கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)

April 8, 2012

கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)


குதிரையேறும் ராவுத்தன் – கந்தர்புரி தாமஸ் (மேலேயுள்ள சித்திரம்)                                                                                                                         போர்ச்சுகீசியர் தாமஸ் கட்டுக்கதையை பரப்பியவிதம்: போர்ச்சுகீசியர்களுக்கு தாம் போகுமிடமெல்லாம் செயின்ட் தாமஸைல் கண்டுபிடிப்பது, சில எலும்புகளை போடுவது, இடத்தைப் பிடிப்பது, பிறகு ஆக்கிரமித்த இடத்தில் சர்ச்சைக் கட்டுவது என்பது பழக்கமாக இருந்து வந்தது. கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் பலவிதங்களில் ஒத்துப் போகிறது. இரண்டு கட்டுக்கதைகளையும் ஒரேமாதிரி புனையப்பட்டு வடிவமைப்புக் கொடுத்துள்ளது போன்று அவர்கள் அழித்த ஆதாரங்கள் காட்டுகின்றன. அங்கும் முதலில் இருந்த சர்ச்சை இடித்துவிட்டு, புதிய சர்ச்சைக் கட்டியுள்ளார்கள். உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார்கள்.

கந்தர்புரியின் செயின்ட் தாமஸ் பக்கெட் (1118-1170): தாமஸ் எ பக்கெட் (St. Thomas à Becket) என்ற அந்த தாமஸ் ஆங்கிலதேசபிமானியாகக் கருதப்படுகிறார்[1]. அப்போஸ்தலர் தாமஸ் நினைவுநாளில் பிறந்ததால், இவருக்கு அதேபெயர் சூட்டப்பட்டதாம். கிட்டத்தட்ட அவரைப் பற்றிய கதைகள் எல்லாமே “ராபின் ஹுட்” கதைகள் போன்றேயுள்ளன. ஹென்றி VIII (Henry VIII) ராஜாவிற்குச் செல்லவேண்டியை வரிப்பணத்தை இவரே வசுல் செய்துகொண்டாராம். இதனால், ராஜாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாது, இவர் குதிரையில் அங்குமிங்குமாகத் தெரிந்து வந்தபோது, தமக்கெதிராக படையைத் திரட்டுகிறார் என்ற சந்தேகமும் வளர்ந்தது. அவரிடத்தில் தங்கம், வைரம் என்று ஏராளமான செல்வம் இருந்ததாம். ராஜா, “எப்படி நீ இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய்?”, என்று கேட்டதற்கு, கடவுள் கொடுத்தார் என்றாராம். அதுமட்டுமல்லாது, ஏழைகளுக்கு செல்வத்தைக் கொடுத்து வந்தாராம். கந்தர்புரி சர்ச்சின் ஆர்ச்பிஷப்பாக இருந்து (1118-1170), ஹென்றிக்கு இணையாக ஆதிக்கத்தைச் செல்லுத்தினாராம். இதனால், ராஜா இவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

அரசதுரோகி தாமஸ் உயிர்த்தியாகி தாமஸ் ஆனது: நான்கு தனக்கு வரவேண்டிய கணக்கைத் தீர்த்து வாருங்கள் என்று நால்வரை அனுப்பினாராம். அவர்களும் தாமஸின் கதையை முடித்துவிட்டு வந்தார்களாம். அதாவது ராஜாவின் கையாட்களால் டிசம்பர் 29 1170 அன்று கொலையுண்டு உயிர்த்தியாகியானார்[2]. செத்தப்பிறகும், அந்த தாமஸின் புகழ் அதிகமாகவே இருந்ததினால், சரித்திரத்திலிருந்தே அப்பெயரை நீக்க என்ற மன்னன் முயன்றான். 1538ல் ஹென்றியின் கட்டளைப்படி[3], அந்த சர்ச் இடிக்கப்பட்டு, தாமஸின் “ரெலிக்ஸ்” அதாவது எலும்புகள் கூட விட்டு வைக்காமல் எரிக்கப்பட்டன[4]. இதெல்லாமே, “அபோகிரபல் பைபிள்” அல்லது மறைத்துவைக்கப் பட்டுள்ள பைபிள்களில் தாமஸின் கதைகளைப் போன்றே இருப்பதைக் காணலாம்.

தாமஸ் கொல்லப்பட்ட ரணகளறி குரூரக்கட்டுக்கதை: கிருத்துவம் ரத்தத்தில், கொலையில், கொடுமையில், குரூரத்தில் தோய்ந்து வளர்ந்தது. இதனால், அவர்கள் மனதில் வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பன மறைதேயிருந்து, வேலைசெய்து வந்துள்ளது. “தியாகவியல்” என்று வைத்துக் கொண்டு, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியோரை உத்தமர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று கதைப் புனைவது அவர்கள் வழக்கம். ஏசு மக்களுக்காக உயிர்துறந்தார், தினமும் அவர் ரத்தம்-சதை குடித்துத்தின்று தான் நம்பிக்கையுடன் கிருத்துவர்கள் வாழ்கின்றனர்[5] என்பதனை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் இத்தகைய ரணகளறி குரூரக் கட்டுக்கதைகள் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆகவே, தாமஸ் பக்கெட் கொலையுண்டதை குரூரமாகச் சித்தரித்துள்ளனர். தாமஸ் முழங்கால் போட்டு தியானம் செய்ய்ம் வேளையில், அந்த நான்கு கொலையாளிகள் கத்திகளுடன் வருகின்றனர். முதலில் ஒருவன் பின்பக்கமாக தலையை வெட்டுகிறான். ரத்தம் பீரிட்டெழுகிறது; அடுத்தவன் வெட்டுகிறான் – தலை கீழே விழுகிறது, இன்னொருவன் வெட்டுகிறான், தலைசிதறி மூளை வெளியேறுகிறது; பிறகு மற்றவனும் வெட்ட உடல் துண்டு-துண்டாகிறது. கிடைத்த அந்த சிதைந்த உடலை சீடர்கள் மறைத்து வைக்கின்றனர். ஏனெனில், அரசன் அதனையும் விடமாட்டான் என்ற அச்சம், இல்லை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்ற பயம், ஏனெனில், கிருத்துவர்களுக்கு பிணம் அதுவும் கிருத்துவ சந்நியாசி போன்றவர்களின் பிணம் என்றால் கூறுபோட்டு சாப்பிடுவார்கள்[6]. அதனால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை (இதனால் தான், கபாலி கதை கேட்டதும், கிருத்துவர்கள் அத்தகைய கதையை தாமஸுக்குக் கட்டிவிட்டனர்)

தாமஸ் பக்கெட்டைப் பற்றி வளர்ந்த கட்டுக்கதைகள்: உள்ளூர் கதைகளின்படி, அவர் போப்பினால் மரியாதை செய்யப்பட்டவுடன் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தாமஸைப் போல, இந்த தாமஸும் ஏசுநாதருக்கு இணையாக வைக்கப் படுகிறார். உள்ளூர் தண்ணீர் பிடிக்கவில்லை என்று ஆயர்க்கொம்பினால் பூமியைக் குத்தினாராம். உடனே நீர் குபீரென்று கொப்பளித்தெழுந்து ஊற்றுபோல சொரிந்ததாம். இன்னொருமுறை இரவில் குயில் இனிமையாகப் பாடிக்க்கொண்டிருந்ததாம். அதைப் பிடிக்காமல், இனிமேல் தனதருகில் யாரும் பாடக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டாராம். கென்ட் என்ற இடத்தில் ஸ்டுரூட் என்ற கிராமத்தில் இருந்த மக்கள் அரசனுக்கு தமது  ஆதரவைத் தெரியப்படுத்த, தாமஸ் குதிரையின் மீது சென்றபோது, குதிரையின் வாலை வெட்டிவிட்டார்களாம். இதனால் கோபம் அடைந்த தாமஸ், இனிமேல் அந்த கிராமர்த்தவர் வாலோடுப் பிறக்கக்கடவர் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.

மறக்காத மக்களும், கட்டுக்கதையாளர்களும்: இங்கிலாந்தில் கந்தர்புரிக் கதைகள் என்று இப்படி கட்டுக்கடைகள் அதிகமாகவே வளர்ந்தன. ஆனால், மக்கள் தாமஸை மறக்கவில்லை. பிறகு உடல் டிரினிடி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து அதன் மூலமாக பார்க்க வழிசெய்யப்பட்டது[7]. பிறகு தாமஸின் புகழ் பரவ ஆரம்பித்தது. சமாதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நோய்-நொடி தீர்க்கும் என்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. பிரெஞ்சு நாட்டு மன்னன் லூயிஸ் VII (Louis VII) அங்கு வந்து தனது மகன் நோய் நீங்க வேண்டி வந்தானாம். 1172ல் தாமஸ் ரத்தம் தோய்ந்த ஒரு கல் போப்பிடம் அனுப்பிவைக்கப்பட்டதாம். அது இப்பொழுது மாரியா மகோரி (the church of Sta. Maria Maggiore) என்ற சர்ச்சில் உள்ளது. அந்த ரத்தம், எலும்புகள், மண்டையோடுகள் பற்றியும் அதிகமாகவே கதைகள் வளர்ந்தன[8]. எனவேத்தான், இப்பொழுதும் ஹாரிபாட்டர் போன்ற கட்டுக்கதைகள் மேனாடுகளில் பிரபலமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

வின்சென்ட் ஸ்மித் மற்றவர்கள் தாமஸ் கட்டுக்கதைக்கு சண்டையிட்ட ரகசியம்: வின்சென்ட் ஸ்மித் என்பவன் தான், இப்பொழுதுள்ள இந்திய சரித்திரத்தை எழுதி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தவன். இது இன்றளவும் இந்தியர்கள் கண்மூடித்தனமாக படித்து வருகிறார்கள். ஆனால், அந்த  வின்சென்ட் ஸ்மித், இந்த தாமஸ் கட்டுக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வளர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டானான்[9].

இரண்டு கதைகளும் உண்மையாக இருக்கமுடியாது; அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது. அத்தாட்சியை ஆழ்ந்து ஆய்ந்தபிறகு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது, தென்னிந்திய கதை அச்சாவை ஆதரிப்பதாக இருக்கலாம். ஆனால், செயின்ட் தாமஸ் உயிர்த்தியாகியே இல்லை, ஏனெனில், முந்தைய ஹெராக்லியோன் என்ற ஞாஸ்திக் எழுத்தாளர் தாமஸ் தனது வாழ்க்கையின் இறுதிநாட்களை அமைதியில் கழித்தார் என்று உறுதியாக கூறியுள்ளார். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once. My personal experience, formed after much examination of the evidence, is that the story of the martyrdom in Southern India is the better supported of the two versions of the saint’s death. But, it is no means that St. Thomas was martyred at all, since an earlier writer, Heracleon. the gnostic, asserts that he ended his days in peace”.

அதாவது, இறந்த ஒரு மனிதனுக்கு ஒன்றிற்கு மேலான எலும்புக்கூடு, சமாதி முதலியன இருக்கமுடியாது. அதுமட்டுமில்லாது, உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். மற்ற ஆங்கில அதிகாரிகள், கிருத்துவ பாதிரிகள் சொன்னதை அவன் எற்க்கவில்லை. இருப்பினும், சில கிருத்துவர்கள் சொத்து, பணம் முதலியவற்றிற்காக, இக்கட்டுக்கதையை விடாப்பிடியாக வளர்த்து சரித்திரம் ஆக்க வேண்டும் என்று கோடிகளையும் கொட்டத் தயாராகி விட்டார்கள்.

வேதபிரகாஷ்

08-04-2012


[2] Archbishop of Canterbury (1118-1170), who was martyred on December 29 by the king’s henchmen.

[3] In 1220, Becket’s remains were relocated from this first tomb to a shrine in the recently completed Trinity Chapel where it stood until it was destroyed in 1538, during the “dissolution of monastaries, on orders from King Henry VIII. The king also destroyed Becket’s bones and ordered that all mention of his name be obliterated.

[5] உயிர்ப்பலி – யூகேரிஸ்ட் என்ற சடங்கு தினமும் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு கிருத்துவனும் அவ்வேறே நம்புகிறான். நம்பவேண்டும், இல்லையென்றால் அவன் கிருத்துவன் ஆகமாட்டான்.

[6] ரத்தத்திற்கு ரத்தம், சதைக்கு சதை என்பது அவர்களது திட்டவடமான நம்பிக்கை. அதனால்தான், டிராகுலா போன்ற படங்களில் ரத்தம் குடிக்கும் காட்சிகள் உள்ளன; ஜூம்பி / ஜோம்பிகள் – உயித்தெழுந்த பிணங்கள் மனிதர்களைக் கடித்துக் குதறித் தின்று உயிர்பெறுகின்றன. அதாவது இரண்டாவது ஜென்மத்தைப் பெறுகின்றன. இப்படியும் ஹாலிஹுட் படங்களில் காண்பிக்கப் படுகின்றன, இவையெல்லாம் இந்தியர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால், கிருத்துவர்களுக்கு புரிந்துதான் உள்ளது. அதனால்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. அவற்றை கிருத்துவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.

[8] Beneath the shrine in the MS. drawing is the chest containing the relics—the same chest in which they were deposited in 1220—and an inscription to the following effect :— “This chest of iron contained the bones of Thomas Becketskull and all, with the wounde of his deathand the pece cut out of his skull laid in the same wounde.

[9]

பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்

April 7, 2012

பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்

போர்ச்சுகீசியர் மதவெறிபிடித்த மனிதர்கள். அதனால்தான், இந்தியர்களை அவர்களைப் பரங்கியர் என்று சொல்லி வெறுத்தனர். கோவாவில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொண்று, ஆயிரக் கணக்கான கோவில்கள், மடங்கள் முதலியவற்றை இடித்துத் தள்ளினர். இன்றுகூட கோவாவிற்குச் செல்லும் போது, துளசிமாடத்தில், துளசிச்செடிக்குப் பதிலாக, சிலுவை சொருகப்பட்டிருக்கும். அத்தகைவர், சாந்தோமைப் பிடித்துக் கொண்டனர். அங்கேயிருந்த கபாலீசுசவரக் கோவிலை இடிக்க ஆரம்பித்தனர். இதனால், இந்துக்கள், விக்கிரங்கள், முக்கியமான சிற்பங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு போய், இப்பொழுதூள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

மேலேயுள்ளது சாந்தோம் கோட்டையின் வரைப்படம். அப்படியென்றால், அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த கோவிலை 1523லிருந்து இடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், அந்த முழுப்பகுதியும் அவர்கள் கையில் வராது. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் பிஷப் இல்லம், பள்ளி, செமினரி என்று கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது..

1899ல் இடிக்கப்பட்டது என்று மேற்கண்ட படத்தைக் காட்டுகின்றனர். இது உள்ளகட்டிடத்தை மாற்றியமைக்கப் பட்ட கட்டிடம் என்று நன்றாகத் தெரிகிறது.

பின்பக்க கட்டிட அமைப்பு ஒரு கோவில் போன்றேக் காணப்படுகிறது. அதாவது, கோவிலை இடித்தப் பிறகு, சுவர்கள், சில கட்டிடப்பகுதிகளை வசதிற்காக அப்படியே விட்டு வைத்திருக்கலாம். அதனால் தான் அத்தகைய பழைய கட்டுமானங்கள் தெரிகின்றன. 1987வரைக்கூட படிகட்டுகளின் இருபக்க்கங்களிலும் தாமரைப்பூ சிற்பங்கள் முதலிய இருந்தன. பிறகு எடுக்கப்பட்டுவிட்டன. முன்பே குறிப்பிடப்பட்டூள்ளபடி, பல கல்வெட்டுகளும் இருந்தன. ஆனால், அவற்றை சிதைத்துவிட்டனர். அதாவது, உண்மையினை காட்டிவிடும் என்று அவ்வாறு செய்துள்ளனர்.

மேலேயுள்ளது, தாமசின் கல்லறை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதில் எலும்புக்கூடு ஒன்றும் இல்லை. கல்லறை திறந்தநிலையிலேயே, பார்க்கும்நிலையில் இருப்பதைக் காணலாம். ஏற்கெனெவே, ஓர்டோனா என்ற இடத்தில் தாமஸ் இறந்த கல்லறை இருக்கின்றதால், இங்கு இன்னொரு கல்லறை வராது. இருப்பினும், பொய்ப்பிரச்சாரத்திற்காக, குறிப்பாக, கிருத்துவர்கள் தாங்கள் இந்நாட்டு மதத்தவரே, வெளிநாட்டவர் அல்ல என்று காட்டிக் கொள்ள இத்தகையான மோசடியில் ஈடுப்பட்டனர்.

விளைவு, போலிகளை உருவாக்க வேண்டியது தான். இதோ, இந்த சிற்பத்தை, தாமஸின் சிலை என்கிறார்கள். ஆனால், உண்மையில் தாமஸ் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆக, கோவிலில் கிடைத்த ஒரு சிற்பத்தை வைத்துக் கொண்டு, அதனை “தாமஸ்” என்பது வேடிக்கைத்தான். ஓர்டோனாவில் இருக்கும் தாமஸ் சிலை வேறு மாதிரி உள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, ஓர்டோனா (இத்தாலி)வில் உள்ள சிலை.

இது சைதாப்பேட்டையில், சின்னமலையில் இருந்த ஒரு இந்து கோவில். இதனையும் இடித்து மாற்றியுள்ளார்கள். அதிசயமான ஊற்று வரும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இது கோவிலின் பகுதியாக இருந்தது.

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

April 6, 2012

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

தினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும்? வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா? “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்புதான் கடற்கரையில் இருந்ததாக! என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக! தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].

சிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்: இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது.சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

தினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார். என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“…………………………………….               நீளோ தம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.

  1. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. 
  2. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். 
  3. மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.
இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன. துறைமுக நகர்
இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா? அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா?). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே? இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது?

எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.

கோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து  கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக  இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .

 

மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.  இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.

சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

இப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள் ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.

வேதபிரகாஷ்

06-04-2012


[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள்,  ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=442587

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

December 31, 2011

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

உமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].

தேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.

 

கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].

இந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.
உலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.
புனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.

சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்!

  • 1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.


  • 1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.


  • 1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். அங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.


  • 1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.


  • 2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.


  • கல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.

இவையெல்லாம் இருக்கும் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா? அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா? பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா? வாக்குக் கொடுக்க முடியுமா? இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா?

உள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.

தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை!வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].

வேதபிரகாஷ்

31-12-2011


[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம்,  பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=373422

[2] எஸ்.உமாபதி, தேசியதிருத்தலமானபுனிததோமையார்மலை, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 IST, http://www.dinamalar.com/testing/2011/Supplementary_detail.asp?id=4223&ncat=9&Print=1

[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்!

[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது!

[5] தினமலர், தேசியதிருத்தலமான  சென்னை புனிததோமையார்  பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.

[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.

[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!

பெப்ரவரி 28, 2011

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!
தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், வெட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].

தாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக

தினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை

பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்

லஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்படி 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர்! பாவம், சூலம், வேல், ஈட்டி என்றெல்லாம் உளறிக்கொட்டியவர்கள் இப்பொழுது அம்பு என்கிறார்கள்!

துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார்.

முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார். 1523ல்ன் போர்ச்சுகீசியர் முதலில் தாமஸ் எலும்புகளைப் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, சர்ச்சைக் கட்டிய உண்மை எப்படி ஒவர்களுக்குத் தெரியவில்லை?

புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது.மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.

அவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்

கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் புனிதமானான கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, சர்ச்சைக் கட்டிக் கொண்டு, மோசடிகள் பல செய்து, வகையாக மாட்டிக்கொண்டும், வெட்கம் இல்லாமல் இப்படி “தேசியத் திருத்தலம்” என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. திருத்தலத்தை இடித்தவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்திக் கொள்வது அசிங்கமானது, ஆபாசமானது. அவர்களை “இறையியல் பரத்தைகள்”, “சித்தாந்தப் விபச்சாரிகள்”, “தெய்வீக வேசிகள்” என்று சொன்னால்கூட போறாது.

அப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.

எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.

சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.

வேதபிரகாஷ்

28-02-2011


[1] வேதபிரகாஷ், தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!, http://thomasmyth.wordpress.com/2009/12/25/how-dinamalar-spreads-myth-of-thomas/

[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

http://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/

[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!, http://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/

[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,

பிப்ரவரி 25, 2011-, http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4223&ncat=9

[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது!

[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம்! வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன?

[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.

[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.

[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?, http://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%

தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?

ஜனவரி 21, 2011

தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?

 

எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.

முருக பக்தர்களை ஏமாற்றியது: ஆய்வு, ஆராய்ச்சி என்று வந்த கூட்டத்தைவிட, முருக பக்தியோடு வந்த பக்தர்கள்தாம் அதிகம். ஞானப்பழம் சொட்டுவது போல பாட்ரிக் ஹேரிகன் முருகனுக்காக, ஒரு பிரமாதனான இணைத்தளத்தை அமைத்துள்ளார்[2]. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவரேத்தான் அந்த தாமஸ் கட்டுக்கதையிலுள்ள மோசடிகளை எடுத்துக் காட்டும் இணைத்தளத்தையும் நிர்வகித்து வருகின்றார்[3]. பிறகு எப்படி மறுபடியும் “இந்தியாவில் ஆதி கிறித்தவம்” என்று ஆரம்பித்துள்ளார்கள், என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.

முருகன் மாநாட்டு ஆய்வாளர்களை ஏமாற்றியது: முருக பக்தர்களை வைத்துக் கொண்டு பரிசோதனை செய்து, ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றிலிருந்து, கிருதுவத்திற்கு சாதகமாக அல்லது முருகனுக்கு / சைவத்திற்கு எதிராக எப்படி அந்த தகவல்களை உபயோகப் படுத்தலாம் என்று ஒத்திகை செய்துள்ளது மாதிரி உள்ளது. ஏனெனில், இம்மாநாட்டு கட்டுரைகள் எல்லாம் தொகுத்து வெளியிடப் படும் எனெல்லாம் வாக்குறுதிகள் தாராளமாகச் செய்யப் பட்டன. உதாரணத்திற்கு, மலேசிய மாநாட்டில், அங்கு வந்திரிந்த மலேசிய அமைச்சர், ஆய்வாளர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்றதும், ஒரு மாதத்திற்குள், அந்த ஆய்க்கோவை புத்தகம் வீடுகள் தேடி சென்றடைய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றேல்லாம், பத்துமலை முருகன் கோவிலின் வளாகத்தில் சத்தியம் செய்து சொன்னார். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும், எந்த மாநாட்டிற்கும் ஆய்வுத்தொகுதி வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆக, ஒருவேளை, இதற்காக, ஏதாவது நிதி திரட்டியிருந்தால் “அரோகரா” தான்! வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான்! 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான்! ஜான் சாமுவேல் தான் ஜாலியாக ஓசி விமான டிக்கெட், கமிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு ஜாலியாக குடும்பத்தோடு வந்து அனுபவித்துச் சென்றுள்ளார்.

 

1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[4]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[5] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[6]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

முருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

 

முருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – நகார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.

மொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.

மலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[8]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[9]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:

The Board of Governors

  • Dr. M. Israel – Chairman – எம். இஸ்ரேல்
  • Dr. G. John Samuel – Secretary – ஜான் சாமுவேல்
  • Dr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.

Members – உறுப்பினர்கள்

  • Mr. M.S. Venkatachalam
  • Dr. K. Malaisamy, M.P.
  • Dr. P. Subramanian
  • Dr. M.J. Mohan
  • Dr. Sundar Devaprasad
  • Mr. V.S. Ramalingam
  • Dr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.
  • Dr. Tsutomu Kambe
  • Dr. Y. Dennyson
  • Dr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.

இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-01-2011


[5] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, ல் காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[6] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.

[9] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)

தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

ஜனவரி 10, 2011

தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது. இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை! வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[1]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[2].

அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம்: இரண்டாண்டுகளுக்கு முன்னர், கோடிகளில் தாமஸைப் பற்றி திரைப்படம் எடுப்போம்[3] என்று கருணாநிதியை வைத்துக் கொண்டு ஒரு நாடகம் நடத்தினர்[4]. இப்பொழுது அவரது பிள்ளைய ஸ்டாலினை கூட்டி வைத்துக் கொண்டு, இன்னொரு விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். அதாவது, இந்து கோவில் இடிக்கப் பட்ட இடத்தை[5] கிருத்துவ புண்ணியஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த மாயாஜால விளையாட்டு ஆடப்பட்டுள்ளது. பொய்களுக்கு மேல் பொய்களை அடுக்கிக் கொண்டே போகும் வெட்கங்கெட்ட நிலையில் கிருத்துவர்கள் இருப்பது, மிவும் கேவலமானது. இல்லாத தாமஸ் இருந்தததாக, வராத ஆள் வந்ததாக, இப்படி தொடர்ந்து கதைகளைக் கட்டிவரும் மோசடி கிருத்துவர்கள், இப்பொழுது “…………விரல் எலும்பு ……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”, என்று குண்டு விட்டுள்ளார்கள்.

மை டியர் குட்டிச் சாத்தான் விளையாட்டு ஆடுகின்றனரா? இல்லாத தாமஸ், வராத ஆள் என்ற நிலையுள்ளபோது எங்கிருந்த இந்த எலும்பு வந்தது? ஓர்டோனா சர்ச்சிலிருந்து கடனாக வாங்கி வந்து வைத்துக் கொண்டதுதானே இது? பிறகு என்ன அந்த புளுகுமூட்டை “……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”? எப்படித்தான், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், சூடு-சொரணை இல்லாமல், இந்த கிருத்துவர்கள் இப்படி ஈனச்செயல்களில் ஈடுபடுகின்றனரோ என்று தெரியவில்லை.

ஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது[6]. இக்கூட்டத்தில், போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ பங்கேற்கிறார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் 06-01-2011 அன்று துவங்குகியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்.

புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி: . கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்பார் என்று சி.பிசி.ஐ செய்தி வெளியிட்டிருந்தது[7]. ஆனால், ஸ்டாலின் தான் கலந்துகொண்டார். சென்னை புனித தாமஸ் மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என கிறிஸ்துவர்கள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “புனித தாமஸ் மலை திருத்தலமானது தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தேசியத் திருத்தலமாக உயர்த்தப்படும் நிகழ்ச்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஜீலை 2010ல் தமிழக ஆயர் பேரவை இதனை தமிழக திருத்தலமாக உயர்த்தி அறிவித்தது பெருமைப்படத்தக்கது. அகில இந்திய ஆயர் பேரவை இந்த இடத்தை தேசிய திருத்தலமாக அறிவித்துள்ளது. அதற்கான விழா இன்று நடைபெறுகின்றது.

அன்பு, பரிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மனித குலத்திற்கு போதித்த, இயேசு கிருஸ்துவின் கொள்கைகளை உலகத்தின் பல பகுதிகளுக்கும்

எத்தனை தடவை எடுத்துக் காட்டினாலும், கிருத்துவர்கள், இப்படி விடாப்பிடியாக இந்த கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்யும் மர்மம் என்னவென்று புரியவில்லை.

சென்று போதித்து, கிருஸ்துவ மதத்தை பரப்பிய, கிருஸ்துவின் நற்செய்திகளை மக்கள் சமுதாயத்திற்கு தெரிவித்த, தூதர்களில் புனித தாமஸ் சிறப்பான புகழுக்கு உரியவர். இவர் கி.பி.52ல் இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில், அப்போது மயிலை என்று அழைக்கப்பட்ட சென்னையின் தற்போதைய மயிலாப்பூர்

ஸ்டாலினுக்கு யார் வந்து இந்த கதையினை சொன்னார்கள் அல்லது எந்த கல்லுரியில் படித்து தெரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அப்போஸ்தலரே ஆயினும் ஒருதடவைக்கு மேலே மரித்திரூக்கமுடியாது என்று வின்சென்ட் ஸ்மித் சொன்னதை மறைத்து ஆடுகின்ற நாடகம் இனி மறுபடியும் மக்கள் அறிந்து திட்டவேண்டும் போலிருக்கிறது!

பகுதிகளில் இவர் இயேசு கிருஸ்துவின் போதனைகளை போதித்தார். அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை எனப்படும் சிறிய குன்றில் இவர் தவம் இருந்தார் என்றும், பிறகு புனித தாமஸ் மலை என்று அழைக்கப்படுகின்ற இந்த மலையில் தங்கியிருந்தார் என்றும், இந்த இடத்திலேயே அவர் ரத்தம் சிந்தி இயற்கை எய்தினார் என்றும், நாம் அறிவோம்[8].

சாந்தோமில் அமைந்துள்ள தேவாலயம், இந்த மலையில் அமைந்துள்ள

போர்ச்சுகீசியர் அதனை கொண்டு வைத்தனர் என்று அவர்களே தங்களது ஆவணங்களில் எழுதிவைத்துள்ளனர். பிறகென்ன இந்த கதை விடுவது?. “. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன”, என்று சொல்லும்போதே அந்த உண்மை புலப்பட்டு விடுகிறது!

ஆலயம் ஆகியவை புனித தாமஸின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் நிலைபெறுகின்றன. இந்த இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்றபோது, மேரி மாதாவின் உருவம் அடைந்த ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அன்னை மரியாள் என்ற பெயரில் பழைய ஆலயம் அழைக்கப்பட்டது என்பதற்கு இது சான்று. இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புனித தாமஸுடைய விரல் எலும்பு. இது அவருடைய தொண்டினை, சேவையை மற்றும் நினைவை நமக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்தும் ஒரு பழமையான நினைவுப் பொருளாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன.

தேசியத் திருத்தலமாக இன்று உயர்த்தப்பட்டுள்ள புனித தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனைப்பற்றி ஏற்கனவே முதல்வருடன் கலந்து ஆலோசித்து

சட்டசபையில் இத்தகைய பொய்மால வரைவுதிட்டம், பரிசீலினைக்கு வரும்போது, அதை சரித்திர ஆதாரமற்றது என்று நிராகரிக்கப் படவேண்டும். இல்லையென்றால், அது நிச்சயமாக, அயோத்தி போன்ற ஒரு பெரிய பிரச்சினையில் முடியும் என்பது திண்ணம்[9]. ஏனெனில் கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, அங்கு சர்ச்சைக் கட்டியவர்களே[10] கிருத்துவர்கள் தாம்!

உள்ளேன். நீங்கள் அனுப்பிய வரைவுத்திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சட்டப்பேரவை நடைபெறும் நேரம். எந்த ஒரு திட்டத்தையும் சட்டப்பேரவையில் தான் அறிவிக்க வேண்டும். எனவே, எனது உறுதியினை மட்டும் அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்”, இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

அரசாங்கம் சரித்திரத்திற்குப் புறம்பாக, கிருத்துவர்களின் மோசடிகளுக்கு துணைபோகக் கூடாது. இதனால், பிறகு பெரிய பிரச்சினைகள் எழும். மேலும், கிருத்துவர்களுக்கும், இத்தகைய மோசடிகள் நன்மைப் பயக்காது. நாளைக்கே மேனாட்டவர் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளலாம். போப் ஏற்கெனெவே, இந்த கட்டுக்கதையை நம்ப்பவில்லை, மற்றும் அதனை மறுத்தும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்டாலின், துணை முதலமைச்சர் என்ற நிலையில் கலந்து கொண்டதே சரியான நிலைப்பாடில்லை. தொடர்ந்து, இப்படி இந்துக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டேயிருந்தால், விளைவுகள் நிச்சயமாக வேறுவிதமாகத்ததன் இருக்கும்! செக்யூலார் அரசு எல்லோருடைய உரிமைகளையும் முதலில் காக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையினையை மறக்கக் கூடாது.

வேதபிரகாஷ்

10-01-2011


[5] ஆர். அருளப்பா, புனித தோமையார், ஆயர் இல்லம், சென்னை, 1986. இந்த புத்தகத்தில், அந்த இடத்தை தோண்டியபோது, கோவில் அமைப்பு போன்று அஸ்திவாரம் இருந்தது. கீழே ஒரு சக்கரம் கிடைத்தது. இது இந்து கோவில்களில் இருப்பது போல இருந்தது. என்றெல்லாம் எழுதியுள்ளார்.

[6] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160658

[7] Later, on Jan. 9, the prelates are to attend a public reception by Madras-Mylapore archdiocese which Tamil Nadu state Chief Minister Muthuvel Karunanidhi is also expected to attend.

Cathnews India, Bishops aim to strengthen Indians’ ‘moral fiber’, Published Date: January 6, 2011, http://www.cathnewsindia.com/2011/01/06/bishops-aim-to-strengthen-indians%E2%80%99-%E2%80%98moral-fiber%E2%80%99/

[9] The Kapaleeswarar Temple itself says that it was there on the shore, but the Chistians demolished it!
http://thomasmyth.wordpress.com/2010/01/28/கபாலீஸ்வரர்-கோவிலே-சொல்க/

The hypocrite Christians who demolished the Kapaleeswarar temple.
http://thomasmyth.wordpress.com/2010/04/19/கபாலீஸ்வரர்-கோயிலை-இடித்/

[11] தினமணி, தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின், First Published : 09 Jan 2011 12:23:44 PM IST;Last Updated : 09 Jan 2011 12:26:00 PM IST;

http://dinamani.com/edition/story.aspx?Title=…….164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

மே 3, 2010

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

செபாஸ்டியன் சீமானுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் என்ன தொடர்பு? செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன் [தெய்வநாயகம் சென்னை பிஷப்பிடம் அழைத்துச் சென்று, செபாஸ்டியன் சீமானை அழைத்ததாகத் தெரிகிறது. ஆகவே முன்னாள் சின்னப்பா மாதிரி இந்த பிஷப்பும் அத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவார் போலும்]

தெய்வநாயகம் போன்ற மோசடி பேர்வழிகளை ஏன் “திருச்சபை” எனப்படுகின்ற சர்ச் ஆதரிக்கிறது? எம்.  தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]. பிறகு எப்படின் இந்த இரண்டு மோசடி பேர்வழிகளும் சேர்ந்து கொண்டு, தாமஸ் விவகாரத்தில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிராக வாமுடியும்?

Seeman-Kapeleswarar-temple

Seeman-Kapeleswarar-temple

கிருத்துவமே உலக அளவில் செக்ஸ், பாலியல்………….என்றெல்லாம் நாறும்போது ஏனிந்த வேலை? தங்களுடைய வீடுகள் நாறிக்கிடக்கும் போது, முதலில் அதை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்கின்ற ஊட்டி, கன்யாகுமரி, வேளாங்கன்னி, திருச்சி………………….போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு செக்ஸ், காமக் களியாட்டம் போடும் பிஷப்புகள், பாதிரிகள், கன்னியாஸ்திரீகள்…………………..இவர்களை பாவங்களினின்று குளிப்பாடி அர்ச்சித்து தூக்கிவிடவேண்டும். அப்படியில்லாமல், கிராதகம் செய்யும் கிருத்துவர்கள் கோவிலின் மீது கண் வைப்பது, ஏதோ விஷமத்தனம் உள்ளது என்பது தெரிகின்றது. இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

“சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு” என்று அலையும் இந்த கிருத்துவர்களின் பின்னணி என்ன? சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது. [அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக க் காட்டப் படுகிறது].

அரசியல் ஆதாயம் தேடும் எம்.எல்.ஏவும் உதவவில்லையாம்: எல்லாவற்றிற்கும் பறக்கும் எம். எல். ஏ [எஸ்.வி.சேகர்], இவ்விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டபோது, வர மறுத்து விட்டாராம். அதுதான் அவருடைய ஆட்சியில் மேன்மை போலும். “ஏதோ நாடகம்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம். “நல்ல நாடகம்” தான்! இல்லை “பார்ப்பனர்” ப்யந்துவிட்டாரா? சூத்திரனிடம் எம்.எல்.ஏ பதவி கேட்டால் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப் போடுகிறாரா?

போலீஸார் இதைத் தடுக்கவேண்டும்: இந்து அமைப்புகள் முன்பேயும் [கிருத்துவ பிரச்சார நோட்டீஸுகள் விநியோகம் செய்தபோது] மற்றும் இப்பொழுதும் மைலாப்பூர் போலீஸிடத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகவே தந்திகள், ஈ-மெயில்கள் முதலியவை அனைத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால், அக்கூட்டம், “கபாலீஸ்வரர் கருவறை நுழைவு போராட்டம்” என்றெல்லாம் அறிவித்ததாகத் தெரிகிறது. இந்துக்கள் அதனை எதிர்க்க வேண்டும் [ஸ்ரீரங்கத்தில் முன்பு ம.க.இ.க இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டபோது, பக்தர்களே நன்றாக பாடம் கற்பித்து அனுப்பி வைத்தனர்].

தமிழர்கள் உண்மைய அறிந்து தங்களது மீதான கலாச்சார-பண்பாட்டு-இறையியல் தாக்குதல்களை அறிந்து கொள்ளவேண்டும்: தமிழ், தமிழர்கள் என்று சொல்லிவிட்டால் போதும், என்னவேண்டுமானாலும் செய்யலாம், தமிழர்களை ஏமாற்றியே பிழைக்கலாம், என்றுதான் இக்கூட்டம் உள்ளது தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் அவர்களின் உண்மையான அடையாளம் கண்டு கொண்டு ஒன்றாக செயல்படவேண்டும். கோவில்கள், கோவில்களின் நிலங்கள், அசையும்-அசையா சொத்துக்கள் …………………..முதலியவையெல்லாம் கொள்ளை போகும்போது, இருப்பவற்றைக் காத்துக் கொள்ள முயல வேண்டும். கிருத்துவர்கள் தமிழ் பெயரில் இப்படி போலித்தனமாக உலாவருவதை தமிழ் மக்கள் தடுக்கவேண்டும்.

கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].

“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.

என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா-நாத்திக-கிருத்துவ-கூட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.

ஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.

கிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக்க்கொண்டது நல்லதுதான்.

கிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம்! பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார்! அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்!

இந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம்! பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

09-05-2010 (அன்று திருத்தியது)

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

April 19, 2010

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

இந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி!

மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…

சைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………

கிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம். ஆனால் “செக்யூலரிஸம்” போர்வையில் மறைக்கப் படுகிறது.

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். இதைப் பற்றி சரித்திர ஆவணங்கள் பல உள்ளன. ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.

Temple-says-christians-demolished

Temple-says-christians-demolished

போலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா பிஷப்பாக இருந்தபோது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து, ஆச்சார்யா பால் என்பவை ஊக்குவித்து, போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.

Kapaleswar-temple-says

Kapaleswar-temple-says

பெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும். தமிழகத்தைச் சேர்ந்த பிஷப்புகளே, அத்தகைய செக்ஸ்-குற்றங்களில் மாட்டிக் கொண்டு, ஜெயிலிலும், வெளியிலும் இருக்கிறார்கள்! ஊட்டியில் ஒரு செக்ஸ்-பிஷப் மறைந்திருக்கிறார், மதுரை பிஷப்போ இத்தாலியில் மாட்டிக் கொண்டுள்ளார்!

தமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்! ஆபாசப்படம் எடுக்கும் வித்தகரான லெனின், இப்பாதிரிகள் / பிஷப்புகள் காமலீலைகள் பற்பல இருந்தாலும் வீடியோ எடுக்கமாட்டார்கள் போலும்!

தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை?  உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்!

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

ஜனவரி 28, 2010

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை!

கபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது”! கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:

MYLAPORE FELL INTO THE HANDS OF THE PORTUGUESE IN A.D 1566 WHEN THE TEMPLE SUFFERED DEMOLITION. THE PRESENT TEMPLE WAS REBUILT 300 YEARS AGO. THERE ARE SOME FRAGMENTARY INSCRIPTIONS FROM THE OLD TEMPLE STILL FOUND IN THE PRESENT SHRINE AND IN St. THOMAS CATHEDRAL.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு:

“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.

குறிப்பிட்ட பகுதியை பெரிய அளவில் காணலாம்:

Temple-says-christians-demolished

Temple-says-christians-demolished

ஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:

Kapaleswar-temple-says-christians-demolished

Kapaleswar-temple-says-christians-demolished

பழைய கோயில் இப்போது உள்ள சர்ச் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்தது. அருணகிரிநாதர் காலத்தில் கூட (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது, அவரது, “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் வழிபாட்டிற்கு சர்ச்சையும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

சாந்தோம் சர்ச் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” – அதவது இக்குறிப்புகள் சர்ச்சின் கீழ் தோண்டியபோது கிடைத்தக் கற்களின் மீது காணப்படுகின்றன – என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.

1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதீட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு, “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்”, என்று குறிப்பிடுபகிறது.  பிறகு கிருத்துவர்களுக்கு வெட்கம் இல்லை, அந்த இடத்தில் சர்ச்சைக் கட்டிக் கொண்டு கூத்தடிப்பதற்கு?

மற்றொரு இறையிலி / தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்கிறது, என்று தெரிகிறது .

1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதீட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் : “கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204

போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .  அழிக்கப் பட்டது, உறுதியாகிறது. S.Kalyanasundaram- A Short History of Mylapore,பக்கம்.8.

போர்ச்சுகீசியர் கத்தோலிக்கக் கிருத்துவர்கள், முஸ்லீம்களைப் போல மதவெறி பிடித்தவர்கள். மற்ற மதத்தினருடைய வழிப்படும் ஸ்தலங்களை இடித்துத் தள்ளுவதில் அலாதியான இன்பம் பெறுபவர்கள். விக்கிரங்களை உடைத்துத் தள்ளுவதிலேயோ கேட்கவே வேண்டாம். கோவாவில் அவர்கள் செய்த கர்ண-கொடூர-குரூர செயல்களை விளக்க வார்த்க்தைகளே போறாது.

இதைவிட வேடிக்கை என்னவென்றால், 19ம் நூற்றாண்டு வரையில், உற்சவ மூர்த்தியை சர்ச்சின் முன்பு எடுத்துவரும் போது, மூன்று முறை தாழ்த்தி-தாழ்த்தி எடுத்து வருவார்களாம், அதாவது, மூலவர் அங்கிருந்தார் என்ற பழைய ஞாபகத்தில் அவ்வாறு செய்து வந்தனர்.


Follow

Get every new post delivered to your Inbox.