செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

மே 3, 2010

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

செபாஸ்டியன் சீமானுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் என்ன தொடர்பு? செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன் [தெய்வநாயகம் சென்னை பிஷப்பிடம் அழைத்துச் சென்று, செபாஸ்டியன் சீமானை அழைத்ததாகத் தெரிகிறது. ஆகவே முன்னாள் சின்னப்பா மாதிரி இந்த பிஷப்பும் அத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவார் போலும்]

தெய்வநாயகம் போன்ற மோசடி பேர்வழிகளை ஏன் “திருச்சபை” எனப்படுகின்ற சர்ச் ஆதரிக்கிறது? எம்.  தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]

Seeman-Kapeleswarar-temple

Seeman-Kapeleswarar-temple

கிருத்துவமே உலக அளவில் செக்ஸ், பாலியல்………….என்றெல்லாம் நாறும்போது ஏனிந்த வேலை? தங்களுடைய வீடுகள் நாறிக்கிடக்கும் போது, முதலில் அதை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்கின்ற ஊட்டி, கன்யாகுமரி, வேளாங்கன்னி, திருச்சி………………….போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு செக்ஸ், காமக் களியாட்டம் போடும் பிஷப்புகள், பாதிரிகள், கன்னியாஸ்திரீகள்…………………..இவர்களை பாவ்ங்களினின்று குளிப்பாடி அர்ச்சித்து தூக்கிவிடவேண்டும். அப்படியில்லாமல், கிராதகம் செய்யும் கிருத்துவர்கள் கோவிலின் மீது கண் வைப்பது, ஏதோ விழமத்தனம் உள்ளது என்பது தெரிகின்றது. இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

“சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு” என்று அலையும் இந்த கிருத்துவர்களின் பின்னணி என்ன? சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது. [அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக க் காட்டப் படுகிறது].

அரசியல் ஆதாயம் தேடும் எம்.எல்.ஏவும் உதவவில்லையாம்: எல்லாவற்றிற்கும் பறக்கும் எம். எல். ஏ [எஸ்.வி.சேகர்], இவ்விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டபோது, வர மறுத்து விட்டாராம். அதுதான் அவருடைய ஆட்சியில் மேன்மை போலும். “ஏதோ நாடகம்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம். “நல்ல நாடகம்” தான்!

போலீஸார் இதைத் தடுக்கவேண்டும்: இந்து அமைப்புகள் முன்பேயும் [கிருத்துவ பிரச்சார நோட்டீஸுகள் விநியோகம் செய்தபோது] மற்றும் இப்பொழுதும் மைலாப்பூர் போலீஸிடத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகவே தந்திகள், ஈ-மெயில்கள் முதலியவை அனைத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால், அக்கூட்டம், “கபாலீஸ்வரர் கருவறை நுழைவு போராட்டம்” என்றெல்லாம் அறிவித்ததாகத் தெரிகிறது. இந்துக்கள் அதனை எதிர்க்க வேண்டும் [ஸ்ரீரங்கத்தில் முன்பு ம.க.இ.க இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டபோது, பக்தர்களே நன்றாக பாடம் கற்பித்து அனுப்பி வைத்தனர்].

தமிழர்கள் உண்மைய அறிந்து தங்களது மீதான கலாச்சார-பண்பாட்டு-இறையியல் தாக்குதல்களை அறிந்து கொள்ளவேண்டும்: தமிழ், தமிழர்கள் என்று சொல்லிவிட்டால் போதும், என்னவேண்டுமானாலும் செய்யலாம், தமிழர்களை ஏமாற்றியே பிழைக்கலாம், என்றுதான் இக்கூட்டம் உள்ளது தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் அவர்களின் உண்மையான அடையாளம் கண்டு கொண்டு ஒன்றாக செயல்படவேண்டும். கோவில்கள், கோவில்களின் நிலங்கள், அசையும்-அசையா சொத்துக்கள்  …………………..முதலியவையெல்லாம் கொள்ளை போகும்போது, இருப்பவற்றைக் காத்துக் கொள்ள முயல வேண்டும்.

கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].

“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.

என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா-நாத்திக-கிருத்துவ-கூட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.

ஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.

கிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக்க்கொண்டது நல்லதுதான்.

கிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம்! பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார்! அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்!

இந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம்! பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

09-05-2010 (அன்று திருத்தியது)

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

December 31, 2011

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

உமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].

தேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதி

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 IST

சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.

 

கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].

இந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.
உலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.
புனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.

சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்!

  • 1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், ண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.


  • 1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன.


  • 1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின.


  • 1989ற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.


  • 2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.


  • கல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.

 

உள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.

தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை!வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].

வேதபிரகாஷ்

31-12-2011


[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம்,  பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=373422

[2] எஸ்.உமாபதி, தேசியதிருத்தலமானபுனிததோமையார்மலை, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 IST, http://www.dinamalar.com/testing/2011/Supplementary_detail.asp?id=4223&ncat=9&Print=1

[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்!

[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவர்க்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது!

[5] தினமலர், தேசியதிருத்தலமானசென்னை புனிததோமையார்  பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.

[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.

[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!

பெப்ரவரி 28, 2011

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!
தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், செட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].

தாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக

தினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.

கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்

லஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்பட் 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர்!

துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த

முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார்.

படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்

அவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்

அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.
புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்

அப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.

பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.

சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.

வேதபிரகாஷ்

28-02-2011


[1] வேதபிரகாஷ், தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!, http://thomasmyth.wordpress.com/2009/12/25/how-dinamalar-spreads-myth-of-thomas/

[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

http://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/

[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!, http://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/

[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,

பிப்ரவரி 25, 2011-, http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4223&ncat=9

[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது!

[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம்! வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன?

[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.

[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.

[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?, http://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%

தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?

ஜனவரி 21, 2011

தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?

எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.

முருக பக்தர்களை ஏமாற்றியது: ஆய்வு, ஆராய்ச்சி என்று வந்த கூட்டத்தைவிட, முருக பக்தியோடு வந்த பக்தர்கள்தாம் அதிகம். ஞானப்பழம் சொட்டுவது போல பாட்ரிக் ஹேரிகன் முருகனுக்காக, ஒரு பிரமாதனான இணைத்தளத்தை அமைத்துள்ளார்[2]. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவரேத்தான் அந்த தாமஸ் கட்டுக்கதையிலுள்ள மோசடிகளை எடுத்துக் காட்டும் இணைத்தளத்தையும் நிர்வகித்து வருகின்றார்[3]. பிறகு எப்படி மறுபடியும் “இந்தியாவில் ஆதி கிறித்தவம்” என்று ஆரம்பித்துள்ளார்கள், என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.

முருகன் மாநாட்டு ஆய்வாளர்களை ஏமாற்றியது: முருக பக்தர்களை வைத்துக் கொண்டு பரிசோதனை செய்து, ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றிலிருந்து, கிருதுவத்திற்கு சாதகமாக அல்லது முருகனுக்கு / சைவத்திற்கு எதிராக எப்படி அந்த தகவல்களை உபயோகப் படுத்தலாம் என்று ஒத்திகை செய்துள்ளது மாதிரி உள்ளது. ஏனெனில், இம்மாநாட்டு கட்டுரைகள் எல்லாம் தொகுத்து வெளியிடப் படும் எனெல்லாம் வாக்குறுதிகள் தாராளமாகச் செய்யப் பட்டன. உதாரணத்திற்கு, மலேசிய மாநாட்டில், அங்கு வந்திரிந்த மலேசிய அமைச்சர், ஆய்வாளர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்றதும், ஒரு மாதத்திற்குள், அந்த ஆய்க்கோவை புத்தகம் வீடுகள் தேடி சென்றடைய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றேல்லாம், பத்துமலை முருகன் கோவிலின் வளகத்தில் சத்தியம் செய்து சொன்னார். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும், எந்த மாநாட்டிற்கும் ஆய்வுத்தொகுதி வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆக, ஒருவேளை, இதற்காக, ஏதாவது நிதி திரட்டியிருந்தால் “அரோகரா” தான்! வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான்! 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான்! ஜான் சாமுவேல் தான் ஜாலியாக ஓசி விமான டிக்கெட், கமிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு ஜாலியாக குடும்பத்தோடு வந்து அனுபவித்துச் சென்றுள்ளார்.

1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[4]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[5] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[6]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

முருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

முருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – நகார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.

மொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.

மலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[8]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[9]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:

The Board of Governors

  • Dr. M. Israel – Chairman – எம். இஸ்ரேல்
  • Dr. G. John Samuel – Secretary – ஜான் சாமுவேல்
  • Dr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.

Members – உறுப்பினர்கள்

  • Mr. M.S. Venkatachalam
  • Dr. K. Malaisamy, M.P.
  • Dr. P. Subramanian
  • Dr. M.J. Mohan
  • Dr. Sundar Devaprasad
  • Mr. V.S. Ramalingam
  • Dr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.
  • Dr. Tsutomu Kambe
  • Dr. Y. Dennyson
  • Dr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.

இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-01-2011


[5] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, ல் காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[6] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.

[9] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)

தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

ஜனவரி 10, 2011

தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது. இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை! வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[1]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[2].

அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம்: இரண்டாண்டுகளுக்கு முன்னர், கோடிகளில் தாமஸைப் பற்றி திரைப்படம் எடுப்போம்[3] என்று கருணாநிதியை வைத்துக் கொண்டு ஒரு நாடகம் நடத்தினர்[4]. இப்பொழுது அவரது பிள்ளைய ஸ்டாலினை கூட்டி வைத்துக் கொண்டு, இன்னொரு விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். அதாவது, இந்து கோவில் இடிக்கப் பட்ட இடத்தை[5] கிருத்துவ புண்ணியஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த மாயாஜால விளையாட்டு ஆடப்பட்டுள்ளது. பொய்களுக்கு மேல் பொய்களை அடுக்கிக் கொண்டே போகும் வெட்கங்கெட்ட நிலையில் கிருத்துவர்கள் இருப்பது, மிவும் கேவலமானது. இல்லாத தாமஸ் இருந்தததாக, வராத ஆள் வந்ததாக, இப்படி தொடர்ந்து கதைகளைக் கட்டிவரும் மோசடி கிருத்துவர்கள், இப்பொழுது “…………விரல் எலும்பு ……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”, என்று குண்டு விட்டுள்ளார்கள்.

மை டியர் குட்டிச் சாத்தான் விளையாட்டு ஆடுகின்றனரா? இல்லாத தாமஸ், வராத ஆள் என்ற நிலையுள்ளபோது எங்கிருந்த இந்த எலும்பு வந்தது? ஓர்டோனா சர்ச்சிலிருந்து கடனாக வாங்கி வந்து வைத்துக் கொண்டதுதானே இது? பிறகு என்ன அந்த புளுகுமூட்டை “……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”? எப்படித்தான், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், சூடு-சொரணை இல்லாமல், இந்த கிருத்துவர்கள் இப்படி ஈனச்செயல்களில் ஈடுபடுகின்றனரோ என்று தெரியவில்லை.

ஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது[6]. இக்கூட்டத்தில், போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ பங்கேற்கிறார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் 06-01-2011 அன்று துவங்குகியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்.

புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி: . கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்பார் என்று சி.பிசி.ஐ செய்தி வெளியிட்டிருந்தது[7]. ஆனால், ஸ்டாலின் தான் கலந்துகொண்டார். சென்னை புனித தாமஸ் மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என கிறிஸ்துவர்கள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “புனித தாமஸ் மலை திருத்தலமானது தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தேசியத் திருத்தலமாக உயர்த்தப்படும் நிகழ்ச்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஜீலை 2010ல் தமிழக ஆயர் பேரவை இதனை தமிழக திருத்தலமாக உயர்த்தி அறிவித்தது பெருமைப்படத்தக்கது. அகில இந்திய ஆயர் பேரவை இந்த இடத்தை தேசிய திருத்தலமாக அறிவித்துள்ளது. அதற்கான விழா இன்று நடைபெறுகின்றது.

அன்பு, பரிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மனித குலத்திற்கு போதித்த, இயேசு கிருஸ்துவின் கொள்கைகளை உலகத்தின் பல பகுதிகளுக்கும்

எத்தனை தடவை எடுத்துக் காட்டினாலும், கிருத்துவர்கள், இப்படி விடாப்பிடியாக இந்த கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்யும் மர்மம் என்னவென்று புரியவில்லை.

சென்று போதித்து, கிருஸ்துவ மதத்தை பரப்பிய, கிருஸ்துவின் நற்செய்திகளை மக்கள் சமுதாயத்திற்கு தெரிவித்த, தூதர்களில் புனித தாமஸ் சிறப்பான புகழுக்கு உரியவர். இவர் கி.பி.52ல் இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில், அப்போது மயிலை என்று அழைக்கப்பட்ட சென்னையின் தற்போதைய மயிலாப்பூர்

ஸ்டாலினுக்கு யார் வந்து இந்த கதையினை சொன்னார்கள் அல்லது எந்த கல்லுரியில் படித்து தெரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அப்போஸ்தலரே ஆயினும் ஒருதடவைக்கு மேலே மரித்திரூக்கமுடியாது என்று வின்சென்ட் ஸ்மித் சொன்னதை மறைத்து ஆடுகின்ற நாடகம் இனி மறுபடியும் மக்கள் அறிந்து திட்டவேண்டும் போலிருக்கிறது!

பகுதிகளில் இவர் இயேசு கிருஸ்துவின் போதனைகளை போதித்தார். அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை எனப்படும் சிறிய குன்றில் இவர் தவம் இருந்தார் என்றும், பிறகு புனித தாமஸ் மலை என்று அழைக்கப்படுகின்ற இந்த மலையில் தங்கியிருந்தார் என்றும், இந்த இடத்திலேயே அவர் ரத்தம் சிந்தி இயற்கை எய்தினார் என்றும், நாம் அறிவோம்[8].

சாந்தோமில் அமைந்துள்ள தேவாலயம், இந்த மலையில் அமைந்துள்ள

போர்ச்சுகீசியர் அதனை கொண்டு வைத்தனர் என்று அவர்களே தங்களது ஆவணங்களில் எழுதிவைத்துள்ளனர். பிறகென்ன இந்த கதை விடுவது?. “. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன”, என்று சொல்லும்போதே அந்த உண்மை புலப்பட்டு விடுகிறது!

ஆலயம் ஆகியவை புனித தாமஸின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் நிலைபெறுகின்றன. இந்த இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்றபோது, மேரி மாதாவின் உருவம் அடைந்த ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அன்னை மரியாள் என்ற பெயரில் பழைய ஆலயம் அழைக்கப்பட்டது என்பதற்கு இது சான்று. இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புனித தாமஸுடைய விரல் எலும்பு. இது அவருடைய தொண்டினை, சேவையை மற்றும் நினைவை நமக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்தும் ஒரு பழமையான நினைவுப் பொருளாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன.

தேசியத் திருத்தலமாக இன்று உயர்த்தப்பட்டுள்ள புனித தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனைப்பற்றி ஏற்கனவே முதல்வருடன் கலந்து ஆலோசித்து

சட்டசபையில் இத்தகைய பொய்மால வரைவுதிட்டம், பரிசீலினைக்கு வரும்போது, அதை சரித்திர ஆதாரமற்றது என்று நிராகரிக்கப் படவேண்டும். இல்லையென்றால், அது நிச்சயமாக, அயோத்தி போன்ற ஒரு பெரிய பிரச்சினையில் முடியும் என்பது திண்ணம்[9]. ஏனெனில் கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, அங்கு சர்ச்சைக் கட்டியவர்களே[10] கிருத்துவர்கள் தாம்!

உள்ளேன். நீங்கள் அனுப்பிய வரைவுத்திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சட்டப்பேரவை நடைபெறும் நேரம். எந்த ஒரு திட்டத்தையும் சட்டப்பேரவையில் தான் அறிவிக்க வேண்டும். எனவே, எனது உறுதியினை மட்டும் அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்”, இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

அரசாங்கம் சரித்திரத்திற்குப் புறம்பாக, கிருத்துவர்களின் மோசடிகளுக்கு துணைபோகக் கூடாது. இதனால், பிறகு பெரிய பிரச்சினைகள் எழும். மேலும், கிருத்துவர்களுக்கும், இத்தகைய மோசடிகள் நன்மைப் பயக்காது. நாளைக்கே மேனாட்டவர் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளலாம். போப் ஏற்கெனெவே, இந்த கட்டுக்கதையை நம்ப்பவில்லை, மற்றும் அதனை மறுத்தும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்டாலின், துணை முதலமைச்சர் என்ற நிலையில் கலந்து கொண்டதே சரியான நிலைப்பாடில்லை. தொடர்ந்து, இப்படி இந்துக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டேயிருந்தால், விளைவுகள் நிச்சயமாக வேறுவிதமாகத்ததன் இருக்கும்! செக்யூலார் அரசு எல்லோருடைய உரிமைகளையும் முதலில் காக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையினையை மறக்கக் கூடாது.

வேதபிரகாஷ்

10-01-2011


[5] ஆர். அருளப்பா, புனித தோமையார், ஆயர் இல்லம், சென்னை, 1986. இந்த புத்தகத்தில், அந்த இடத்தை தோண்டியபோது, கோவில் அமைப்பு போன்று அஸ்திவாரம் இருந்தது. கீழே ஒரு சக்கரம் கிடைத்தது. இது இந்து கோவில்களில் இருப்பது போல இருந்தது. என்றெல்லாம் எழுதியுள்ளார்.

[6] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160658

[7] Later, on Jan. 9, the prelates are to attend a public reception by Madras-Mylapore archdiocese which Tamil Nadu state Chief Minister Muthuvel Karunanidhi is also expected to attend.

Cathnews India, Bishops aim to strengthen Indians’ ‘moral fiber’, Published Date: January 6, 2011, http://www.cathnewsindia.com/2011/01/06/bishops-aim-to-strengthen-indians%E2%80%99-%E2%80%98moral-fiber%E2%80%99/

[9] The Kapaleeswarar Temple itself says that it was there on the shore, but the Chistians demolished it!
http://thomasmyth.wordpress.com/2010/01/28/கபாலீஸ்வரர்-கோவிலே-சொல்க/

The hypocrite Christians who demolished the Kapaleeswarar temple.
http://thomasmyth.wordpress.com/2010/04/19/கபாலீஸ்வரர்-கோயிலை-இடித்/

[11] தினமணி, தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின், First Published : 09 Jan 2011 12:23:44 PM IST;Last Updated : 09 Jan 2011 12:26:00 PM IST;

http://dinamani.com/edition/story.aspx?Title=…….164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

April 19, 2010

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

இந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி!

மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…

சைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………

கிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம். ஆனால் “செக்யூலரிஸம்” போர்வையில் மறைக்கப் படுகிறது.

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். இதைப் பற்றி சரித்திர ஆவணங்கள் பல உள்ளன. ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.

Temple-says-christians-demolished

Temple-says-christians-demolished

போலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா பிஷப்பாக இருந்தபோது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து, ஆச்சார்யா பால் என்பவை ஊக்குவித்து, போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.

Kapaleswar-temple-says

Kapaleswar-temple-says

பெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும். தமிழகத்தைச் சேர்ந்த பிஷப்புகளே, அத்தகைய செக்ஸ்-குற்றங்களில் மாட்டிக் கொண்டு, ஜெயிலிலும், வெளியிலும் இருக்கிறார்கள்! ஊட்டியில் ஒரு செக்ஸ்-பிஷப் மறைந்திருக்கிறார், மதுரை பிஷப்போ இத்தாலியில் மாட்டிக் கொண்டுள்ளார்!

தமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்! ஆபாசப்படம் எடுக்கும் வித்தகரான லெனின், இப்பாதிரிகள் / பிஷப்புகள் காமலீலைகள் பற்பல இருந்தாலும் வீடியோ எடுக்கமாட்டார்கள் போலும்!

தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை?  உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்!

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

ஜனவரி 28, 2010

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை!

கபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது”! கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:

MYLAPORE FELL INTO THE HANDS OF THE PORTUGUESE IN A.D 1566 WHEN THE TEMPLE SUFFERED DEMOLITION. THE PRESENT TEMPLE WAS REBUILT 300 YEARS AGO. THERE ARE SOME FRAGMENTARY INSCRIPTIONS FROM THE OLD TEMPLE STILL FOUND IN THE PRESENT SHRINE AND IN St. THOMAS CATHEDRAL.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு:

“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.

குறிப்பிட்ட பகுதியை பெரிய அளவில் காணலாம்:

Temple-says-christians-demolished

Temple-says-christians-demolished

ஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:

Kapaleswar-temple-says-christians-demolished

Kapaleswar-temple-says-christians-demolished

பழைய கோயில் இப்போது உள்ள சர்ச் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்தது. அருணகிரிநாதர் காலத்தில் கூட (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது, அவரர்து, “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் வழிபாட்டிற்கு சர்ச்சையும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

சாந்தோம் சர்ச் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” – அதவது இக்குறிப்புகள் சர்ச்சின் கீழ் தோண்டியபோது கிடைத்தக் கற்களின் மீது காணப்படுகின்றன – என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.

1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதீட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு, “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்”, என்று குறிப்பிடுபகிறது.  பிறகு கிருத்துவர்களுக்கு வெட்கம் இல்லை, அந்த இடத்தில் சர்ச்சைக் கட்டிக் கொண்டு கூத்தடிப்பதற்கு?

மற்றொரு இறையிலி / தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்கிறது, என்ரு தெரிகிறது .

1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதீட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் : “கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204

போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .  அழிக்கப் பட்டது, உறுதியாகிறது. S.Kalyanasundaram- A Short History of Mylapore,பக்கம்.8.

போர்ச்சுகீசியர் கத்தோலிக்கக் கிருத்துவர்கள், முஸ்லீம்களைப் போல மதவெறி பிடித்தவர்கள். மற்ற மதத்தினருடைய வழிப்படும் ஸ்தலங்களை இடித்துத் தள்ளுவதில் அலாதியான இன்பம் பெறுபவர்கள். விக்கிரங்களை உடைத்துத் தள்ளுவதிலேயோ கேட்கவே வேண்டாம். கோவாவில் அவர்கள் செய்த கர்ண-கொடூர-குரூர செயல்களை விளக்க வார்த்க்தைகளே போறாது.

இதைவிட வேடிக்கை என்னவென்றால், 19ம் நூற்றாண்டு வரையில், உற்சவ மூர்த்தியை சர்ச்சின் முன்பு எடுத்துவரும் போது, மூன்று முறை தாழ்த்தி-தாழ்த்தி எடுத்து வருவார்களாம், அதாவது, மூலவர் அங்கிருந்தார் என்ற பழைய ஞாபகத்தில் அவ்வாறு செய்து வந்தனர்.

போப் எப்படி, ஏன் தாக்கப்பட்டார்?

December 26, 2009

போப் எப்படி, ஏன் தாக்கப்பட்டார்?

போப் தாக்கப்பட்டது ஆச்சரிமான நிகழ்ச்சியாக உள்ளது.

வாடிகனில் இல்லாத பாதுகாப்பா என்று திகைப்பாக உள்ளது.

சம்மிபத்தில் “ஏஞ்சல்ஸ் அ ன் டு டெமன்ஸ்” (Angels and Demons) படத்தில் வந்த காட்சியைப் போலாகி விட்டது, ஆனால் இது நிஜம்!

சன் / கலிஞர் டிவிகள்  விடும் ரீல் போல இல்லை!

சூஸன்னா மையோலோ என்ற 25 வயதான சுவிட்சர்லாந்து-இத்தாலிய இளம்பெண் தடுப்பின் மேலே ஏறிகுதித்தார்.

போப்பை நோக்கிப் பாய்ந்தார்.

82 வயதான போப்பை கைகளினால் பிடித்து இழுத்து கீழேத் தள்ளினார்.

பார்த்தவர்கள் திகைத்து அலறிக் கத்தினர்.

எட்சிகரே என்ற ஃபெரிஞ்சு நாட்டு கார்டினல் கீழே விழுந்ததில் தனது கால்களை முறித்துக் கொண்டார்.

அவர் நாற்காலியில் உட்காரவைத்து மருத்துவசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

பிறகு பாதுபாப்பு வீரர்கள் சூஸன்னாவை தூக்கிக்கொண்டு சென்றனர்!

இதே பெண் அதே சிகப்பு கலர் அங்கி அணிந்து சென்ற வருடமும் தாக்க முயற்சி செய்தாராம்!

அந்த பெண் மனநிலை சரியில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. அந்த பெண் தான் போப்பை அருகில் பார்க்கத்தான் அவ்வாறு செய்தேன், தாக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது என்று மருத்துவர்களிடம் கூறினாராம்.

இப்பொழுது போப் தாம் அந்த பெண்ணை மன்னித்துவிட்டதாகக் கூறுகிறார்.

வாடிகன் பிரார்த்தனை கூட்டத்தில் பாய்ந்த பெண்: நிலை குலைந்து விழுந்தார் போப்

டிசம்பர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6063

Front page news and headlines todayவாடிகன் சிட்டி : வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப் பெனடிக்ட் மீது, ஒரு பெண் பாய்ந்து தள்ளியதால், அவர் கீழே விழுந்தார். போப்புடன் வந்த கார்டினலுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில், பங்கேற்க வந்த போப் பெனடிக்ட்டை(82) பார்த்து ஏராளமானவர்கள் கையசைத்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்களை பார்த்து கையசைத்த படியே வந்த போப் பெனடிக்ட்டை நோக்கி ஒரு பெண், தடுப்பை தாண்டி பாய்ந்து வந்து மோதினார். இதனால், போப் பெனடிக்ட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்கள் உதவியுடன் எழுந்து, மீண்டும் நடந்து சென்றார்.

இந்த சம்பவத்தில் போப்புடன் வந்த பிரான்ஸ் நாட்டு கார்டினல் ரோஜருக்கு (87) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். வாடிகன் நகர பாதுகாவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர். அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. வாடிகன் அதிகாரி பெர்ட்ரிக்கோ குறிப்பிடுகையில், “”பெனடிக்ட் மீது மோதிய பெண் பெயர், சுசானா மயோலோ(25). சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாட்டு குடியுரிமை பெற்றவர். கடந்த ஆண்டே இவர் இதே போல போப் மீது மோத முயற்சி செய்துள்ளார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடியால் இவரது முயற்சி நிறைவேறவில்லை. தற்போது நடந்த நிகழ்ச்சி தாக்குதல் தான்; இருப்பினும் ஆபத்தானதல்ல. ஏனென்றால் சுசானா, ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை,” என்றார்.

இந்த சம்பவத்தால், வாடிகனில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டு விட்டதாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் தெரிவித்தனர். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெனடிக்ட், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிடுகையில், “”நம்முடைய சுயநலத்தாலும், பேராசையாலும், உண்மைக்கு எதிராக செயல்படுகிறோம். இதனால், மற்றவர்களிடமிருந்து நாம் தனிமைபடுத்தப்படுகிறோம். முரண்பாடுகளாலும், ஏற்றதாழ்வுகளாலும் நம்மை நாமே சிறைபடுத்தி கொள்கிறோம்,” என்றார்.

சூஸன்னா

கிருஸ்துமஸ் அன்று குடிக்கவேண்டுமா? ரூ. 28 கோடி சரக்கு விற்று சாதனை!

December 26, 2009

கிருஸ்துமஸ் அன்று குடிக்கவேண்டுமா?

கிருஸ்துமஸ் முந்தைய நாள் மாலைப் பொழுதினேலேயே, கேரளத்திலே சரக்குகள் கடைகள் முழுவதும் நிறைந்துவிட்டதாம். நிரம்பிவழியும் நிலையிலே, கிருத்துவ அபிமானிகளும், விசுவாசிகளும் விதவிதமான மது பானங்களை வாங்க அரம்பித்து விட்டனராம்!

“பெவ்கோ” (எதோ ஒரு கொகோகம் என்று எண்ண வேண்டாம்) “கேரள மாநில குடிக்கும் திரவங்கள் நிறுவனம்”  (Kerala State Beverages Corporation)தான்  அவ்வாறு செல்லமாக அழைக்கப்படுகிறது.

24 எஆத்திரி-25 ஆரம்பம் – அன்று 337 கடைகளைத் திறந்து வைத்திருந்ததாம்!

ரூ. 28 கோடிக்கு சரக்கு விற்றுத் தீர்ந்ததாம்!!

சரக்கு விற்றதில் கிருஸ்துமஸ் சாதனை! அவ்வாறு அதிகமாக விற்று அல்லது கிருத்துவ குடிமகன்கள் வாங்கிக் குடித்ததால், இதுவரைக்கும் இல்லாத “கிருஸ்துமஸ் சாதனை” படைத்துவிட்டதாம்!!!

ரூ. 6000 கோடி வருமானம்: அரசே சரக்குகளை விற்பதால், ரூ. 5,300 கோடி வருமானம் கிடைக்கிறதாம். மூன்று கோடி கேரளர்களுக்கு சரக்கு தேவை என்பதனால் மற்ற மாநிலங்களிலிருந்தும் சட்டத்திற்குட்பட்டும், உட்படாமலும் சரக்கு கடத்தி / இறக்குமதி செய்யப்படுகிறதாம்.  இப்படி கணக்குபோட்டால், குடியினால் வரும் வரும்படி ரூ. 6,000 கோடிகளைத் தாண்டுகிறதாம். அதாவது ஒரு கேரளக் குடிமகன் சரசரியாக ரூ. 2000/- வரைக் குடிக்கிரானாம்.

இதில் அவர்களுக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், எல்லா கேரளப் பெண்மணிகளும் குடிக்கிறார்களா இல்லையா என்பதுதானாம்!

குடித்தால் போதைவருமா, பக்தி வருமா?

ஆமாம், கிருஸ்துமஸ் ராத்திரி அவ்வாறெல்லாம் குடித்துத் திளைக்கவேண்டுமா?

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!

December 25, 2009

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!

கிருத்துவர்கள் இப்படி மறுபடியும் கதைவிட ஆரம்பிப்பார்கள் என்றுதான் பத்து நாட்களுக்கு முன்பாக இப்படியொரு பதிவை செய்து வைத்திருந்தேன்:

http://thomasmyth.wordpress.com

எதிர்பார்த்தபடியே, கிருஸ்துமஸ் சாக்கை வைத்துக் கொண்டு தங்களது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டார்கள்!

“மயிலாப்பூரில் முதலில் பிறந்த சாந்தோம் தோமையர் சர்ச்” என்று பக்கம்.9ல், மிகவும் மோசமாக, முன்பிருந்த நிலையைவிட, இன்னும் புது-புது புளுகுமூட்டைக் கதைகளையும் சேர்த்து பிரசுரித்துள்ளது.

ஆகவே, வேறு வழியில்லை.

மறுபடியும், உண்மைகளை சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால்!

கபாலீஸ்வரர் கோவிலை இடித்தது மட்டுமில்லாது, உண்மையை மறைத்து, இப்படி அயோக்கியத்தனமாக பிரச்சாரம் செய்வது எந்த ஆண்டவனுக்கும் அடுக்காது.

முன்பு ஒருதடவை, என்னுடைய புத்தகம், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு விவரங்கள் (அருளப்பா எப்படி போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பணம் கொடுத்து மாட்டிக் கொண்டார், பழி ஆச்சார்யா பால் என்பவரின்மீது போட்டுத் தப்பித்துக் கொண்டார் முதலியவை) முதலியவற்றை திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். எனது கடித்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கொரியர் மூலம் திருப்பி அனுப்பி விட்டார். அதாவது, உண்மையினை எதிர்கொள்ள முடியவில்லையா அல்லது திரு ஈஸ்வர் சரண் தன்னுடைய தளத்தில் எடுத்துக் காட்டியுள்ளபடி, கிருத்துவர்களின் சட்டை பாக்கெட்டுக்குள் அடைப்பட்டுவிட்டாரா? ராமசுப்பையரே ஒப்புக் கொள்ள மாட்டாரே? கர்த்தரே இவர்களை மன்னியுங்கள்!


Follow

Get every new post delivered to your Inbox.