ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி!

ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி!

ஓர்டோனா சர்ச் இருப்பிடம்: ஓர்டோனா (Ortona) என்ற ஊர் இத்தாலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது. இத்தாலியின் கிழக்குப் பகுதியில் கிரீஸ், கிரீஸுக்குக் கிழக்குப் பகுதியில் துருக்கி (மெசபடோமியா) போன்ற பகுதிகள் உள்ளன. அதாவது கிருத்துவமதத்திற்கு ஆதாரமான, புராதனமான இடங்கள் அங்குதான் உள்ளன. ஓர்டோனாவில் தாமஸ் கதை, புராணம், வழக்கு முதலியவை மிகவும் அதிகமாகவே உள்ளன. அதாவது, கிருத்துவமதம் பிரபலமாகி, மக்கள் ஏற்றுக் கொண்டபிறகுதான், இத்தகைய நம்பிக்கைகள் முதலியன வளர ஆரம்புக்கும். ஆனால், இவர்கள் சொல்லும் விவகாரங்கள் எல்லாமே இடைக்காலங்களில் நடந்தவை தாம்.

மைலாப்பூருக்குக் கொடுக்க மறுத்த ஓர்டோனா: முன்பு, 1958ல் எலும்புத்துண்டம் கேட்டபோது, இவ்வூர் மக்கள் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், அவர்களுக்கு மைலாப்பூர் கட்டுக்கதையில் துளிக்கூட நம்பிக்கையில்லை. பிற்காலத்தில் 16-17வது நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் பாதிரிகள் புனைந்த கதை என்று நன்றாகவே தெரியும். பிறகு, வாடிகன் வரை பிரச்சினைச் சென்று, திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்ற வாக்குறுதியோடு கொண்டு வரப்பட்டாதாம். ஆனால், திருப்பிக் கொடுத்தார்களா இல்லையா என்ற ரகசியத்தை இதுவரைச் சொல்லாமல் இருக்கிறார்கள்.

ஓர்டோனாவிற்கு தாமஸ் எலும்புக:ள் வந்ததில் குழப்பங்கள்: ஓர்டோனாவிற்கு அவ்வெச்சங்கள் எப்படி வந்தன என்பதற்கே பற்பல விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. 1258ம் ஆண்டு கிரேக்கத் தீவான கியாஸிலிருந்து (Chios) அவ்வெச்சங்கள் கொண்டுவரப்பட்டதாக சில பிற்காலக் குறிப்புகள் கூறுகின்றன. ஒன்றிற்கும் மேலான கல்லறைகள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் இருப்பதையறிந்த, விக்கிப்பீடியாவே குழம்பிப் போயிற்று என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், சிறிதும் கூசாமல், ஒரே நேரத்தில் இரண்டு உடல்கள் இருந்ததினால், தாமஸ் ஒரு தெய்விக்கப் பிறவி என்று கருதப்படவேண்டும் என்று வக்காலத்து வாங்கி எழுதியுள்ளது[1] (St. Thomas has to be considered as divine person and has two bodies at same time[2]). இங்கு சரித்திர ரீதியில் சர்ச் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. 1427ல் நடந்த போரில் ஓர்டோனா தாக்கப்பட்டு, பெரும்பகுதிகள் சேதமடைந்தன. இருப்பினும் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது. 16ம் நுற்றாண்டில் சார்லஸின் மகள் பெற்று மாளிகைக் கட்டியதாக உள்ளது[3].

எடிஸாவிலிருந்து எப்படி வந்தது? கிருத்துவர்கள் இடத்திருக்கு ஏற்ப கட்டுக்கதைகளை புனைவதில் வல்லவர்கள் என்பது, அவர்களது குழப்பமான, பலவிதமான எழுத்துகளினின்றே தெரிந்து கொள்ளலாம். அப்பழுக்கல்லாத, ஆண்டவனால் கொடுக்கப் பட்ட, செய்யப் பட்ட “பைபிளில்” இல்லாததுதான் தாமஸ் கட்டுக்கதை. “ஏக்ட்ஸ் ஆப் தாமஸ்” என்ற ஒதுக்க / மறைக்கப் பட்டுள்ள[4] பைபிள்களினின்று திரிக்கப்பட்டதுதான் இக்கட்டுக்கதை. அதில், தாமஸின் உடல் எடிஸ்ஸா (Edessa) என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளது. பிறகு, அது ஏன் பகுதிகளாகப் பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மகத்துவத்தைக் கிருத்துவர்கள் விளக்கவில்லை[5]. ஆனால், கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், எடிஸ்ஸாவிலிருந்து கியாஸிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கியோஸ் என்பது கிரேக்கத் தீவுக்கூட்டங்களில் ஏஜியன் கடலில் உள்ள ஐந்தாவது பெரிய தீவாகும். ஏசியா மைனர் கடற்க்கரையிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது[6]. அங்கிருந்து ஓர்டோனாவிற்கு வந்தது என்று கதையை மாற்றியுள்ளதை காணலாம். ஆக இவையெல்லாம் உள்ளூர் நம்பிக்ககள், சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்களுக்கு ஒத்துப் போகலாம், ஆனால், அங்கு மேற்கத்தைய நாகரிகத்தால், அவை அழிக்கப் பட்டு விட்டன. மேலும் யுத்தங்களினாலும் பலதடவை அழிக்கப்பட்டுள்ளன.

தாமஸ் எலும்புகளை லியோன் டெக்லி அக்கியோலி கொள்ளையெடித்தானா, பாதுகாத்தானா? செப்டம்பர். 6, 1258ல் நடந்த யுத்தத்தின் முடிவில் கியாஸ் / ஸ்கியோ தாக்கியழிக்கப்பட்டபோது, கப்பற்ப்படைத் தலைவன் லியோன் டெக்லி அக்கியோலி (Leone degli Acciaioli) என்பவனால் கொள்ளையடிக்கப் பட்டவைகளில் தாமஸின் எலும்புகளும் அடங்கும் என்கிறது ஒரு குறிப்பு[7]. இன்னொரு குறிப்பின்படியோ, இவர் அந்த எலும்புகளைக் காப்பாற்றி பத்திரமாகக் கொண்டுச் சேர்த்ததாக உள்ளது (That same Leone degli Acciaioli or ser Leone di Riccomanno is the one celebrated at Ortona as the rescuer of the remains of St Thomas, now venerated in that city.)[8]. ஆனால், இத்தகைய போர்-சண்டைச் சச்சரவுகள் இவர்களுக்குள் அதிகமாகவே உள்ளதால், 1943லும் அத்தகைய அழிவு ஏற்பட்டது. டிசம்பர் 20-28, 1943 நாட்களில் நடந்த யுத்தத்தில் (The Battle of Ortona), ஓர்டோனா நகரம் பெருமளவில் சேதமடைந்தது. யுத்த அழிவுகளின் புகைப்படங்களை இங்குக் காணலாம்[9].

மேலேயுள்ளதுதான், அந்த ஓர்டோனா சர்ச்சின் இருப்பிடம், படம். கடற்கரைக்கு அருகில் இருப்பதைத் தெளிவாகப்பார்க்கலாம். இப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் / நகரம் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும். அங்கு ஒரு “கிருத்துவர்கள் அல்லாத” கிருத்துவர்கள் இருக்க வேண்டும், அவர்கள் விக்கிரங்களை வழிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், அவர்களை மாற்ற ஒரு தாமஸ் வரவேண்டும், ஒரு அரசன் கொல்ல வேண்டும், அவரின் உடல் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படியான கதைகள் அதனால் தான் எல்லா ஊர்களிலும் உள்ளன.

   

ஓர்டோனா சர்ச்சில் உள்ள தாமஸின் எலும்புக்கூடுள்ள சவப்பெட்டி இவ்வாறு தங்கத்தகடினால் செய்யப் பட்டுள்ளது.

இதை அடிக்கடி கொள்ளையெடுத்துச் செக்குதல் / திருடுதல்/ திருட முயற்சி செய்தல் என்றுள்ளதால், மிகவும் ஜாக்கிரதையாக வைத்துள்ளனராம்.

சர்ச்சின் உட்பகுதி மற்றும் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடம். அப்பெட்டியின் மீது தாமஸின் உருவம் தொம்மஸோ அலெசந்திரினி என்பவரால் வரையப்பட்டதாகவும், அதன்மீதுள்ள ஏசுநாதர் உருவம் அல்டோ டி’அடமோ என்பரால் மாற்றியமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்[10]. இதைத்தவிர மற்ற முழுவிவரங்களை இங்குக் காணலாம்[11].

எலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீதுள்ள படம், விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டன.

தாமஸின் மண்டையோடு பாட்மாஸ் தீவில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறர்கள் என்றால், இங்கு தாமஸின் தலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. செப்டம்பர் 6 மற்றும் மே மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமை இங்கு தாமஸிற்கு விழா எடுக்கிறார்கள்[12].

ஓர்டோனாவில் உள்ளவை உண்மையா பொய்யானவையா? ஓர்டோனாவில் இருந்ததாகச் சொல்லப்படும் எலும்புத்துண்டங்கள் பலதடவை களவாடப்பட்டதாக கிருத்துவர்களே எழுதியுள்ள விவரங்களினின்று தெரிகிறது. உதாரணத்திற்கு இந்த விவரத்தைப் படிக்கவும்[13]. அதேபோல, அங்குள்ள சர்ச்சும் இடைக்காலத்தில், பலதடவை இடிக்கப் பட்டுள்ளது, பிறகு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. எலும்புகளும் இடம் பெயர்ந்துள்ளன. அந்நிலையில், அதே எலும்புகள் தாம் திரும்ப வந்துள்ளன என்ற ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், அவ்வாறு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டும் போது, முந்தைய அத்தாட்சிகளை அழிக்கும் விதத்தில் தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதாவது, இதைக்காலத்திற்குப் பிறகு, கத்தோலிக்கம் முழு அளவில், ஒரு மதமாக உருவெடுத்து வந்த நிலையில்தான், மார்ட்டீன் லூதர் (1483-1546) என்பவரால் புரொடெஸ்டென்ட் / எதிர்மறை கத்தோலிக்கம் / கத்தோலிக்க விரோத மதத்தை உருவாக்கினார். இதனால், இருபிரிவினருக்கும் மிகக்கொடிய அளவில் போர்கள் ஏற்ப்பட்டன. அப்போர்களில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இறையியல் முரண்பாடுகள் வளர்ந்து, இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் சமயப்பூசல்கள் அதிகமாயின. அக்காலத்தில் இருந்த பாகன்-கோவில்கள் (கிருத்துவரல்லாதவர்களின்) பல இடிக்கப்பட்டனல; விக்கிரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; அங்கிருந்த செல்வம் கொள்ளையடிக்கப் பட்டது. “சிலுவைப் போர்கள்” (1095 – 1291) மற்றும் (1100 – 1600) என்று சொல்லப்படும் அவற்றின் மூலம் பற்பல குரூரங்களை படித்தறிந்து கொள்ளலாம். இக்காலக்கட்டத்திலும் “ரெலிக்ஸ் ஹண்டர்ஸ்” (Relic hunters) இறந்தவர்களின் உடற்பகுதிகளைத் தேடுபவர்கள் பல கல்லறைகளை உடைத்து, தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்றனர். இதனால், எந்த கல்லறையிலிருந்து எந்த எலும்புக்கூடு இருந்தது / எடுத்தது என்ற விவரம் தெரியாமல் போய்விட்டது. ஆகவே, அந்நிலையில், இடைக்கால ஆதாரங்களை மறைக்கக் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் பெருமளவில் அக்கிரமம் செய்துள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

13-04-2012


[1] http://en.wikipedia.org/wiki/Ortona

விக்கிப்பீடியா, கத்தோலிக்க ஆதரவில் நடந்து வருகிறது, அதற்கு சாதகமான விவரங்கள் அதிகாமாகக் கொடுக்கப்படுகின்றன, ஆனால், சாதகமாக இல்லாமல் இருப்பவற்றை நீக்கிவிடுகின்றன இல்லை விவாதட்திற்கு என்ரு எடுத்துச் சென்று அமுக்கிவிடுகின்றனர்.

[2] இது வின்சென்ட் ஸ்மித் சொன்னதிற்கு எதிர்மறையாக இருப்பதைக் காணவும். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once…………………….”

[3] In 1258 the relics of St. Thomas were brought to Ortona from the Greek island of Chios. St. Thomas has to be considered as divine person and has two bodies at same time. [relics of one in Ortona , Italy and other relic in Mylapore , India]. In the first half of the 15th century its walls were built, and during this period Ortona fought with the nearby town of Lanciano in a fierce war that ended in 1427. On June 30, 1447, ships from Venice destroyed the port of Ortona; consequently the King of Sicily at that time commissioned the construction of a Castle to dominate the renovated port. In 1582 the town was acquired by Margaret of Parma, daughter of Emperor Charles V and Duchess of Parma. In 1584 Margaret decided to build a great mansion (known as Palazzo Farnese), which was never completed due to her death.

[4] இவற்றைப் பற்றி “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.

[5] உண்மையில், புத்தமத்தில் தான், புத்தரின் உடல் பகுதிகள், குறிப்பாக எலும்புகள், மண்டையோடு, பல், அஸ்தி முதலியன பங்குப் போட்டுக் கொள்ளப் பட்டு, உலகின் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கெல்லாம் விகாரங்கள் கட்டப் பட்டன.

அதற்கு முன்பு, சக்தி வழிபாட்டில், சக்தியின் உடற்பாகங்களே, உலகின் பல பாகங்களில் சிதறி வீசப்பட்டது என்றும், அங்கெல்லாம் சக்தி பீடங்கள் / கோவில்கள் கட்டப் பட்டது என்றும் உள்ளது.

ஆகவே, இத்தகைய பழங்கால மத பழக்க-வழக்கங்களை, அப்படியே ஏற்றுக் கொண்டு, கிருத்துவ முலாம் பூசப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

[6] Chios (Greek: Χίος, pronounced [ˈçios]alternative transliterations Khíos and Híos) is the fifth largest of the Greek islands, situated in theAegean Sea, seven kilometres (five miles) off the Asia Minor coast. The island is separated from Turkey by the Chios Strait. The island is noted for its strong merchant shipping community, its unique mastic gum and its medieval villages. The 11th century monastery of “Nea Moni”, a UNESCO World Heritage Site, is located on the island.

[7] Ortona’s great cathedral has the privilege of housing the bones of St Thomas Apostle, which arrived in Ortona on September 6, 1258, booty taken by captain Leone degli Acciaioli when the island of Schio was sacked.

[8] The family line to which Simon belonged was a strictly republican one. He was descended from Lotteringo di Acciaiolo Acciaioli who appears in several documents in the late 13th century as a major figure in the Parte Guelfa, and who was a nephew of messer Leone degli Acciaioli, doctor of law and founder of the family bank, Compagna di Ser Leone degli Acciaioli e de’ suoi compagni, and a grandson of the family’s capostipite Gugliarello Acciaioli, who had moved from Brescia to Florence in 1160 according to legend.  That same Leone degli Acciaioli or ser Leone di Riccomanno is the one celebrated at Ortona as the rescuer of the remains of St Thomas, now venerated in that city.

http://www.sardimpex.com/articoli/The%20Acciaioli%20family%20in%20Brazil.htm

[10] The Apostle’s image painted on the urn is the work of Tommaso Alessandrini (1612) from Ortona, while the Crucifix above the altar was modelled by the sculptor Aldo D’Adamo.

[11] LA BASILICA : THE APSE; Data: Giovedì, 13 aprile @ 10:34:14 CEST
Argomento: eng: Tommaso, the apostle; LA BASILICA : THE APSE; THE Crypt,  dedicated in the past to the Virgin under the title Immacolata Concezione, was transformed in the course of the past ten years radiating toward the devotion and cult for and of the Apostle Thomas.

On the occasion of the scientific reconnaissance in 1984 it was completely restored; the essentiality and simplicity of the architectural lines help to enhance the copper urn in which the Saint’s relics are preserved, including the skull which was kept in a silver reliquary bag in the past.

The Apostle’s image painted on the urn is the work of Tommaso Alessandrini (1612) from Ortona,while the Crucifix above the altar was modelled by the sculptor Aldo D’Adamo.

In the Presbytery, a new structure has recently been completed to make it more functional, using the different elements which it is made up of and in reference to the celebrations which normally take place there.

On the ceiling, the paintings in an oval form represent the Trinity symbol (in the centre), Saint Matthew, Saint

Andrew, Saint Peter, Saint, James, Saint Paul, Saint Thomas.

The two glass windows, as well as all others that cover the windows of the church, are the work of Tommaso Cascella.
The frontal of the new altar consists of a XIV century bas-relief, representing Thomas meeting the Risen Christ.

http://www.portaleperortona.it/modules.php?name=News&file=print&sid=315

[12] Ortona dedicates two feast days to the Apostle: September 6 and a rather grander affair called Perdono, held the first Sunday in May, which is linked to the privilege of a plenary indulgence. For this occasion, which includes a historic pageant, thousands of pilgrims flock to Ortona.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

14 பதில்கள் to “ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி!”

 1. சைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்! « தாமஸ்கட்டுக்கதை Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/ […]

 2. T. R. Tamilselvan Says:

  முதலில் இந்திய கிருத்துவர்களுக்கு, கிருத்துவத்தைப் பற்றி சரியாக சொல்லித் தரவேண்டும்.

  இந்த உண்மைகளை அறியாதலால் தான், அவர்கள் இப்பொழுதுள்ளவர்கள் சொன்னதை நம்பிக்கொண்டு, தவறான கிருத்துவர்களாக இருக்கிறார்கள்.

  இவர்களால், கிருத்துவ மதத்திற்கு எந்த லாபமும் இல்லை, ஆனால் இத்தகைய போலி கிருத்துவர்களுக்கு தாராளமாகவே உதவுவார்கள்.

  ஏனெனில், அவ்வாறு ஊக்குவித்து, கிருத்துவர்களிடையே வேற்றுமையை உண்டாக, அந்நிய கிருத்துவக் கூட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

  ஒரு கிருத்துவனையே அடுத்த கிருத்துவன் மதம் மஆற்றப் பார்க்கிறான்.

  கிருத்துவன் என்று சொல்லிக் கொண்ட பிறகு எதற்கு இந்த கூத்து?

  இந்த அழகில் தான், இத்தகைய கட்டுக்கதைகளை வைத்துய்க் கொண்டு, இந்திய தேச விரோதிகளாக மசறுகிறார்கள்.

  சக இந்துக்களுடன் வெறுப்பை, விட்ரோதட்ய்ஹ்தை வளர்க்கிறார்ர்கள்.

 3. Kamalkishore Varma Says:

  In Ortona there was no Christian presence till mideaval period.

  The bringing of relics of Thomas there in third century is totally false, as there was / is no evidence to that effect.

  Even in 20th century, the church was razed down and it has been restored.

  Therefore, no originality of the skeleton remains could be vouchsafed.

  The fake Thomas cannot have many relics to be left at many places on the earth.

 4. W. John Robert Says:

  Just like Kaba, the Ortona Church with relics were destroyed, demolished and razed down many times and therefore, no authenticity could be established.

  The Portuguese frauds have been proverbial and there is no meaning in believing such forgeries and concoctions.

 5. Ibrahim Sulaiman Says:

  They are definitely Satanic worshipers.

  With disguised manner, they carry put such rituals.

  Blood sucking, they may dine with devils, evil spirits and ghosts.

  That is why they make many movies with such background.

  Better hang them, before they become vampires and Zoombies!!!

 6. R. R. Viswanath Says:

  I suggested of cloning Thomas.

  Since, there have been many skeletons, skulls, bones etc., they may have cloned many thomases.

  Out of those thomases, they can find out the real thomas.

  Of course, they cannot doubt the thomas cloned.

 7. S. Ezhilan Says:

  உள்ள அத்தாட்சிகளை வைத்துப் பார்த்தால், ஏசுவே இல்லை என்ற முடிவிற்கு மேற்கத்தைய ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

  அந்நிலையில், அந்த ஏசுவையே சந்தேகித்தாகக் கூறப்படும் இந்த சந்தேக பேர்வழி இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  ஆகவே, இந்த ஆளைப் பிடித்துக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்து மதத்தை வளர்க்கலாம் என்று கிறிஸ்தவர்கள் இறங்கினால், அது அசிங்கத்தில் தான் போய் முடியும்.

  ஏற்கெனெவே, தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி, லட்சங்கள் கொடுத்து போலி ஆதாரங்களை உண்டாக்க அருளப்பா கூட்ட்ரம் முயன்றது. ஆனால், பிறகு அவர்களுக்குள்ளேயே சண்டை வந்து, கூட்டாளி ஆச்சார்யா பால் என்ற அப்பாவியை, சிறைக்கு அனுப்பி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர். நொந்து போன பால், எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன் என்று சொன்னதும், சமாதானம் செய்து கொண்டார் அருளாப்பா.

  உடனே பதிவியிலிருந்து நீக்கப்பட்டார், அவரும் மர்மமாக இறந்து விட்டார், பாலும் காணாமல் போய் விட்டார்.

  அப்பொழுதெல்லாம், புலன் விசாரணை செய்யும், சோதித்து ஆராய்ச்சி செய்யும் பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் இல்லாதிருந்தார்கள் போல இருக்கிறது.

  தினத்தந்தியில் மட்டும், அந்த பால் எப்படி திருச்சி ஸ்டுடியோவில் ஓலைச் சுவடி போன்று போட்டோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியிடும். மக்களும் ஏதோ சிந்துபாத் போன்ற கதைகளைப் படிக்கிறோம் என்று படித்து மறந்து விட்டிருப்பார்கள்.

  ஆனால், அத்தகைய மோசடியை, மறுபடியும் வேறுவிதமாக செய்கிறார்கள் என்றால், இவர்களை சும்மா விடக்கூடாது..

  மோசடிகளை வைத்துக் கொண்டு சரித்திரம் படைக்கிறார்கள், அதற்கு மற்றவர்கள் துணை போகிறார்கள் என்றால், அவ்வாறு துணைபோக்யஉம் மனிதர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

 8. W. John Robert Says:

  The origin and spread of early Christianity was confined to the Mediterranean region.

  Even the apocryphal bible restricts his death to Mesopotamia and therefore, the Indian Christians should ponder over facts and clear off their mess created again and again, so that persons like Vedaprakash goes on criticizing it here and then.

  Therefore, the Syrian version of Thomas could be accepted and the Christian should work accordingly, instead of locating him at different parts of the world.

  The Ortona claim should be studied with that of the Syrian.

  The Nestorian cross and creed had nothing to do with the Christianity.

 9. S. S. Sankaranarayanan Says:

  பாட்மாஸில் மண்டையோடு என்றால், மண்டையோடுடன், இன்னொரு எலும்புக்கூடு எடிசாவில் இருப்பது பொய்யாகிறது.

  பற்பல எலும்புக்கூடுகள் இருந்தால், அனைத்துமே பொய்யாகிறது.

  பிறகு, எப்படி கிருத்துவர்கள் கொஞ்சம் கூட எதுவும் இல்லாமல், இத்தகைய அறிவிலித்தனமானக் கட்டுக்கதைகளைப் பிடித்துக் கொண்டு அலைகின்றனர்.

  விஞ்ஞானக் காலத்தில், நாகரிகமிக்கக் கிருத்துவர்கள், இவ்வாறு இடைக்காலத்தையும் விட மோசமான “ரோமான்ஸு”களில் சிக்கித் திளைப்பது விந்தையே!

  மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு வழிபார்டு செய்யும் இவர்கள் ஒருவேளை காபாலிகர்களாக, மனிதனைக் கொன்று புசிக்கும் குரூரக் கூட்டமாக இருக்கலாம்.

  ஒருவேளை அதனால்தான், அவர்களது, “யூகேரிஸ்ட்” என்ற பலி வழிபாடு அவ்வாறேஎ உள்ளது போலும்!

  கர்த்தர் அவர்களுக்கு சமாதனத்தையும், அமைதியையும் அளிப்பாராக!

 10. தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்! « தாமஸ்கட்டுக்கதை Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/ […]

 11. T. K. Ramasubramaniam Says:

  ORTONA – ST. THOMAS APOSTLE

  A special mention must go to Ortona’s great cathedral that has the privilege of housing the bones of St Thomas Apostle, which arrived in Ortona on September 6, 1258, booty taken by captain Leone degli Acciaioli when the island of Schio was sacked. Ortona dedicates two feast days to the Apostle: September 6 and a rather grander affair called Perdono, held the first Sunday in May, which is linked to the privilege of a plenary indulgence. For this occasion, which includes a historic pageant, thousands of pilgrims flock to Ortona.

  Passion Play 2004: The Quest of Doubting Thomas

  This play includes scenes which take place in the cathedral of Ortona, where Thomas’ bones are supposed to be buried. This is a parallel to the biblical narrative, set around the dreadful battle of Ortona, Italy, which was the worst battle Canadian soldiers had to fight up to that time (Christmas 1943). Although our story is entirely fiction, the surrounding elements are true. If one understands the biblical story, it is likely they will quickly connect with the soldiers’ experience. You can read the first scene by clicking here. (PDF, 112 KB).

  The theme is meant to be appropriate for a university setting where many people meet the same experience as Thomas. It is a good thing to ask questions — but we also learn from our human experiences.

  The eigth annual Passion Play ran from Tuesday to Friday, 30 March – 2 April, lasting approximately an hour and a half. Jesse Zink played the demanding role of “Jesus”, Berkeley Buchko was “Doubting Thomas”, Margaret Kralt was “Sister Claire”, and Chris Graham was the soldier “Paul”. As a new element in the production, the Chapel Choir played a Greek Chorus type of role: the People of Jerusalam and the People of Ortona. They sang and spoke during each performance.

  The Halifax Herald ran an article about the play on Saturday, 20 March, 2004. A copy can be viewed by clicking here (PDF, 60 KB).

 12. W. X. Jose Verghese Says:

  உண்மையிலேயே, கிறிஸ்தவர்களே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில், இவ்விஷயங்கள் பல கிறிஸ்தவர்களூக்கேத் தெரியாது.

  நம்பிக்கையின் மீது ஆதாரமாக இல்லை, அத்தாட்சியீன் ஆதாரமாக, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள், நம்பிக்கையான சரித்திர ஆசிரியர்கள் முதலியோர்கல் வேலை செய்யும் போது, இவற்றை – இத்தகைய ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு பேசவோ, எழுதவோ முடியாது.

  இங்கு செயின்ட் தாமஸின் மண்டை ஓடு இருக்கிறது என்றால், மற்ற இடங்களில் உள்ள மண்டை ஓடு பொய் என்றாகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியாவிற்கு வெளியே இப்படி ஆதாரங்களுடன் கிறிஸ்தவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில், இந்திய கிறிஸ்தவர்களுக்கு பொய்களைக் கூறிக் கொண்டு, பொய்யான எலும்புகளைக் காட்டிக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டாம். அது கர்த்தருக்கோ அடுக்காது, மன்னிக்கவும் மாற்றார்.

  ஆகவே பிஷப்புகள், பாதிரிகள் செய்வது அப்பட்டமான மோசடிகள் என்றாகிறது. படித்தவர்கள் இதனை சுலபமாக தெரிந்து கொள்வார்கள்.

  இவவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு கூட, செயின்ட் தாமஸ் சென்னைக்கு வந்தார், கொச்சிக்கு வந்தார் என்று கதை விட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம்பிக்கையோடு, இருப்ப்பதை கும்பிட்டுக் கொண்டிருந்தாலே போதும்.

 13. S. Avudaiyappan Says:

  சரி, இங்கே இருக்குதுங்க சும்மாவா இருக்குதுங்க? அதுங்களும் ஊர்வலம் போவது தானே? இத்தன எலும்பு வச்சிகின்னு, என்னா செய்துங்கோ?

 14. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/ […]

R. R. Viswanath க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: