கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை!

கபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது”! கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:

MYLAPORE FELL INTO THE HANDS OF THE PORTUGUESE IN A.D 1566 WHEN THE TEMPLE SUFFERED DEMOLITION. THE PRESENT TEMPLE WAS REBUILT 300 YEARS AGO. THERE ARE SOME FRAGMENTARY INSCRIPTIONS FROM THE OLD TEMPLE STILL FOUND IN THE PRESENT SHRINE AND IN St. THOMAS CATHEDRAL.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு:

“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.

குறிப்பிட்ட பகுதியை பெரிய அளவில் காணலாம்:

Temple-says-christians-demolished

Temple-says-christians-demolished

ஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:

Kapaleswar-temple-says-christians-demolished

Kapaleswar-temple-says-christians-demolished

கபாலீஸ்வர இறைவனை, திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர். அப்பொழுது, கோவில் கடற்கரையில் இருந்தது தெர்கிறது. அப்பாடல்கள் பழைய கோயில் இப்போது உள்ள சர்ச் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்தது என்பதைக் காட்டுகின்றன. அருணகிரிநாதர் காலத்தில் கூட (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது, அவரது, “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

கயிலைப் பதியரன் முருகோனே
கடலக்கரைதிரை அருகே – சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே
மகிமைக் கடியவர் பெருமாளே!

கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் வழிபாட்டிற்கு சர்ச்சையும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

சாந்தோம் சர்ச் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” – அதவது இக்குறிப்புகள் சர்ச்சின் கீழ் தோண்டியபோது கிடைத்தக் கற்களின் மீது காணப்படுகின்றன – என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.

1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதீட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு, “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்”, என்று குறிப்பிடுபகிறது.  பிறகு கிருத்துவர்களுக்கு வெட்கம் இல்லை, அந்த இடத்தில் சர்ச்சைக் கட்டிக் கொண்டு கூத்தடிப்பதற்கு?

மற்றொரு இறையிலி / தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்கிறது, என்று தெரிகிறது .

1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதீட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் : “கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204

போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .  அழிக்கப் பட்டது, உறுதியாகிறது. S.Kalyanasundaram- A Short History of Mylapore,பக்கம்.8.

போர்ச்சுகீசியர் கத்தோலிக்கக் கிருத்துவர்கள், முஸ்லீம்களைப் போல மதவெறி பிடித்தவர்கள். மற்ற மதத்தினருடைய வழிப்படும் ஸ்தலங்களை இடித்துத் தள்ளுவதில் அலாதியான இன்பம் பெறுபவர்கள். விக்கிரங்களை உடைத்துத் தள்ளுவதிலேயோ கேட்கவே வேண்டாம். கோவாவில் அவர்கள் செய்த கர்ண-கொடூர-குரூர செயல்களை விளக்க வார்த்க்தைகளே போறாது.

இதைவிட வேடிக்கை என்னவென்றால், 19ம் நூற்றாண்டு வரையில், உற்சவ மூர்த்தியை சர்ச்சின் முன்பு எடுத்துவரும் போது, மூன்று முறை தாழ்த்தி-தாழ்த்தி எடுத்து வருவார்களாம், அதாவது, மூலவர் அங்கிருந்தார் என்ற பழைய ஞாபகத்தில் அவ்வாறு செய்து வந்தனர்.

© வேதபிரகாஷ்

28-01-2010

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

11 பதில்கள் to “கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!”

 1. vedaprakash Says:

  மின் தமிழில் வேண்டுமென்றே திசைத் திருப்பும் பணியை சிலர் செய்வது மாதிரி தெரிகிறது:
  ——————————————————————
  karuppaiahsolomon@gmail.com View profile
  More options Jan 18, 3:06 pm
  From: “karuppaiahsolo…@gmail.com”
  Date: Mon, 18 Jan 2010 02:06:49 -0800 (PST)
  Local: Mon, Jan 18 2010 3:06 pm
  Subject: Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

  திரு. நரசய்யா அவர்களே,

  இன்று தம்பு செட்டித் தெருவில் காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆனால் மராட்டிய வீர சிவாஜி இக்கோயில் விஜயம் செய்த போது கோவில் இன்று செயின்ட்ஜார்ஜ் கோட்டை இடத்தில் இருந்தது எனப் படித்துள்ளேன், தாங்கள் விளக்கவும்.

  அதே போல் கபாலீஸ்வரர் கோவில் இன்றைய சாந்தோம் ஜெபக்கூட இடத்தில் இருந்தது எனப் படுகின்றது. தயவு செய்து ஆதாரங்களுடன் விள்க்கவும்.
  ——————————————————————————
  இப்படி, கருப்பையா சாலமன் என்ப்வர் கேட்கிறார். அதற்கு, நரசைய்யா சொல்லும் பதில்:
  —————————————————————————–
  kra narasiah View profile
  More options Jan 21, 8:50 am
  From: kra narasiah
  Date: Wed, 20 Jan 2010 19:50:29 -0800 (PST)
  Local: Thurs, Jan 21 2010 8:50 am
  Subject: Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

  காளிகாம்பாள் கோவில் கோட்டையில் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை.
  ஆனால் சாந்தோம் சர்ச் இருக்குமிடத்தில் நேமிநாதர் கோவில் இருந்த்து. இன்றும் சர்ச் இருக்குமிட்த்தில் அகழ்வாய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட கோவில் தூண்கள் உள்ளன். திருப்புகழில் கபாலீஸ்வரர் கோவிலுள்ள முருகனைக் குறித்துப் பாடுகையில் அருணகிரிநாதர் இவ்வாறு சொல்கிறார்:
  “கடல் கரை திரையருகே சூழ் மயிலை பதி தனில் உறைவோனே” இது பாடப்பட்ட காலத்தில் சர்ச் அங்கு இருந்திருக்க முடியாது.
  ஆகையால் கபாலீஸ்வரர் கோவில் அங்கிருந்து இடம் பெயர்ந்தது என்ப்தை அறியலாம்.
  நரசய்யா
  —————————————————————————-
  அதற்கு ஹரி கிரஷன் என்பவர் இப்படி பதிலளிக்கிறார்:
  ———————————————————————–
  Hari Krishnan View profile More options Jan 21, 2:08 pm
  From: Hari Krishnan
  Date: Thu, 21 Jan 2010 14:38:26 +0530
  Local: Thurs, Jan 21 2010 2:08 pm
  Subject: Re: [MinTamil] Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
  திருப்புகழில் மட்டுமல்ல; திருஞான சம்பந்தர் சொல்கிறார்:

  *ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்*
  கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
  கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
  ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்

  பொருள்: பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும்
  கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?
  ———————————————————————-
  பிறகு தொடர்கிறார்
  ——————————-
  மேற்கண்ட பதிகத்தில் ஆறாம் பாடலும் இதையே சொல்கிறது:

  மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
  *கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்*
  அடலானே றூரு மடிக ளடிபரவி
  நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

  பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் *கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும்*, வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
  ——————————————–
  இதற்கு திவாகர் சொல்லுவது:
  ——————————————-
  V, Dhivakar View profile More options Jan 21, 5:05 pm
  From: “V, Dhivakar”
  Date: Thu, 21 Jan 2010 17:35:15 +0530
  Local: Thurs, Jan 21 2010 5:05 pm
  Subject: Re: [MinTamil] Re: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

  மயிலைக் கோயில் எங்கே முதலில் இருந்தது, இப்போது ஏன் இங்கே இருக்கிறது என்பன்

  > போன்ற கேள்விகள் மின் தமிழுக்குப் புதிதோ என்னவோ, தமிழகத்தில் அதுவும் > சென்னையில் பேசிப் பேசி, எழுதி எழுதி அலுத்துப் போய்விட்டார்கள். ‘தி ஹிண்டு’ வில் கூட இந்த பிரச்னை விவாதக்களமாக மாறிய நாட்கள் உண்டு. மெட்ராஸ் ம்யூசிங்ஸ் முத்தையா ஹிண்டு வில் எழுதியுள்ளார்.
  > அதுவே பிரச்னையாக மாறிப்போனது. ‘மதராச பட்டினத்தில்’ நம் நரசய்யா அவர்கள் இதைப் பற்றி எழுதியுள்ளார். மயிலைக் கோவில் மிக சமாதான முறையில் மாற்றப்படுவதற்கு உள்ளூர்ப் பெரியவர்கள் ஒப்புக் கொண்டதாகக் கூட வரலாறு சொல்கிறது. (soft
  > transfer).

  பொதுவாக பதினான்காம் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் கோயில்கள் சூறையாடப்பட்ட காலம். விஜயநகர அரசு நம்மைக் காப்பாற்றியது. ஆனால் ஐரோப்பியர்கள் காலடி எடுத்த வேளை, மறுபடியும் கோயில்கள் வேறுவிதத்தில் பாதிக்கப்பட்டன. ஐரோப்பியர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள அவர்களுக்கு போர்ப் பாசறையே மயிலை, திருவல்லிக்கேணி கோயில்கள்தான். 17 ஆம் நூற்றாண்டு சென்னை கோவில்களுக்கு போதாத காலம். கடந்த கால நிகழ்ச்சிகள் எல்லா புத்தகங்களிலும் நன்றாகவே பதிக்கப்பட்டுள்ளன.
  ————————————————————————
  ஆகவே, இந்த திசைத் திருப்பும் வேலை எதற்கு என்று தெரியவில்லை.

 2. K. Venkatraman Says:

  When something is expected from the government, the scholars are tempted to go after the politicians.

  Only few people stand by truth, honest and historicity.

  It is good that such inscription is put up in the temple, so that every Hindu who sees it could feel and understand the atrocities of the Christians.

  And the true and honest Christiand could die on the cross to repent and wash away such sins commited, i.e, demolishing Hindu temples and posing as “gentle men”!

 3. Ferdinand Lucas Says:

  I have read and understood the issue through my Tamil knowing friend.

  Really, it is unfortunate that Indian Catholics should stoop down to such fraudulent method.

  The Vatican should advise the Indian Christians not indulge in such actitities, that too, in this modern age, as it would bring bad image to the Catholic religion.

  The Indian high priests might try to get more converts, or bring heathens to their fold or even play dirty politics, but in the long run, only infamy remains gathering dust under their dress.

 4. Ferdinand Lucas Says:

  I could see that the inscription mentions the so-called “doubting” Thomas came to india in 2nd century CE. I do not know what authority or evidence is there to prove, as the Christians claim that he came to Madras in the first century and was killed by a Brahmin!

  Would you please clarify it?

 5. vedaprakash Says:

  I have posted the following in the context of “myth of thomas”, demolition of original Kapaleeswarar Temple and building of Church there on the shore, shfting of temple etc as follows:

  1. Would the Christians demolish the Santome church and build Kapaleswarar Temple there and hand over to Hindus?
  http://christianityindia.wordpress.com/2010/04/20/சாந்தோம்-சர்ச்சை-இடித்து/

  2. The drama played by the Christians after demolishing the Kapaleeswarar temple.
  http://tamilheritage.wordpress.com/2010/04/20/கபாலீஸ்வரர்-கோயிலை-இடித்/

  3. The Kapaleeswarar Temple itself says that it was there on the shore, but the Chistians demolished it!
  https://thomasmyth.wordpress.com/2010/01/28/கபாலீஸ்வரர்-கோவிலே-சொல்க/

  4. The hypocrite Christians who demolished the Kapaleeswarar temple.
  https://thomasmyth.wordpress.com/2010/04/19/கபாலீஸ்வரர்-கோயிலை-இடித்/

  These were necessitated as the Christians have again announced that the Temple would be liberated and given to “thomas christians”, the eligible owners!

 6. கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் – விவரம் « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] […]

 7. தாமஸ்கட்டுக்கதை Says:

  […] […]

 8. தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம Says:

  […] https://thomasmyth.wordpress.com/2010/01/28/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0… […]

 9. கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந் Says:

  […] [4] https://thomasmyth.wordpress.com/2010/01/28/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0… […]

 10. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2010/01/28/temple-itselfsays-that-it-was-demolished-by-christians/ […]

 11. கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அ Says:

  […] [8] https://thomasmyth.wordpress.com/2010/01/28/temple-itselfsays-that-it-was-demolished-by-christians/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: