொண்டிருந்தாலே போதும்.

 12. S. Avudaiyappan Says:

  அட என்னா நைனா, ஒரே பேஜாரா கீது, சும்மா எலும்பு, மண்டையோடு என்று ரீல் விட்டால் என்ன செய்வது? பேசாமல், ஹாலிவுட்டில் சொல்லி எக்ஸார்சிஸ்ட் – 9, ஓமன் – 10, டெட்-அலைவ் -17, ஜூம்பிஸ்-88, பேய்-123, பிசாசு-666 என்று படங்கள் எடுக்க சொல்லலாம்.

 13. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/14/thomas-relics-at-edessa-turkey/ […]

Kamalkishore Varma க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: