கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

Inscriptions strewn at Kapeleswarar temple 6-4-2012 DM

தினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும்? வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா? “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்புதான் கடற்கரையில் இருந்ததாக! என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக! தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].

Kapaleswarar teple inscription strewn around DM.2011-1

சிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்: இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது.சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

தினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.

என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“…………………………………….               நீளோ தம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.

 1. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது.
 2. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார்.
 3. மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.
இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.

Kapaleswarar teple inscription strewn around DM.2011-2

துறைமுக நகர்: இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா? அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா?). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே? இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது?

எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.

Kapaleswarar teple inscription strewn around DM.2011-3

கோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து  கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக  இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .

 

மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.  இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.

சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

இப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள் ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.

வேதபிரகாஷ்

06-04-2012


[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள்,  ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=442587

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

26 பதில்கள் to “கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!”

 1. vedaprakash Says:

  aravind சொல்வதென்னவென்றால்:
  3:40 பிற்பகல் இல் April 12, 2012 | பதில் திருத்து
  உண்மையான வரலாற்றை பிரதிபலிக்கும் அருமையான கட்டுரை வேதபிரகாஷ் அவர்களே…. உடையும் இந்தியா புத்தகத்தை நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன். இதிலுள்ள தகவல்கள் அதில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது பழைய பதிவுகளை படித்தப்பின் கண்கூடாகத் தெரிகிறது. இவ்வளவு வரலாற்று ஞானம் உள்ள தாங்கள் புத்தகம் வெளியிட இயலாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

  இருப்பினும் முயற்சியை கைவிடாதீர்கள்… உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்…..

  உடையும் இந்தியாவின் துணை ஆசிரியர் தமிழ் நாட்டுக்காரர் தான்… ஒருவேளை அவரின் கைங்கரியமாக இருக்குமோ???

  பிகு: நான் உடையும் இந்தியா புத்தகத்தின் பிரதான ஆசிரியரான ராஜிவ் மல்ஹோத்திராவின் பெரிய ரசிகன். இருமுறை இணையதள‌ தந்தி (இ மெயில்) மூலம் உரையாடியுள்ளேன்… உங்களின் கட்டுரை பற்றியும் உங்களிடமிருந்து தகவல்கள் அவர் புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதையும் அவர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். பதிலளிப்பாரா என்று பார்க்கலாம்….

  உங்களின் கட்டுரைகளுக்கு நன்றிகள் பல கோடி

 2. T. R. Tamilselvan Says:

  முன்னமே கேட்டது போல எங்கே இந்த கல்வெட்டுகள்?

  பூம்பாவை உயிப்பித்த இடம் எங்கே?

  ஒருவேளை அத்தகைய அதிசயம் மிக்க இடத்தையும் மறைத்து விட்டார்களா?

  இல்லை, மாற்றி விட்டார்களா?

  தினமலர், ஏன் அதைப் பற்றி விசாரித்து கட்டுரை எழுதக் கூடாது?

  • S. Ezhilan Says:

   பூம்பாவை இருந்த இடத்தில், ஶ்ரீராமகிருஷ்ண மடம் பெரிய கோவிலை / மண்டபத்தைக் கட்டியுள்ளது.

   பழைய வளாகத்தில், நூலத்திற்கு அருகில் “பூம்பாவை உயிப்பித்த இடம்” என்று போர்ட் இருந்தது.

   இப்பொழுது என்னவாயிற்று என்று தெரியவில்லை.

 3. T. R. Tamilselvan Says:

  1. முதலில் அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் என்னவாயிற்று என்று அறியப்படவேண்டும்.
  2. அவை முறைப்படி தொல்துறைப் பிரிவினருக்கு ஒப்புவிக்கப்படவேண்டும்.
  3. இவ்வளவு ஆண்டுகள் ஏன் செய்யப்படவில்லை என்று விசாரிக்க வேண்டும்.
  4. ஏ.எஸ்.ஐ அங்கு செய்துள்ள அகழ்வாய்வுகளைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டுள்ளனவா இல்லையா என்று தெரியப்படுத்த வேண்டும்.
  5. அப்படி இல்லையென்றால், எப்படி கிருத்துவர்கள் அனுமதியின்றி அல்லது திருட்டுத் தனமாக அத்தகைய அகழ்வாய்வுகளை மேற்கொண்டார்கள், யார் அவர்களை அனுமதித்தார்கள்?
  6. 1960 வரை இருந்த கோவில் சிற்பங்கள் என்னவாயிற்று? சர்ச் ஏன் அவற்றை அகற்ற வேண்டும்?
  7. கபாலீசுவரர் ஊர்வலம் இப்பொழுது அவ்வழியாகச் செல்கிறதா, இல்லையா?
  8. இல்லையென்றால் யார் மாற்றியது, ஏன் மாற்றினார்கள்?
  9. சாந்தோம் பிஷப் மற்றும் இதர கிருத்துவர்களை, அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொல்ல வேண்டும்.
  10. பிறகு முறைப்படி, அவ்விடத்தை இந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

 4. aravind Says:

  இந்த வலைத்தளத்தில் உள்ள பல கட்டுரைகளை ஒருசேர படித்ததனால் இந்த பகுதிக்கு அளிக்க வேண்டிய பின்னூட்டத்தை தவறுதலாக வேறு பகுதியில் பதிந்து விட்டேன். தவறுக்கு மனிக்கவும் !! உடையும் இந்தியா புத்தகத்தின் மற்றொரு ஆசிரியரான அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு இந்த கட்டுரையின் சுட்டியைக் கொடுத்து நீங்கள் இதுபோல சொல்லியுள்ளீர்கள் என்றும், அது உண்மையா என்றும், உண்மையெனில் உடையும் இந்தியா புத்தகத்தில் உங்கள் பெயரைக் குறித்து இன்னாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று போட்டிருக்கலாமே என முகநூலில் உள்ள அவரது புரோபைலுக்கு செய்தி அனுப்பினேன்……. தினமும் முகநூலில் பற்பல அப்டேட்ஸ் போடுகிறார். ஆனால் என் செய்திக்கு பதிலளிக்கவேயில்லை… முகநூலில் தினமும் பல நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறார்… ஆனால் தங்களைக் குறித்தும் எது உண்மை என்று வினவியும் செய்தி அனுப்பியதால் என்னவோ என்னுடைய நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் வைத்துள்ளார்……..

  • vedaprakash Says:

   பொறுத்திருந்து பாருங்கள், என்ன பதில் சொல்கிறார் என்று. இன்றைய சூழ்நிலையில் இந்து-காரணத்திற்காக பலர் வேலை செய்தாலும், அவர்களிடத்தில் “தான்” என்ற எண்ணம் உள்ளது. அதிலும் விளம்பரம், பிரபலம், புகழ், என்றெல்லாம் வரும்போது, எங்கே “தனது” போய்விடுமோ அல்லது பங்குப் போட்டதுபோல ஆகிவிடுமோ என்ற மனப்பாங்கெல்லாம் உள்ளது.

 5. S. K. Kannan. Says:

  This is clear proof as to know how the benevolent Christians have destroyed Hindu temples at Mylapore.

  Suppressing historical evidences for their mythical characters has been one of the shameful historiography of the world.

  More they insist on such myths, the more they are going to invite the truth about their bad deeds, heinous crimes and inhuman atrocities.

  Therefore, at least now, they can pack up and leave India peacefully.

  Or stop all these nonsence by handing over places in Mylapore and other places in Kerala and shut up with their new and genuine churches built thereafter.

  The sins committed by them cannot be washed away and they have to face the day of judgment.

 6. Aravindan Neelakandan Says:

  மதிப்பிற்குரிய திரு.வேதபிரகாஷ் அவர்களுக்கு, நீங்கள் என்னை தெய்வநாயகம் செமினாரில் மைலாப்பூரில் பார்த்தது நினைவிருக்கலாம். கணேசன் அய்யாவிடம் அந்த மாநாட்டிலேயே ஜெயமோகன் கட்டுரைடை பிரதிகள் எடுத்து அங்கு விநியோகிக்க சொன்னவனும் நான் உட்பட இருக்கும் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவினரும் ஒரு சைவ சமய அன்பருமே. அதற்கு முன்னதாக மற்றொரு நண்பருடன் சென்று தெய்வநாயகத்தை சென்று சந்தித்திருந்தேன். அவருடைய திராவிட சமயம் பழைய நூல் பிரதிகளையும் வாங்கினேன். ஜான் சாமுவேலின் ஆசியவியல் மையத்துக்கும் சென்று அங்குள்ள அறிக்கைகளையும் வாங்கினேன். மைலாப்பூர் அகழ்வாராய்ச்சி குறித்த கட்டுரையை 2006 இல் என் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளேன். (http://arvindneela.blogspot.in/2006/12/1_16.html) தாங்கள் குறிப்பிடும் சிடியை நான் பார்க்கவில்லை. தங்கள் தரவுகளை நான் பயன்படுத்தவில்லை. அப்படி பயன்படுத்தியிருந்தால் அதை குறிப்பிடுவதில் நூலாசிரியர் இருவருக்கும் எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் தாங்கள் செய்யும் பணியின் அர்ப்பணிப்பையும் தீவிரத்தையும் அதில் நீங்கள் காட்டும் அறிவார்ந்த ஆழத்தையும் என்றும் மதிப்புடனே பார்ப்பவன் நான். பணிவன்புடன் அநீ

  • vedaprakash Says:

   உமது பதிலைப் பார்த்ததும், உடனே என்னுடைய பதிலை தட்டெச்சு செய்ய ஆரம்பித்தேன். பத்து பக்கங்களுக்கு மேலாக சென்றது. படித்துப் பார்த்தேன். அவ்வளவும் தேவையா என்று நினைத்து சும்மாயிருந்து விட்டேன். இருப்பினும் பதில் கொடுக்காவிட்டால், வேறு மாதிரி நினைக்கக் கூடும். எனவே குறிப்பாக சொல்லி விடுகின்றேன்:

   1. என்னுடைய கிருத்துவ தொடர்புகள் 1976லிருந்து ஆரம்பிக்கின்றன.

   2. கிருத்துவர்கள் தெய்வநாயகம் முதலியோரைச் சந்தித்தது 1986லிருந்து தொடங்குகிறது.

   3. 1989ல் வெளிவந்த “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” புத்தகத்திலேயே தெய்வநாயகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

   4. திரு ஈஸ்வர் சரண் புத்தகத்திற்கு வேண்டிய ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள், செய்தித்தாள் பிரதிகள் முதலியவை என்னால் கொடுக்கப்பட்டது. இதனை அவரது முன்னுரையில் ஒப்புக்கொண்டுள்ளார் (1991, 1995 மற்றும் 2010 பதிப்புகள்).

   5. “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்ற என்னுடைய புத்தகம் அடங்கிய சிடி மூன்று நபர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டது (ஒருவருக்கு இருமுறை).

   6. இவையெல்லாம் 2007க்கு முன்னர் நடந்தவை.

   7. கடைசியாக ஒன்று மட்டும் குறிப்பிடுகின்றேன் – யார் என்னிடத்திலிருந்து சிடியை வாங்கிச் சென்றாரோ, அவர்தாம் .உங்களது புத்தகம் வெளிவருவதற்கு முன்னரே, அதன் பிரதியை / நகலை விமர்சனத்திற்காக / கருத்திற்காக சுற்றில் விட்டவர்.

 7. aravind Says:

  இதுதான் அவரின் பதில்…. உங்கள் சந்தேகம் தெளிவாயிற்றா?????????

  மதிப்பிற்குரிய திரு.வேதபிரகாஷ் அவர்களுக்கு, நீங்கள் என்னை தெய்வநாயகம் செமினாரில் மைலாப்பூரில் பார்த்தது நினைவிருக்கலாம். கணேசன் அய்யாவிடம் அந்த மாநாட்டிலேயே ஜெயமோகன் கட்டுரைடை பிரதிகள் எடுத்து அங்கு விநியோகிக்க சொன்னவனும் நான் உட்பட இருக்கும் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவினரும் ஒரு சைவ சமய அன்பருமே. அதற்கு முன்னதாக மற்றொரு நண்பருடன் சென்று தெய்வநாயகத்தை சென்று சந்தித்திருந்தேன். அவருடைய திராவிட சமயம் பழைய நூல் பிரதிகளையும் வாங்கினேன். ஜான் சாமுவேலின் ஆசியவியல் மையத்துக்கும் சென்று அங்குள்ள அறிக்கைகளையும் வாங்கினேன். மைலாப்பூர் அகழ்வாராய்ச்சி குறித்த கட்டுரையை 2006 இல் என் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளேன். (http://arvindneela.blogspot.in/2006/12/1_16.html

  ) தாங்கள் குறிப்பிடும் சிடியை நான் பார்க்கவில்லை. தங்கள் தரவுகளை நான் பயன்படுத்தவில்லை. அப்படி பயன்படுத்தியிருந்தால் அதை குறிப்பிடுவதில் நூலாசிரியர் இருவருக்கும் எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் தாங்கள் செய்யும் பணியின் அர்ப்பணிப்பையும் தீவிரத்தையும் அதில் நீங்கள் காட்டும் அறிவார்ந்த ஆழத்தையும் என்றும் மதிப்புடனே பார்ப்பவன் நான். பணிவன்புடன் அநீ

 8. S. S. Sankaranarayanan Says:

  இரா. கிருஷ்ணமூர்த்தி நிச்சயமாக ஒரு மதிபுக்குரிய பத்திரிகையாசிரியர், நாணயவியல் வல்லுனர். ஆகவே, அவர் இத்தகைய சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளைப் பரப்புவதில் ஆதரவு கொடுத்திரிக்க மாட்டார். ஆனால், எல்லா ஊடக அலுவலகங்களிலும் ஒவ்வொரு சித்தாந்த, அரசியல் ஈடுபாடுள்ள ஆட்கள் அல்லது அவர்கள் தாக்கத்தை செயல்படுத்தும் வகையில் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும், விளம்பரங்கள் கிடைக்கின்றன எனும்போது நாளிதழ்கள் அத்தகைய தாக்கத்திற்ல்கு அடி பணிகிறது. அஎய்திகள் போன்ற விளம்பரங்கள், அல்லது விளம்பரங்கள் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.

  அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இருப்பிம் நடுநிலை தவறாலமல் இருக்க அல்லது பத்திரிகா தர்மம் நசமநிலையில் இருக்க, உண்மை நிலைப் பற்றியும், அவர் அஅந்நாளிதழில் விவரங்களை வெளியிடலாம்.

  அவ்வாறு செய்தால், உம் போன்றவர்கள் இம்மாதிரியான விமர்சனங்களை செய்யமல் இருக்கக்கூடும்.

 9. S. S. Sankaranarayanan Says:

  3 St. Thomas myth in India
  Written by VedaprakashThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it , on 2008-08-11 06:30:01
  The problem with Christian scholars, researchers and writers is that they write religious beliefs as historical truth in historical context.

  The work of M. Deivanayagam has already been refuted by Arunai Vadivelu mudaliar through his book and by others. I know that one K. V. Ramakrishna Rao had sent 64 pages refutation of his book “Viviliyam, Tirukkural, Saiva Siddhantam” to him, but he never replied. He had sent notes to his daughter, but the same response.

  In fact, I have sent a mail to you in response to your article, but you did not respond.

  Your suggestion of Hindu religion influenced by Christianity is baseless and it is ironical that a person of your stature to believe so.
  Your mentioning of “doubting Thomas’ to India and all are totally not historical and no historian would accept such myth.

  VEDAPRAKASH
  11-08-2008
  4 Unhistorical
  Written by M. NachiappanThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it , on 2008-08-14 04:56:04
  Marvin Olasky’s exposition of Hindu religion is wrong and no scholars would accept.

  When Christrianity it was not traceable in the middle east historically, locating “doubting Thomas” in India ad all are ridiculous.
  5 Written by Marvin OlaskyThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it , on 2008-08-18 14:38:00
  My thanks for publishing part of this article from World magazine; those who want to read more should go to http://www.worldmag.com/articles/8382?CFID=5999411&CFTOKEN=69246286
  One correction: I am not a counselor to President Bush; I did offer some advice when he was governor of Texas.
  6 St.Thomas- who was He
  Written by devapriyaThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it , on 2008-09-04 12:01:36
  We do not have any authentic information of any of the Apostles and as per Acts Jerusalem Chruch forced Paul to do cleaning rituals.

  Apostles had nothing to do with Christianity.

  Trinity did not come before Late.4th Cen

  To accept thesis of these two Frauds only bring the reputation of Authors of your repute

  • vedaprakash Says:

   Thank you for recollecting.

   Mervin Olasky has been tactful enough in not referring to my comments there.

   Anyway, he and his friend Deivanayagam could not have forgotten, when I had an unexpected encounter inside Meenakshi temple

 10. S. S. Sankaranarayanan Says:

  மேற்கண்ட இடுகைகளை கீழ்கண்ட தளத்தில் கண்டேன்.

  http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=158&Itemid=43

  அதற்குப் பிறகு உங்களது பதிலை காணோமே?

 11. சிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்! « தாமஸ்கட்டுக்கதை Says:

  […] [7] https://thomasmyth.wordpress.com/2012/04/06/original-kapaleswarar-temple-inscriptions-found-disappear… […]

 12. தேவப்ரியாஜி Says:

  1985இல் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” நூலை எழுதி, தொடர்ந்து கிறிஸ்துவ சதிகளை அழகாக வெளிப்படுத்தி வருகிறீர்கள்.

  உங்கல் புத்தகம் பதிப்பு நிலையில் சாந்தோம் ஆர்ச்பிஷப் மற்றும் தெய்வநாயகம் எனப் பலருக்கு பதிவுத் தபாலில் மதிப்புரைக்கு அனுப்பியதற்கு எந்த பதிலும் தரவில்லை.

  தாங்கள் தொடந்து தெய்வநாயகமிடன் தொடர்பிலும் வைத்துள்ளீர்கள்.

  பல நேரங்களில் பல்வேறு தரவுகள் வரும்போது கொடுத்தவர் யார் என்பதை சேமீக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் Breaaking India-vil தாங்களின் பல பழைய விஷயங்கள் உள்ளன என்பது உண்மையே.

  புதிய ஏற்பாடு மட்டுமே கிறிஸ்துவம் பற்றிய அடிப்படை ஆதார நூல். அதன்படி மதத்தை ஸ்தாபித்த பவுல் கடிதம்படியும்- சுவிசேஷங்களின் கதை நாயகர் ஏசுவின்படியும் அவர்கள் வாள்நாளில் உலகம் அழிய வேண்டும். இது பற்றி என் வலைப்பதிவு.

  http://devapriyaji.activeboard.com/t49213357/jesus-or-mohammed-who-is-christ/

  இந்த ஏசு சீடர்களுடன் இயங்கிய காலம் எத்தனை நாள்- ஒரு வருடத்திற்கும் குறைவு என மாற்கு; மத்தேயு;லூக்கா சுவிகளும்- யோவான் சுவியில் 2 வருடமும் மேலும் ஒரு சில நாட்களும் எனப் புனைகின்றது. சீடர்கள் அனைவரும் ஜெருசலேமிலேயே இர்ந்தனர். 45 – 50 வாக்கில் பவுல் வந்தபோது பவுலுடைய சீடருக்கு சுன்னத் சேய ஏசு சீடர் சொன்னார்கள், செய்யப்பட்டது. பின் பவுல் கைது ஆனார். ரோமன் கவர்னர் விசாரணை போது ஏசு உயிர்த்து சீடர் 12 பேர், 500 பேருக்கு காட்சி என கடிதத்தில் சொன்னவர்- ஒருவரையும் சாட்சிக்கு கூப்பிடாமல்; சதுசேயர் பரிசேயர் இடையே பிரிவினை மூட்டிய்தையே அப்போஸ்தலர் நடபடிகள் சொல்கிறது. பவுல் கைதின் போது அப்போஸ்தலர் அனைவரும் ஜெருசலேமில் இருந்தனர்- அவர்கள் கைது ஆகாவில்லை, பவுலிற்கு உதவி செய்யவும் இல்லை. அதாவது சீடர்களுக்கும் பவுலிய கிறிஸ்துவத்திற்கும் தொடர்பே இல்லை.

  இவற்றை உணர்ந்த சர்ச் ௩,4ம் நூற்றாண்டுகளில் புனைந்தவையே பல்வேறு சீடர்கள் நடபடிகள். அதே போல 14ம் நூற்றாண்டில் எழுந்த புரோட்டஸ்டன்ட் கிளர்ச்சியின்போது, சீடர்கள் மதம் பரப்ப சென்றனர்- கல்லறைகள் உண்டு என சொல்ல போப்பினால் பலர் அனுப்பட்டனர். பல கல்லறைகதைகள் வந்தன.

  • vedaprakash Says:

   நண்பரே நன்றி,
   1. என்னுடைய புத்தகம் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வெளி வந்தது ஆகஸ்டு 1989ல், 1995 இல்லை.

   2. திரு அரவிந்தன் நீலகண்டனுக்கு கொடுத்துள்ள பதிலை பார்க்கவும்.

   3. உம்முடைய பதியைப் படித்துப் பார்த்தேன். புதிய கோணத்தில் உள்ளது. ஆதாரங்களுடன், விரித்து எழுதலாம்.

 13. aravind Says:

  கடைசியாக ஒன்று மட்டும் குறிப்பிடுகின்றேன் – யார் என்னிடத்திலிருந்து சிடியை வாங்கிச் சென்றாரோ, அவர்தாம் .உங்களது புத்தகம் வெளிவருவதற்கு முன்னரே, அதன் பிரதியை / நகலை விமர்சனத்திற்காக / கருத்திற்காக சுற்றில் விட்டவர்////

  Badri Seshadri???????

 14. Aravindan Neelakandan Says:

  மதிப்பிற்குரிய திரு.வேத பிரகாஷ் அவர்களுக்கு, தங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் மீண்டும் கூறுகிறேன். தங்கள் சிடியை நான் பார்க்கவும் இல்லை. அதை எவரும் எனக்கு தரவும் இல்லை. ஆம் நீங்கள் தொடக்க காலத்திலிருந்தே இவ்விசயத்தில் பணியாற்றி வருகிறீர்கள் என நான் அறிவேன். என்னுடைய தரவுகள் முழுக்க முழுக்க நானாகவே சென்று சேகரித்தவையே. எங்கள் நூல் வெளிவருவதற்கு முன்னால் அதன் பிடிஎஃப் காப்பியை ஒன்றிற்கும் மேற்பட்டோர் மதிப்புரைகள் பெற்று தருவதற்காக கேட்டு வாங்கினர். அவர்களுக்கு அளித்திருந்தோம். அதில் ஒருவர் தங்களிடம் சிடியை வாங்கியதாக நீங்கள் கூறுகிறீர்கள். இருக்கலாம். ஆனால் அவர் எவராயினும் எங்களில் எவருக்கும் அந்த சிடி வந்து சேரவில்லை. மாறாக 2008 இல் அந்த சிடியை அவர் வாங்கி சென்றமையாக நீங்கள் எழுதியுள்ளீர்கள். பின்னர் பதிலில் 2007-க்கு முன்னர் அனுப்பப்பட்டதாக கூறியுள்ளீர்கள். ஆகஸ்ட் 2008 இல் நாம் முதலில் சந்தித்தோம் அதற்கு முன்னரும் கூட இந்த அகழ்வாராய்ச்சி குறித்த ஒரு கட்டுரை விஜயபாரதத்தில் வெளியாயிற்று. இவை அனைத்தையும் தாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தங்களிடமிருந்து தரவுகளை நான் பெற்றிருந்தால் மூத்த வரலாற்றாராய்ச்சியாளரான தங்கள் பெயரை குறிப்பிடுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் மீண்டும் இவ்விசயத்தில் தங்கள் பணியும் சேவையும் ஆராய்ச்சி அறிவையும் நான் மிகவும் மதிக்கிறேன். பணிவன்புடன் அநீ.

 15. W. X. Jose Verghese Says:

  கடந்த 300 ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை, சரித்திர நிகழ்வுகளை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, மறுக்கவோ முடியாது.

  கிறிஸ்தவர்கள் நிச்சயமாக, கபாலீசுவரர் கோவிலை இடுத்து சர்ச் கட்டிக் கொண்டதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக செயின்ட் தாமஸை வைத்துக் கொண்டு, மேன்மேலும், இத்தகைய பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருந்தால், அவை இந்துக்களை நிச்சயம் தூண்டி விடுவது போலிருக்கும்.

  பதிலுக்கு, இந்துக்கள் பழையதைப் புரட்டிப் பார்ர்க ஆரம்பித்தால், உள்ள விஷயங்கள் நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக இருக்காது..

  மேன்மேலும், இக்கதையைப் பரப்பிக் கொண்டிருந்தால், அதற்கேற்ற முறையில் வேதபிரகாஷ் போன்றவற்களிடமிருந்தும், எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டிருநக்கத்தான் செய்யும்.

  உலகம் முழுவதும் உள்ள எல்லா ஆவணங்களையும் கிறிஸ்தவர்கள் அழிக்க முடியாது.

  ஆகவே, உள்ளவற்றை வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வாழ்வதே சிறந்தது.

 16. S. Avudaiyappan Says:

  அடடா, என்னா நைனா இது, கடசிலே, உங்கலுக்க்குள்ளேயே சண்டையா, விடாதே மாமு.

 17. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/06/original-kapaleswarar-temple-inscriptions-found-disappear… […]

vedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: