Archive for திசெம்பர் 25th, 2009

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!

திசெம்பர் 25, 2009

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!

கிருத்துவர்கள் இப்படி மறுபடியும் கதைவிட ஆரம்பிப்பார்கள் என்றுதான் பத்து நாட்களுக்கு முன்பாக இப்படியொரு பதிவை செய்து வைத்திருந்தேன்:

https://thomasmyth.wordpress.com

எதிர்பார்த்தபடியே, கிருஸ்துமஸ் சாக்கை வைத்துக் கொண்டு தங்களது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டார்கள்!

“மயிலாப்பூரில் முதலில் பிறந்த சாந்தோம் தோமையர் சர்ச்” என்று பக்கம்.9ல், மிகவும் மோசமாக, முன்பிருந்த நிலையைவிட, இன்னும் புது-புது புளுகுமூட்டைக் கதைகளையும் சேர்த்து பிரசுரித்துள்ளது.

ஆகவே, வேறு வழியில்லை.

மறுபடியும், உண்மைகளை சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால்!

கபாலீஸ்வரர் கோவிலை இடித்தது மட்டுமில்லாது, உண்மையை மறைத்து, இப்படி அயோக்கியத்தனமாக பிரச்சாரம் செய்வது எந்த ஆண்டவனுக்கும் அடுக்காது.

முன்பு ஒருதடவை, என்னுடைய புத்தகம், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு விவரங்கள் (அருளப்பா எப்படி போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பணம் கொடுத்து மாட்டிக் கொண்டார், பழி ஆச்சார்யா பால் என்பவரின்மீது போட்டுத் தப்பித்துக் கொண்டார் முதலியவை) முதலியவற்றை திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். எனது கடித்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கொரியர் மூலம் திருப்பி அனுப்பி விட்டார். அதாவது, உண்மையினை எதிர்கொள்ள முடியவில்லையா அல்லது திரு ஈஸ்வர் சரண் தன்னுடைய தளத்தில் எடுத்துக் காட்டியுள்ளபடி, கிருத்துவர்களின் சட்டை பாக்கெட்டுக்குள் அடைப்பட்டுவிட்டாரா? ராமசுப்பையரே ஒப்புக் கொள்ள மாட்டாரே? கர்த்தரே இவர்களை மன்னியுங்கள்!