போப் எப்படி, ஏன் தாக்கப்பட்டார்?
போப் தாக்கப்பட்டது ஆச்சரிமான நிகழ்ச்சியாக உள்ளது.
வாடிகனில் இல்லாத பாதுகாப்பா என்று திகைப்பாக உள்ளது.
சமீபத்தில் “ஏஞ்சல்ஸ் அ ன் டு டெமன்ஸ்” (Angels and Demons) படத்தில் வந்த காட்சியைப் போலாகி விட்டது, ஆனால் இது நிஜம்!
சன் / கலைஞர் டிவிகள் விடும் ரீல் போல இல்லை!
அந்த பெண் மனநிலை சரியில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. அந்த பெண் தான் போப்பை அருகில் பார்க்கத்தான் அவ்வாறு செய்தேன், தாக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது என்று மருத்துவர்களிடம் கூறினாராம்.
இப்பொழுது போப் தாம் அந்த பெண்ணை மன்னித்துவிட்டதாகக் கூறுகிறார்.
வாடிகன் பிரார்த்தனை கூட்டத்தில் பாய்ந்த பெண்: நிலை குலைந்து விழுந்தார் போப்
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6063
வாடிகன் சிட்டி : வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப் பெனடிக்ட் மீது, ஒரு பெண் பாய்ந்து தள்ளியதால், அவர் கீழே விழுந்தார். போப்புடன் வந்த கார்டினலுக்கு கால் முறிவு ஏற்பட்டது.கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில், பங்கேற்க வந்த போப் பெனடிக்ட்டை(82) பார்த்து ஏராளமானவர்கள் கையசைத்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்களை பார்த்து கையசைத்த படியே வந்த போப் பெனடிக்ட்டை நோக்கி ஒரு பெண், தடுப்பை தாண்டி பாய்ந்து வந்து மோதினார். இதனால், போப் பெனடிக்ட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்கள் உதவியுடன் எழுந்து, மீண்டும் நடந்து சென்றார்.
![]() |
இந்த சம்பவத்தில் போப்புடன் வந்த பிரான்ஸ் நாட்டு கார்டினல் ரோஜருக்கு (87) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். வாடிகன் நகர பாதுகாவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர். அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. வாடிகன் அதிகாரி பெர்ட்ரிக்கோ குறிப்பிடுகையில், “”பெனடிக்ட் மீது மோதிய பெண் பெயர், சுசானா மயோலோ(25). சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாட்டு குடியுரிமை பெற்றவர். கடந்த ஆண்டே இவர் இதே போல போப் மீது மோத முயற்சி செய்துள்ளார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடியால் இவரது முயற்சி நிறைவேறவில்லை. தற்போது நடந்த நிகழ்ச்சி தாக்குதல் தான்; இருப்பினும் ஆபத்தானதல்ல. ஏனென்றால் சுசானா, ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை,” என்றார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இந்த சம்பவத்தால், வாடிகனில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டு விட்டதாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் தெரிவித்தனர். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெனடிக்ட், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிடுகையில், “”நம்முடைய சுயநலத்தாலும், பேராசையாலும், உண்மைக்கு எதிராக செயல்படுகிறோம். இதனால், மற்றவர்களிடமிருந்து நாம் தனிமைபடுத்தப்படுகிறோம். முரண்பாடுகளாலும், ஏற்றதாழ்வுகளாலும் நம்மை நாமே சிறைபடுத்தி கொள்கிறோம்,” என்றார்.
கிருத்துவர்களிடம் நம்பி வெறுத்துப் போதல், அவநம்பிக்கையடைதல், ஏமாற்றம், விரக்தி, நினைத்தது நடக்காமல் போனது என்ற காரணங்களினால் வெறுப்புடன் இருக்கிறார்கள். போப், கார்டினட்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் இதர சாமியர்கள், ஏதேதோ வாக்குறுதி அளிக்கிறார்கள், ஆனால் ஒன்றும் நடப்பதில்லை. இதனால், சில பேர்களுக்கு, இதெற்கெல்லம் காரணம் போப்புதான் காரணம் என்ற என்ற எண்ணம் வளர்கிறது. இதனால், போப்பை அடிக்கவேண்டும், குத்தவேண்டும், கிள்ளவேண்டும் என்ற விபரீதமான ஆசை இளம்பெண்களுக்கு ஏற்படுகின்றது. சமீபகாலங்களில் உலகம் முழுவதும் சிறுமிYஅர்-சிறுவர்கள் அதிகமாக கிருத்துவர்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக செக்ஸ் கொடுமைகளுக்குள்ளாக்கப் பட்டுள்ளார்கள். இதனால், மனத்தளவில் அதிகமாகவே பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.








